• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#31b. யமாஷ்டகம்(மூலம்)

தபஸா த4ர்மமாராத்4ய புஷ்கரே பா4ஸ்கர: புரா |
த4ர்மம் ஸூர்ய: ஸுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம் || (1)

ஸமதா ஸர்வபூ4தேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண: |
அதோ யந்நாம ச’மனம் இதி தம் ப்ரணமாம்யஹம் || (2)

யேனாந்தாச்’ச க்ருதோ விச்’வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்|
கர்மானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம் || (3)

பீ4ர்ப4ர்தித3ண்ட3ம் த3ண்டா3ய பாபினம் சு’த்3தி4ஹேதவே |
நமாமி தம் த3ண்டத4ரம் யச்’சா’ஸ்தா ஸர்வ ஜீவினாம் || (4)

விச்’வம் ச கலயத்யேவ யஸ்ஸர்வேஷு ச ஸந்ததம் |
அதீவ து3ர்நிவார்யம் ச தம் காலம் ப்ரணமாம்யஹம் || (5)

தபஸ்வி ப்3ரஹ்மநிஷ்டோ ய : ஸம்யமீ ஸன்ஜிதேந்த்3ரிய: |
ஜீவானாம் கர்ம ப2லத3: தம் யமம் ப்ரணமாம்யஹம் || (6)

ஸ்வாத்மாரமச்’ச ஸர்வஞ்ஜோ மிதரம் புண்யக்ருதம் ப4வேத்|
பாபினாம் க்லேச’தோ3 நித்யம் புண்யமிதரம் நமாம்யஹம் || (7)

யஜ்ஜன்ம ப்3ரஹ்மணோம்சே’ன ஜ்வலந்தம் ப்3ரஹ்மதேஜஸா|
யோ த்4யாயதி பரம் ப்3ரஹ்ம தமீச’ம் ப்ரணமாம்யஹம் || (8)

யமாஷ்ட2கமித2ம் நித்யம் ப்ரதருத்தாய ய: படேத் |
யமாத் தஸ்ய ப4யம் நாஸ்தி ஸர்வபாபாத் விமுச்யதே || (9)

9#31b. YamAshtakam

तपसा धर्ममाराध्य पुष्करे भास्करः पुरा ।
धर्मं सूर्यः सुतं प्राप धर्मराजं नमाम्यहम्॥ १॥

समता सर्वभूतेषु यस्य सर्वस्य साक्षिणः ।
अतो यन्नाम शमनं इति तं प्रणमाम्यहम्॥ २॥

येनान्तश्च कृतो विश्वे सर्वेषां जीविनां परम्।
कर्मानुरूपं कालेन तं कृतान्तं नमाम्यहम्॥ ३॥

भिभर्ति दण्डं दण्डाय पापिनां शुद्धिहेतवे ।
नमामि तं दण्डधरं यश्शास्ता सर्वजीविनाम्॥ ४॥

विश्वं च कलयत्येव यस्सर्वेषु च सन्ततम्।
अतीव दुर्निवार्यं च तं कालं प्रणमाम्यहम्॥ ५॥

तपस्वी ब्रह्मनिष्टो यः सम्यमी सन्जितेन्द्रियः ।
जीवानां कर्मफलदः तं यमं प्रणमाम्यहम्॥ ६॥

स्वात्मारमश्च सर्वज्ञो मित्रं पुण्यकृतां भवेत्।
पापिनां क्लेशदो नित्यं पुण्यमित्रं नमाम्यहम्॥ ७॥

यज्जन्म ब्रह्मणोंशेन ज्वलन्तं ब्रह्मतेजसा ।
यो ध्यायति परं ब्रह्म तमीशं प्रणमाम्यहम्॥ ८॥

यमाष्टकमिदं नित्यं प्रातरुत्ताय यः पटेत्।
यमात्तस्य भयं नास्ति सर्वपापात्विमुच्यते ॥ ९॥

with grateful acknowledgement to
http://sanskritdocuments.org/doc_dei…amAShTakam.pdf

 
SEkkizhArin Priya PurANam

#05. மெய்ப்பொருள் நாயனார்

நடு நாடு என்னும் சேதி நாடு அமைந்திருந்தது
நடுநாயகமாக சோழ, தொண்டை நாடுகளுக்கு.

திருக்கோவிலூர் சேதி நாட்டின் தலைநகரம் - இங்கு
திரு அவதாரம் செய்தார் மெய்ப்பொருள் நாயனார்.

"மெய்ப்பொருள் சிவனடியார் திருவேடமே" என்றதால்
மெய்ப்பொருள் நாயனார் என்ற பட்டப்பெயர் பெற்றார்.

அரும் காவலன் அறநெறியின்று பிறழாதவன் - மேலும்
பெரும் நல்லாட்சி செய்பவன்; அவன் அஞ்சா நெஞ்சன்;

சோதனை ஏற்பட்டது இந்தச் சேதி நாட்டு மன்னனுக்கும்!
சாதனைகளில் அவனே தலை சிறந்து விளங்கியதால்!

முத்தநாதன் மெய்ப்பொருளாரின் ஜன்மப் பகைவன்;
எத்தனையோ முறை போரில் புறமுதுகிட்டு ஓடியவன்;

அற வழியில் வெல்ல முடியாத தன் பகைவனைப்
பிற வழிகளில் வெல்ல எண்ணினான் முத்தநாதன்;

சிவவேடம் ஒன்றே நாயனாருக்கு மெய்ப்பொருள்;
சிவனடியார் வேடத்தைத் தாங்கினான் முத்தநாதன்;

குளித்தான் வெண்ணீற்றில் விதிமுறை அறியாமல்;
ஒளித்தான் கூரிய வாளை ஓலைச் சுவடிகள் இடையே.

அடைந்தான் திருக் கோவிலூரைக் கள்ளத் தவசி;
அடையவில்லை ஐயம் எதுவும் குடிமக்கள் எவரும்;

தங்கு தடையின்றிச் சென்றடைந்தான் முத்தநாதன்
மங்காத புகழ் கொண்ட மன்னனின் பள்ளியறையை;

தத்தன் நின்றான் அன்று மெய்க்காப்பாளனாக அங்கு.
முத்தநாதனிடம் கூறினான் மன்னன் இளைப்பாறுவதாக.

சட்டை செய்யவில்லை தத்தனைக் கள்ளத் தவசி சற்றும்;
சட்டென்று நுழைந்து விட்டான் மன்னன் பள்ளியறையில்;

எழுந்துவிட்டாள் அமர்ந்திருந்த அரசியார் திடுக்கிட்டு;
எழுப்பினாள் மன்னனைத் துணுக்குறும் வண்ணம்;

ஐந்தெழுத்துக்களை ஓதினான் முத்தநாதன் - சிறிதும்
ஐயம் கொள்ளாமல் அடி தொழுதான் முடி மன்னன்.

"ஆகம நூல் ஒன்று உள்ளது என்னிடம்! நான் இங்கு
வேகமாக வந்தது அதை உனக்கு அளிப்பதற்கு" என

உயர்ந்த ஆசனம் அளித்தான் கள்ளத் தவசிக்கு- தான்
தயங்காமல் அமர்ந்தான் தரையில் தன் அரசியுடன்.

"மலரணி மங்கையர் இங்கு இருக்கலாகாது மன்னா!
பல காலமாகத் தொடரும் ஆகம நெறி இது" என்றான்.

அகன்று சென்று விட்டாள் அரசியார் தன் அந்தப்புரம்;
அமர்ந்திருந்தான் அரசன் மட்டும் வெறும் தரையில்;

அளித்தான் திருநீற்றை மெய்ப்பொருளாருக்கு - அவரை
ஒளித்திருந்த வாளால் தாக்கினான் வணங்கும் பொழுது.

குருதி பொங்கி வழிந்த போதிலும் மெய்ப்பொருளார்
சிறிதும் கொள்ளவில்லை சினம், வேதனை, வெறுப்பு!

திடுக்கிட்ட தத்தன் வெடுக்கென்று தன் வாளை ஓங்கிடத்
தடுத்தான் மன்னன்,"தத்தா! இவர் நமர்" என்று கூறினான்.

வீசினான் உடைவாளைத் தத்தன், தாங்கினான் மன்னனை;
பேசினான் மன்னன்,"எல்லை வரை அழைத்துச் செல்!' என.

பதறி அடித்து ஓடி வந்தாள் அரசி அங்கு செய்தி கேட்டதும்;
கதறி அழுதாள் கணவனை ரத்த வெள்ளத்தில் கண்டதும்.

எதிர் நோக்கி இருந்தார் மன்னன் தத்தனின் வருகையை;
எல்லையை அடைந்தபின் விரைந்து திரும்பினான் தத்தன்;

செய்தி விரைந்து பரவியது காட்டுத் தீ எனச் சேதி நாட்டில்;
செய்வது அறியாமல் மனம் குமுறினர் சேதி நாட்டு மக்கள்;

அறிந்து கொண்டார் முத்தநாதன் பத்திரமாகச் சென்றதை;
துறந்தார் தன் ஆவியை மெய்ப்பொருளார் அதன் பின்னர்.

பேரொளி ஒன்று தோன்றியது அந்த அறையில் அப்போது!
பெருமான் தோன்றினார் விடைமீது உமை அன்னையுடன்!

விழுந்தது இறைவனின் அருட்பார்வை நாயனாரின் மீது;
விழுந்து கிடந்த நாயனார் எழுந்தார் இளமைப் பொலிவோடு!

"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி





 
SEkkizhArin Priya PurANam

#05. MeipporuL nAyanAr

Nadu nAdu aka ChEdhi nAdu was situated in between ChOzha nAdu and ThoNdai nAdu. The capital of ChEdhi nAdu was Thiruk kOviloor. MeipporuL nAyanAr was born as the king of ChEdhi nAdu.

He believed that only being a true devotee of Siva was the true purpose in one's life. Hence he was called by the name 'Meip poruL' meaning the 'Real purpose in one's life'.

He was a good as well as a righteous king. He was valorous and brave. He too had some enemies since he was far superior to many other kings.

Muththa nAthan was his enemy and had waged wars on ChEdhi nAdu. But every time he got defeated and had to take to his heels from the war front. He decided to kill MeipporuL nAyanAr by treachery - since he could not defeat him by honest methods.

Muththa nAthan disguised himself as a devotee of Siva. He bathed his whole body in the holy ash since he did not know how to smear it properly. He hid his sharp sword in a bundle of manuscripts. He reached Thiruk kOviloor. No one suspected him since many devotees of Siva used to visit the king MeipporuL nAyanAr quite often.

Muththa nAthan entered the king's palace and went straight up to the bedroom of the king. Dhaththan, the king's bodyguard and was standing outside the room with his sword.

Dhaththan stopped Muththa nAthan disguised as a hermit and said, "The king should not be disturbed now. He is relaxing." But Muththa nAthan ignored Dhaththan and entered king's bedroom. The queen got startled and got up in a huff. She woke up the king who also got startled by this sudden entry of a stranger.

Muththa nAthan uttered the Siva panchAkshara as "Namah SivAya!" loudly. The king had no reason to suspect him and paid his obeisance to his treacherous enemy, in the guise of a hermit.

Muththa nAthan told the king."I have a rare manuscript of Siva Agama. I came here in a hurry to present it to you". The king offered him a high seat and he himself sat of the floor with his queen.

Muththa nAthan objected to the queen's presence there and said, "It is the ancient practice not to have any women present at such times". The queen took the hint and went to her quarters in the palace.

Now the king alone was sitting on the floor. Muththa nAthan gave him the holy ash. When the king bent down to pay his obeisance to the hermit, Muththa nAthan stabbed him hard.

The king MeipporuL nAyanAr started bleeding heavily but did not show any sign of anger or sorrow or hatred. Dhaththan the king's bodyguard came running with his sword held high. MeipporuL nAyanAr stopped him from attacking the deceptive devotee by saying,"Stop! He is one of us!"

Dhaththan dropped the sword and lifted the king who uttered to him one more command, "Accompany him till he crosses the border of our country safely."

The queen came running on hearing the sad news. She cried her heart out at the sight of the king lying in a pool of blood.

Dhaththan returned as fast as he could - after seeing off the murderer safely. The sad news about the king spread in the country like wild fire. The citizens were very angry but there was noting they could do.

King was pleased to hear about the hermit's safe passage through the country and gave up his ghost. A brilliant light lit up that palace.

Siva and Uma appeared on Nandhi Devan. Siva's eyes showering loving grace fell on Meipporul nAyanAr and he got up quite alive - even more vigorous and handsome than ever before.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9# 32. நரக குண்ட வகைகள்

உபதேசித்தான் தேவி மஹா மந்திரத்தை யமன்;
உள்ளபடிக் கூறினான் நரக குண்ட வகைகளை!

