• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Agni in Rig Veda

Status
Not open for further replies.
Tamil version of post no. 6

அக்னியும் சூரியனும்
அக்னியின் பிரகாசம் சூரியனை ஒத்து இருக்கிறது. இந்த ஒற்றுமை பல மந்திரங்களில் புகழ்ந்து பாடப்படுகிறது.

அவன் சூரியனைப் போல எதிர்த்து அழிக்க முடியாத பிரகாசத்துடன் விளங்குகிறான் என்று போற்றுகின்றனர்.
அக்னி சூரியனைப் போல மனிதர்க்கு நலம் புரிவதால், சில மந்திரங்களில் மனிதரின் சூரியன் என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுகிறான். அக்னிக்கென ஏற்பட்ட ஒரு சூக்தத்தில் அக்னி என்ற பெயரே காணப்படாமல் முழுவதும் சூரியன் என்ற பெயராலேயே அக்னி போற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
இன்னும் சில இடங்களில் அக்னியானவன் சூரியனைக் கட்டுப்படுத்தும் மேல் அதிகாரியாகவும் வர்ணிக்கப்படுகிறான்.
 
நீரில் தீ

வீட்டிலும் காட்டிலும் எரியும் அக்னியைப் பார்த்த ரிஷிகள் வேறு எங்கெல்லாம் காணப்படுகிறான் என்று ஆராய்கிறார்கள்.

வடவாக்னி என்று சொல்லப்படும், கடலில் எரிகுழம்பினால் தோன்றும் புகையைப் பார்க்கிறார்கள். அதைப் பல விதமாக வர்ணிக்கிறார்கள். சமுத்திரத்தை உடையாக உடையவன், நீரின் உள்ளிருந்து அலைகளுக்கு மேலெழும்புகிறான், நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவனுக்கு அளிக்கப்படுகிறது.
 
Tamil version of post no. 7

உயிர்த் தீ

இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது. உயிர் வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும் மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர்.

மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன், இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். “சிங்கமாக, காளையாக வெவ்வேறு கருவறைகளில் அவன் வளர்கிறான்” என்கின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்” என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.
 
Tamil version of post no. 12
பசித் தீ

இன்னும் நுணுகி ஆராயுங்கால் வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. பசிக்கு உணவிடவில்லை எனில் அது அம் மனிதனையே அழித்துவிடுகிறது. இதிலும் பசியும் அக்னியும் ஒன்றாக இருக்கின்றன. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறான். வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர்.
 
Dear Sir,

It would be more useful if you give the original mantras (Riks) or at least the number, also along with the english translations. Also, pl. let me know whether you follow Aurobindo Ghosh's version only or some others as well.

2. It is generally seen that Indra gets the most number of hymns in the Rigveda and Agni is perhaps the second only. And I have read a story of how svAhA and svadhA, the wives of Agni became messengers to the Devas and pitrus respectively. The portion regarding Agni carrying food to all the Devas, does not mention this. Agni, by himself , is not the messenger.

Further according to that story in Deveebhagavatam, SvAhAdEvi ought to have become the wife of Krishna by now and left Agni; only svadhA remains with Agni!

3. Coming down to the earthy level, the very first Rik, "agnim eeLhE purOhitam..." is interpreted by some to the effect that it was with the help of Agni who went ahead (purOhitam) of the Rigvedic people in a helpful (beneficial) manner, that they could burn the forests as well as drive away their enemies that the first Rik went to Agni and not Indra.
 
Tamil version of post no. 14

காமத் தீ

இனப்பெருக்க விழைவும் அக்னி போன்றே, தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை முனைப்புடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். உடல்களை உருவாக்குபவன் என்றும் தனூனபாத் (உடலில் தோன்றியவன்) எனவும் பெயர் பெறுகிறான் அக்னி.

