• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
Dear Mr. Durgadasan,

(Should I start addressing you as Dr. Durgadasan in future :) ?)

Heartiest Congratulations.

Now your messages will carry more weight than before. Thanks to your

Doctorate degree.

Yes Sir! I am sure this thread will be alive long after I complete posting

all the verses. Thanks to You, Mr. Nachinaarkkiniyan and Mr. N.R.R. who

show deep interest in this thread.

All good things in life come to people who have learned to wait.

I have learned to wait.

Now you will be able to go ahead in full speed.

Wishing you God speed and with greeting and congratulations on behalf

of all our brothers and sisters in the Forum,

with warm regards,
Mrs. V.R. :pray2:
 
# 88 . என்னை ஒதுக்கிவிடாதே!

பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம்
புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப்பாகம் சிறந்தவளே.

முன்னாள் பகைவரின் முப்புரத்தை எரிப்பதற்கு மேரு மலையையே வில்லாக வளைத்தவனும்,பிரமதேவனின் ஒரு தலைக் கிள்ளிய கரத்தை உடையவனும் ஆகிய சிவனுடைய இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் அன்னையே! நீயே பரம் பொருள் என்று உன்னைச் சரண் அடைந்துள்ளேன். இவன் என் அன்பனாகும் தரம் இல்லாதவன் என்று எண்ணி என்னைத் தள்ளிவிடாதே.
 
11. "Anandhamai en arivai"

When we see this song, it looks like she has been the extreme joy and elixir to the mind, she has taken the form of huge sky, her feets have been the end of holy vedas, and they are residing in the head of shri shiva.

Now we will think of the explanation.

1. I wish to take the the first word itself with "bigger NA" (3 suzhi "na" instead of smaller 2 suzhi "na"). Now the meaning itself totally changes. I wish to take the meaning of Aaan + Andham = which means the sakthi got herself completed with the male (Shiva). He is the only male in the whole creation, who has not got any contact with female. (Some can claim why not Murugan, but shiva has only 5 faces as sadashiva, then how murugan got one extra face? That is because of the "adhomukha" of devi sakthi. Also, shakthi got half space of shiva na). So, here the actual meaning will be like this. She got herself completed with an male and filled the mind like elixir.


2. Vaan andhamana vadivu udaiyaal- We all know that vishnu with his one leg measured the sky. So, now to get that also under her control, she has been standing occupying the sky also.

3. "Marai naanginukkum than andhamana"- Brahma is the person who is in-charge of all these 4 vedas. But, devi's feets are the meanings of these vedas.

From these verses, bhattar clarifies us that devi is superior than all these 3murthis. To conquer shiva, she binds with him. By taking the form of sky, she conquerred Vishnu and makes just her legs to equalise brahma. Again what it means, for the function of samhara, she unites with shiva and do the work; For protection of lives, she is like the sky (which is spreaded over everywhere and is common for all and is visible to all and which cannot be really measured) and for creating the world, just she will do that as a play with her holy feets itself.

Bhattar has used a special term in this song. The feets of devi are residing over the head of shiva. Where is he? He is dancing in the forest? How a forest looks? Normally a forest might be darker due to density of trees or greener due to sparse growth of trees and shrubs. But here he says that the forest is white in colour. Is there any forest like that? Yes. It is the forest of CREMATION. Shiva dances in that RUDRABHUMI.

Here also a word is taking two different meanings. "KAnniyadhe"

The lotus feets of devi are there in the head of shiva, which looks like a garland in his head (Kanni means garland)

Because of having such holy feets in his head, the head of shiva has been turned into a weighted thing (Kanni also means "Stopped blood circulation") and makes him to forget the surrounding and makes him to dance in extreme joy.

Pranams
 
Thank you mam. With all your blessings only, I have achieved this. The mahima of Sathsang has been clearly established by you in various previous postings na...

Pranams
 
Success crowns the person who works hard.

Lady Fortune had blessed your hard work.

All the credit goes to the hard work you have put in.

God bless! Your parents must be so proud of you!:clap2:
 
# 89. என் முன்னே வர வேண்டும்!

சிறக்கும் கமலத் திருவே; நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.


சிறந்த செந்தாமரையில் வீற்றுள்ள திருமகளே!
சிவபிரானும், நீயும்; என் உடம்பும் உயிரும் தொடர்பு அற்று அறிவை மறந்திடும் பொழுதினில், துரியாதீத நிலையில், தூங்காமல் தூங்கி சுகம் பெறும் அனுபவத்தை எனக்கு அருள்வதற்கு, வலிந்து வந்து காட்சியும் அளித்து, உங்கள் சீரிய திருவடிகளை என் சிரம் மீது வைத்து அருளிட வேண்டும் தாயே!
 
