Ariyalur District Temples-அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்&#29

Status
Not open for further replies.
Ariyalur District Temples-அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்&#29

Ariyalur District Temples-அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

T_500_1815.jpg



தல சிறப்பு:


கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

பிரார்த்தனை

வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


பொது தகவல்:

கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள், கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.


தலபெருமை:

ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள். மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள். பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருக்கும் காவல் தெய்வங்களின் சன்னதியில் தான் பலி நேர்த்திக்கடன் நடத்துகிறார்கள்.


தல வரலாறு:


வளையல் வியாபாரி ஒருவர் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய சென்றிருக்கிறார். ஒருநாள் தெருதெருவாக சுற்றிவந்து அவர் வளையல் விற்று வந்தபோது அவர் எதிரே ஒரு சின்ன பெண் நின்றுகொண்டு. வளையல்காரரே எனக்கு வளையல் வேண்டும் தருவீர்களா? என்று தன் பிஞ்சு கரங்களை நீட்டி கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பெண் சுட்டித்தனம் எதுவும் செய்யறாளோ என்று அவர் யோச்சிருக்கிறார். என்ன பார்க்கறீங்க? வளையலுக்கு காசு தருவேனா, மாட்டேனான்னுதானே, அந்தத் தெருவுல இருக்கிற பெரிய வீடு எங்க அண்ணனுதுதான் அவர்கிட்டே ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டு விட்டதா சொல்லி காசு வாங்கிக்கொள்ளுங்கள். என்று குழந்தை சொல்லிருக்கிறாள். வளையல்காரரும் அவளுடைய கைநிறைய வளையல்களைப் போட்டுவிட்டுருக்கிறார். குழந்தை சந்தோஷமாக கலகல வென்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய்விட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசை வாங்கிக்கொள்வதற்காக போன வளையல்காரர் திகைத்துவிட்டாராம். ஏன்னென்றால் அது அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை! ராஜாவீட்டுப் பெண்ணா தன்கிட்டே வளையல் வாங்கிருப்பாள் என்று தயங்கினாலும் கேட்டுத்தான் பார்ப்போம் என்று நுழைந்து கேட்டுவிட்டார் வியாபாரி.


அரண்மனையில் அப்படி ஒரு பெண்குழந்தை இல்லை என்று சொன்னதுடன், ஏமாற்றுவதாக என்னி வளையல்காரரை திட்டி அடித்திருக்கிறார்கள். ஒப்பில்லாதவள்னு பெயர்கூட சொன்னாளேன்னு நம்பினேன் இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று அழுதார் வளையல்காரர். சட்டென்று ஒருவிஷயம் புரிந்திருக்கிறது ராஜாவுக்கு தன்னோட தங்கை என்று சொல்லி அவரிடம் வளையல் வாங்கிக் கொண்டது தங்களோட குலதெய்வமான ஒப்பில்லாதவள் தான் என்று உடனே ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டு ஏராளமான பொன்னும் பொருளும் வளையல்காரருக்கு கொடுத்து அனுப்பினார். குழந்தையாக வந்து அம்மன் எந்த இடத்தில் அமர்ந்து வளையல் போட்டுக்கொண்டாலோ அங்கு ஒரு கோயில்கட்டி அம்மனை எழுந்தருளும்படி வேண்டியிருக்கிறார் ராஜா. அம்மனும் அருள்வாக்கில் சரி என்று சொல்லிவிட்டாள்.


இருப்பிடம் :
அரியலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒப்பில்லாத அம்மன் கோயில் தெரு. நடந்தே சென்று விடலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
அரியலூர்
ரோலக்ஸ் லாட்ஜ் போன்: +91-4329-222 185
ரம்யாஸ் லாட்ஜ் போன்: +91-4329-220 369
காவேரி லாட்ஜ் போன்: +91-4329- 222 224
லிங்கம் லாட்ஜ் போன்: +91-4329-222 042
நடராஜா லாட்ஜ் போன்: +91-4329-222 333
 
Status
Not open for further replies.
Back
Top