“அக்னி பசுக்கள் சினைப்பட உதவிசெய்கிறான்” என்றும் “கன்னிகளைப் பொறுத்தவரை அவன் பெயர் மர்மமானது” எனவும் பேசுகிறார் ரிஷி. “கணவன் மனைவியை அவன் ஒன்றுபட்ட மனத்தினராக்கும்போது, அவர்கள் அவனுக்குப் பால் படைக்கிறார்கள்” என்று கூறுகிறார். உயிருள்ள பிராணிகளுக்கெல்லாம் தலைவன், உயிருள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவன், தாய்களின் வயிற்றில் நுழைந்து வளர்பவன், களைப்படைந்தவனை இன்பத்துக்குத் தூண்டுபவன் என்பன அவர்கள் தரும் பிற அடைமொழிகள்.

அறிவுத்தீ

அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவன், வீரச் செயல்களில் உதவுபவன், தூண் போல் தாங்குபவன் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவன் என்றும் போற்றப்படுகிறான். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவன் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறான். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவன் எனப் பெயர் பெறுகிறான். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) இந்தப் பெருமை வேறு தேவர்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

“அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவன் என்றும் மற்ற அக்னிகள் இவனுடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் மேலும் சிலவற்றைக் கீழே காணலாம். இவை எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.
 
Namassadhasae.

Shri Vikramaji's series on Panchabootham - especially this agni analysis - is coming very excellent. Due to my 'ariyaamai', I am not able to contribute to the subject. Hence I am expressing my 'bramippu' over the 'pandithyam', with which this author is gifted.

The series is going excellent. Fit for publication as a book on 'Panchabootham'. Thanks for your enightening us on the topic, with your expertise. Highly informative.

அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!
 
(What appear in red are attributes of Agni as found in Rig Veda. )
உலகு காப்பவன்


அக்னி என்றும் உலகைக் காத்துக் கொண்டு இருப்பவன். பிறவாப் பரம்பொருள் போல உலகைத் தாங்குபவன். ஸத்ய மந்திரங்களால் விண்ணை நிலைநிறுத்துபவன். விண்ணுக்கும் மண்ணுக்கும் தந்தை. விண்ணின் ஒளிமிக்க இடங்களை நிரப்புபவன். பூமியின் மையம். விண்ணின் நெற்றி. விண்ணுக்கும் மண்ணுக்கும் தூதன். மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவனை நிலைநாட்டினான். ப்ருகு அவனை விருந்தினனாகவும் தேவர்களின் நண்பனாகவும் நாட்டினார். தேவர்கள் அவனை ஆரியர்களின் விளக்காக அமைத்தனர்.

அறிவாளி

அவன் ஒரு ரிஷி. கவி. அறிவாளி. வருங்காலம் உணர்ந்தவன். எல்லாம் அறிந்தவன். பிறக்கும்போதே தூதனாகவும் ஆசிரியனாகவும் பிறக்கிறான். புனிதமானவன். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவன்.

அரசன்

அரசன் போல் ஆள்பவன். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும்செடி கொடிகளுக்கும் அரசன். மானிடர் வாழும் நாட்டின் அரசன். பல வீரர்களைப் பெற்றிருப்பவன். தேவர்களும் மனிதரும் அவன் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவனே விதிப்பவன்.

மானிடரின் நண்பன்

பக்தியுடையோரைக் காப்பவன். தாமதமின்றி வரம் அருள்பவன். வாழும் மானிடரில் முதல்வன். மானிடரின் மையம். முன்பு பிறந்தவருக்கும் தற்போது பிறப்பவருக்கும் இருப்பிடம். இருப்பதற்கும் இனி வர இருப்பதற்கும் காவலன். சுபங்களின் நாயகன். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகன். பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவனே தலைவன். குறிப்பாக தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவன். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறான். செல்வங்கள், வீரர்கள், துயர நீக்கம், மகிழ்ச்சி, உணவு, புத்திரர்கள், புகழ், புஷ்டி, அமரத்தன்மை, வெல்லமுடியாத வலிமை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, மக்கள் கூட்டத்துக்குப் பாதுகாப்பு, போரில் பாதுகாப்பு, எதிரிகளின் செல்வம் ஆகியவை அவன் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறான்.
 
Tamil version of posts no. 15 and 16.

