• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

About Dalits

Status
Not open for further replies.
<H3 class=post-title>A history of Temple entry of dalits

Posted by shri Adhiseshan


சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் ... தமிழ்நாடெங்கும் கோயில் வாசல்களில் ஒரு போர்டு... ... "கோயிலினுள் கீழ்சாதியினருக்கு அனுமதியில்லை... மீறினால் கிரிமினல் குற்றவாளியாகக் கருதி கடுமையாகத் தண்டிக்கப்படுவர்... அரசாங்க உத்தரவு..."

இதையறிந்த... மதுரை வைத்தியநாத-ஐயர் எனும் காங்கிரஸ் தலைவர் (திருக்குலத்தோரான திரு கக்கன் அவர்களின் ஆசான்)... ஓர் எதிர்க்குரல் முன்னறிவிப்புச் செய்தார்.சமிதியினர் கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கினர் ... அதையும் மீறி திருக்குலத்தோர் குழுவோடு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுள் ஆலயப்பிரவேசம் செய்தார்...

.. கிடைத்தது பெரும் தடியடி அனைவர்க்கும்... சாதி பேதமின்றி ....சுதந்திரப் போராளிகள் என்ற ஒரே உள்நோக்கிலே. மண்டையடிபட்ட தலைவர் மருத்துவ மனையில் அனுமதி... பலருக்கும் பெருத்த காயம் வைத்தியநாத- ஐயரின் சாதியைச்சேர்ந்த... சமிதியினரே... அவரைச் சாதிவிட்டு நீக்கினர்... அவர் வீட்டில் அந்தணர் யாரும் நுழையக்கூடாது தொடர்பு கூடாது.. திருமண உறவோ சடங்குகளில் பங்கீடோ கூடாது ... என்ற தடை..

மதுரை நீதிமன்றத்தில் கோயில்தடையை எதிர்த்து வாதாடினார் மதுரை காங்கிரஸ் தலைவரும் வக்கீலுமான... பெரும் அளவில் மண்டையடிபட்ட காயக்கட்டோடு கோர்ட்டுக்கு வந்த வைத்தியநாத ஐயர்...

"திருக்குலத்தோர் தாழ்ந்தவர் அன்று... வேதமும் சாத்திரங்களும் அவ்வாறு கூறவில்லை... அவ்வாறு சாத்திரம் கூறுவதாகச் சொல்வது... சில முற்காலத்தைய சர்வாதிகார மன்னர்களின் கயிறுதிரிப்பே. மனுதர்ம சாத்திரம் ஒரு சாத்திரமே அல்ல... அன்பார் வேதநெறிக்கு அது ஒத்ததன்று. சாதிஅடிப்படையில் நீதி வழங்க எந்த சாத்திரமும் பறை சாற்றவில்லை.. எதிர்க்கட்சியாளர்கள் கூறுவது தவறு" என வாதிட்டார்.

ஆனால் ஆங்கிலேய நீதிபதி இதை ஏற்காது மனுதர்ம சாத்திரப்படி... கோயிலினுள் கீழ்ச்சாதியினர் நுழையக்கூடாது. என்றும்... சாதிக் கலவரத்தைத் தூண்டினார் திரு வைத்தியநாத ஐயர் ... எனவும் தீர்ப்பு அளித்து அவரைச் சிறையில் அடைத்து வதைத்தான்...

இது கேட்டுப்பொங்கி எழுத பாரதி எனும் தமிழ்ச்சிங்கத்தின் கர்ஜனைக் குரல் தான் மேற்கண்ட கனல் வரிகள்.

நாடெங்கும் இச்செய்தி பரவியவுடன்... அந்நாள் காங்கிரஸ் பெருந்தலைவர் ... பம்பாயிலிருந்த மராட்டியர் திலகர்... நாடு முழுதும் ஓர் சுற்றறிக்கை விட்டார்... அந்தணர்களைக் குறித்து...

