• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
# 74. மறுமைப் பயன் .

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும், பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும் , பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.


முக்கண்ணன் ஆகிய சிவபெருமானும், நான்கு வேதங்களும் , திருமாலும், பிரமனும் போற்றி வழிபடும் அன்னையின் இரு திரு அடிகளைத் தம் பிறவியின் பயன் என்று போற்றி வணங்குகின்ற அன்பர்கள்; கற்பகச் சோலையில் தங்கக் கட்டிலில் அமர்ந்து, அரம்பையர்களின் ஆடல் பாடல்களை அனுபவிக்கும் சுவர்க்க லோக இன்பத்தைப் பெறும் தேவர்கள் ஆவார்கள்.
 
Dear Madam,

பாடல் 74 ஸ்வர்க லோகத்தைப் பற்றித்தான் பேசுகிறது. இது அத்வைத மோக்ஷம்
அல்ல. புண்ணிய பலன் தீர்ந்தவுடன் மறுபடியும் பிறவி எடுக்கவேண்டியதுதான்.
' பவானி த்வம்' என்னும் ஸொந்தர்ய லஹரி ஸ்தோத்ரத்துடன் ஒப்பிடுக. நன்றி.
 
# 75. இனிப் பிறவி இல்லையே!

தங்குவர், கற்பகத் தாருவின் நிழலில்; தாயார் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.


கற்பக நிழலில் இருக்கும் அன்பர்கள்; மலைகளையும், கடல்களையும், பதினான்கு உலகங்களையும் படைத்த திருவயிற்றையும்,
மணம் கமழும் கூந்தலையும் உடைய, அபிராமி அன்னையின் திருமேனியைத் தியானம் செய்வார்களே ஆயின், மீண்டும் ஒரு
தாய் வயிற்றில் நுழைந்து பிறக்கும் பிறவிப் பிணியில் உழலமாட்டார்கள்.
 
# 76. மறலி வழி தடுத்தேன்.

குறித்தேன் மனத்தில், நின் கோலமெல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாணி பைரவியே.

வண்டுகள் துளைப்பதால் தேனைச் சிந்தும் கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் இடப் பக்கம் இடம் பெற்ற, ஐந்து மலர்க்கணைகளை உடைய தேவியே! உன் அழகிய வடிவினைத் தியானம் செய்து, உன் உள்ளக் குறிப்பு அறிந்து கொண்டு, மறலி வருகின்ற வழியை நேராகத் தடுத்து விட்டேன்.
 
# 77. உன் திரு நாமங்கள்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலினி, மாலினி, சூலி, வராகி என்றே
செயிர் ஆவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!

குற்றமற்ற நான்கு மறைகளில் போற்றப்படும் தேவியின் திருநாமங்கள் இவை. பைரவி, பஞ்சமி, அங்குச பாசம் கொண்டவள், பஞ்ச பாணி, வஞ்சித்து உயிரை உண்ணும் சண்டி, காளி, கலா வல்லி, மண்டலினி, மாலினி, சூலி, வராகி என்று பலவாறு உன்னைத் துதிப்பார்கள்.
 
# 78. பதித்துக் கொண்டேன்.

செப்பும் கனகக் கலசம் போலும், திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி, அணிதரளக்
கொப்பும் வயிரக்குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன், என் துணைவிழிக்கே.

பொற்கலசங்கள் என்று சொல்லத்தகுந்த அழகிய ஸ்தனங்களின் மேல் நறுமணம் கமழும் சந்தனம் பூசியுள்ள அபிராமவல்லி அணியும் முத்துக்கொப்பு, வைரத்தோடு, கடைக் கண்கள், பவழ இதழ்கள், நிலவொளி போன்ற புன் முறுவல் ஆகியவற்றை என் இரு கண்களில் நான் பதிவு செய்து கொண்டுள்ளேன்.
 
# 79. கயவர்கள் தொடர்பு எதற்கு?

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடைக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

அபிராம வல்லியின் விழிகளே அருளைக் காட்டும். வேதம் சொன்னபடி வழிபட நமக்கு மனம் உண்டு. அப்படி இருக்கையில், பழிச் செயல்களில் சிக்கிச் சுழன்று, பல பாவங்களைச் செய்து, பாழ் நரகத்தின் குழியில் அழுந்தும் கயவர்களுடன் நமக்கு என்ன தொடர்பு?
நமக்கு என்ன தொடர்பு? நமக்கு என்ன தொடர்பு?
 