“உண்டோ எத்தனை வகை புண்ணிய பேதங்கள்
உண்டு அத்தனை வகை சுக அனுபவ பேதங்கள்!

உண்டோ எத்தனை வகையான பாவ பேதங்கள்
உண்டு அத்தனை வகை துக்க அனுபவ பேதங்கள்!

புண்ணியம் மட்டுமே செய்தவன் செல்லான் நரகம்!
பாவம் மட்டுமே செய்தவன் செல்லான் சுவர்க்கம்!

இரண்டையும் கலந்து செய்வார்கள் மனிதர்கள்;
இரண்டையும் கலந்து அனுபவிப்பர் மனிதர்கள்;

பார்க்கலாம் பூலோகத்திலும் கண்கூடாக இதை!
பார்க்கலாம் சிலர் சுகம் மட்டுமே அனுபவிப்பதை.

பார்க்கலாம் சிலர் துக்கம் மட்டுமே அனுபவிப்பதை;
பார்க்கலாம் சிலர் மாறி மாறி மாறி அனுபவிப்பதை.

பார்க்கலாம் சுகத்தை மட்டுமே தரும் சில இடங்களை!
பார்க்கலாம் துக்கத்தை மட்டுமே தரும் சில இடங்களை!

உள்ளன எண்பத்தாறு நரக குண்டங்கள் – அவற்றில்
உள்ளனர் பதினான்காயிரம் கிங்கரர்கள் தண்டிப்பதற்கு!

பயங்கரர்கள், மத மத்தர்கள், தம் கைகளில்
பாசம், சூலம், கதை, தண்டம் ஏந்தியவர்கள்.

தயை என்பதையே அறியாதவர்கள் இவர்கள்!
பயம் என்பதையே அறியாதவர்கள் இவர்கள்!

செவ்வரி ஓடிய பச்சைக் கண்களை உடையவர்கள்;
செம்மையான யோக சித்திகளை உடையவர்கள்.

காண முடியாது வெறும் நாட்களில் இவர்களை!
காண முடியும் மரண காலம் நெருங்கும் போது!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9# 32. The types of Hells

Yama Dharman did the upadesam of Devi MahA Manrtram to SAvitri. He explained the types of Hells where men get punished for the sins they had committed.

“There are as many types of pleasures to be enjoyed in Heaven – as there are of good deeds earning merits and as many types of sufferings to be experienced in the Hells – as there are of Sins.

A man who has done only good deeds all his life and earned merits will not enter Hell. A man who has done only bad things all his life will not enter heaven. But most people do both the good deeds and the bad deeds. So they experience both pleasures and pains in their afterlives.

This can be seen even on the earth. Some people enjoy nothing but pleasures all their lives. Some others enjoy nothing but sorrows all their lives. But mostly people enjoy pleasures and pains by turns.

There are a few places on earth which give only happiness and a few others which give only sorrow. They are the Heaven and Hell on the surface of the earth.

There are eighty six types of Hells. There are fourteen thousand Kinkaras or Yama Dhoothas for punishing the sinners in those Hells.

They are terrifying people. They carry the noose, the trident, the mace and the stick. They know the meaning of neither mercy nor of fear.

They have blood shot green eyes and possess many yoga siddhis. They are normally invisible to everyone except to those who are about to die.”

 
SEkkizhArin Periya PurANam

7#06a. விறல் மிண்டர் நாயனார் (1)

மலைநாடு என்ற வளநாடு பண்டைய சேரநாடு;
மலைநாடு என்ற வளநாடு இன்றைய கேரளா.

மழைவளம், நீர்வளம், நிலவளம் கொண்டது;

மற்றும் குடி வளமும் முடி வளமும் கொண்டது;

மலைநாட்டைத் தோற்றுவித்தவன் பரசுராமன்;
கொலை செய்யப்பட ஜமதக்னியின் புதல்வன்;

தந்தையைக் கொன்ற மன்னர் பரம்பரையை
மைந்தன் பழி வாங்கினான் 21 தலைமுறைகள்.

செய்தான் பித்ருக் கடன்களை ரத்த மடுவில்;
சென்றான் சினம் தணிந்து மேற்குக் கடல்.

விலக்கினான் கடல் நீரைத் தன் தவ வலிமையால்;
விளக்கினான் மலைநாட்டை மழுவின் உதவியால்!

முத்துக்கள் நிறைந்து இருப்பது சேரநாடு - இங்கு
முத்துப் பற்கள் கொண்டவர்கள் அழகிய பெண்டிர்.

அலைகடல் அளிக்கும் அரிய பல முத்துக்களை;
சோலைக் கரும்புகள் தரும் அழகிய முத்துக்களை;

யானைத் தந்தங்கள் தோற்றுவிக்கும் முத்துக்களை;
ஏனைய நாடுகளில் இல்லாதது இந்தத் தனிச்சிறப்பு.

செங்குன்றூர் சிறந்திருந்தது மலை நாட்டினில்;
செங்குன்றூரில் சிறந்திருந்தது உழவுத் தொழில்.

இங்கு அவதரித்தார் விறல் மிண்ட நாயனார்;
மங்காத அன்பு கொண்டார் சிவ பெருமானிடம்.

அடியார்களை எவரேனும் இழிவு படுத்தினால்
நொடியில் வீரமாக மாறிவிடும் இவரது பக்தி!

'விறல்' என்றாலே 'வீரம்' என்று பொருள் - இவர்
விறல் மிண்டராக இருப்பதில் என்ன வியப்பு?

சிவனடியார்களை முதலில் தொழுதுவிட்டுப் பின்பு
சிவனை ஆலயத்தினுள் சென்று தொழுவது மரபு.

திருவாரூரில் நிகழ்ந்தது இந்த வினோத நிகழ்ச்சி ;
திருக்கோவிலுக்குள் சென்றுவிட்டார் சுந்தரர் நேராக.

சினம் கொண்டார் இது கண்ட விறல் மிண்டர் ;
சினத்தில் சாடினார் கடுமையாகச் சுந்தரரை!

"திருக்கூட்டத்தை வணங்காமல் செல்கின்ற
வன்றொண்டன் சுந்தரன் அடியார்க்குப் புறகு!

வன்றொண்டனை ஆட்கொண்ட சிவனும் புறகு"!
எனச் சாடினார் சுந்தரர் செவிமடுக்கும் வண்ணம்.

"அடியாருக்கு அடியேனாகும் பேரின்ப நிலையை
அடியேனுக்குத் தந்தருள வேண்டும்!" என வேண்ட

"தில்லைவாழ் அந்தணர்" என அரன் அடியெடுத்துத் தர
திருத் தொண்டத் தொகையை இயற்றினார் சுந்தரர்.

திருத் தொண்டர்களின் பெருமையைக் கூறும் இந்தத்
திருத் தொண்டர் புராணம் தோன்றியிராது அன்றேல்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#06a. Viral miNdar nAyanAr (1)

Kerala of today was known as Malai nAdu or ChEra nAdu in the past. It is rich in rain fall, water bodies and fertile soil. Kerala was created by Parasu Raman - the son of the rushi Jamadhagni, who was murdered by the Khasthrya kings.

Parasu RAman took revenge by killing 21 generations of Kshathriya kings. He performed the rituals for his ancestors in the pool of blood. After his anger subsided he went to the west. He recovered a land mass from under the sea by the power of his penance and with the help of his parasu and created Kerala.

Kerala is famous for pearls and pretty women with pearly white teeth. Sea yielded rare pearls, so did the mature sugar canes and the tusks of mature elephants. No other country can claim of this greatness.

In ChEra nAdu, Sengundroor was a very famous place. Cultivation was the famous profession in Sengundroor. ViRal MiNdar was born here. He had intense love for and devotion towards Lord Siva.

If he happened to see any devotee of Siva being slighted or insulted by anyone, his intense devotion would transform into uncontrollable anger. ViRal itself means "Valor" and small wonder his name described him very accurately.

It was customary to pay respects to the devotees of Siva present in the temple premises before going into the temple to worship God. Once in Thiruvaroor a strange incident took place.

Sundarar came to the temple but he went straight inside without caring for the group of devotees present in the temple at that time. While everyone kept quiet, ViRal miNdar commented harshly and very loudly," Sundaran is a rude fellow. He does not care about the other devotees. So is the Lord who has befriended him!'

Sundarar felt hurt and prayed to God,"Please make me a devotee of all your devotees oh Lord!" Siva gave him the line "Thillai vAzh andhanar tham" and Sundarar composed his Thiruth thondath thogai using that as the first line of his composition.

Later the Thiruth thondar purAnam was based on Sundarar's work.
 
Bhagavathy bhagavatam - skanda 9

9#33. நரகங்கள் (1 to 6)

1. தாமிஸ்ரம்

பிறர் பொருளைக் கொள்ளைஅடித்தவர்களையும்;
பிறன் மனைவி, சிசுவை அபகரித்தவர்களையும்;

மிரட்டி அடித்துத் தள்ளுவர் தாமிஸ்ர நரகத்தில்;
காலதூதர் காலபாசத்தினால் கட்டி இழுத்து வந்து!

2. அந்ததாமிஸ்ரம்


கணவனை வஞ்சித்த மனைவி அடையும் நரகம்;
மனைவியை வஞ்சித்த கணவன் அடையும் நரகம்;

கண்களை இழந்து வேதனை தாளாமல் – உடல்
புண்ணாகி வாடி வதங்கும் நரகம் அந்ததாமிஸ்ரம்!

3. ரௌரவம்


தனக்கு உரிமை இல்லாத பொன் பொருளைத்
தன் சாமர்த்தியத்தினாலும் செல்வாக்கினாலும்

தன்னுடையது என்று அபகரித்துக் கொள்பவர்;
தன் குடும்பத்தை நன்கு பேணிக் காப்பதற்காக

பிறர் குடும்பத்தை சீரழிப்பவர்களின் நரகம் இது!
மரண காலத்தில் பெரிதும் துன்புறுவர் இவர்கள்.

தருவார்கள் தண்டனை ஏமாற்றப் பட்டவர்கள்
ருரு என்னும் கொடிய விஷ மிருக வடிவத்தில்.

4. மஹா ரௌரவம்

ருரு துன்புறுத்திக் கொண்டே இருக்கும் பாவிகளை!
ஒருவேளை தப்பிவிடாமல் சூழ்ந்துகொண்டு நிற்கும்!

5. கும்பீபாகம்


பிற உயிர்களைக் கொன்று தின்பவரின் நரகம் இது
வறுப்பார்கள் கிங்கரர்கள் அவர்களை எண்ணையில்

தின்ற பசுக்களின் உடலில் இருந்த ரோமங்கள் போல்
அத்தனை ஆண்டு காலம் சமைக்கப்படுவார்கள் இங்கே!

6. காலசூத்திரம்


மாதா, பிதா, வேதியரை ஆதரிக்காதவன் அடையும் நரகம்;
மாதா, பிதா, வேதியரைத் துரத்தி விடுபவனின் நரகம் இது.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#21a. HELLS ( 1 TO 6)


1. TAmisra Hell

He who steals another man’s sons, wives, and riches, is taken to Yama by His messengers. He is tied down by the terrible messengers of Yama, using the KAla Sootra or the Rope Of Time! He is taken to the TAmisra hell, the place of many torments and punishments. Yama’s attendants beat him and threaten him until he becomes stupefied, weak, distressed and faints!

2. Andha TAmisra Hell


He who deceives another man and enjoys his wives is dragged down to Andha TAmisra hell. There he is subjected to pain and suffering. He loses his eyesight and becomes blind. His state resembles that of a tree when its trunk is broken. For this reason it is called as Andha TAmisra.

3. Raurava Hell


He who claims everything to be “My” and “Mine” and quarrels with others; he who maintains his own family, at the expense of another goes Raurava hell. The animals which he had injured and killed in this world, assume the form of the animal Ruru and torment him in the
Raurava Hell.

4. MahA Raurava Hell

Ruru is more cruel and ferocious than poisonous snakes. These animals living in that hell, surround the sinner making sure that he can not escape. Hence it is named as MahA Raurava Hell. He who torments others, goes to this hell and these Rurus, the flesh-eaters, spring on his body and bite and eat his flesh.

5. KumbheepAka Hell


He who cooks and eats animals and birds, is fried in hot oil in the KumbheepAka Hell by the Yama Dootas for one thousand years.

