• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
169 (a). தோல்வியே வெற்றிக்கு அறிகுறி.
169 (b). If at first you don't succeed try again.

170 (a). உலகம் பலவிதம்.
170 (b). It takes all sorts to make the world.

171 (a). ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
171 (b). Kill two birds with one stone.

172 (a). வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
172 (b). Laughter is the best medicine.
 
173 (a). அகலக்கால் வைக்காதே!
173 (b). Learn to walk before you run.

174 (a). ஆடிப்பட்டம் தேடி விதை!
174 (b). Never cast a clout till May is out.

175 (a).
டையைக் கண்டு எடை போடாதே!
175 (b). Never judge a book by its cover.

176 (a). முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
176 (b). Nothing ventured, nothing gained.
 

177 (a). ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
177 (b). One doctor makes work for another.

178 (a). கண்ணாடி வீட்டில் வசிப்பவர்கள் கல்லெறியலாகாது .
178 (b). People who live in glass houses, should not throw stones at others.

179 (a). உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?
179 (b). What is sauce for goose is sauce for gander.

180 (a). வாய்மையே வெல்லும்!
180 (b). Winners never cheat and cheaters never win.
 
181 (a). சட்டியில் இருப்பது அகப்பையில் வரும்.
181 (b). You can't make a silk purse with a sow's ear.

182 (a). அப்பன் மாண்டால் அருமை தெரியும்.
182 (b). You never know what you have until it is gone.

183 (a). ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
183 (b).You can't teach an old dog new tricks.

184 (a). சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்.
184 (b). To be human is to strive.
 
185 (a). மயிரைக் கட்டி மலையை இழு.
வந்தால் மலை. போனால் மயிர்.
185 (b). There is no harm in trying.

186 (a). முள்ளை முள்ளால் எடு.
186 (b). Fight fire with fire.

187 (a). எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
187 (b). Persistence never fails.

188 (a). ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
188 (b). Contemplate before you act.
 
189 (a). புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
189 (b). A leopard can't change its spots.

190 (a). சிறு நுணலும் தன் வாயால் கெடும்.
190 (b). A closed mouth catches no flies.

191 (a). தண்ணீரைக் கூட ஜல்லடையில் அள்ளலாம்,
அது உறையும் வரை பொறுத்திருந்தால்.
191 (b). All good things in life come to those who have learned to wait.

192 (a). அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
192 (b). Winners never quit, Quitters never win.
 
193 (a). நன்றும் தீதும் பிறர் தர வாரா.

193 (b). We reap what we sow.

194 (a). கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த
பாடமும் எத்தனை நாள் வரும்?

194 (b). Give a man a fish and you feed him for a day.
Teach him to fish and you will feed him for life time.

195 (a). குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

195 (b). Pose like an owl after behaving like an ass.

196 (a). நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

196 (b). Habits die hard.
 
197 (a). கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி.
197 (b). Imitation is suicide.

198 (a). விளக்கு மாற்றுக்குப் பட்டு குஞ்சலம்.
198 (b). Bear your wealth. Poverty will bear itself.

199 (a). பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன்.
199 (b). He carries fire in one hand and water in the other.

200 (a). நாய் விற்ற காசு குரைக்காது.
200 (b). Money doesn't get stained by sin.
 
201 (a). ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
201 (b). Contemplate before you act.

202(a). நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்,
202 (b). Adversity proves the greatness of Prosperity.

203 (a). கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது.
203 (b). Never judge a person by his stature.

204 (a). ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா?
204 (b). He who does not let his porridge cool
is indeed the greatest fool.


205 (A). அகல இருந்தால் நிகள உறவு.
கிட்ட வந்தால் முட்டப் பகை.
205 (b). A hedge between keeps the friendship green.
 
206 (a). அடாது செய்தவன் படாது படுவான்.
206 (b). Evil begets Evil.

207 (a). அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் புழு.
207 (b). Appearances deceive.

208 (a). அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
208 (b). Love makes impossible things possible.

209 (a). அருமை இல்லாத வீட்டில் எருமையும் குடி இருக்காது.

209 (b). Even Rats desert a sinking ship.

210 (a). அறக்கப் பறக்கப் பாடு பட்டாலும் படுக்கப் பாய் இல்லை.
210 (b). A hand-to-mouth existence.
 
211 (a). அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்டாட்டி.
211 (b). A fat purse never lacks companions.

212 (a). அற்ப அறிவு அல்லற்கிடம்.
212 (b). A little knowledge is a dangerous thing.

213 (a). ஆராய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
213 (b). Look before you leap.

214 (a). ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு.
214 (b). Never lose sight of your goal.

215 (a). ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.
215 (b). Among the blind, the one eyed man is the king.
 
216 (a). இட்டுக் கெட்டார் யாருமில்லை.
216 (b). A drawn well never goes dry.


217 (a). இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
217 (b). Nip evil in the bud.

218 (a). இமையின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
218 (b). The burden of one's own choice is never felt.

219 (a). இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
219 (b). Never ride on two horses.

220 (a). இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
220 (b). Don't throw out the dirty water until you get the clean water.
 
221 (a). இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்.
221 (b). No one is above the Law.

222 (a). இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா.
222 (b). An idle man's mind is Devil's workshop.

223 (a). இருவர் நட்பு ஒருவர் பொறை.
223 (b). Friendship is hampered by one man's temper.

224 (a). இளம் கன்று பயம் அறியாது.
224 (b). The Calves dare where the cows scare.

225 (a). இளமையில் சோம்பல் ; முதுமையில் வருத்தம்.
225 (b). Sleep when you should sow and
starve when you should reap.
 