... "எனது அன்பார்ந்த நம் இந்திய நாட்டு அந்தணர்களே!!... தொழிலில் நான் வக்கீல் ஆனாலும்... நானும் அந்தண- சாதியைச் சேர்ந்தவன்... உயரிய ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்து வேதமும் சாத்திரங்களும் நன்கு கற்றவன் என்றும் நீங்கள் அறிவீர்கள்... எனவே நமது சாதியினரின் ஒருமித்த நன்மை கருதியும்... நம் நாட்டு மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் கருதியும் கூறுகிறேன்.... இந்தச்- சதிகார- ஆங்கிலேயரின் வார்த்தைகளில் மயங்கி எவரும் திருக்குலத்தோரைத் தாழ்வாகக்கருதாதீர்... நினைவிருக்கட்டும் துக்காராமும், கபீர்தாசும், கனகதாசரும், ஆழவார்கள் நாயன்மார்களில் சிலரும் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று... அவர்களை ஆண்டவனே சமமாக ஏர்றுக் கொண்டு விட்டதை அறிந்த பின்னும் அவர்களை இழிவு செய்வது அந்த ஆண்டவனுக்கெ பொறுக்காது பெரும் பாவம்... எனவே அன்பர்களே... இன்று முதல் இந்திய நாட்டினர் அந்தணர் நீங்கள் ஒவ்வொருவ்வரும் ஒரே ஒரு திருக்குலத்தோரையாவது கோயிலுக்கு அழைத்துச்சென்று ... அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள்... நாம் இந்தியர் அனைவரும் சமமே... ஒற்றுமையாய்க் கூடி ஓங்குவோம்... ஓம் சாந்தி"

திலகரின் இக்கடித நகல் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது... காங்கிரஸ் கூட்டங்களிலும் சாதிபேதமின்றி அனைவருக்கும் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது....

உடனே ஓர் பேரியக்கமாக நாடெங்கும்... ஆலயப்பிரவேசம் நடந்தது... ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு அந்தணர் தலைமையில்...

ராமேசுவரத்தில் ராஜாஜி... மதுரையில் வைத்தியநாத ஐயர்... ஸ்ரீரங்கத்தில் டாக்டர் தி.செ.சௌ.ராஜன்... சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் திரு சத்தியமூர்த்தி... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சேலம் விஜயராகவாச்சாரியார்...

பின்னர் மேலும் ஆதாரங்களோடு மதராஸ் (இன்றைய சென்னை) உயர்-நீதிமன்றத்தில் நீண்ட காலம் வாதாடி வெற்றி பெற்றார்.. திரு ராஜாஜி... சர்வாதிகாரி ஆங்கிலேயரின் அடியான் நான்கு ஆங்கிலேய நீதிபதிகளும் மறுக்கவொண்ணா நிலையில்... கீழினத்தோர் என்றும் தாழ்ந்த-சாதியினர் என்றும் பெயர்கள் கொண்ட.. "திருக்குலத்தோருக்கு"... கிட்டிய பெருவெற்றி

திலகரின் நாடு தழுவிய அறிவிப்பு கண்டு பெரும் ஆனந்தமுற்ற மகாகவி பாரதி... ஓர் கவிதை எழுதினார்...

"ஓய்... திலகரே.. உமது சாதிக்கு அடுக்குமோ?... இது நியாயம் தானா சொல்லும்"... எனும் துவக்க-வரி கொண்டு

தமிழில் "இடக்கரடக்கல்"... எனும் நையாண்டிக் கவிதை அது... அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் உடன் அனுப்பினார் திலகருக்கே... அதைப் படித்த திலகர்.. மராட்டியிலும் இந்தியிலும் மொழிபெயர்க்கச் செய்து நாடெங்கும் மும்மொழிகளில் வெளியாயின... ஏனைய மொழிகளிலும் மொழி-பெயர்ப்பாகி நாடெங்கும் பேசப்பட்டன...

</H3>
 
Hope that these Tamil fonts are readable.This article talks about how brahmins like vaidyanatha iyer, thilakar and rajaji were in the forefront to take dalits into temples.

(I did not post this as a separate thread.I posted it elsewhere.Dont know how this became a separate thread with this title)
 
Status
Not open for further replies.
Back
Top