• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
406 (a).மௌனம் சம்மதம்.
406 (b). Silence is consent.

407 (a). சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால்
சூரியனுக்குக் கேடா நாய்க்குக் கேடா?

407 (b). The dogs bark but the caravan moves on.


408 (a). நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
408 (b). The first blow is half the battle.

409 (a). ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
409 (b). The pot called the kettle black.

410 (a).நகமும் சதையும் போல; உடலும் உயிரும் போல.
410 (b). They are hand and glove.
 
411 (a). அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
411 (b). Things past cannot be recalled.

412 (a). ஒரு கண்ணில் வெண்ணை; மறு கண்ணில் சுண்ணாம்பு.
412 (b). To cry with one eye and laugh with the other.

413 (a). குட்டையைக் குழப்பு.
413 (b). To fish in troubled waters.

414 (a). செத்த பாம்பை அடிப்பவன்.
414 (b). To flog a dead horse.

415 (a). விழித்த முகம் சரியில்லை.
415 (b). To get out of the bed on the wrong side.
 
416 (a). சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது.
416 (b). To give a lark to catch a kite.

417 (a). பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது.
417 (b). To go for wool and come back shorn .

418 (a). தாயை போல பிள்ளை. நூலைப் போல சேலை.
418 (b). As the mother, so the daughter is.

419 (a). சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
419 (b). Little pigeons can carry great messages.

420 (a). எறும்பூரக் கல்லும் தேயும்.
420 (b). Little strokes fell great oaks.
 
421 (a). மீன்கள் வலையில் சிக்கும்; திமிங்கிலங்கள் தப்பி விடும்.
421 (b). Little thieves are hanged. The great ones escape.

422 (a). வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு.
422 (b). Many a good cow has a bad calf.

423 (a). பகிர்ந்த வேலை பளுவாயிராது.
423 (b). Many hand make the work light.

424 (a). உலகம் பலவிதம்.
424 (b). Many men, many minds.

425 (a). வாளினும் கூரியது நாவு.
425 (b). Many words hurt more than swords.
 
426 (a). சட்டியில் உள்ளது அகப்பையில் வரும்.
426 (b). Nothing comes out of the sack, but what was in it.

427 (a). ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்.
427 (b). One drop of poison infects the whole tun of wine.

428 (a). இனம் இனத்தோடு, பணம் பணத்தோடு.
428 (b). Money seeks money.

429 (a). கத்தி முனையில் காதலா?
429 (b). Love can't be forced.

430 (a). நாய் விற்ற காசு குரைக்காது.
430 (b). Money has no smell.
 
431 (a). நாம் பணத்துக்கு அதிகாரியா, பணம் நமக்கு அதிகாரியா?
431 (b). Money is a god servant but a bad master.

432 (a). திரிசங்கு சுவர்க்கம்.
432 (b). Neither here, nor there.

433 (a). அச்சுறுத்தியோ, அறிவுறுத்தியோ.
433 (b). By hook or crook.

434 (a). இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே.
434 (b). Never give up certainty for hope.

435 (a). அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
435 (b). Too much of anything is too good for nothing.
 
436 (a). விதி வலியது.
436 (b). No flying from the Fate.

437 (a). சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
437 (b). Nothing is so bad as not to be good for something.

438 (a). பொறுமை என்னும் அருமருந்து.
438 (b). Patience is the plaster for all sores.

439 (a). பேனைப் பெருமாள் ஆக்குவது.
439 (b). To make a mountain of a mole hill.

440 (a). வேலியே பயிரை மேய்வது.
440 (b). To set a wolf to guard the sheep.
 
441 (a). அட்டையாக ஒட்டிக் கொள்வது.
441 (b). To stick to somebody like a leech.

442 (a). கடப்பாறையை எடுத்து
ப் பல் குத்துவது.
442 (b). To use a steam hammer to crack a nut.

443 (a). இரண்டு தப்புகள் ஒரு ஒப்பு ஆகா.
443 (b). Two blacks don't make a white.

444 (a). இருளில் செய்தது வெளிச்சத்துக்கு வரும்.
444 (b). What is done by night appears by day.

445 (a). விரும்பிச் செய்வது கரும்பாய் இனிக்கும்.
445 (b). A willing heart performs best.
 
Last edited:
446 (a). மது உள்ளே! மதி வெளியே
446 (b). When wine goes in, wit goes out!

447 (a). கசப்பை அறியாதவன் இனிப்பையும் அறியான்.
447 (b). He who has not tasted bitter, knows not what is sweet.

