• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Hanuman Chalisa in Tamil

Status
Not open for further replies.
Dear members,

Hanuman1.jpg

I made an attempt to translate Hanuman Chalisaa into Tamil and ended up with the following in 2006 (on Hanuman Jayanti day). I want to provide it here for the benefit of our members. I assure that this is my own translation and is not copied from any other source. Any coincidence with any other translation is a mere coincidence.

Loka samasta sukhino bavantu.

அனுமன் நாற்பது



தோஹா 1
என் மனதை தூய்மை செய்யும் இராமனது பாதம்
புருஷார்த்தம் கொடுக்கும் அவன் அடி சரணம்

தோஹா 2
பக்குவம் இல்லா நான் செய்கிறேன் தியான பயிற்சி
பலவானே போக்குவாய் எந்தன் அயர்ச்சி

அளப்பறியா அனுமனே உனது அடி போற்றி
அனைத்துலகும் பிரகாசிக்கும் உன் வெற்றி 1

இராம தூதனே உனக்கில்லை ஈடு
அஞ்சனைக்குமரன் வாயு குமரன் இவை உன் பேரு 2

வஜ்ர தேஹம் மகாவீரன் உனக்கு
வளமான புத்தி அருள்கிறாய் எமக்கு 3

செந்நிற முடி; பொன்னிற உடல்
குண்டலம் சூடிய உன் செவி மடல் 4

கையில் கொண்டுள்ளாய் வஜ்ராயுதம், கொடி
தோளில் காண்கிறோம் தர்ப முப்புரி 5

பரமனது வடிவே இராமன் உலவும் உருவே
பராக்ரமத்தில் உயர்ந்த உன்னை வணங்கும் இந்த உலகே 6

நீ கல்விக் கடல்; நற்குண சீலன், செயல் வீரன்
இராம காரியத்தில் நாட்டமுள்ள தீரன் 7

இராம குணங்களை கேட்பதில் உன் சந்தோசம்
இராம சீதை லக்ஷ்மணர் உன் இதயத்தில் வாசம் 8

சிற்றுருவில் சீதையின் முன் நீ
சீற்றமுருவில் இலங்கைக்கு இட்டாய் தீ 9

இடி போன்ற உன் தோற்றத்தில் அரக்கர்களின் அழிவு
இவ்விதமாக இராம காரியம் நிறைவு 10

லக்ஷ்மணனைக் காத்தாய் சஞ்சீவி மலை கொணர்ந்து
இராமர் உன்னை அணைத்தார் தன் மன மகிழ்ந்து 11

இராமர் மகிழ்ந்தார் உன் பால்
நவின்றார் நீ பரதனைப் போல் 12

"ஆதி சேஷன் பாடட்டும் உன் நாமம்"
என ஆரத் தழுவியது உன்னை இராமனது கரம் 13

சனகாதி முனிவர்கள், பிரம்மா முதலிய தேவர்கள்,
சரஸ்வதி, ஆதி சேஷன், நாரதர் போன்றவர்கள் 14

யமராஜன் குபேரன் அறிஞர்கள் என்றில்லை
யார் பாடினாலும் உன் புகழுக்கு ஏது எல்லை 15

சுக்ரீவனுக்கு நீ செய்தது பேருதவி
சூட்டினாய் அவனுக்கு அரச பதவி 16

உன் ஆலோசனையைக் கேட்ட விபீஷணன் அரசன்
உலகனைத்தும் அறியும் நீ அவதார புருஷன் 17

தூரத்தில் சூரியனைக் கண்டு
துரத்திச் சென்றாய் அது ஒரு பழம் என்று 18

உன் வாயில் ஏந்தினாய் இராம கணையாழி
உல்லாசமாய் தாண்டினாய் ஆழி 19

கடின காரியம் உலகினில் உண்டு
கை கூடும் அவையும் உன் அருள் கொண்டு 20

ராமரைக் காக்கிறாய் வாயிலில் நின்று
ராமரைக் காண உன்னை பேணுதல் நன்று 21

நீடித்த ஆனந்தத்துக்கு நீ அபயம்
நீ காப்பாளனாக எதற்கு பயம்? 22

உன் தேஜஸை வேறெது தாங்கும்?
உன் கர்ஜனையில் மூவுலகும் நடுங்கும் 23

தீரன் உந்தன் நாமம் யார் பகன்றாலும்
தீய சக்திகள் அண்டாது ஒரு நாளும் 24

வீரன் உந்தன் நாமம்
விலகிச் செல்லும் துன்பம் 25

மனதால், செயலால், சொல்லால் உன்னிடம் ஈடுபாடு
மறு கணமே நீங்கும் மாந்தர் தம் இடுபாடு 26