6. KAla Sootra Hell

He who quarrels with his Pitris and the BrAhmaNas, is taken by the Yama Dootas to the KAlasootra Hell to be burnt by the fire and Sun. The sinner is troubled by hunger and thirst and spends his time in sitting, walking and running here and there helplessly.

 
SEkkizhArin Periya PurANam

#06b . விறல் மிண்டர் நாயனார் (2)

சினம் கொண்டிருந்தபோது இவர் சுந்தரர் மீது
தினம் தினம் வெறுத்தார் திருவாரூர் தலத்தை.

திருவாரூரை மிதிப்பதில்லை என்ற உறுதி;
திருவாரூர் மக்களைக் கண்டால் வெஞ்சினம்!

விருந்து உண்ணும் அடியார் திருவாரூரார் எனில்
மறுபேச்சின்றித் துண்டாடுவார் அடியார் காலை!

மனம் பொறாமல் மனைவி எச்சரிப்பாள் அதிதியை,
"இனிக் கூற வேண்டாம் திருவாரூர் பெயரை இங்கு!"

வந்தார் ஒருநாள் பெருமான் சிவனடியார் வேடத்தில்;
வந்தவரை வரவேற்றாள் அன்புடன் இல்லத்து அரசி.

எச்சரித்தாள் சிவனடியாரை வழக்கம்போல அவள்,
"எதற்காகவும் கூற வேண்டாம் திருவாரூர் பெயரை!"

"பொய் பேசத் தெரியாது எனக்கு அம்மணி - அதனால்
மெய்யாகச் செய்ய வேண்டும் நீங்கள் எனக்கு ஓர் உதவி!

வலப்புறம் வைக்கும் கொடுவாளின் இடத்தை மாற்றி
இடப்புறத்தில் வைத்து விடுங்கள் இன்று மட்டும் நீங்கள்!"

நாயனாரும் அடியாரும் அமர்ந்தனர் விருந்து உண்பதற்கு;
நாயனார் வினவினார் " சொந்த ஊர் எது உமக்கு?" என்று.

"இங்கு அங்கு என்னாதபடி எங்கும் உள்ளேன் என்றாலும்
சொந்த ஊர் ஆகும் சுந்தரர் பிறந்த திருவாரூர்" என்றார்.

கடும் கோபம் கொண்டார் பெயரைக் கேட்டதும் நாயனார்;
கொடுவாளைத் தேடினால் அதைக் காணோம் வலப்புறம்!

இடப் பக்கம் உள்ளது என்று கொடுவாளை எடுக்கும் முன்பே
இடப வாகனன் எழுந்தான்; எடுத்தான் சிறந்த பந்தய ஓட்டம்!

ஓடிச் சென்றார் சிவனடியார் முன்னே! துரத்தினார் நாயனார்;
ஓடி ஓடிச் சென்று அவர்கள் அடைந்து விட்டனர் திருவாரூரை!

களைத்து விட்டார் விறல் மிண்டர்; நிலத்தில் வீழ்ந்து விட்டார்;
களைத்தும் இளைத்தும் விட்ட நாயனாரிடம் கேட்டார் அடியார்

"வந்து விட்டீரா நீரும் ஒரு வழியாகத் திருவாரூருக்கு?" என்றதும்
நொந்த நாயனார் துண்டித்து விட்டார் தன் சொந்தக் காலையே!

காட்சி தந்தார் தியாகேசப் பெருமான் தேவி கமலாம்பாளுடன்;
மாட்சிமை தந்தார்: தலைவன் ஆக்கினான் சிவகணங்களுக்கு!

"விறன்மிண்டர்க்கு அடியேன்!" (திருத் தொண்டத் தொகை)

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#06b. ViRal miNdar nAyanAr (2)

When ViRal miNdar was angry with Sundara moorthi, he hated the very name of ThiruvAroor. He had determined never to set his foot in ThiruvAroor. If he came across anyone hailing from ThiruvAroor, he would promptly fly into a rage.

If the athithi (guest) who had come to his house hailed from ThiruvAroor, he would promptly cut off the leg of the guest with no questions asked. ViRal miNdar's wife who was kind-hearted took pity on the unsuspecting guests who came to eat in their house. She would warn the guests never ever to utter the word ThiruvAroor.

One day Siva himself assumed the form of a devotee of Siva and went to the house of Viral miNdar as an athithi (a guest). The lady of the house warned his not to utter the name of ThiruvAroor for any reason whatsoever.

But disguised Siva told her,"I can not tell lies to anyone. So I request you to do me a favor. Please place the weapon (KoduvAL) to the left side of your husband instead of his right side as usual". The lady obliged and kept the weapon (koduvAL) on the left side instead of the usual right side.

When they sat down to eat food, ViRal miNdar asked the devotee from where he hailed. Disguised Siva replied, "I may be here, there and everywhere but my place of birth is ThiruvAroor - the same as that of Sundarar."

ViRal miNdar flew into a rage and looked for his weapon. He could not find it in its usual place. By the time he located it and took hold of it, the devotee had taken off like one who is competing in a running race!

ViRal miNdar chased him for a long time and lo they had both reached ThiruvAroor itself. ViRal miNdar collapsed on the ground tired and defeated. Siva in disguise smiled and told him , "So finally you too have set foot in ThiruvAroor"

ViRal miNdar became so angry at that thought that he cut off his own leg! Siva and Uma appeared on Nandhi Devan. ViRal miNdar was made the leader of Siva gaNas and the whole world was astonished by the intensity of his devotion and valor.







 
bhagavathy bhaagavatam - skanda 9

9#34. நரகங்கள் (7 to 12)

7. அஸி பத்ரம் (வாளலகு)

தன் மதத்தைப் புறக்கணித்துப் பிறவற்றில் புகுபவன்
தள்ளப் படுகின்றான் இந்த நரகக் குழியில் உழன்றிட!

அடிப்பார்கள் அஸிபத்ரம் வாளலகுச் சாட்டையினால்;
இடறி விழுவான் பாவி தப்பித்து ஓட முயலும் போது!

8. பன்றி முகம்


வேதியருக்குச் சரீர தண்டனை தந்த அரசனுக்கும்;
அநீதியான தண்டனைகளைத் தருபவனுக்கும்;

உருவாக்கப் பட்டது பன்றி முகம் என்னும் நரகம்;
முறிப்பார்கள் கைகள் கால்களை அடித்து நசுக்கி.

ஆலை வாய்க் கரும்புகள் போலவே – பாவிகள்
சாலத் துன்புறுவர் இந்த நரகக் குழியில் விழுந்து!

9. அந்த கூபம்

புகழுடன் விளங்கும் அந்தணனைக் கொல்பவன்;
ரகசியமாக நல்ல மறையவனைக் கொல்பவன்;

துரோகம் செய்தவர்களின் கொடிய நரகம் இது
துரத்தித் தாக்கும் பல பறவைகள், விலங்குகள்!

10. கிருமி போஜனம்

பஞ்ச யக்ஞங்களைப் புரியாதவர்களின் நரகம் இது;
புழு வடிவெடுத்து பிற புழுக்களால் புசிக்கப் படுவர்!

11. அக்கினிக் குண்டம்

அந்தணனின் உடைமைகளைப் பறித்துக் கொள்பவரை
அக்கினிக் குண்டத்தில் தள்ளி வாட்டிக் காய்ச்சுவார்கள்.

12. வஜ்ர கண்டகம்

சேரத் தகாத மங்கையோடு சேரும் ஆடவனையும்,
சேரத் தகாத ஆடவனோடு கூடும் மங்கையையும்,

அடிப்பார்கள் இடைவிடாது சாட்டையினால் இங்கு!
அணைக்கச் செய்வர் காய்ச்சிய இரும்புத் தூணை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#34. Hells ( 7 – 12)


7. Asipatra Hell


He who transgresses the path of the Vedas in normal times (other than those of great danger) and he who follows other paths, is taken by Yama dootas to Asipatra KAnana and whipped severely. Not being able to bear the pain he would run about wildly and get pierced by the sharp edged Asi leaves on both his sides. His whole body would be lacerated, he would tumble down at every step and suffer for violating the path of the Vedas.

8. Sookara mukha Hell


The King or ruler who gives punishment not approved by Dharma and he who inflicts physical suffering on a Brahmana is thrown down into the S’ookaramukha Hell. His body is crushed as sugar cane is crushed to extract the juice. He would then cry aloud bitterly, faint and becomes stupefied.

9. Andhakoopa Hell


He who gets a famous a brahmin murdered or plots and murders brahmins secretly or proves to be not trust worthy get punished for that fault in the Andhakoopa Hell. There he is tormented by the beasts, birds, deer, reptiles, mosquitoes, bugs, lice, flies and various other pests. There he lives in his ugly body and roams around like a beast.

10. Krimi Bhojanam


The man who does not perform the five MahA YagnAs nor gives the due share of offerings to the Devas but feeds only his own belly, is taken to the Krimi bhojana Naraka for his sinful deeds. This hell is a huge reservoir of worms. It causes terror to all the inhabitants of the hell. That sinner assumes the form of an insect and is eaten up by the other insects and thus passes his time there. When a man does not give any share to the Atithis or the guests and does not offer oblations to the Fire and eats his food, he, too, goes to the above hell.

11. Agni KuNdam


When a man earns his livelihood as a thief and robs gold and jewels forcibly from a brahmin or any other person, he is taken to this hell by the Yama’s servants. He is burned in a pit of fire for all his past sins.

12. Vajra KaNdakam


A man who cohabits with an unfit woman and a woman who lives with an unfit man are sent to this hell. They are whipped mercilessly and forced to embrace a red hot figure of a woman or man.

 
SEkkizhArin Periya PurANam

#07. அமர்நீதி நாயனார் (1)

பிறந்தார் அமர்நீதியார் பழையாறையில் - செல்வச்

சிறப்புடன் வாழ்ந்திருந்த வணிகர்களின் குலத்தில்.

வர்த்தக வல்லமை பெற்றதால் - அமர்நீதியார்
வாழ்ந்தார் செல்வமும், செல்வாக்கும் விளங்கிட.

வாழ்வின் இலக்கு சிவனடியாரைப் பேணுவது;
தாழ்வில்லாத உணவும், உடையும் அளிப்பது.

அறுசுவை உண்டி, அணிந்து கொள்ள ஆடைகள்,
அழகிய துண்டு, இடுப்புக்குக் கௌபீனம் என்று.

திருநல்லூர் திருவிழா மிகவும் பெருமை பெற்றது;
திரண்டு வருவர் அடியார்கள் பிற ஊர்களிலிருந்து.

திரு மடம் ஒன்றை உருவாக்கினார் அமர்நீதியார்
திருவிழாக் காண வரும் அடியவர்கள் தங்குவதற்கு.

பெருமான் விரும்பினார் அமர்நீதியின் புகழ் பரப்ப;
பெருமான் வந்தார் அமர்நீதி நாயனாரின் இல்லம்.

அழகிய அந்தண இளைஞன் வேடம் தரித்தார்;
பழகியவன் போல மிக நேசத்துடன் பேசினார் .

"அமுது உண்டு அருள் செய்ய வேண்டும்!" என்று
அன்புடன் அவரை வேண்டினார் அமர்நீதியார்.

"நீராடி விட்டு வருகின்றேன் காவேரி நதியில்:
நீர் இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்!"

அவிழ்த்தார் தண்டத்தில் இருந்து கெபீனத்தை;
அளித்தார் அந்தணர் அதை அமர்நீதியாரிடம்.

தனியே வைத்துப் பாதுகாத்தார் நாயனார் அதை.
எனினும் அது மறைந்து போய்விட்டது மாயமாக!

சோதனை மேல் சோதனை செய்வது அரன் சாதனை;
வேதனை பெருகும்படி பொழிந்தது பெரிய அடைமழை;

ஈரம் சொட்டச் சொட்ட வந்தார் அந்தண இளைஞர்;
"தாரும் நான் தந்து சென்ற என் கௌபீனத்தை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#07. Amarneethi nAyanAr (1)

Amarneethi nAyanAr was born in PazhaiyArai in the family of rich merchants. He was good in doing business. So lived a life of comfort and had earned the respect of everyone around.

His aim in life was to serve the devotees of Siva by treating them with a feast and presenting them with new dress, a towel and a loincloth (koupeenam).

The festival at Thirunalloor was very famous. People from other places used to visit Thirunalloor to partake in those festivities. So Amarneethi nAyanAr constructed a mutt for the convenience of such travelers.

Siva decided to make the world realize the greatness of nAyanAr Amarneethi. So He transformed Himself into a young and handsome brahmin and visited nAyanAr's house.

NAyanAr requested him to eat the feast and receive the gifts as usual. But the young brahmin said, "I want to bathe in the river Kaveri before eating the feast. It is likely to rain. I do not want both my loincloths to get wet. Kindly keep one of my loincloths (kupeenam) safe till I come back."

