தீபாவளித் திருநாள் ...
'ஆவளி' என்றால் வரிசை என்று பொருள்; தீப
ஆவளி என்பதே 'தீபாவளி' ஆயிற்று என்பார்!
தீபங்களை வரிசையாய் ஏற்றி, மக்கள் தங்கள்
தாபங்களைத் தீர்க்க இறையை வேண்டுவார்!
நரகாசுரனை வதம் செய்த நாள் என்று சிலரும்,
இராவணன் அழிந்த நாள் என்று வேறு சிலரும்,
கொண்டாடி மகிழ்ந்து, புத்தாடைகள் அணிந்து,
பண்டிகையாகச் சிறப்பித்தாலும், நம் மனதின்
இருளை நீக்கி, ஒளியைப் பரப்பி, இறைவனின்
அருளைப் பெறும் நாளாக நினைப்பதே சிறப்பு!
இனிப்புக்களைச் சுற்றம், நட்புடன் பகிர்வோம்;
இனிய அன்பு வட்டத்தைப் பெரியதாக்குவோம்!
*********************************************************************
In 'Thanglish':
DeepAvaLith thirunAL...
'AvaLi' endrAl varisai endRu poruL; Deepa
AvaLi enbathE 'deepAvaLi' Ayitru enbAr!
deepangaLai varisaiyAy Etri, makkaL thangaL
thAbangaLaith theerkka iRaiyai vEnduvAr!
NarakAsuranai vadham seytha nAL endRu silarum,
RAvaNan azhindha nAL endRu vERu silarum,
koNdAdi magizhndhu, puththAdaigaL aNindhu,
paNdigaiyAgach chirappiththAlum, nam manathin
iruLai neekki, oLiyaip parappi, iRaivanin
aruLaip peRum nALAga ninaippathE siRappu!
inippukkaLaich chutram, natpudan pagirvOm;
iniya anbu vattaththaip periyathAkkuvOm!
:grouphug: