பஞ்ச கலசம் என்பது ஐந்து கலசம். ஒவ்வொன்றிலும் சிவனின் அகோரம், தத்புருஷம், வாமதேவம்,ஈசானம் ஸத்யோஜாதம் மந்திரங்கள் சொல்லி நீர் நிரப்பி அதை கடைசியில் அபிஷேகம் செய்வது. வீட்டு பூஜை ஆனால் 5 சிறு கின்னங்கள் (ஒவ்வொரு கின்னமும் ஒவ்வொரு ஓசை கொடுக்கும்). வைத்து அதில் ஜலம் மந்திரம் சொல்லி விட்டு கடைசியில் அதை அபிஷேகம் செய்வார்கள். வீட்டிலுள்ள சிறிய சிவ லிங்க்கத்திற்கு என்னைய் அபிஷேகம் செய்ய மாட்டார்கள்.
கோவிலிலுள்ள பெறிய லிங்கத்திற்கு தான் நல்ல எண்ணய் அபிஷேகம் செய்வார்கள். ஜலத்தில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் பச்சை கல்பூரம், போட்டு அதனால் அபிஷேகம் நடைபெறும். சந்தனத்தில் பச்ச கற்பூரம், குங்குமப்பூ, சேர்த்து பன்னீர் விட்டு அரைத்து அபிஷேகத்திற்கும், திலகம் நெற்றியில் இடவும் உபயோகிப்பார்கள். கஸ்தூரி திலகம் இடுவார்கள். புனுகு, ஜவ்வாது, அரகஜா இவைகளையும் திலகத்துடன் சேர்த்து நெற்றியில் இடுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் இவைகள் கிடைக்கும். வாசனை பொடி அபிஷேகத்திற்கு கிடைக்கும் . அதில் வாசனை இருப்பதால்( நாட்டு மருந்து கடையில் கிடைப்பதால்) எண்ணயில் வாசனை சேர்க்க வேண்டாம்.