# 90. கிடைக்காத பொருள் எது?

வருந்தாவகை, என் மனத் தாமரையில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை, விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே!

விண்ணோர்களுக்கு திருபாற்கடலில் கிடைத்த அமுதத்தை வழங்கக் காரணமான தலைவி இவள். இனியும் யான் பிறவித் துன்பத்தில் வருந்திடாத வண்ணம் என் இதயத் தாமரையில் எழுந்தருளி, பழைய இடமாக இதில் விளங்குகின்றாள். ஆதலால் இனி எனக்கு கிடைக்காதது என்று எந்தப் பொருளுமே இல்லையே.
 
# 91. இந்திரப் பதவி கிட்டும்.

மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊரும் பதம் தருமே.

மின்னலை ஒத்த மெல்லிய இடை உடையவளை, விரிசடைக் கடவுளாகிய சிவ பெருமான் தொழும் மெல்லிய நகில்களை உடையவளை, நான்கு மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியவர்களைத் தொழும் அடியவர்களுக்கு, பல்வகை இசைக் கருவிகளின் முழக்கத்தோடு கூடின, வெள்ளை யானை மீது பவனி வரும் இந்திரப் பதவி கிட்டும்.
 
# 92. புறம் தொழேன்!

பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்
முதத் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே.

மும்மூர்த்திகளும், தேவர்களும், மற்றவர்களும் போற்றி வணங்கும் புன்னகையின் நாயகியே! என் மனம் பக்குவமாக உருகி, உன் திருவடிகளின் மீது பற்று வைத்து, உன் அருள் நெறிலேயே ஒழுகுமாறு, என்னை உன் அடிமை ஆக்கி விட்டாய். ஆகையால் நான் மற்றவர்கள் மதத்தில் மதி மயங்கவும் மாட்டேன். அவர்கள் வழியைப் பின் பற்றவும் மாட்டேன்.
 
# 93. கற்பனையைக் கடந்தவள்.

நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு.
முகையே முகிழ்முலை, மானே முதுகண், முடிவுஇல்; அந்த
வகையே பிறவியும்; வம்பே, மலைமகள் என்பதும், நாம்;
மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.


இந்த உலகங்களை எல்லாம் பெற்ற அன்னை; அகிலாண்டத்தின் நாயகி; அவளுக்கு தாமரை மொட்டுப் போன்ற நகில்கள்; மானை ஒத்த மருண்ட விழிகள்; அவளுக்கு முடிவும் இல்லை; பிறவியும் இல்லை; அத்தகையவளை நாம் மலைஅரசனின் மகள் என்பது மிகையே! ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காட்சி அளிக்கும் இந்த விந்தைகள். இவளது உண்மையான தன்மையை உணர்ந்து இவளை விரும்புவதே சரியான வழி.
 
# 94. பித்தர் ஆகும் பக்தர்.

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பிற் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவார் என்றால் அபிராமி சமயம் நன்றே.

விரும்பி வழிபடும் அடியவர்களின் விழிகளில் பக்திப் பரவசத்தால் கண்ணீர் பெருகும்; மெய்ப் புளகம் அடையும் ; ஆனந்த வெள்ளம் பொங்கித் ததும்பும் ; இனிமை உணர்வில் களித்துச் சொற்கள் தடுமாறிப் பித்தரைப்போல அனுபவம் அடைவார்கள். இத்தகைய அனுபவங்களைத் தரும் அபிராமியின் சமயம் மிகவும் நன்று.
 
12. Kanniadhu un pugazh

In this song, bhattar says the importance of Sathsang and he himself highlights the benefits of that.

He praised devi day and night and her praises itself has turned like a garland. In this song, all the actions are mentioned in past tense; whereas, the second one "Karpadhu un naamam" alone is in present continous one. It might be easier to say "Katradu un naamam". But noone can learn completely the names of shri matha. Even if the 1000-tongued Adhisesha started to say her namas also, he cannot complete. So,it is an continous process.

The next action itself, kasindhu bhakthi panniadhu. It is a lesson for people who are showing their devotion just for pomp. Devotion should be done from the heart.