226 (a). உடம்பு போனால் போகிறது. கை வந்தால் போதும்.
226 (b). All is well that ends well.

227 (a). ஊசியை காந்தம் இழுக்கும். உத்தமனை சிநேகம் இழுக்கும்.
227 (b). A friend in need is a friend indeed.

228 (a). ஊர் வாயை மூட உலை மூடி இல்லை.
228 (b). There are no zips to seal the gossipers' lips.

229 (a).எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
229 (b). If you remove the cause, the effect will cease.

230 (a). எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
230 (b). The wearer knows best where the shoe pinches.
 
231 (a). எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
231 (b). We are all ignorant on different subjects.

232 (a). எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.
232 (b). For every action there is an equal and opposite reaction.

233 (a). எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
233 (b). Too many cooks spoil the broth.

234 (a). ஏழை சொல் அம்பலம் ஏறாது.
234 (b). Absolute power corrupts absolutely.

235 (a). ஐயமான காரியத்தைச் செய்யலாகாது.
235 (b). When in doubt - Don't do it!
 
236 (a). ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
236 (b). Take care of your penny. The pound will take care of itself.

237 (a). ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்.
237 (b). One lie leads to many lies.

238 (a). ஒரு ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி!
238 (b). All roads lead to Rome.

239 (a). கறந்த பால் மடி புகாது.
239 (b). Words once spoken can't be taken back.

240 (a). கற்கையில் கல்வி கசப்பு.
கற்றபின் அதுவே இனிமை.

240 (b). Education is bitter.
But the fruit of education is sweet.
 
241 (a). கற்பு இல்லாத அழகு வாசனை இல்லாத பூ.
241 (b). A woman without virtue is a flower without fragrance.

242 (a). கலஹம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
242 (b). Revolutions restore Justice.

243 (a). கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே.
243 (b). Never argue with a wise man.

244 (a). கள்ள மனம் துள்ளும்.
244 (b). Guilty conscience needs no accuser.

245 (a). கவலை உடையோருக்குக் கண்ணுறக்கம் ஏது?
245 (b). Worry is a stealer of sleep.
 
246 (a). காய்த்த மரம் கல்லடி படும்.
246 (b). A big tree attracts the woodman's axe.

247 (a). காற்றில் துப்பினால் முகத்தில் விழும்.
247 (b). Don't spit in the wind.

248 (a). கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
248 (b). From the frying pan into the fire.

249 (a). நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
249 (b). You can't teach a pig to sing.

250 (a). கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
250 (b). Give respect and take respect.
 
251 (a). குரங்குக்கு புத்திமதி சொல்லித் தூக்கணாங்குருவி கூடு இழந்தது.
251 (b). Never advise the rogues.

252 (a). கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.
252 (b). We lose what we don't use.

253 (a). கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
253 (b). Prosperity never lacks friends.

254 (a). கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
254 (b). Can you sell eggs to hens?

255 (a). கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
255 (b). A cat may look at the King.
 
256 (a). செடியில் வணக்காததா மரத்தில் வணங்கும்?
256 (b). You can't teach an old dog new tricks.

257 (a). செருப்புக்காகக் காலைத் தறிக்கிறது.
257 (b). Never cut your feet to fit the shoes.

258 (a). சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வரும்.
258 (b). Better to be alone than in bad company.

259 (a). சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.
259 (b). If a person will not work, neither should he eat.

260 (a). தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி.
260 (b). Like father, like son.
 
The next lot of quotes (151 to 175) HAS BEEN PUBLISHED in East Meets West!

You are welcome to visit <veenaaramani.wordpress.com> for viewing them :)
 
261 (a). நயத்திலாவது, பயத்திலாவது.
261 (b). By hook or crook.

262 (a). நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
262 (b). Familiarity breeds contempt.

263 (a). பசி உள்ளவன் ருசி அறியான்.
263 (b). Hunger is the best sauce.

264 (a). பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
264 (b). The pot called the kettle black.

265 (a). பொறுத்தார் பூமி ஆள்வர்.
பொங்கினார் காடாள்வார்.
265 (b). All good things come to those who wait.
 
266 (a). போனதை நினைக்கின்றவன் புத்தி கெட்டவன்.
266 (b). Don't cry over spilled milk.

267 (a). மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
267 (b). Where there is a will, there is a way.

268 (a). மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
268 (b). Old is gold.

269 (a). மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
269 (b). Never forget the past.

270 (a). மீதூண் விரும்பேல்.
270 (b). Don't dig your grave with your knife and fork.
 
271 (a). பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
271 (b). The belly has no ears.

272 (a). முன் வைத்த காலைப் பின் வைக்காதே.
272 (b). Never give up!

273 (a). முருங்கையை ஓடிச்சு வளர்க்கணும்.
பிள்ளையை அடிச்சு வளர்க்கணும் .
273 (b). Spare the rod and spoil the child.

274 (a). முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
274 (b). We reap what we sow.

275 (a). வருந்தினால் வாராதது இல்லை.
275 (b). There is no pain without gain.
 
276 (a). வழவழத்த உறவைக் காட்டிலும்
வைரம் பாய்ந்த பகை நன்று.
276 (b). The known enemy is better than the unknown friend.

277 (a). விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
277 (b). Child is the father of the man.

278 (a). நுணலும் தன் வாயால் கெடும்.
278 (b). A closed mouth catches no flies.

279 (a). வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்.
279 (b). ASK AND IT SHALL BE GIVEN TO YOU.

280 (a). விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
280 (b). No Rains, No grains!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top