பிதிரரும் தீயும்

உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவன் அக்னி. பிரேதங்களை அவனிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே. பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க” என்று வேண்டுகிறார். அவன் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

புகழ் விரும்பி

இவ்வாறு அக்னியைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடிய ரிஷிகள் தங்கள் பாடல்களால் அவன் மகிழ்வதாக நினைத்துக் கூறும் துதிகள் இவை.

மனிதரின் விருப்பத்துக்கும் புகழ்ச்சிக்கும் உரியவன். சொர்க்கம் கூட அவனது பெருமைக்கு ஈடாகாது. அவனை முன்னையோரும் போற்றினர், நவீன காலத்தவரும் போற்றுகின்றனர், அவனை மற்ற தேவர்களும் புகழ்கிறார்கள். புதிய புதிய புகழ்ச்சிப் பாடல்களைக் கேட்பதில் விருப்பம் உடையவன். அதனால் அவன் வலு கூடுகிறது. அப்படிப் புகழ்வோர்க்கு நல்ல செய்திகள் சொல்லுபவன்.
 
அக்னியின் தோற்றம்

அக்னி எப்பொழுது தோன்றியவன்? யாருக்குத் தெரியும்? அவன் மிகப் பழமையானவன் என்பது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிகிறது. அவன் எவ்வாறு தோன்றினான் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினான், அவனை விண்ணும் மண்ணும் நீரும் அறியும் எனப் பேசுகின்றனர்.

தேவர்கள் முதலில் ஸூக்த வாசத்தை (தோத்திரப் பாடல்களை) உருவாக்கி, பின் அக்னியையும் யாகத்தையும் தோற்றுவித்தனர்”. “விண் அவனது தந்தை. பூமி தாய். சிறு பொறியாகத் தோன்றினாலும் உடனே பெரிதாக வளரும் அக்னியைப் பார்த்து வியக்கும் ரிஷிகள் மார்பகம் இல்லாத தாய் அருகில் நெருங்கிப் பால் குடிக்காமலேயே, பிறந்த உடனேயே வலியவனாக வளர்ந்தவன் என்று போற்றுகின்றனர். உலகம் இருளில் மூழ்கி இருந்தபோது அவன் பிறந்து ஒளி வந்தது, தேவர்கள், மண், விண், தாவரங்கள், நீர் எல்லோரும் வியந்தனர், களிப்படைந்தனர் என்பது ரிஷிகளின் வாக்கு.

இலாவின் (பூமியின்) மகனான அவனை அவளிடத்தில், புவிமையத்தில் தேவர்கள் அமைத்தனர். மக்கள் அவனை அணைந்து விடாமல் நன்றாகக் காப்பாற்றுகின்றனர். இவ்வாறு காப்பாற்றப்படுவதால் அவன் பரதன் என அழைக்கப்படுகிறான்.

நீர்கள் அவனைத் தாயாகத் தாங்கி பிறப்பித்தன. அவனை முறையே நீர், த்வஷ்டா, ப்ருகு, மாதரிஸ்வான், தேவர்கள் ஆகியோர் வளர்த்து மனிதருடைய முதல் போற்றுதலுக்குரியவனாக உருவாக்கினர்”.
 
தேவத் தன்மை

அக்னி இயற்கையிலேயே தேவன். அதாவது ஒளியுடன் கூடியவன். அவனது வலிமையையும், எங்கும் பரவி இருக்கும் தன்மையையும், மானிடர்க்கும் பிற உயிர்களுக்கும் பல வகையிலும் உதவி செய்யும் பண்பையும் பார்த்த ரிஷிகள் அவனைத் தேவர்களில் மேம்பட்டவனாகக் கருதிப் போற்றும் விதத்தைப் பார்ப்போம்.

அவன் வசு ருத்ரர்களுக்கு மேலாக வைக்கப்படுபவன். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறான். தஸ்யுவைக் கொன்று சம்பரனைக் கிழித்து அவனது அரண்களை உடைத்தவன். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவனால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறான். விழித்திருந்து நலம் செய்கிறான். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறான். தன் பக்தரைக் காக்கிறான். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறான். தேவர்களின் நண்பன். தேவர்களின் தந்தை. தேவர்களின் மகன். தேவர்களின் கொடி.