Bhattar said all these happened because of some good deeds he done and also mainly because of the sathsang he had with devi's devotees.

Here also a word, "Puvi ezhayum poothavale" has its own meanings.

Instead of saying, "puvi ezhilum poothavale" (who is present in all the 7 worlds), he has said like that. Because, it is devi who created all the worlds just by her wish. With this bhattar conveys us that everything happens with the wish of devi. So, with her grace only we can get a sathsang, continous chanting of her nama, all can be done.

See the humbleness of bhattar here, even after singing ten songs and dworshipping devi daily, he asks devi what are the good deeds (Punniyam) I did to worship you my holy mother.

Every sadhaka should learn these aspects from bhattar.

1. Sathsang is important
2. Devotion should come from heart
3. Humbleness
4. respecting elders
5. Continous chanting of devi's nama

In many other slokas also, he will teach us the qualities of sadhaka like this which we will discuss in respective songs.

Pranams
 
# 95. எனது எல்லாம் உனதே!

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் ;அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே!

இமயமலை அரசனின் திருமகளான கோமளவல்லித் தாயே! என்றும் அழியாத குணக் குன்றே! அருட்கடலே! நன்மை வந்த போதிலும், தீமை வந்த போதிலும் அவற்றைப் பற்றி நான் வருந்துவது இல்லை. எல்லாம் உன்னையே சாரும். என்னுடைய எல்லாவற்றையும் உன்னுடையது என்று என்றோ நான் உனக்குக் காணிக்கை ஆக்கிவிட்டேனே !
 
# 96. தொழுபவர் எய்தும் பயன்.

கோமளவல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

மென்கொடி போன்றவள்; அல்லித் தாமரைக் கோயிலில் வீற்று இருக்கும்
யாமளவல்லி; மாசற்றவள்; வரைந்து காட்ட முடியாத பசுமையான திருமேனியை உடையவள்; சகல கலைகளின் அதிபதியான அழகிய மயில்; இத்தகைய அபிராமி அன்னையைத் தம்மால் முடிந்த அளவு தொழுது வழிபடுபவர்கள், ஏழு உலகங்களுக்கும் அதிபதிகள் ஆவார்.
 
# 97. அன்னையைப் போற்றுபவர்கள் .

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம்கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன் , கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

சூரியன், சந்திரன், அக்னி தேவன், குபேரன், இந்திரன்,
நான்முகன், சிவபிரான், திருமால், பொதிய முனி அகத்தியர்,
வேற்படை கொண்ட முருகன், கணபதி, மன்மதன் முதலான
எண்ணற்றவர்கள் அபிராமி அன்னையைப் போற்றுவர்.
 
# 98. பொய்யர் நெஞ்சில் பொருந்தாள்!

தைவந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரர்க்கு,
கை வந்த தீயும், தலை வந்த ஆறும் கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே!

உண்மையான அன்பு கொண்ட உள்ளங்களில் அல்லாமல், வஞ்சகம் நிறைந்த உள்ளங்களில் ஒரு நாளும் புகுவதை அறியாத இளம் பூங்குயிலை ஒத்த தேவியே! சிவபிரான் உன் திருவடித் தாமரையை வருடிப் பின்னர் தம் தலை மீதும் சூட்டிக்கொண்டபோது, அவர் கையில் உள்ள மழுவும், தலைமேல் உள்ள கங்கையும் எங்கே சென்று ஒளிந்து கொண்டன?
 
Dear Lakshmi,

I will be completing the series today. You may post it just after I complete so that readers can access it easily at the tail end of the verses.

with best wishes and regards,
Mrs. V.R.
 
# 99. அன்னையின் தன்மை.

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை; கோலவியல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை ; வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின்மீது அன்னம் ஆம்;
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே!

கயிலாய நாதனுக்கு இமவான் அளித்த பருத்த குழையுடைய அபிராமி அன்னை , கடம்ப வனத்தில் குயிலாக விளங்குபவள்;
இமய மலையில் அழகிய மயிலாக விளங்குபவள்; வானத்தில் கதிரவனாகவும், தாமரையின் மீது அன்னம் ஆகவும் விளங்குபவள்.
 
# 100. நெஞ்சில் நிலவும்!

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கை வல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொரு கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

குழையும்படித் தழுவிய சிவபெருமானுடைய கொன்றை மலர் மாலையின் மணம் கமழும் ஸ்தனங்களை உடைய அபிராம வல்லியின் மூங்கிலை வெல்லும் நீண்ட தோள்களும், கரும்பு வில்லும், அழகிய மலர்க்கணைகளும், வெண் புன்னகையும் மானின் விழிகளை வெல்லும் கண்களும் என் உள்ளத்தில் தோன்றுகின்றன.
 