He untied one of the two koupeenams from the end of his daNdam (staff) and gave it to nAyanAr. He then went to bathe in the Kaveri river.

NAyanAr kept the loincloth safely in his house and yet it somehow managed to vanish very mysteriously. Then it started raining in cats and dogs suddenly. The young brahmin returned completely drenched to his skin. He demanded nAyanAr to give back his dry koupeenam now.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#35. நரகங்கள் (13 to 18)

13. சான்மலி

வேறுபாடு பாராமல் எல்லா மங்கையரோடும்
நீசத் தனமாகக் குலவுபவர்களின் நரகம் இது.

வஜ்ரகண்டகம் என்ற முட்களால் அவர்களைக்
குத்திக் குத்தித் துன்புறுத்துவர் யமகிங்கரர்கள்.

14. வைதரணி


நீர் மயமானது இந்த வைதரணி நரகம்;
நீராக இருப்பவை நாம் அருவருப்பவை!

மலம், மூத்திரம், ரத்தம், சீழ், தலை மயிர்,
எலும்பு, நகம், இறைச்சி, கொழுப்பு இவை.

சாஸ்திர நெறிக்குத் தீங்கு இழைப்பவரைத்
தள்ளுவர் வைதரிணியில் யமகிங்கரர்கள்.

கடிக்கும் இவர்களை நீர் வாழும் கொடிய ஜந்துக்கள்!
துடிப்பர் தாளாத வேதனையால் – மாளவும் முடியாமல்!

15. பூயோதம்


ஆசாரம், ஒழுக்கத்தைத் துறந்து விட்டவர்கள்;
தகாத தாழ்ந்த பெண்ணுடன் கூடிக் குலவுபவர்,

பறவைகள், விலங்குகள் போல வாழ்கின்றவர்;
இரக்கம் இன்றித் தள்ளப்படுவர் பூயோதத்தில்!

நிறைந்திருக்கும் இதில் மலம், மூத்திரம், சீழ், உதிரம்.
அருவருக்கும் இவற்றை உண்பர் இதில் விழுந்தவர்கள்!

16. பிராண ரோதம்

பிராணிகளின் எஜமானன் ஆகிய அந்தணனை;
பிராணிகளைக் குரூரமாக வேட்டையாடுபவனை;

தள்ளுவர் பிராணரோத நரகத்தில் கிங்கரர்கள்;
எய்வர் கூரிய அம்புகளை உடல் வருந்துமாறு!

17. விசஸனம்


ஆடம்பரத்துக்காக யாகங்களைச் செய்பவர்;
ஆடம்பரத்துக்காகப் பசுக்களைக் கொல்பவர்;

திடமாக அடையும் நரகம் விசஸனம் – இவர்கள்
அடிக்கப் படுவார்கள் கொடூரமான சாட்டையால்!

18. லாலாபக்ஷம்


விபரீதக் காமாந்தகன் மனைவியைத் தன்
வீரியத்தைக் குடிக்கும்படி வற்புறுத்தினால்,

இந்திரியக் குண்டதில் தள்ளிவிடுவர் அவனை!
அந்த வீரியத்தையே உண்ணச் செய்வர் அவனை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#21c. HELLS (13 TO 18)

13. S’almalee Hell

When a man goes to all sorts of wombs for unnatural crimes, he is taken to Vajra KaNtaka Naraka and placed on the top of an iron S’almalee wood.

14. VaitaraNee Hell


When a King or any royal personage follows the unrighteous path and breaks the boundary of a law, he is sent to the Hell VaitaraNee – the ditch surrounding that hell. There the aquatic animals eat his body from all around him! Yet neither his life nor his body leaves him. He is thrown into the river filled with feces, urine, puss, blood, hairs, bones, nails, flesh, marrow and fat and suffers in this Hell.

15. Booyodam


Those who are the husbands of very young girls under twelve years of age; those who are the husbands of barren women; those who do not care about any S’aucha; those who do not have any shame and those who do not follow one’s natural customs and rites and those who live like the birds and beasts are thrown into this hell. It is filled with feces, urine, sputum, blood and other impurities. When they feel hungry, they are forced to eat the filthy things.

16. PrANa ROdham Hell


Those persons who are twice born but maintain dogs and asses; those who are addicted to hunting; those who kill beasts, birds and deer daily for no reasons, are specially watched by the servants of Yama who tear them asunder by shooting sharp arrows at them.

17. Visasanam Hell

He who kills animals, engaged vainly in a sacrifice and addicted to haughty temper and habits, is thrown into this hell by the Yama’s servants and whipped very severely.

18. LAlApaksham hell


The twice-born who has weird sexual perversions and forces his wife to do the unnatural acts of love making or copulates blindly with all types of women, is taken by the Yama’s messengers into the hell filled with semen and he is made to drink that
.
 
SEkkizhArin Periya PurANam

#07. அமர்நீதி நாயனார் (2)

மாயமாகிவிட்ட கௌபீனத்தை தருவது எப்படி?
நாயனார் அளித்தார் அழகிய புதுக் கௌபீனம்!

"பாதுகாக்கச் சொல்லி நீர் தந்திருந்த கௌபீனம்
பாதகம் நிகழ்ந்து மறைந்து விட்டது மாயமாக!"

சீறிச் சினந்தான் அழகிய அந்தண இளைஞன்;
தாறுமாறாக நிந்தனை செய்தான் நாயனாரை!

"என்ன வேண்டும் என்றாலும் தருகின்றேன் நான்
பொன்னா? மணியா ? பட்டாடைகளா கூறும்!" என

"எடைக்கு எடை கௌபீனம் தந்துவிடும் நீர் எனக்கு;
எதற்குப் பொன்னும், மணியும், பட்டும் எனக்கு?" என

வந்த துலாக்கோல் நாட்டப்பட்டது நடுவே - அந்த
அந்தண இளைஞனின் கௌபீனம் ஒரு தட்டில்.

தன்னிடம் இருந்த கௌபீனங்களை வைத்தார்;
தட்டுக்களின் எடைகள் சமம் ஆகவே இல்லை!

பட்டாடைகள், பஞ்சுப் பொதி, நூல்கண்டுகள் எனப்
பலவிதப் பொருட்கள் இடம் பெற்றன அந்தத் தட்டில்.

பொன், மணிகள், வைரங்கள், வெள்ளி என்று
தன் செல்வம் அனைத்தையும் வைத்தார் தட்டில்.

மாயத் தராசுத் தட்டுக்கள் ஆகவில்லை சமமாக!
மாய அந்தணனின் கௌபீனமே அதிக பாரம்!

எஞ்சி இருந்தது நாயனரின் குடும்பத்தினர் மட்டுமே.
கெஞ்சினர் தாங்களும் தட்டில் ஏற அனுமதி வேண்டி!

ஏறி நின்றனர் தட்டில் நாயனார், மனைவி, மகன்!
கூறி நின்றனர் மூவரும் திரு ஐந்தெழுத்துக்களை!

தட்டுக்கள் இரண்டும் எடையில் சமம் ஆகிவிட்டன!
தட்சணமே மறைந்து விட்டான் அந்தண இளைஞன்.

தூய ஒளிவெள்ளத்தில் தோன்றினான் எம்பெருமான்!
மாய அண்ணலுடன் தோன்றினாள் உமையன்னையும்!

தொடர்ந்து பெய்தது மலர்மழை வேத கோஷத்துடன்;
தொடர்ந்து ஓதினர் மூவரும் திரு ஐந்தெழுத்துக்களை.

மாறிவிட்டது துலாத் தட்டு ஒரு புஷ்பக விமானமாக!
ஏறியது விண்ணில் உயரக் கயிலையை நோக்கி!

"அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#07. Amarneethi nAyanAr (2)

How can anyone ever return something which had vanished so mysteriously? NAyanAr told the young brahmin, "I had kept your loincloth very safe. Yet it has somehow vanished mysteriously. Please allow me to replace it with a new loincloth."

But the young brahmin went into a rage and reprimanded nAyanar with very harsh words. Now NAyanAr made him an offer,"Please tell me how I can replace the loincloth which got lost. Shall I give you gold or silver or silk? Please tell me how I can repay you for the loss?"

The brahmin made an offer now. "This one is exactly similar to the loincloth you have lost. So you may repay me by giving loincloth weight for weight of this one."

NAyanAr agreed to this. A pair of scales was brought and fixed in between them. On one of the plates the loincloth of the brahmin was placed. On the other the loincloths from NAyanAr's storage were placed. More and more loincloths were placed but yet the two sides did not balance.

After running out of loincloths, NAyanAr now added silks, bundles of cotton, spools of thread one after another and yet the plates would not balance! Now he added the gold, silver, precious gems and everything else he possessed. Yet the single mysterious loincloth was heavier than all the other articles combined!

Now only the family members of nAyanAr remained and everything else had already been placed on the plate. NAyanAr begged for the permission of the brahmin to let his family members also climb on the unbalanced plate of the scales.

The brahmin agreed. NAyanAr, his wife and their son climbed onto the plate chanting the Siva panchAksharam "namh SivAya". Lo and behold! The two plates now stood perfectly balanced at last. Now it was the turn of the young brahmin to vanish into thin air!

Siva appeared with Uma Devi in the sky in a bright light. Flowers rained from the sky and were accompanied by the chanting of the Vedas. NAyanAr and his family members continued to chant the Siva panchAksharam. The plate of the scale now transformed into a Pushpaka vimAnam and started flying up higher and higher towards Kailash.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9#36. நரகங்கள் (19 to 23)

19. சாரமேயாதனம்

வீடுகளுக்குத் தீயிட்டுக் கொளுத்துபவர்கள்;
விஷத்தால் கொல்லுகின்ற கொடியவர்கள்;

கூட்டமாக மக்களைக் கொல்லுகின்ற பாவிகள்;
குட்டிசுவர் ஆகும்படிப் பொறுப்பற்று ஆள்பவர்;

தள்ளப்படுவர் இந்த சாரமேயாதன நரகத்தில்;
தள்ளப்படுவர் நாயை உண்ணும் நிலைக்கு!

நாய்களை ஏவிக் கடித்துக் குதறச் செய்வர்;
நாய்களைக் ஏவிக் கடித்துத் தின்னச் செய்வர்!

20. அவீசி


தானமாக ஒரு பொருளைத் தரும் போதும்;
பரிசாக ஒரு பொருளைத் தரும் போதும்;

சாட்சி சொல்லும் போதும் – தன் பெயரையே
மாட்சிமை வாய்ந்ததாக முன் நிறுத்துவோர்

தள்ளப்படுவர் உயரமான மலையிலிருந்து!
தள்ளப்படுவர் அவீசி என்ற இந்த நரகத்தில்!

நீர் நிலை போலத் தோன்றும் இந்த நரகம்;
நீர் கானல் நீர் போன்ற பொய்த் தோற்றமே!

விழுந்து பொடிப் பொடியாக உடைந்தாலும்,
விழச் செய்வர் கிங்கரர்கள் மீண்டும் மீண்டும்!

21. பரிபாதனம்


போதை ஊட்டும் பானம் அருந்துபவர்களை – யம
தூதர் குடிக்கச் செய்வர் உருக்கிய இரும்பினை!

22. க்ஷாரகர்தமம்


தன்னைத் தானே உயர்த்திக் கொள்பவனும்;
தவத்தாலும், பிறவியாலும், வர்ணத்தாலும்,

ஆசிரமத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவரை
அவமதிக்கின்றவனும் அடைகின்ற நரகம் இது.

தலை கீழாகத் தொங்கிக் கொண்டு – பலத்
தாளாத துயரங்களை அனுபவிப்பர் இங்கு!

23. ரக்ஷோகணம்


நரமேத யாகம் செய்பவர்கள் – மற்றும்
நரமாமிசத்தைப் புசிக்கும் இரு பாலரும்

தள்ளப்படும் நரகம் ரக்ஷோ கணம் ஆகும்!
கொல்லப்படுவர் அவர் மீண்டும் மீண்டும்

முன்பு தங்கள் பலியிட்ட மிருகங்களாலும்,
துன்புறுத்தப்பட்ட அப்பாவி மக்களாலும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#21d. HELLS (19 TO 23)


19. SAramEyAdana Hell


Those who rob; or burn down other people’s houses; or force others to drink poison; or are treacherous by nature; or destroy the interest of other persons, they are sent to the SAramEyAdana hell. There seven hundred and twenty dogs come furiously and with great energy and feed on them.