# 80. ஆனந்தக் களிப்பு.

கூட்டியவா, என்னைத் தன் அடியாரில், கொடியவினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்டகண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

தங்கத் தாமரையில் விளங்கும் அழகியாகிய அபிராமி, என்னைத் தன் அன்பர்களில் ஒருவனாகக் கூட்டினாள். என் கொடிய வினைகளை ஓட்டினாள். என்னிடம் ஓடி வந்தாள். தன்னை உள்ளபடி எனக்குக் காட்டினாள். அதைக் கண்ட கண்களும் எண்ணும் மனமும் களிக்கும்படி என்னை ஆட்டிவைக்கும் அபிராமியின் அருள் தான் என்னே!
 
# 81 . வஞ்சகரோடு இணங்கேன்.

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என் கண் நீ வைத்த பேர் அளியே!

என் தெய்வமே! மற்ற தெய்வங்கள் உன்னுடைய பரிவாரங்கள் ஆவதனால், அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். வாழ்த்தவும் மாட்டேன். வஞ்சக நெஞ்சம் படைத்தவரோடு இணங்கவும் மாட்டேன். தன்னுடையவை எல்லாம் உன்னுடையது என்று வாழுபவர்களோடு நான் பிணங்கவும் மாட்டேன். அறிவு என்பதே இல்லாத என் மேல் நீ வைத்துள்ள பேரருள் தான் எத்தனை!
 
# 82 . ஆனந்தத்தில் அமிழ்ந்தேன்.

அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரை புரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே?

வண்டுகள் வட்டம் இடும் தாமரை மலரில் உள்ள தாயே! அனைத்து உலகங்களும் உன் ஒளியாக விளங்குகின்றன. அத்தனை ஒளி படைத்த உன் வடிவழகை எண்ணும் போதெல்லாம் களிப்பு மிகுந்து, என்னுடைய அந்தக்கரணங்கள் விம்மி, ஆனந்தக் கடலில் திளைக்கும் போது, உன்னுடைய திறமையை என்னால் எப்படி மறந்து விட முடியும்?
 
Dear Madam,

பாடல் 79 மிகவும் பிரசித்தமானது. இந்த பாடலைப் பாடும்போது மாலை வந்து
விட்டது. அப்போது அபிராமி அவருக்குக் காட்சி அளித்து தனது திருத்தோடு
ஒன்றைக் கழற்றி வானமண்டலத்தில் வீச அது சந்திரனைப் போன்று சுடர்விட்டு
ஒளி வீசியது. அமாவாசை பௌர்ணமி ஆயிற்று !.

திருவருள் இருக்க வேதம் படிப்பதோடு அதனின் தாத்பர்யமும் புரியாலாயிற்று.
சாஸ்திரத்தின் உண்மையான அர்த்தம் புரிய குருவருளும் திருவருளும் வேண்டும்

தவ தாடங்க மஹிமா என்று soundarya lahariயில் ஒரு ஸ்லோகம் முடியும். ஸ்ரீ
ஆசார்யாள் தாடங்கத்தின் மஹிமையைக் கூறுகிறார். லலிதா ஸஹஸ்ரநாமத்
தில் சூர்ய சந்திரர்களே இரண்டு தாடங்கமாகச் சொல்லப்படுகின்றனர்.
 
லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் சூர்ய சந்திரர்களை இரண்டு தாடங்களுக்கு
ஒப்பிடப்பட்டுள்ளது.

தவ தாடங்க மஹிமா என்று முடியும் ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆசார்யாள் அம்பாளின்
தாடங்க மஹிமையினால்தான் சிவபெருமான் ஆலகால விஷத்திலிருந்து உயிர்
தப்பினார் என்று சொல்கிறார். அதேமாதிரி பட்டரும் உயிர் தப்பினார்.

தாலீ பலாஸ தாடங்காம் என்று கவி காளிதாஸர் கூறுகிறார். பண்டை காலத்தில்
பலாஸ இலையில்தான் தாலியும் தாடங்கமும்.
 
பனை ஓலையைக் காதில் போட்டுக் கொள்ளுவார்கள்.

தோட்டுக்கு ஓலை என்ற பெயர் வர அதுவே காரணம்.

பொன்னால் ஆனபோதும் வைரம் பதித்திருந்தபோதும்

தோடு ஓலை என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது !
 
