12 முதல் 17 மதிப்பெண்கள் பெற்றால் சிறப்புத் தேர்வு
7 முதல் 12 வரை- நல்ல மதிப்பெண்கள்
4 முதல் 7 வரை- பரவாயில்லை
நாலுக்கும் கீழே- நிறைய புத்தகம் படித்துவிட்டு வாருங்கள்.
1) திவ்யப் பிரபந்த வரிகளைக் கொண்டே ராமாயணம் இயற்றியவர் யார்?
2) அவ்வைப் பாட்டி விநாயகருக்கு நாலு விஷயங்களைத் தந்து மூன்றைப் பெற்றாள்? அவை யாவை?
3) உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்……. என்று பாடத் துவங்கியவர் யார்?
4) பெருமாளுடன் ஜோதி வடிவத்தில் இரண்டறக்கலந்த ஆழ்வார் யார்?
5) திருநாளைப்போவார் என்ற பட்டப் பெயருடைய நாயன்மாரின் பெயர் என்ன?
6) கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?
7) குமுதவல்லி என்பவர் எந்த ஆழ்வாரின் மனைவி?
8) திவ்ய சேத்திரங்களாகக் கருதப்படும் வைஷ்ணவத் தலங்களின் எண்ணிக்கை என்ன?
9) ஐந்து வகையான ப்ரதோஷங்கள் எவை?
10) ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
11) நால்வர் யார்?
12) மாணிக்கவாசகர் இயற்றிய இரண்டு நூல்கள் எவை?
13) திருமுருகாற்றுப்படை என்பது என்ன?
14) பெருவுடையார் கோவில் எங்கே இருக்கிறது? யார் கட்டியது?
15) சப்தவிடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படும் சிவனின் ஏழு தலங்கள் எங்கே இருக்கின்றன?
16) பராபர குரு என்பவர் யார்?
17) உலகம் யாவையும் தாமுளவாக்கலும்… என்று பாடத் துவங்கியவர் யார்?
விடைகள் 1) பெரியவாச்சான் பிள்ளை 2) பால், தேன்,பாகு,பருப்பு.
பெற்றது சங்கத்தமிழ்மூன்று-இயல்,இசை,நாடகம் 3) சேக்கிழார் 4)திருப்பாணாழ்வார் 5)நந்தனார் 6) திண்ணன் 7) திருமங்கை ஆழ்வார் 8) 108 தலங்கள் 9) நித்திய, பட்ச, மாத, மஹா, ப்ரளயப் பிரதோஷங்கள் 10) தயானந்த சரஸ்வதி 11) அப்பர்/திரருநாவுக்கரசர், திரு ஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் 12. திருவாசகம், திருக்கோவையார் 13. முருகனின் பெருமையைக் கூறும் நக்கீரரின் நூல் 14.தஞ்சாவூர், ராஜராஜ சோழன் 15) திருவாரூர், திருநள்ளாறு, திரு நாகைக் காரோணம், திருக் காறாயில்,திருக் கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு 16) ஒருவருக்கு சந்யாசம் கொடுத்தவர் அவருடைய குரு. அவருக்கு குரு பரம குரு. அவருடைய குரு பரமேஷ்டி குரு, அவருடைய குரு சந்யாசம் வாங்கியவரின் பராபர குரு. ஆக, நாலு தலை முறையை நினைவு வைத்துக் கொண்டு ஆராதனைகள் செய்வர்.17) கம்பர்