20. Aveechi Hell


Person who impelled by sinful selfish motives speaks falsehood at the time of giving evidence and while taking or giving money is sent to this terrible hell Aveechi.
There, from the summit of a high mountain he is dropped down headlong. The solid ground appears like a water body with waves. But it is just a mirage. His body is broken into a thousand pieces but he can’t die-since he is already dead. This punishment gets repeated several times.

21. ApahpAna hell

When a dwija (belonging to one of the first three varNas who wear the sacred thread) drinks the intoxicating drinks he is thrown into this hell. Yama’s servants force him to drink molten iron.

22. KshArakardama Hell


When a person being arrogant with pride due to his self-learning, birth, austerities or VarNa and Aas’rama and does not pay due respect to his superiors, he is thrown into the KshArakardama Hell head long to suffer a tremendous pain there.

23. RakshogaNa hell

When a person performs human sacrifices or eats the human flesh, he is sent to this hell. Those who had been killed by him, attack him like butchers. They eat his flesh, drink is blood and sing and dance as RAkshasA gaNAs so.

 
SEkkianArin Periya PurANam

7# 08a . எறிபத்த நாயனார் (1)

விளங்கியது கரூர் சேர நாட்டின் சிறந்த நகராக
வளம் கொழித்தது அங்கு பாயும் அமராவதியால்.

'ஆனிலை ஆலயம்' அமைந்திருந்தது பசுபதிக்கு;
ஆலயப் பெயருக்குக் காமதேனுவே காரணம்.

காமதேனு வழிபட்டதாம் எம்பெருமானை இங்கு.
காமதேனு வழிபட்டதால் இது 'ஆனிலை ஆலயம்'.

ஏறிபத்தர் தீவிர சிவனடியார்களின் ஒருவர்;
திருநீற்று மேனி; திகழும் உருத்திராக்கங்கள்;

வாழ்வின் இலட்சியம் சிவனடியாரைக் காப்பது;
தாழ்வின்றி உதவியது அவர் ஏந்திய மழுவாயுதம்.

எறிவார் தன் மழுவைத் தொல்லை தருபவர் மீது.
'எறிபத்தர்' என்ற பெயர் வரவும் இதுவே காரணம்.

அஞ்சா நெஞ்சர்; இல்லை அச்சம் என்பது சிறிதும்!
நெஞ்சார வணங்குவது செஞ்சடையான் அடியாரை.

அகவை முதிர்ந்த ஓர் அந்தணரும் அரனடியார்;
அந்தண பக்தரின் பெயர் சிவகாமியாண்டார்.

பனி நீர் தூங்கும் புத்தம் புது மலர்களைப் பறிப்பார்;
பனி மதிச் சடையனுக்குப் பல மாலைகள் தொடுப்பார்.

சுவாசக் காற்றுப் படாமல் இருக்கத் துணி மறைப்பு.
அவாவுடன் பறிப்பது வண்டுகள் நாடாத மலர்களை.

மாட்டுவர் தன் பூக்குடலையைக் கழியின் நுனியில்;
சாற்றுவார் தொடுத்த மாலைகளைப் பெருமானுக்கு.

புரட்டாசி திங்கள் அஷ்டமித் திதியன்று உண்டு
அரன் ஆலயத்தில் ஓர் அரிய பெரிய திருவிழா.

அலங்கரிக்கப் பட்டது கரூர் நகரம் முழுவதும்;
அலைகடலோ எனத் திரண்டது மக்கள் கூட்டம்.

மலர்க்கூடை இருந்தது நீண்ட கழியின் நுனியில்;
மலர்த் தொடுக்கச் சென்றார் அந்தணர் ஆலயம்.

பட்டத்து யானை வந்தது நதியில் குளித்துவிட்டு;
கட்டுக்கு அடங்காமல் ஓடியது நகரின் வீதிகளில்!

மண்ணில் எறிந்தது அந்தணர் மலர்க்கூடையை!
பின்னும் ஓடியது நகர வீதிகளில் அந்த மதயானை!

சிதறிக் கிடந்தன அழகிய புது மலர்கள் மண்ணில்;
கதறி அழுதார் அகவை முதிர்ந்த சிவகாமியாண்டார்.

ஆற்றாமையினால் அழுதார் அந்த முதிய அந்தணர்;
தேற்ற இயலாத வண்ணம் தேம்பித் தேம்பி அழுதார்.

எறிபத்தர் கேட்டார் கிழவரின் தீனமான அழுகுரலை;
எறிபத்தர் கேட்டறிந்தார் அங்கே நடந்த நிகழ்வுகளை.

எதிர்ப்பட்டார் மதம் கொண்ட பட்டத்து யானை முன்;
எறிந்தார் தன் கூரிய மழுவை கட்டவிழ்ந்த கரி மேல்.

துண்டாகி விழுந்தது மத யானையின் துதிக்கை!
மண்ணில் விழுந்து அலறி மாண்டது யானையும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#08. ERi baththar nAyanAr (1)


Karoor was a very famous city in ChEra NAdu. It was prosperous due to the river AmarAvathy flowing through it. The local Siva temple was called as "Aaniali Aalayam" since kAmadhEnu had worshiped Lord Siva here.

ERi baththar wsa staunch devotee of Siva. His body would be adorned by the bright holy ash and rudrAksha mAlAs. His sole aim in life was to protect all the devotees of Lord Siva. His sharp parasu (ax) was very useful to him for punishing those who offended the devotees of Siva.

He would hurl his ax on the offender mercilessly. This had given him the name ERi baththar meaning "The devotee who throws a weapon"

He was valorous and did not have fear in any of its known forms. He held Lord Siva and his devotees in his highest esteem. There was another old brahmin who was also a staunch devotee of Siva. His name was SivakAmi ANdAr.

This old brahmin used to pluck fresh flower from the garden and made garlands out of them to be offered to Lord Siva. He would cover part of his face with a piece of cloth to make sure that he does not defile the flowers to be offered to Lord Siva, by breathing on them. He went for flowers not polluted by the bees. These flowers went into a basket hung from one end of a long stick.

A grand festival would be celebrated on the eighth day of the month PurattAsi. The whole town was well decorated. People who had gathered there resembled the tumultuous sea. SivakAmi ANdAr hung his flower basket from the end of the stick and went to the temple to make garlands as usual.

The royal elephant which had just bathed in the river, got out of control and started running wildly in the streets of karoor. It tossed down the flower basket from the end of the old brahmin's stick and continued on its rampage.

The old brahmin SivakAmi ANdAr saw that all the fresh flowers he had plucked so carefully now lay on the dirty soil - unfit for worship. He started shedding tears and crying uncontrollably and inconsolably.

ERi baththar heard the piteous cry of the old man and took pity on him. He found out the cause of his heart rending cry from the others. He charged ahead and stood in front of the mad royal elephant.

He threw his sharp ax at the royal elephant and its tusk got completely severed. The royal elephant let out a terrifying sound and dropped quite dead.






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#37. நரகங்கள் (24 to 28)

24. சூலப்ரோதம்

தீங்கு செய்யாதவர்களைக் கொல்பவர்கள்,
தங்களைத் தற்கொலை செய்து கொள்பவர்;

சூலப் புரோத நரகத்தில் தள்ளப்படுவர்!
சூலத்தின் மீது குத்திக் கோர்க்கப்படுவர்!

பறவைகளால் கொத்தப்பட்டுத் துன்புறுவர்!
பரிதவிப்பர் தம் பாவங்களை எண்ணி எண்ணி.

25. தந்த சூகம்


துஷ்ட ஜந்துக்களும், விஷப் பூச்சிகளும் சேர்ந்து
இஷ்டம் போலக் கடிக்கும் இந்த நரக வாசிகளை!

26. வடோதரம்


மலை முழைகளில், கூடுகளில் வசிக்கின்ற,
வளைகளிலும், பள்ளங்களிலும் வசிக்கின்ற,

பிராணிகளைத் துன்புறுத்துபவர்கள் – சேர்ந்து
பிராணாவஸ்தை அனுபவிக்கும் நரகம் இது!

புகையாலும், விஷத்தாலும், நெருப்பாலும்,
மலை முழை போன்ற நரகத்தில் துன்புறுவர்!

27. பர்யாவர்த்தனகம்


லோப குணம் கொண்ட தீயவர்கள் துன்புறுவர்
பர்யாவர்த்தனகம் என்னும் நரகத்தில் வீழ்ந்து.

கயிற்றினால் கட்டி இறுக்குவர் இவர்களை
மயிர் கூச்செறிந்து அவயவங்கள் வாடும்படி!

28. சூசி முகம்

செல்வத்தால் கர்வம் கொண்டவர்கள் மற்றும்;
செலவு வைப்பவரிடம் முகத்தைக் சுளிப்பவர்;

பணத்தைப் புதைத்துப் பூதம் போலக் காப்பவர்;
கணம் ஓய்வின்றித் துன்புறும் நரகம் சூசிமுகம்.

பாவ பேதங்களுக்கும் கிடைக்கும் தகுந்தவாறு
நரக பேதங்கள், வேதனை பேதங்கள் அறிவாய்!

தேவியைப் பூஜிப்பவர் அடைவதில்லை நரகம்!
தேவி கரையேற்றி விடுவாள் சம்சாரத்திலிருந்து”!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38. Hells ( 24 to 28)


24. Soolaprota Hell


Those who kill the innocent people, ignorant people, those who have done no harm at all mercilessly, they are thrown into Soolaprota Hell and are pierced by very sharp S’oolAs. They are overcome by hunger and thirst. Herons and cranes peck at them with their sharp beaks. Tormented in this manner they remember all their sins done in their previous lives.

25. Dandas’ooka Hell


Those who follow stray paths and trouble the other beings as the serpents do, they fall into the Dandas’ooka hell. Here worms with five faces and seven faces come from all sides and eat them as a fierce serpent devours a mouse.

26. AvaTarodha hell


Those who confine other persons in dark holes, a dark room or a dark cave are confined to similar dark caves, filled with poison, fire and smoke and made to suffer.

27. ParYavartanaka Hell

When a Brahmin householder, casts a hateful glance on a guest who comes to his house in a proper time is sent to this hell. Herons with thunderbolt-like-beaks, the crows, other birds like fierce vultures come and peck the eyes of that person.

28. Soochimukha Hell

When person becomes too haughty with the vanity caused by his riches; when he doubts his own guru, when his heart withers while thinking about his expenditure, when he is always unhappy, when he hoards up money ; he is sent to Soochimukha Naraka and pierced all over his body with pins.

The sinful persons thus suffer in a hundred thousand punishments in hell. All these are painful and tormenting. The virtuous persons go to the several spheres where happiness and pleasures reign.

The worship of the Devi in her Gross Form and of Her VirAt swaroopam is the Chief Dharma of all the persons. By worshiping the Devi, the persons do not have to go to the hell. She helps the person in crossing the ocean of transmigration of existence

 
SEkizhArin Periya PurANam

#08b. ஏறிபத்த நாயனார் (2)

விடவில்லை யானையின் பாகனையும் எறிபத்தர்;
விடவில்லை யானைக் குத்துக் கோற்காரனையும்!

"யானையை அடக்க இயலாத நீங்கள் எதற்காக?
யானையுடனேயே நீங்களும் அழிந்து ஒழியுங்கள்!"

வெட்டி வீழ்த்தினார் ஐவரைத் தன் கோடரியினால்!
எட்டியது மன்னனை ஐவர் வெட்டுண்ட இச்செய்தி!

எல்லை மீறிவிட்டது மன்னனின் சினம் இதனால்;
தொல்லை தருபவரை நோக்கி நடந்தது ஒரு படை.

கலங்கினான் மன்னன் கொலையுண்டவரைக் கண்டு!
கலங்கினான் மன்னன் கொலை செய்தவரைக் கண்டு!

'சிவக் கோலத்தில் நிற்கும் இந்த சிறந்த சிவனடியாரா
சவம் ஆக்கிவிட்டார் பட்டத்து யானையையும், ஐவரையும்?

அன்பே வடிவான இவர் பொல்லாத கோபம் கொள்ள
என்ன பாதகம் செய்து விட்டதோ என் பட்டத்து யானை? '

வணங்கினான் ஏறிபத்தரை; மண்டி இட்டான் மன்னன்;
இணங்கினான் அவருடன் தவறுகளைத் தண்டிப்பதில்;

"பட்டத்து யானையின் தவற்றுக்கு நானே பொறுப்பு - எனவே
வெட்டித் தள்ளுங்கள் என்னையும் உங்கள் மழுவினால்!" என

கொடுத்தான் தன் உடைவாளை எறிபத்தரிடம் மன்னன்;
எடுத்தார் அவன் தந்த உடைவாளை எறிபத்த நாயனார்;

'ஆத்திரத்தில் தவறு செய்தவன் நானே அல்லவா?
பாத்திரம் அல்ல இந்த மன்னன் தண்டனை பெற்றிட!

