Ariyalur District Temples-அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்&#29

Status
Not open for further replies.
Ariyalur District Temples-அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்&#29

Ariyalur District Temples-அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோயில்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

T_500_1814.jpg


தல சிறப்பு:

வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.

பொது தகவல்:

சிறிய சுவரில் செதுக்கிப்பதித்தது போல் சில சிலைகள், அருகில் அகல் விளக்கு ஏற்றும் இடம், சிறு சிறு காவல் தெய்வச் சிலைகள், சற்றே தொலைவில் காவலன் போல் கம்பீரமாக நிற்கும் மதுரைவீரனின் கதை உருவம்.


பிரார்த்தனை


நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருவிழாவின் போது பால்குடம் எடுத்து, பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.


இந்த ஊரில் எந்த விட்டில் விசேஷம் நடந்தாலும் முதல் மரியாதை முனியப்பசாமிக்குத் தான். அவர் உத்தரவு தந்த பின்பு தான் காரியத்தை துவங்குகிறார்கள். அந்த ஊரில் குழந்தை பிறந்தவுடன் முனியப்ப சாமியின் பெயரையே முதலில் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் முடியிறக்குவது முனியப்ப சுவாமிக்குத்தான். வருடத்திற்கு ஒரு முறை ஊரில் அனைவரும் ஒன்றுகூடி திருவிழா நடத்துகிறார்கள். திருவிழாவின் போது பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். கோட்டை முனியப்பருக்கு கோட்டை ஏதும் இல்லாவிட்டாலும் சிறு கோயிலில் அமைந்திருப்பதே ஊருக்கு கோட்டை அமைந்தது போல் காவலாக உள்ளது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

தல வரலாறு:

பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தார்கள் ஆட்சிக் காலத்தில் எப்படி பிரதிஷ்டை செய்தார்களோ அப்படியே மாறாமல் இருக்கிறது கோயில். அதைப்போலவே அந்தப் பகுதி மக்கள் கோட்டை முனியப்பசாமி மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மாறாமலிருக்கிறது கோயில் எழுந்த காலம் எவருக்கும் தெரியவில்லை. என்றாலும் மன்னரின் கனவில் வந்த முனியப்பன் தனக்கு ஒரு இடம் தருமாறும், ஊருக்கே காவலாக இருப்பதாகச் சொன்னதுமான செவிவழிக்கதை மட்டும் பலருக்கும் தெரிந்திருக்கிறது.




இருப்பிடம் :
அரியலூர் மாவட்டத்தில், பிரதான பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிர்மலா பள்ளி நிறுத்தத்தின் அருகே வெட்ட வெளியில் இருக்கிறது கோட்டை முனியப்பா கோயில்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
திருச்சி
ஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216
பிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414
ஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4
ஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4
ஹோட்டல் மேகா போன்: +91-431-241 4092,241 6354


Temple : Temple Details | - | Tamilnadu Temple | ?????? ??????????
 
Status
Not open for further replies.
Back
Top