448 (a). பன்றியின் பின் செல்லும் கன்றும் மலம் தின்னும்.
448 (b). He who keeps company with wolves will learn to howl.

449 (a). கண் கெட்ட பின் சூரிய நமஸ்காராம்.
449 (b). Wise after the event.

450 (a). முங்கி முங்கிக் குளித்தாலும் காகம் அன்னம் ஆகுமா?
450 (b). You can't wash a charcoal white.
 
451 (a). அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
451 (b). A tongue of honey and a heart of gall.

452 (a). பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
452 (b). A hungry man is an angry man.

453 (a). பழம் தின்று கொட்டை போட்டவர்.
453 (b). A hard nut to crack.

454 (a). மனைவி இனியவளானால் கணவன் இனியவன் ஆவான்.
454 (b). A good wife makes a good husband.

455 (a). துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
455 (b). A good anvil does not fear the hammer.
 
456 (a). ஒரே தவறை இரு முறை செய்யாதே!
456 (b). A fox is never taken twice in the same snare.

457 (a). பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.
457 (b). Money can set right many wrongs.

458 (a). பகுத்தறியாமல் துணியாதே. படபடப்பாகச் செய்யாதே!
458 (b). Contemplate before you act.

459 (a). அறிவுக்கு முன் செல்லும் நாக்கு.
அதை உடையவன் ஒரு மக்கு.
459 (b). A fool's tongue runs before his wit.

460 (a). நாக்கில் இருக்கிறது நன்மையையும் தீமையும்.
460 (b). A joke never gains an enemy, but often loses a friend.
 
Dear friends,

The 25 proverb posted in one page rendered the pictures stamp-sized!

So now only 10 proverbs have been posted in each page for easier viewing.

The pictures can be seen as they are. They can also be enlarged by left clicking on the images.

Nearly 600 more in the queue!

So keep visiting occasionally so that you won't miss the new proverbs when they are posted.

Feedback are welcome.

with warm regards,
visalakshi Ramani :pray2:
 
461 (a). அறிவிலிகளும் அறிவாளர்களே தங்கள்
திருவாயைத் திறவாத வரையில்.
461 (b). A silent fool is counted wise.

462 (a). உறுதியான உடலில் உறுதியான மனது.
462 (b). A sound mind in a sound body.

463 (a). இலவு காத்த கிளி.
463 (b). Pine in love and wait in vain.

464 (a). சித்திரமும் கைப் பழக்கம்.
464 (b). All things are difficult before they become easy.

465 (a). மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
465 (b). An empty hand is no lure for a hawk.
 
466 (a). உள்ளங்கை நெல்லிக் கனி போல்.
466 (b). As plain as the nose in a man's face.

467 (a). மாவுக்குத் தகுந்த பணியாரம்.
467 (b). As you brew, so must you drink.

468 (a). அக அழகே அழகு.
468 (b). Beauty is but skin deep.

469 (a). கண் சிமிட்டும் நேரத்தில்.
469 (b). Before you can say, "Jack Robinson!"

470 (a). அடிமை வாழ்வினும் வீர மரணமே மேல்.
470 (b). Better die standing than live kneeling.
 
471 (a). நெருப்பு நெருப்பை அழிக்கும்.
471 (b). One fire puts out another.

472 (a). ஒரு கண் வெண்ணை, ஒரு கண் சுண்ணாம்பு.
472 (b). One law for the rich and another for the poor.

473 (a). ஒரு மரம் தோப்பாகாது.
473 (b). Once is no rule.

474 (a). ஊடல் காமத்துக்கு இன்பம்.
474 (b). The falling out of love is the renewing of love.

474 (a). பழம் நழுவி வாயில் விழ வேண்டும்.
475 (b). The cat would eat fish but would not wet her paws.
 
476 (a). கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.
476 (b). A camel went to get horns and lost its ears.

477 (a). விளக்கின் அடியில் இருள் மண்டும்.
477 (b). The darkest place is under the candle stick.

478 (a). விடியும் முன்னர் கும்மிருட்டு.
478 (b). The darkest hour is before the dawn.

479 (a). பொறுமைக்கும் எல்லை உண்டு.
479 (b). The last straw breaks the camel's back.

480 (a). பீலி பெய்யினும் அச்சிறுகும்.
480 (b). The last drop makes the cup run over.
 
481 (a). ஆள் பாதி; ஆடை பாதி.
481 (b). The tailor makes a man.

482 (a). சோம்பேறியின் நாவு சோம்பி இருப்பதே இல்லை.
482 (b). The tongue of an idle person is never idle.

483 (a). பேசுமுன் நன்கு ஆலோசி.
483 (b). Think today and speak tomorrow.