எல்லை இல்லா புகழ் கொண்ட இராமனது காரியம்
எல்லாமும் சாதித்தது அனுமன் உன் வீரியம் 27

வளங்கள் பல சேர்க்கும் உன் வழிபாடு
வாழ்வு சீராகும், வாய்க்கும் மேம்பாடு 28

யுகங்கள் நான்கிலும் உன் பிரதாபம் பரவும்
உலகம் யாவிலும் உன் ஒளி படரும் 29

அறம் பேணுவோருக்கு அனைத்தும் அளிப்பாய்
அரக்கர்களை உன் பலத்தால் அழிப்பாய் 30

சித்திகள் எட்டும் நிதிகள் ஒன்பதும் அருள்வாய்
சீதை உனக்கு தந்த வரம் வாயிலாய் 31

அலை பாயும் உன் இதயத்தில் இராமனது நாமம்
அவர் திருவடி தாங்குகிறாய் நாளும் 32

உன்னை வழிபடுவர் இராமனை அடைவர்
ஊழ்வினை பாவங்கள் நீங்கப் பெறுவார் 33

இறுதியில் அவர் அடைவர் இராம பரமபதம்
இப்பிறவியில் அவருக்கு ஹரிபக்தர் என்ற பட்டம் 34

உன் துதி தருமே ஒப்பற்ற சுகம்
உன்னை அன்றி யாருக்கும் மனதில் இல்லா இடம் 35

வீர அனுமான் உன் நினைவு
விகர்ப்பங்களுக்கு வரும் முடிவு 36

கருணைக் கடலே போற்றி போற்றி
கருணை புரிவாய் எனை கரையேற்றி 37

இம்மந்திரம் யாரும் நூறு முறை ஓதினால்
இன்பங்கள் யாவும் சேருமே அவர் பால் 38

இம்மந்திரத்தால் பெறுவர் மாட்சி
இதற்கு பரமேஸ்வரனே சாட்சி 39

இராமருடன் என்னையும் உன் இருப்பிடத்தில் ஏற்று
இராம பக்தர் துளசிதாசர் கூற்று 40

தோஹா 3
வாயுகுமாரனே மங்கள வடிவினனே
வசிப்பாய் என் இதயத்தில் இராம சீதையுடனே.

**************************************************************
கோடானுகோடி நமஸ்காரங்களுடன்,
உன் பக்தன் சிவகுமார்
**************************************************************
 
Hearty Congratulations Mr. Haridasa Siva!
:clap2:
You must try more translations as well new poems on different topics.

One more poet in the Forum!
:welcome:

with warm regards and best wishes,
V.R.

P.S.
You may request Mr. Pannvalan to help you with the spellings and any other necessary changes to add polish and depth to your translation. He IS the authority as far as Tamil compositions are concerned!
 
Last edited:
Thank you, VR. As I have mentioned, it is something that I tried in 2006. I have not attempted to make such a translation of other texts since my wife advocates that any sloka must be recited in its original form so that we would get the total benefit as its author intended. I however do write poems in Tamil but mostly on romance and social subjects. I wonder whether it would be appropriate to publish such poems in this forum. I would try my best. Please tell me as to how I can contact Mr.Pannvalan.

Loka samasta sukhino bavantu.
 
Dear Mr. Haridasa Siva,

You may send a private message to Mr. Pannavlalan or even approach him by

replying to one of the threads started by him.

As long as the compositions are not obscene or vulgar, they can be posted in the

Forum. I am sure there are may youngsters who might enjoy them :).

You may post one of your poems and decide up on the response you get for it

(as whether to continue or discontinue posting. No harm in trying)

with best wishes,
V.R.

P.S. If you left click on the name of the person you want to contact (or send

private message to) a box appears with several options. If you select the

'send private message to' and type your request in the mail box, it will be

automatically delivered to him! All the Best!
icon14.png
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top