# 83 . இந்திரப் பதவி கிடைக்கும்.

விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்,
பரவும் பதமும் அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

அன்னையே! நறுமணம் கமழும் உன் திருவடித் தாமரைகளில், தேன் சிந்தும் புத்தம் புதிய மலர்களை இட்டு, இரவும் பகலும் உன்னை வழிபடுபவர்கள், அடுத்த பிறவியில் வானவர் தொழும் இந்திர
ப் பதவியையும், வெள்ளை யானையையும், ஆகாச கங்கையையும், வஜ்ஜிராயுதத்தையும், கற்பகச் சோலையையும் பெற்றிடும் பெரும் பேறு அடைவார்கள்.
 
விழிக்கே அருள் உண்டு என்னும் 79 வது பாடலின் முடிவில் தேவி பட்டர் முன்பு பிரத்தியக்ஷம் ஆகித் தன் காதணியைக் கழற்றி விண்ணில் வீசவே, அங்கு முழு நிலவின் ஒளி வீசியது.

பட்டர் சொன்னபடிக்கு அமாவாசை இரவு பௌர்ணமி இரவு ஆகியது.

"எஞ்சிய பாடல்களையும் பாடி எனக்குப் பாமாலை சூட்டுவாய்!"
என்று தேவி பணிக்கவே, பட்டரும் மற்ற பாடல்களையும் பாடி முடித்தார் என்பது வரலாறு.
 
# 84 . பிறவிப்பிணி நீங்கும்.

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண் நூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.

என்னைத் தன் உடைமையாக்கிக் கொண்டவளை;
சிவந்த பட்டாடை உடுத்தியவளை;
ஒளிரும் பிறை சூடின செஞ்சடையாளை;
வஞ்சகர் நெஞ்சினை அடையாதவளை;
நுண்ணிய நூல் போன்ற இடையினை உடையவளை;
சிவபிரானின் இடப் பாகத்தில் இருப்பவளை;
என்னைப் பிறவிப் பிணியில் இருந்து மீட்டுக் காத்தவளை; நீங்களும் வணங்கி வழிபட்டால்
உங்கள் பிறவிப் பிணியும் நீங்கி விடும்.
 
# 85 . எங்கும் உன் உருவெளியே!

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்; பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே.

பார்க்கின்ற திசைகளில் எல்லாம் அங்குச பாசமும், வண்டுகள் மொய்த்து ரீங்கரிக்கும் ஐந்து புது மலர்க் கணைகளும், அழகிய கரும்பு வில்லும் கொண்டு, என் துன்பம் எல்லாம் தீர்க்கின்ற திரிபுர சுந்தரியின் அழகிய வடிவும், நுண்ணிய இடையும், கச்சை அணிந்த குங்குமக் கலசங்களும், அவற்றில் மேல் விளங்கும் முத்து மாலைகளுமே காட்சி தருகின்றனவே!
 
# 86 . காட்சி தருவாய்!

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போன்ற பனி மொழியே.

பாலையும், தேனையும், பாகையும் போன்று இனிக்கும் மொழி படைத்த தேவியே! தன் சூலாயுதத்தைக் கொடிய யமன் என் மேல் செலுத்தும் போது, திருமாலும், பிரமனும், வானவர்களும் தேடித் திரியும் உன் அழகிய திருவடிகளையும் வளைக்கரங்களையும் கொண்டு என் முன் காட்சி தந்தருள்வாய்!
 
This is an excellent thread. Thank you Ma Visalakshi Ramani. This is Sathsangh.

My favorite verse

ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

Once some years back when I was praying at the Kalighat Kali temple, I heard a man shouting at me ஆத்தா, இவள் முக்கண் ஆத்தா and something else, all in Tamil By the time I finished my prayers and turned around he had disappeared. I was told that he is one of the wandering Sadhus.
 
Dear Sir,

Thank you for your valuable contribution in this thread!

Yes satsangh helps each and everyone of us. We gain knowledge and

spiritual strength from one another and from God.

The sloka quoted by you is the "Noorppayan" of this anthathi.

Look at the promise it holds at the very end of all the verses.

We are assured of protection from all kinds of troubles and hardships

by the divine mother's grace.

By the way your new avatar looks so powerful and majestic!

Looking forward to your more active participation in my threads,

with warm regards,
Mrs. V.R. :pray2:
 
சான்றோர் சகவாசம்.





சாதனை படிகளில் ஒருவர் முன்னேறிட,
சான்றோர் சகவாசம் தேவை அவசியம்;
ஒத்த கருத்து உடையவர்களின் நட்பு,
மெத்தவும் நன்று, சித்தம் தெளிந்திட.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,
நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.
நல்லவர் நட்பு நம் நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.