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது உண்மையே!
ஆத்திரமும் அவசரமும் தாம் தண்டனைக்கு உரியவை!'

எடுத்தார் மன்னனின் உடைவாளை - அதைக் கொண்டு
எடுக்க முயன்றார் தன்னுடைய தலையையே தனியாக!

திடுக்கிட்டான் இதைச் சற்றும் எதிர்பாராத மன்னன்;
வெடுக்கென்று பறித்து விட்டான் தன் உடைவாளை!

ஒளி தோன்றியது விண்ணில்! ஒலி பேசியது விண்ணில்!
ஒளியையும், ஒலியையும் தோற்றுவித்தவன் எம்பெருமான்.

"உலகறியச் செய்ய விரும்பினேன் உம் பெருமைகளை;
பல விநோதங்களை நிகழ்த்தினேன் அதன்பொருட்டு!"

விழுந்து வணங்கினர் அடியவரும், அரசனும் அரனை;
விழித்து எழுந்தனர் மாண்டு போனவர்கள் அனைவரும்.

புத்தம் புது மலர்க்கூடையைக் கண்டார் சிவகாமியாண்டார்;
நித்தம் நித்தம் செய்த துழாய்த் தொண்டு செய்தார் அன்றும்.

நண்பர்கள் ஆகிவிட்டனர் அரசனும், அடியவரும் அன்று.
மண்மிசை வாழ்ந்தனர் பன்னெடுங் காலம் அனைவரும்!

சிவகணங்களின் தலைவர் ஆனார் எறிபத்த நாயனார்;
சிவலோகம் சென்று அடைந்தான் அந்தச் சோழ மன்னன்;

திருத்துழாய்த் தொண்டு செய்து வந்த முதிய அந்தணர்
பிறவாப் பேறு பெற்று மகிழ்ந்தார் அரன் அடி நீழலில்.

"வேல்நம்பி எறிபத்தர் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#08b. ERi baththar (2)

Eri baththar did not spare the mahout and his companions. He tossed his ax at them and said, "You do not deserve to live on when you can not control your elephant!" He thus killed five men.

The news about the death of the royal elephant and five more men reached the king. He became very angry that any single person could do so much damage. A group of soldiers marched to the spot in order to punish the offender.

The king got disturbed by the sight of the five people and his elephant who had fallen dead. He got even more disturbed when he saw that the man who responsible for this crime was a staunch devotee of Siva.

He could not believe that a devotee of Siva would thus kill five men and the royal elephant for no real reason. He started wondering what was the crime committed by the royal elephant to make a devotee of Siva fly into a wild rage.

He told ERi bathtar,"I am responsible for the mistake committed of my royal elephant. Please punish me as well!" He drew out his sword and handed it over to the ERi baththar.

Eri baththar said to himself, "Is this king to be punished for the mistake of his elephant. Certainly not. On the other hand I must be the one who should get punished for becoming so enraged and for acting so rashly killing so many people" He wished to cut off his own head and to set things right by sacrificing his own life.

The king got shocked to see this. He grabbed the sword form the hand of the devotee of Siva. A brilliant light appeared in the sly. A voice spoke from the sky. The light and the sound were both caused by Siva himself. It said,"I wished the whole world to know your greatness and hence played these pranks. "

The king and Eri baththar fell on the ground and prayed to Siva. All the five men and the royal elephant killed by ERi baththar came back to life. SivakAmi ANdAr was happy to see a basket full of fresh fragrant flowers. He started making garlands as was his daily routine.

ERi baththar and the King became close friends. They both lived long and happy lives. After their life on earth came to an end, they both were made the leaders of Siva gaNas. The old brahmin who made garlands with so much devotion and love attained the lotus feet of Siva and escaped the endless cycles of birth and death.




 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9


9#38a. பக்தியின் மஹிமை

“தேவி பக்திக்கு இலக்கணம் யாது?
தேவி பக்தி எத்தனை வகைப்படும்?

தேவி பக்திக்கு முரணான செயல்கள் எவை?
தேவி பக்திக்குக் கண்டிக்க வேண்டியது எது?

தானம், தர்மம், தவம், விரதம் போன்றவை
தரும் செய்பவர்களுக்குப் புண்ணியத்தை!

அஞ்ஞானத்தைப் போக்குபவருக்கு – பத்து
ஆயிரம் மடங்கு அதிகப் புண்ணியம் வரும்!

பெற்ற தாய் தந்தையரை விட – உபதேசிக்கும்
உற்ற குரு நூறு மடங்கு பெரியவர் அல்லவா?

கண்கண்ட கடவுள் எனக்கு நீரே – அறிவுக்
கண்ணைத் திறந்து அளியுங்கள் ஞானம்!”

வேண்டினாள் சாவித்திரி ஞானக் கடலாகக்
கண்முன்னே இருந்த யமதர்ம ராஜனிடம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38a. The greatness of devotion

SAvitri asked Yama Dharma RAjan some more doubts now! “What is Devi Bhakti? How many types of Bhakti are there? What are the things opposed to Devi Bhakti? What are the things to be avoided while doing Bhakti to Devi?

Donating things, adhering to justice, doing penance and observing difficult vrathams confer good merits on the doer. But removing ignorance of a person confers ten thousand times more merits.

The guru who dispels the darkness of ignorance is hundred times more respectable than one’s own parents. You are the ocean of knowledge and of patience. You are the God whom I can see with my own eyes! Please open my eyes of wisdom and do bestow true knowledge on me!”

 
SEkkizhArin Periya PurANam

7#09a. திரு ஏனாதி நாதர் நாயனார்

ஏனாதி நாதர் அவதரித்தார் ஈழவர் குலத்தில்
எயினனூர் என்னும் சோழ வளச் சிற்றூரில்.

சிவனாகவே கருதுவார் சிவனடியார்களை!
சிவனாகவே வணங்குவார் நீறணிந்தவரை!

தோன்றினார் இவர் சேனாதிபதியின் மரபில்;
தோற்றுவித்தார் ஒரு வாட்பயிற்சிக் கூடத்தை.

வீரமும், திறமையும் மிகுந்திருந்தன இவரிடம்;
வீரர்கள் வந்து குவிந்தனர் பயிற்சி பெற்றிட.

அமைத்தான் அதிசூரனும் வாட்பயிற்சிக் கூடம்;
அணுகவில்லை அதிக மாணவர்கள் பயின்றிட.

முத்துச் சிப்பியாக விளங்கினார் ஏனாதிநாதர்;
வெத்துச் சிப்பியாக விளங்கினான் அதிசூரன்.

உயர் குணங்கள் கொண்டிருந்தார் ஏனாதி நாதர்.
துயர் தரும் பகைமை கொண்டிருந்தான் அதிசூரன்.

சென்றான் ஏனாதி நாதரிடம் உற்றம், சுற்றத்துடன்,
சொன்னான்," நம்மில் சிறந்த ஒருவரே இனி ஆசான்!

இரண்டு பயிற்சிக் கூடங்கள் எதற்கு ஒரே ஊரில்?
திரண்டு மக்கள் முடிவு செய்வர் நம்மில் சிறந்தவரை!"

தத்தம் படைகளுடன் அடைந்தனர் திறந்த வெளியை;
துச்சமாக உயிரை எண்ணிப் போரிட்டன குழுக்கள்.

முறியடிக்கப் பட்டது அதிசூரனின் படை அன்று.
புறமுதுகிட்டு ஓடி மறைந்தான் எங்கோ சென்று!

மறைந்தன நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஆகி;
மறையவில்லை அதிசூரனின் சினமும் பகையும்;

வஞ்சகமாகக் கொல்லவேண்டும் ஏனாதி நாதரை!
தஞ்சம் புகுந்தான் சிவனடியாரின் வெண்ணீற்றை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#09a. EnAthi nAthar nAyanAr

EnAthi nAthar nAyanAr was born in the race of Eezhava in a place called Eyinanoor. He was a staunch devotee of Siva. He considered any devotee of Siva as Lord Siva Himself. He would worship anyone adorned by the holy ash as Lord Siva Himself.

He was born in the family of the SEnathipathi of the Chozha king. He established a training center for fencing and sword fight. He himself was very well trained and had a vast knowledge about warfare. So many young men became his disciples and wished to learn from him.

Athisooran set up another training center for fencing and sword fight but very few men came forward to learn from him. EnAthi nAyanAr was like an oyster holding a precious pearl while Athisooran felt like an oyster with no pearl. Naturally Athisooran became extremely jealous of EnAthi nAyanAr.

One fine day Athisooran went to meet EnAthi nAyanar. He spoke to him thus, "There is no need to have two different training centers for fencing in the same town. So we will fight it out. The one who people choose as the better teacher will continue to be the only teacher". EnAthi nAthar nAyanAr agreed to this.

So these two teachers along with their disciples fought it out one fine day in a vast open area. Athisooran's group was defeated completely and he took to heels and went into hiding. Days rolled into weeks and months but the enmity did not reduce from Athisooran's mind.

He decided to get rid of EnAthi nAyanAr by treachery. He knew very well that nAyanAr's greatest weakness was his respect for the person smeared with holy ash.
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9


9#38b. தேவியின் சிறப்பு (1)

” சொல்வது அரிது தேவியின் மேன்மைகளை;
சொல்ல முயல்வது பெரும் கடலை நீந்துவது.

ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும்,
ஆறு நாவு படைத்த அந்த ஆறுமுகனாலும்,

ஐந்து நாவு படைத்த மஹேஸ்வரனாலும்,
நான்கு நாவு படைத்த பிரம்ம தேவனாலும்,

மஹா விஷ்ணுவாலும், நான்கு வேதங்களாலும்,
மஹா கணபதியாலும், யோகீந்திரர்களாலும்,

சொல்ல முடியாது பதினாறில் ஒரு பங்கும் கூட!
சொல்ல முடியாது கலைமகள் வாணியாலும் கூட!

இயலவில்லை சனத் குமார சகோதரர்களால்;
இயலவில்லை கபிலரால், சூரிய தேவனால்!

தியானிக்கிறார்கள் திரி மூர்த்திகள் தேவியை ;
துணியவில்லை தேவி மேன்மைகளை விவரிக்க!

சொல்லும் திறன் இல்லாத போதும் மேன்மையால்
வெல்லும் தேவியின் பக்தி சகல சித்திகளையும்.

அறிவார் பரம ஞானி தேவியின் சிறப்பைச் சிறிது;
அறிவார் பிரம்ம தேவன் அதனிலும் சற்று அதிகம்;

அறிவார் விநாயகர் அதனிலும் சற்று அதிகம்;
அறிவார் முருகன் அதனிலும் சற்று அதிகம்;

அறிவார் சிவபிரான் அதை விடச் சற்று அதிகம்;
அறிவார் சிவபிரான் அனைவரிலும் நன்றாக!

உபதேசித்தார் சிவபெருமான் தருமருக்கு;
உபதேசித்தான் தருமன் சூரிய தேவனுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38b. The glories of Devi. (1)


“It is difficult to relate the greatness of Devi. Trying to relate her greatness is the same as trying to swim across an ocean. Even Aadhiseshan cannot relate it with his one thousand tongues! Nor can Shanmukhan relate it with his six tongues.

Nor can Maheswara relate it with his five tongues nor can brahma relate it with his four tongues. MahA VishNu cannot relate it nor can MahA Ganapathi do it.

Even the greatest Yogindra cannot reveal Devi’s greatness. The Goddess of speech Saraswati herself is incapable of praising Devi’s greatness.

Sage Kapila and The God of Sun also failed in this. The Trinity do meditate on Devi. But even they do not dare to try to explain her greatness. The greatness of Devi may be beyond the power of speech but her worship will confer on a devotee all the siddhis.

An enlightened JnAni will know the greatness of Devi to some extent. BrahmA knows more than what the JnAni does. Vinayaka knows about it more than Brahma does.

Skanda knows more than what VinAyaka knows. Lord Siva knows more than Skanda and so He is the most knowledgeable person about Devi’s greatness.Lord Siva did upadesam to Dharma Devan and Dharma Devan did upadesam to Sooyra Devan.”

 
SEkkizhArin Periya PurANam

#09b .திரு ஏனாதி நாதர் நாயனார்

"வஞ்சித்துக் கொல்ல வேண்டும் ஏனாதி நாதரை!"
நெஞ்சில் உறுதி பூண்டான் வஞ்சகன் அதிசூரன்.

