Ariyalur District Temples-அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில்

Status
Not open for further replies.
Ariyalur District Temples-அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில்

Ariyalur District Temples-அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில்

அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில் பொய்யாத நல்லூர், அரியலூர்.


காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


T_500_1720.jpg




தல சிறப்பு:


வைத்தீசுவரன் கோயில் தையல்நாயகியின் மூத்த சகோதரியே இங்குள்ள தையல்நாயகி என்பது சிறப்பு.

பொது தகவல்:

பொய்யாத நல்லூர் தையல்நாயகி ஆலயத்தில் அம்மன் அருகிலேயே வைத்தீஸ்வரன் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் அய்யனார், சாமுண்டீஸ்வரர், காமாட்சியம்மன், பொன்னியம்மன் ஆகிய தெய்வங்கள் காணப்படுகின்றன. ஏவல் தெய்வங்களான வீரமுத்தையா, மருதையன் ஆகியோருக்கும் அருகிலேயே தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சன்னிதிக்கு மிகப்பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது.

தலபெருமை:

வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகிக்கு கோயில் நிலங்கள் ஏராளம். புவனத்துக்கே சொந்தகாரியான அம்மனுக்கு 95 வேலி நிலம் உடைமையாக இருந்தது. ஒருமுறை கபிஸ்தலம் பண்ணையார் அம்மனை வழிபட வந்தார். நூறு வேலி நிலத்துக்குச் சொந்தகாரரான பண்ணையார் தையல்நாயகியை விடவும் தன்னிடம் கூடுதல் நிலம் இருப்பது கூடாது என்ற எண்ணத்தில் அம்மனுக்கு ஐந்து வேலி நிலத்தை எழுதி வைத்தார். இத்தகைய உயர்ந்த உள்ளம் படைத்த பக்தர்களைப் பெற்றதால் வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி பேரும் புகழும் பெற்றாள். அதேபோல பொய்யாத நல்லூர் தையல்நாயகிக்கும் பேருக்கும் புகழுக்கும் குறைவில்லை. பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இவ்வூர் பொய்யாத நல்லூர் என பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.


தல வரலாறு:

முன்பொரு காலத்தில் சகோதரிகள் இருவர் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பயணம் மேற்கொண்டு நடந்தே மலையிலிருந்து பயணம் மேற்கொண்டு நடந்தே வந்தனர். இருவருக்கும் தையல்நாயகி என்பதே நாமம். வெகுதூரம் நடந்தே வந்த களைப்பில் மூத்தவள் கரிசல்மண் பகுதியொன்றில் அமர்ந்து தூங்கிப் போனாள். அக்காள் அமர்ந்ததை அறியாமல் விடிய விடிய நடந்த தங்கை வளம்பொருந்திய நஞ்சை மண்ணை அடைந்தாள். அப்போதுதான் தனது சகோதரி தன்னுடன் இல்லாததை அறிந்த இளையவள், அழைத்தாள். ஆனால் அவளோ, எனக்கு இந்தக் கரிசல் மண்ணே பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே கோயில் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். இவ்வாறு மூத்த தையல்நாயகி கோயில் கொண்ட இடம்தான் பொய்யாத நல்லூர். வேறு வழியின்றி தனக்குப் பிடித்த நஞ்சை நிலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்குத் திரும்ப முடிவெடுத்த இளையவள் தனது சகோதரியிடம், அக்கா, உன் விருப்பம்போல் நீ இங்கேயே தங்கிக் கொண்டாலும், எனது ஊரில் மக்கள் எனக்கு திருவிழா எடுக்கும்போதெல்லாம், நீ அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதற்கு மூத்தவள் இசைந்தாள்.

முன்பெல்லாம் வைத்தீஸ்வரன் கோயிலில் விழா நடைபெறும்போது, இங்குள்ள உற்சவ அம்மனை இவ்வூர் மக்கள் தோளிலேயே சுமந்துசென்று சாமி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்புவர். இந்த இரண்டு தையல் நாயகிகளும் அக்காள்-தங்கை என்பது பலரும் அறியாச் செய்தி.

இருப்பிடம் :
அரியலூரில் இருந்து செந்துறை செல்லும் வழியில், பத்து கிலோமீட்டர் தொலைவில் பொய்யாத நல்லூர் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்வதற்கு பஸ் வசதி மட்டுமின்றி, கார், ஆட்டோ போன்ற அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
அரியலூர்
ரோலக்ஸ் லாட்ஜ் போன்: +91-4329-222 185
ரம்யாஸ் லாட்ஜ் போன்: +91-4329-220 369
காவேரி லாட்ஜ் போன்: +91-4329- 222 224
லிங்கம் லாட்ஜ் போன்: +91-4329-222 042
நடராஜா லாட்ஜ் போன்: +91-4329-222 333.
 
Status
Not open for further replies.
Back
Top