சுடர் விளக்குக்கும் ஒரு தூண்டு கோல் வேண்டும்,
சுடும் நெருப்புக்கும், ஒரு ஊதுகுழல் வேண்டும்,
கரும்புகையை விரட்ட, ஒரு கை விசிறி வேண்டும்,
இரும்பை உருக்கவும், ஒரு துருத்தி வேண்டும்.

பற்றினை ஒழிக்கும், நல்லவர்கள் நட்பு.
பற்று ஒழிந்தவனின் மன மயக்கம் மறையும்;
அமைதி அடைகின்றான், மயக்கம் ஒழிந்தவன்,
அமைதி அடைந்தவனே, முக்தி அடைகின்றான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
(from my Tamil blog at <visalramani.wordpress.com>)
 
# 87. எளிவந்த கருணை.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை, அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே!


நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து அழித்த இறைவனுடைய அழியாத விரதத்தை மாற்றி, எல்லா அண்டத்தவர்களும் பழிக்கும்படியாக அவன் இடப் பாகத்தில் உறைந்து, உலகை ஆளும் தேவியே! வாக்கிற்கும், மனதுக்கும் எட்டாத உன் திருவடிவம், என் கண்களுக்கும் வழிபாட்டுக்கும் ஏற்றதாக உள்ளது. உன் எளி வந்த கருணை என்னே!
 
Song No: 10 "Nindrum Irundum"

This is one of the song, which has its very delightful intended meanings.

When you simply go through, it states that while standing, sitting, laying or walking, bhattar always thinks of devi.But the intended meanings are so many in this.

1. There are no actions done by human beyond this. Apart from sitting, standing, laying and walking there are no other postures at all. So, in all the states bhattar thinks of devi.

2. Nindrum denotes "Shiva", Irundum denotes "Brahma" and kidandum denotes "Vishnu" (Nindurm - Nataraja; Irundum- always seated in lotus; Kidandum - always laid in snake-bed). So where comes the nadandum? All these 3 actions does not require energy. Only this nadandum requires energy. That is, "Nadandum" denotes "DEVI" (the form of shakthi). Also, nadandum takes the meaning of "happened". All these three actions of shiva, brahma and vishnu happened because of devi.

3. Also the action of nindrum denotes "Rajasa guna", Irundhum denotes "Sathvika guna" and kidandum denotes "thamasa guna". All the persons having these gunas are worshiping devi.

Next line, is "endrum vanaguvadhu un malarthaal ezhuthamaraiyin"

Here also it takes various meanings.

1. Her feets have been fixed in vedas (which are denoted as Ezhuda marai (not written manuscripts)).

2. Her feets have been fixed in raising lotus (Ezhu + thamarai) (here she can be considered as lakshmi and saraswathi, who are the devis incharge of wealth and knowledge and devi in their form blesses her devotees who always think of her).

3. Her lotus feets have been like that of deer which jumps (ezhu + Tha + marai), which means raising and jumping deer. It means she will comes in such a fast to protect her devotees, who always think of her even while walking, sleeping, or standing.

Of all the namas of devi, the nama "UMA" got its own speciality. It is the combination of "a" + "u" +"m" (which is the "omkara". It also means that "don't leave me". Such is the power of this nama. Bhattar has aptly used this here.

In all these 100 verses, bhattar has nowhere mentioned about the "Mena" (wife of Himavan). Here also he says that "Imayathu andrum pirandha". Because, devi herself took the form of a child and got directly in the hands of Himavan. SO,it is the himavan who is her father/mother here. Because, he only did penance like that (Always thinking of devi).

When we think of this song, it looks like bits and bits. But while thinking it deeper, we can see the continuation. If we worship devi as mentioned by bhattar, she will come and help us as she did for Himavan and she will also gives us "Mukthi". Bhattar also refers this mukthi as "Azhiadha mukthi", which cannot be detsroyed (a permanent mukthi) will also be attained by worshipping devi.


Pranams
 
Last edited:
Dear Mam

Sorry for my very very late joining. I was busy with my Viva-Voce examinations and with the help of devi I completed that successfully last wednesday and now turned as Doctorate. With the same grace of devi and your blessings, hope I will also complete 100 verses. You have reached around 80 verses, am standing still in 10 only. Hope I will help you in keeping this thread alive, even after your completion of 100 verses.

Salutations to you mam.

Pranams
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top