484 (a). மயிரிழையில் உயிர் பிழைப்பது.
484 (b). To escape by the skin of the teeth.

485 (a). ஆகாசப் பந்தல் போடுவது.
485 (b). To cook a hare before catching him.
 
486 (a). மணல் அணை கட்டுவது.
486 (b). To draw water in a sieve.

487 (a). வாழ்விலும் தாழ்விலும்.
487 (b). Through thick and thin.

488 (a).நேருக்கு நேர் போராட்டம்.
488 (b). To take the bull by its horns.

489 (a). கண்களில் மண்ணைத் தூவுவது.
489 (b). To throw dust in some body's eyes.

490 (a). அவன் மொழியிலேயே அவனிடம் பேசுவது.
490 (b). To pay back in his coins.
 
491 (a). சிரிக்கும் முகத்தில் சீற்றம் ஒளிந்திருக்கும்.
491 (b). Velvet paws hide sharp claws.

492 (a). நல்ல பொருளை எறியாதே. தேவையெனத் தேடித் திரியாதே.
492 (b). Waste not, want not.

493 (a). நலம் இல்லாத செல்வம் வளம் இல்லாத வாழ்வு.
493 (b). Wealth is nothing without health.

494 (a). மருந்தே இல்லாத நோயைப் பொறுத்தே ஆகவேண்டும்.
494 (b). What can't be cured must be endured.

495 (a). பூனைக்குத் திண்டாட்டம்; எலிக்குக் கொண்டாட்டம்.
495 (b). When the cat is away the mice will play.
 
496 (a). ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம், மூவர் அறிந்தால் தண்டோரா.
496 (b). When three know it, all know it.

497 (a). அறிவில்லாதவன் உழைப்பு தறிகெட்டோடும் குதிரை.
497 (b). Zeal without knowledge is a runaway horse.

498 (a). கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
498 (b). You can't eat your cake and have it too.

499 (a). காலம் கனிந்தால் முசுக்கொட்டை பட்டாகும்.
499 (b). With time and patience mulberry leaves become silk.

500 (a). உயிருள்ளவரையில் உண்டு நம்பிக்கை.
500 (b). While there is life, there is hope.
 
501 (a). குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
501 (b). He who commits a mistake thinks everyone is speaking of it.

502 (a). காலணாவுக்கு நாலு சத்தியம்.
502 (b). He who promises everything, promises nothing.

503 (a). மரியாதை கொடுத்து மரியாதை பெறவேண்டும்.
503 (b). He that respects not, is not respected.

504 (a). பன்றியின் பின் செல்லும் கன்றும் மலம் தின்னும்.
504 (b). Better be alone than in bad company.

505 (a). அத்தைக்கு மீசை முளைத்தல் சித்தப்பா.
505 (b). If my aunt were a man, she would be my uncle.
 
506 (a). இருக்க இடம் கொடுத்தால், படுக்கப் பாய் கேட்பார்.
506 (b). If you agree to carry the calf, you will be made to carry the cow.

507 (a). சுக துக்கம் சுழல் சக்கரம்.
507 (b). If you laugh before breakfast, you will cry before supper.

508 (a). தன் கையே தனக்கு உதவி.
508 (b). If you want anything done well, do it yourself.

509 (a). துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
509 (b). Jest with an ass and he will flap his tail on your face.

510 (a). தூங்கும் சிங்கத்தை இடறாதீர்!
510 (b). Let the sleeping dogs lie.
 
511 (a). கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?
511 (b). A cuckoo needs no music tutor.

512 (a). கடைந்த மோரில் குடைந்து வெண்ணை எடுப்பது.
512 (b). He can squeeze juice out of a stone.

513 (a). கண்டதே கட்சி; கொண்டதே கோலம்.
513 (b). Life is a bed or roses.

514 (a). எட்டி பழுத்தென்ன? ஈயார் வாழ்ந்தென்ன?
514 (b). Bitter fruits and miser's wealth are of no use to anyone.

515 (a). எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும் பொன் ஆகுமா ?
515 (b). You can't change baser things to nobler ones.
 
516 (a). ஊர் வாடை மூட உலை மூடி இல்லை.
516 (b). There are no zips to seal the gossipers' lips.

517 (a). ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை நண்பன் இழுப்பான்.
517 (b). A friend in need is a friend indeed.

518 (a). உரியில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்?
518 (b). To have grapes in your garden and go in search of wine.

519 (a). உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
519 (b). To get stuck on an anvil and escape the hammer.

520 (a). உண்டு கொழுத்தல் நண்டு வளையில் இராது.
520 (b). A well placed man goes in search of adventures.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top