chathurrmasya vratham.

kgopalan

Active member
மனைவி மக்களுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சாதுர்மாஸ்ய வ்ரதம் உண்டு.


ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி முதல் கார்த்திகை மாதம் ஏகாதசி வரையில் நான்கு மாதங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் ஒரு சில வற்றை விலக்கி கட்டுபாடுகளுடன் இருப்பதே சாதுர்மாஸ்ய வ்ரதம்.


24-7-2018 முதல்22-8-2018 முடிய உணவில் விலக்க வேண்டியது :காய்,, புளி, மிளகாய், தேங்காய்.
23-8-2018 முதல்20-9-2018 முடிய தயிர் மற்றும் அவற்றால் தயாரிக்கும் பொருட்கள் கூடாது. தயிறில் ஒன்றுக்கு நான்கு பங்கு ஜலம் விட்டு மோராக உபயோகிக்கலாம். நிறம், தரம்,, ருசி குணம் மாறி
விடுவதால் மோர் சாப்பிடலாம்..


21-9-2018 முதல் 20-10-2018 முடிய பால் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கும் உணவு வகைகள் கூடாது. ஆனால் தேங்காய் பால் உபயோகிக்கலாம்
.
21-10-2018 முதல் 20-11-2018 முடிய த்வி தள விரதம். அதாவது தானியங்களை உடைத்தால் இரு அல்லது பல விதைகள் இருக்கும். ஆதலால் பருப்பு வகைகள் , புளி மிளகாய். காய்கறிகள் சாப்பிடக்கூடாது. ஆனால் வாழைக்காய், வாழைதண்டு, வாழப்பூ,, சேனை, வள்ளிகிழங்கு, இஞ்சி, மாங்காய் இஞ்சி, பொன்னாங்கண்ணி ஆகியவை உபயோகிக்கலாம்..
இதனால் ஆரோக்கியம், குடும்ப அமைதி உண்டாகும்.


24-7-2018 அன்று பூஜை அறையில் ஸ்வாமிக்கு முன்பாக ஹே அச்யுத நான் இன்று முதல் நான்கு மாதங்கள் வரை இந்த வ்ருதத்தை செய்கிறேன். அது வறை எனக்கெந்த தடங்களும் வராமல் செய்வாயாக தடை ஏதுமில்லாமல் வ்ரதம் நிறைவேற நீ எனக்கு அருள் புரிவாயாக. என்று மஹா விஷ்ணுவை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
 
Back
Top