வேள்வி தொடர்பான புகழுரைகள்

அவனே யாகத்தின் ராஜா. வேள்வியில் வல்லோன். அனைத்து தேவர்களுக்கும் அவனே அவி உணவைச் சுமந்து செல்கிறான். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருபவன் அவனே. தேவரோடு தர்ப்பையில் அமர்பவன். வாயில் நெய்க்கரண்டி கொண்டவன். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவன். வேள்விக்கு உதவ சொர்க்க வாசலைத் திறப்பவன்.
 
ருதத்தின் நாயகன்

ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் ஒரு தனி நியதி உண்டு. இது ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படும். அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை ருதத்தில் தோன்றியவன், ருதத்தின் மடியில் கிடக்கிறான், அதிலிருந்து என்றும் தவறுவதில்லைஎன்கிறார் ரிஷி. ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலைபெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்என்பது அவரது கவித்துவம். ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறான். தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறான். ருதப்படி ருதுக்களைக்(பருவகாலங்களை) காப்பான். ருதத்தைக் காக்க வரும்போது அவனே வருணனாகிறான். முனிவர் போல் தேவர்களின்மனிதர்களின் விரதங்களைப் பூர்த்தி செய்பவன். அவனது விரதத்தால் மருத்துகள் தோன்றினர். தேவர்கள் ஏற்படுத்திய எல்லா நிலையான விரதங்களும் அவனிடத்தில் பொருந்துகின்றன. இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறான். அவன் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

எல்லாத் தேவர்களும் அவனே.

அக்னியின் தேவத் தன்மையில் ஆழ்ந்த ரிஷிகள் அவனை மேலும் உயர்த்தி மற்ற தேவர்களாக விளங்குவதும் அவனே என்கின்றனர்.

அவனே பிரம்மா, விஷ்ணு, இந்திரன், பிரம்மணஸ்பதி, ரயிவித்பிரம்மா, விதாதா, வருணன், மித்ரன், அர்யமான், அம்சன், ருத்ரன், மருத்துகள், பூஷன், ஸவிதா, பகன், ரிபு, அதிதி, ஹோத்ரி, பாரதி, இளா, விருத்திரஹன், ஸரஸ்வதி. எல்லாத் தேவர்களும் அவனிடம் உள்ளனர்.


அக்னியே பரம்பொருள்

அக்னியை இயக்கும் சக்தி எது என்று வியந்த ரிஷிகள் அவனே தான் மூல சக்தி என்பதை அறிகின்றனர். அக்னியின் மேல் அவர்கள் கொண்ட பக்தி மேலும் வளர்கிறது. அக்னியே பரம் பொருள் என்ற கருத்தில் அதிதி, ஸத்யம் என்ற அடைமொழிகளால் அவனைப் போற்றுகின்றனர்.

பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்ற தாயாக வேதத்தில் உருவகிக்கப்படுகிறது. அக்னிஅதிதியின் மகனாகவும்நம்மை அதிதியிடம் மீட்டும் சேர்ப்பிப்பவனாகவும் கூறப்படுகிறான். அவனும் எல்லையற்றவனாக வர்ணிக்கப்படுகிறான்.

பரம்பொருளின் எக்காலத்திலும் நிலைபெற்றிருக்கும தன்மை ஸத்யம் என்று போற்றப்படுகிறது. ஸத்யத்தை தருமமாகக் கொண்டவன் என்றும் அவனே ஸத்யம் என்றும் துதிகள் பிறக்கின்றன.

இவ்வாறு நம் பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் தீ முனிவர்களின் அருள் மன நிலையில்படிப்படியாக உயர்ந்து பரம்பொருளின் பலவேறு தோற்றங்களில் இதுவும் ஒன்று என்றுஉணரப்படுகிறது.

இதே போல வாயு முதலான பிற தெய்வங்களைப் போற்றும் போதும் அவர்களது சிந்தனை படிப்படியாக வளர்ந்து நீயே பரம்பொருள் என்று பேச வைக்கிறது.

இத்துடன் இத்தொடர் முடிவடைகிறது. வாசகர்களின் விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top