"இனி வேண்டாம் தவிர்க்க முடிந்த உயிர்ச்சேதம்;
தனித்தே போர் செய்வோம் இருவரும் ஒருமுறை!"

ஏவலாளை அனுப்பினான் ஏனாதி நாதரிடம் தூது;
ஏற்றுக் கொண்டார் இந்தத் தூதை ஏனாதி நாதரும்!

இடம், காலம், தினம் அனைத்தும் குறிக்கப்பட்டன;
உடன்பட்டனர் இருவரும் முழு மனத்துடன் இதற்கு.

அணிந்தான் வெண்ணீற்றை உடலில் அதிசூரன்.
அணிந்தான் கவசம் வெண்ணீற்றை மறைத்து.

பாய்ந்து, பாய்ந்து போரிட்டார் ஏனாதி நாதர்.
பதுங்கிப் பதுங்கிப் போரிட்டான் அதிசூரன்.

ஓங்கியது ஏனாதி நாதரின் திறமை - ஒளி
மங்கியது ஒளி அதிசூரன் போர்த்திறமை !

கொல்ல வந்த வாளைக் கண்டான் அதிசூரன்;
மெல்லக் காட்டினான் வெண்ணீற்று மேனியை!

வளர்ந்தன ஏனாதி நாதரின் சிவபக்தியும், அன்பும்;
தளர்ந்தன ஏனாதி நாதரின் வலிமையும், வீரமும் !

"பகைவன் என்று எண்ணிப் போரிட்டேன் - ஆனால்
தகவுடைய சிவத் தொண்டன் அல்லவா இவன்?

எறிந்து விடலாம் என் வாளையும், என் கேடயத்தையும்!
ஏற்படும் நிராயுத பணியைக் கொன்ற பழி இவனுக்கு!"

தாக்கவில்லை அதிசூரனை அதற்குப் பின்பு - ஆனால்
தாக்கினான் அதிசூரன் அவர் ஆவி பிரியும் வண்ணம்.

தோன்றியது ஒரு பேரொளி வான வீதியில் - அதில்
தோன்றினர் விடையேறும் பெருமானும், உமையும்!

"எம்மைப் பிரியாத பெருவாழ்வு தந்தோம்!" என்று
இம்மை, மறுமை கடந்த செம்மையை அளித்தான்.

தந்தது வெண்ணீறு அருள் மயமான அமர வாழ்வை!
தந்தது அதுவே உலகுக்கு ஏனாதி நாதர் நாயனாரை!

"ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#09. EnAthi nAthar nAyanAr (2)


Athiveeran sent a messenger to EnAthi nAthar nAyanAr with this proposal. "There is no point in getting more people killed than it is necessary. So let us fight it out between ourselves and decide who will continue to teach and who won't!"

EnAthi nAthar nAyanAr accepted the proposal. The venue, the time and day were fixed and both of them agreed to that. On the day of the showdown, Athisooran smeared his body with the bright white holy ash. Then he covered it with his armor and shield.

EnAthi nAthar nAyanAr fought valorously pouncing and leaping while Athisooran fought hesitatingly. Soon EnAthi nAthar nAyanAr was about to swing his sword to kill Athisooran. Suddenly Athisooran exposed his body smeared with the holy ash.

EnAthi nAthar nAyanAr was overcome by bis love for Siva and all the devotees of Siva. He became kind and compassionate towards his mortal enemy.

He thought to himself, "I have been fighting with this Athisooran thinking that he is my enemy. But now I see that he is a devotee of Siva. I can't fight with him any more. But If I drop down my weapons he will be blamed for killing an unarmed man!"

Thereafter EnAthi nAthar nAyanAr did not attack Athisooran any further. Athisooran took this opportunity to attack nAyanAr and killed him.

A bright light appeared on the sky. Lord Siva and Uma Devi appeared in the light. Siva said to nAyanAr," You will never part from my side henceforth!' and gave nAyanAr a life which did not have the endless cycle of birth and death.

The holy ash (vibhoothi) gave nAyanAr a glorious life after life. It also gave to the world a glorious holy man in the form of EnAthi nAthar nAyanAr.

 
SEkkizhArin Periya PurANam

#10a . திரு கண்ணப்ப நாயனார் (1)

புத்தம் புது மலர்கள் பூத்துக் குலுங்குகின்ற
பொத்தாப்பி நாட்டில் ஒரு சிற்றூர் உடுப்பூர்.

வேடர்களின் சிறந்த தனிநாடு உடுப்பூர் - இது
வேலியாகக் கொண்டது யானைத் தந்தங்களை.

வேடுவர் வல்லவர் வேட்டைத் தொழிலில் - அவர்
உடுப்பர் மிகவும் விரும்பித் தோலாடைகளையே.

தலைவன் வீரம் செறிந்த நாகன்; மனைவி தத்தை;
குலம் செழிக்கத் தோன்றவில்லை ஒரு குழந்தை!

வழிபட்டனர் திரு முருகப்பெருமானை அனுதினமும்;
வழி காட்டினான் திரு முருகப் பெருமான் அன்புடன்;

ஆண் குழந்தை பிறந்தது தத்தைக்கு - அவனுக்குத்
திண்ணன் என்ற பெயர் திண்ணென்று இருந்ததால்!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
நாளடைவில் அடைந்தான் அவன் வாலிபப் பருவம்.

மாறியது வேடர் தலைமைப் பதவி திண்ணனுக்கு!
கூறியது வேடர் குலம் திண்ணனின் பெருமையை!

செய்தாள் தேவராட்டி பூசைகள் தேவதைகளுக்கு;
சொன்னாள், "தந்தையை மிஞ்சுவான் தனயன்!"

வேட்டைக்குச் சென்றான் திண்ணன் வேடர்களுடன்;
வேட்டையாடினான் கொடிய வரிப்புலியைப் போல!

நானா திசைகளிலும் ஓசை எழுப்புவர் வேடுவர்கள்;
நானா மிருகங்கள் பலியாகிவிடும் வெளிப்பட்டவுடன்!

தப்பி விட்டது பெரிய பன்றி ஒன்று அவனிடமிருந்து;
தப்பிய பன்றி ஓடியது இப்படியும் அப்படியும் காட்டில்.

துரத்திச் சென்றனர் அப் பன்றியை வேடுவ வீரர்கள்;
விரக்தி அடைந்தனர் பன்றியைக் கொல்ல முடியாமல்;

களைத்த வேடுவ வீரர்கள் நின்று விட்டனர் - ஆனால்
இளைக்காமல் துரத்திச் சென்றான் அதைத் திண்ணன்.

பிடித்து விட்டான் பன்றியைத் திண்ணன் இறுதியாக;
கடித்துச் சுவைக்க வேண்டும் அதைப் பசி, தாகம் தீர!

அருகிலேயே ஓடியது பொன்முகலி ஆறு - திண்ணன்
நெருங்கினான் அதை இரு நண்பர்கள், பன்றியுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#10a. KaNNappa nAyanAr


Fresh flowers bloomed in the fertile country PotthAppi. Uduppoor was a hamlet in Potthappi in which the hunters lived. The tusks of dead elephants formed the fence of this beautiful village. The hunters living in this hamlet were expert hunters. They ate the meat of the animals they hunted and wore the hides as dress.

The leader of the village was NAgan and his wife was Dhatthai, but they did not have a child to make their happiness complete. They worshiped Lord Murugan with deep devotion and finally Dhatthai was blessed with a strong baby boy. Since the child was heavy and strong. he was named as ThiNNan ( meaning one who is well built and heavy)

The boy grew up well and became a young lad in due course of time. He learned the art of hunting from his father. When NAgan had become very old, he made ThiNNan the new leader of the village. Everyone loved and praised the kind-hearted and talented hunter ThiNNan.

The village priestess performed a pooja to their gods. She predicted thus: "ThiNNan the son of NAgan will outshine his father"

One fine day ThiNNan went for hunting along with the fellow hunters. He hunted with the ferocity of a striped tiger! The hunters would make a blare of mixed sounds with their instruments to scare the animals out of their hiding places. The moment they emerged from hiding they would get hunted mercilessly.

A wild boar managed to escape and ran away very fast. The hunters kept on the chase for long. Eventually all but three of the hunters had stopped chasing the boar. The three hunters who continued the chase were ThiNNan and two of his friends NANan and KAdan.

The wild boar was finally killed by these three hunters. The trio had become very hungry and thirty by then. They decided to cook and eat the boar. The river Ponmugali was flowing nearby. They decided to go to the river to drink some cool water and to cook the boar.
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#38c. தேவியின் சிறப்பு (2)


“தேவியின் சிறப்பை முற்றிலும் அறிந்தவள்
தேவி மட்டுமே என்பது அதிசயமான உண்மை.

அளக்க முடியாது விரிந்து பரந்த வானத்தை!
அளக்க முடியாது விரிந்து பரந்த சிறப்புக்களை!

ஆவார் அனைத்துக்கும் ஆத்மா சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் காரணம் சர்வேஸ்வரன்;

ஆவார் அனைத்துக்கும் முதல்வர் சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் பரிபாலகர் சர்வேஸ்வரன்;

ஆவார் அனைத்துக்கும் வித்தாக சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் அப்பற்பட்டவராக அவர்.

நித்திய ரூபி, நித்தியானந்தர் ஆவார் சர்வேஸ்வரன்
நிர்குணர் ஆவார் நிராகாரர் ஆவார் சர்வேஸ்வரன்.

நிரங்குசர் ஆவார் ஆதார புருஷர் சர்வேஸ்வரன்.
பரமாத்மாவின் சக்தி ஆவாள் மாஹா மாயை!

அக்னியும், உஷ்ணமும் போலக் கலந்துள்ளனர்
பரம புருஷனும், பிரகிருதி தேவியும் ஒன்றாக!

சச்சிதானந்த வடிவானவள் பிரகிருதி தேவி – அவள்
பக்தருக்கு அருள் பாலிக்கவே உருவெடுக்கின்றாள்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38c. The glories of Devi (2)

“It is a wonderful truth that Devi alone knows her real greatness and glories! We can not measure the sprawling sky. We can not measure the glories of Devi either!

Sarweswaran is the Aatman of every jeeva; He is the cause of everything; He is ruler of the entire creation; He is the real cause behind this creation; He is the seed of this creation; He lies beyond everything in the creation.

He is eternal; He is always happy; He is free from the three guNAs; He does not have any form; He is the one who supports every existing thing.

Devi MaHA MAyA is the one who is the real power of ParamAtma. Just like Fire and its heat, ParamAtma and MahA MAyA are bonded together inseparably. Prakriti Devi is of the nature of Sath-Chith-Aanandam. If and when She assumes visible forms, it is only to shower Her grace on Her ardent devotees”.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#38d. தேவியின் சிறப்பு(3)

“பிரமன் சிருஷ்டிக்கின்றான் தேவியின் ஆணைப்படி!
கர்மங்களை, அனுபவங்களை நிச்சயிக்கின்றாள் தேவி!

வழங்குகின்றார் விஷ்ணு பிரான் கர்ம பலன்களை;
வழங்கப்படுகின்றன அவை தேவியின் ஆணைப்படி.

காலாக்னி ருத்திரர் சம்ஹரிக்கின்றார் சிருஷ்டியை;
காலாக்னி ருத்திரர் சம்ஹரிப்பது தேவி ஆணைப்படி.

சுழல்கின்றான் வாயுதேவன் தேவியின் ஆணைப்படி.
அழல் வீசுகின்றான் சூரியன் தேவியின் ஆணைப்படி.

குளிர்விக்கின்றான் வருணன் தேவியின் ஆணைப்படி;
பெய்விக்கின்றான் மழை இந்திரன் தேவி ஆணைப்படி;

பணி புரிகின்றான் காலதேவன் தேவியின் ஆணைப்படி,
பணி புரிகின்றனர் திக்பாலகர் தேவியின் ஆணைப்படி.

சுழல்கின்றது ராசிச் சக்கரம் தேவியின் ஆணைப்படி;
பழுக்கின்றன இனிய கனிகள் தேவியின் ஆணைப்படி.

நீரிலும், நிலத்திலும் வாழும் அனைத்து ஜீவராசிகள்
ஆருயிர் வாழ்வதும் ஆகும் தேவியின் ஆணைப்படி.

தாங்குகின்றான் ஆதிசேஷன் பூமியைத் தன் ஆயிரம்
தலைகளால் தேவி அவனுக்கு இட்ட ஆணையின்படி!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38d. Devi’s glories (3)


“BrahmA creates as ordained by Devi! Vishnu bestows the effects of karmas as ordained by Devi. KAlAgni Rudra destroys the creation as ordained by Devi.