# 101. நூற் பயன்.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே.

அண்டம் எல்லாவற்றிலும் பூத்து இருப்பவளை, மாதுளம் பூ நிறத்தினளை,
அனைத்து உலகங்களையும் காக்கின்றவளை,
அங்குச பாசமும் அழகிய வில்லையும் ஏந்திய கரங்களை உடையவளை,
மூன்று கண்களை உடையவளை, அபிராமி அன்னையைத் தொழுபவர்களுக்கு
என்றும், எங்கும், எப்போதும் எந்தத் தீங்கும் நேராது!

அன்னையின் புகழ் வாழ்க! வளர்க! நம் அனைவரையும் காக்க! :pray:

மீண்டும் சந்திப்போம்; மேலும் சிந்திப்போம். :hail:

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி. :pray2:
 
I request Dr. Durgadasan to continue to post the sacred and secret meaning of the remaining verses.

Ms. Lakshmi is welcome to upload the MP3 format.

Anyone else who can contribute to this thread in any form and enrich it are most welcome to come forward. :welcome:

 
Last edited:
13. "Poothavale"

In this song, bhattar considers devi as the goddess of doing all the 5 major works (Creation, protection, destruction, hiding and providing), for which Brahma, vishnu, sivan, maheswaran and sadasivan are in-charge.

She the one is present all the time and by her wish just like that she created all the 14 worlds. In the way how she created just like that, she protected that also.

In this song, we have to analyse the first word itself. "Poo + Thavale" Already in many occurrences, thavale has been used as noun to denote devi. She is the one who did her penance over the flower. Also, she is present everwhere. What it means actually? There is nothing which is apart from the devi. She only created everything. As some subordinates she created other god, semi- and demi-gods and goddesses. Even they are also the part of devi only.

She protects this whole universe just like that, which is not a tedious job for her. It is just a play for her. Then one fine dy, she will finish of this play by destructing her whole creation.

"Karai kandanuku moothavale" - Many people says that how is it possible? Is there any possibility of wife being elder than the husband in divine couple marriage system? Here we should not take direct meaning. She knows very well that the poison will not affect shri parameswara. Anyhow, because of her motherly nature, she holds her hand in his neck and stopped the poison there itself. At that time, she considered even parameswara as her child. So, she has been now turned his mother. So, she is elder. Also, there is no separation between shiva and sakthi. Whenever sakthi is not in visible form, (Dakshayani, parvathi, meenakshi, etc.), it means it has been mingled and resided within the Shiva.

To avoid the confusion of thinking devi as very old lady, immediately bhattar says, "Endrum moova mukundarku ilayavale". See the word usage. The vishnu moorthy will always be young and he will never get aged at all and he remins youth all the time. And devi is younger to him. It means she will also the youngest one in looks and age.

Maa thavale- She who did penance of higher qualities.

She is having all these higher qualities. She is ready to rescue people also. She is the mother. She is above all the gods. Then what is the necessity to worship other gods??? I will never never do that.

Here, think the verse very well. Bhattar is not criticising the worship of other gods. Even he worships, ganesha in the first song. And even in this song, he compares devi with shiva and vishnu only. So, his actual intention is to glorify devi only. Thats all. He accepts that all others are also gods. But when there is a motherly devi is present, why to search for other gods is his question...

Pranams
 
Respected Mam

Thanks a lot... You have successfully completed the job. Let I hope for the best to finish this series with your blessings and devi's grace.

Pranams
 
அவளும் அணுவும்!

அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அவளன்றி அவனாலும் அசையமுடியாது.

சாட்டை இல்லா பம்பரம் போல நம்மை
ஆட்டுவிப்பவள் அன்னை பராசக்தியே!

அவளே நமக்கு உறுதுணையாவாள்.
அவளே நமக்குப் பரகதியாவாள்.

அவளே நமக்குத் தாயும், தந்தையும்.
அவளே நமக்கு குருவும், இறையும். :pray:

Dear Dr. Durgadasan,

All the glory belongs to Her and Her alone!

We are merely instruments in Her hands.

Good Luck and Godspeed to complete the Herculean task ahead of you :)

with best wishes and warm regards,
Mrs. V.R. :pray2:

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top