The wind blows as ordained by Devi; the Sun glows as ordained by Devi; Varuna causes coolness as ordained by Devi; Indra causes rainfall as ordained by Devi!

KAlA acts as ordained by Devi; the Dik PAlakAs act as ordained by Devi; The planets move as ordained by Devi; the fruits ripen as ordained by Devi!

The creatures living on land and water live as ordained by Devi; Aadhiseshan supports the World on his one thousand heads as ordained by Devi!”

 
SEkkizhArin Periya PurANam

#10b. திரு கண்ணப்ப நாயனார் (2)

வழியில் அமைந்திருந்தது காளத்தி மலை - அதை
விழியால் கண்டதும் உடல் சிலிர்த்தான் திண்ணன்;

பிறந்தது அவனுள் சொல்ல ஒண்ணாத புதிய சக்தி;
பிறந்தது அவனுள் சொல்ல ஒண்ணாத புதிய பக்தி;

ஒளிர்ந்தது ஓர் ஒளிப்பிழம்பு மலையுச்சியின் மீது;
ஒலித்தன ஐந்து தேவ துந்துபிகள் மலையுச்சியில்.

முழங்கின கடலலையெனத் திண்ணன் செவிகளில்;
முழங்கியது வண்டுகளின் ரீங்காரம் பிற செவிகளில்;

"செல்வோமா மலையுச்சிக்கு?" கேட்டான் திண்ணன்.
"செல்வோம் திண்ணா! உள்ளார் குடுமித்தேவர் அங்கு!"

ஆவல் பெருகியது குடுமித் தேவரைத் தரிசிப்பதற்கு!
ஆவல் பெருகியது குடுமித் தேவரை ஸ்பரிசிப்பதற்கு!

ஓடினர் மூவரும் காளத்தி மலை உச்சியை நோக்கி!
ஓடினர் மூவரும் பொன்முகலி ஆற்றினை நோக்கி!

"பக்குவப் படுத்துவாய் பன்றிக் கறியை நண்பா காடா!
நோக்கி வருவோம் குடுமித் தேவரை மலையுச்சியில்!"

மாலை வெய்யில் பொன் மஞ்சள் ஆக்கியது மலையை;
மாலை மதியைப் போலக் குளிர்ந்தது திண்ணன் மனம்;

கண்டான் குடுமித் தேவரை மலை உச்சியின் மீது;
கண்ணீர் அருவி பாய்ந்தது அன்பின் மிகுதியால்!

முழுமையாகப் புதுப் பிறவி எடுத்தான் திண்ணன்;
தழுவினான் குடுமித் தேவரின் அழகிய சிலயை.

மது உண்ட வண்டாக மாறிவிட்டான் திண்ணன்;
புதுப் பிறவியை எடுத்துவிட்ட பின்பு திண்ணன்;

குழறியது அவன் மொழி; குளிர்ந்தது அவன் உடல்;
பெருகியது பேருவகை ; உருகியது அவன் உள்ளம்;

'புலி, கரடி, சிங்கம் திரிகின்ற இந்த வனத்தில்
சிலையாக உள்ளார் குடுமித்தேவர் தனியாக!'

விழுந்தது நழுவிய அவன் வில் நிலத்தின் மீது;
அழுதான் திண்ணன் தேவரின் தனிமைக்காக;

இருந்தன இலைகளும், நீர்த்துளிகளும் தேவர் மீது.
விரும்பினான் திண்ணன் எதற்கு என்று அறிந்திட.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#10b. KaNNappa nAyanAr (2)

ThiNNan and his friends KAdan and NANan went towards the river. KaLahasthi mountain was situated nearby. ThiNNan felt a strange excitement as he neared the mountain. A strange new energy surged up in him. A strange new feeling of devotion surged up in him.

There appeared a bright illumination on the top of the mountain. The sound of five Deva dhundhubis resembling the loud waves of a sea was heard by ThiNNan alone. His two fiends could only hear the buzzing sounds made by the bees.

ThiNNan now wished to go to the top of the mountain. His friends agreed to this and said, "There is a Kudumi DEvan ( God with matted hair) on the top of the mountain."

ThiNNan wished to get a glimpse of this Kudumi DEvan immediately. He also wished to touch the Kudumi Devan. All the three hunters ran to the top of the mountain. ThiNNan said," KAdA! Cook the boar while I and NANan will get a glimpse of the Kudumi DEvan!"

The golden rays of the evening Sun made the mountain itself appear golden. ThiNNan felt a new sensation of peace and joy. He saw the Kudumi DEvan and tears started flowing freely from his eyes - due to his intense love for this God at the very first sight.

It was as if ThiNNan had become a new person all of sudden. He embraced the statue of the Kudumi DEvan. He became intoxicated like a bee which has feasted on honey. His words became slurred; he felt extremely peaceful; joy surged in his heart; and his heart melted with all these mixed feelings.

"The Kudumi DEvan is all alone by himself in this jungle infested with wild animals. There is no one to protect him or even give him company!" Thinking in this manner ThiNNan dropped his bow and cried with compassion for the loneliness of his God.

He saw that there were green leaves and flowers on the head of the Kudumi DEvan and wished to know more about it from his friends.






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#38e. பிராகிருத பிரளயம்

பிரம்மனின் ஒரு நாளுக்கு சமம் ஆகும்
இருபத்தெட்டு இந்திரரின் ஆயுட்காலம்.

முப்பது நாட்கள் சேர்ந்தது ஒரு மாதம்;
பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தது வருடம்.

பிரம்மனின் ஆயுள் நூறாண்டுகள் – இது
கிருஷ்ணபிரான் கண்ணிமைக்கும் காலம்.

பிரம்மனின் ஆயுட்காலம் முடிந்தவுடனே
ஹரியும் மூடிக்கொள்வான் தன் கண்களை!

பிராகிருதப் பிரளயம் என்பது இதுவே ஆகும்;
சாராசரம் அனைத்தும் அழிந்துவிடும் அப்போது!

பிராகிருதப் பிரளயத்தில் அழிந்து விடும் சிருஷ்டி;
பிரளயத்தில் ஒடுங்கி விடும் மொத்த சிருஷ்டியும்.

ஒடுங்குவான் பிரம்மன் விஷ்ணுவின் நாபியில்;
ஒடுங்குவான் விஷ்ணு கிருஷ்ணனின் இடப்புறம்!

ஒடுங்குவர் சக்தியர் எல்லோரும் மூலப் பிரகிருதியில்;
ஒடுங்குவாள் மூலப் பிரகிருதி கிருஷ்ணனின் புத்தியில்.

ஒடுங்குவான் ஸ்கந்தன் கிருஷ்ணனின் மார்பினில்;
ஒருங்குவான் ஆனைமுகன் கிருஷ்ணனின் புஜத்தில்.

ஒடுங்குவர் லக்ஷ்மியின் அம்சங்கள் லக்ஷ்மியில்;
ஒடுங்குவாள் லக்ஷ்மி ராதா தேவியின் உடலில்!

ஒடுங்குவர் கோபியர் ராதா தேவியின் உடலில்!
ஒடுங்குவாள் ராதை கிருஷ்ணின் பிராணனில்!

ஒடுங்குவாள் சாவித்ரி சரஸ்வதி தேவியில்;
ஒடுங்கும் வேதங்கள் சரஸ்வதி தேவியில்.

ஒடுங்குவாள் சரஸ்வதி கிருஷ்ணின் நாவினில்;
ஒடுங்குவர் கோபர் கிருஷ்ணின் ரோம கூபத்தில்!

ஒடுங்கும் வாயு கிருஷ்ணின் பிராண வாயுவில்;
ஒடுங்குவான் அக்னி கிருஷ்ணனின் ஜடராக்னியில்!

ஒடுங்குவான் வருணன் கிருஷ்ணனின் நா நுனியில்;
ஒடுங்குவர் வைஷ்ணவர் கிருஷ்ணின் பாதங்களில்!

ஒருங்குவர் சின்ன விராட்கள் பெரிய விராட்டில்;
ஒடுங்குவார் பெரிய விராட் கிருஷ்ணன் உடலில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38e. PrAkruta PraLayam


Seventy-one Divine Yugas constitute one Indra’s life period. Twenty-eight Indra’s life periods constitute BrahmA’s one day and one night.

Thirty such days constitute BrahmA’s one month. Twelve such months make one year. One hundred such years constitute BrahmA’s lifespan.

When Brahma dies, BhagavAn Hari also closes his eyes. That is the PrAkritik PraLaya. Everything moving and non-moving, from Deva loka to earth perishes.

Brahma gets dissolved in the navel of Sri KrishNa. VishNu who sleeps on the Ocean of Milk, gets dissolved on the left side of Sri KrishNa.

All the forms of Saktis get dissolved in Moola Prakriti or the VishNu MAyA. The Moola Prakriti or DurgA Devi, the Presiding Deity of Buddhi, gets dissolved in the Buddhi of Sri KrishNa.

Skanda, being an amsam of NArAyaNan gets dissolves in His chest. Ganesa, born as an amsam of Krishna gets dissolved in his arm.

Those who are born as amsams of Lakshmi get dissolved in Her body and Lakshmi gets dissolved in the body of RAdhA.

All the Gopis and all the Devas get dissolved in RAdhA’s body. RAdhA being the Presiding Deity of PrANA gets dissolved in the PrANa of KrishNa.

SAvitri Devi and the four Vedas along with all the SAstras get dissolved in Saraswati. Saraswati gets dissolved in the tongue of Sri KrishNa.

The GopAs of Goloka get dissolved in the pores of His skin. VAyu gets dissolved in Sri KrishNa’s PrANa VAyu. Fire gets dissolved in the fire in KrishNa’s belly and water gets dissolved in the tip of His tongue.

VaishnavAs get dissolved in the lotus feet of the lord. All smaller VirAts get dissolved in the Great VirAt and the Great VirAt gets dissolved in the Body of Sri KrishNa.

 
SEkkizhArin Periya PurANam

#10c. திரு கண்ணப்ப நாயனார் (3)

கூறினான் நாணன் இது பற்றித் திண்ணனிடம்;
"அறிவேன் இதைச் செய்தவர் யார் என்று நான்;

கண்டேன் அன்றொரு நாள் பார்ப்பனர் ஒருவர்
தண்ணீரும் இலையையும் தேவன்மேல் இடுவதை!"

விரும்பினான் திண்ணனும் தேவரைப் பூசிக்க ;
விரும்பினான் திண்ணனும் தேவரை உபசரிக்க!

பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான் - பல
அரிய பொருட்களுடன் மீண்டும் வந்து உபசரித்திட.

அம்பில் கோர்த்துச் சுட்டான் தீயில் பன்றி இறைச்சியை;
அன்புடன் சேகரித்தான் சுவை மிகுந்தவற்றைத் தனியே.

நீராட்டிட நீரை முகர்ந்து கொண்டான் தன் வாய் நிறைய ;
சூட்டிட மலர்களை வைத்துக் கொண்டான் தன் தலைமீது.

தூக்கினான் ஒரு கையால் வில்; மறு கையால் இறைச்சி;
நீக்கினான் தேவன் இலைகளைத் தன் செருப்புக் காலால்;

உமிழ்ந்தான் தேவன் சிலை மீது வாயில் கொணர்ந்த நீரை!
கவிழ்த்தான் தேவன் சிலை மீது சூட்டி வந்த மலர்களையும் !

ஆவலுடன் அளித்தான் சுட்ட பன்றியின் இறைச்சியை!
காவலுக்கு நின்றான் கண் விழித்து இரவு முழுவதும்!

புலர்ந்தது பொழுது; பாடிப் பறந்தன புள்ளினம்;
புறப்பட்டான் திண்ணன் புது இறைச்சியைத் தேடி.

சென்றான் திண்ணன் கானகம் நோக்கி - வேதியர்
சென்றார் அப்போது சிவன் திருக்கோவிலை நோக்கி;

பதறினார் வேதியர் சிதறிய இறைச்சியைக் கண்டு;
குமுறினார் இப் பாதகத்தைச் செய்தவர் யாரென்று.

புனிதம் ஆனார் நீராடிய பின் வேதியர் - பின்னர்
புனிதப்படுத்தினார் திருக்கோவிலை முன்போல்.

தூப தீபத்துடன் வழிபட்டார் சிவ பெருமானை;
தாபத்துடன் சென்றார் ஆலயம் விடுத்து இல்லம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#10c. KaNNappa nAyanAr (3)

NANan explained to ThiNNan what he knew regarding the leaves and flowers seen on the head of Kudumi DEvan. NANan said," The other day I saw a brahmin priest throwing water, the green leaves and the flowers on Kudumi Devan to worship him."

Now ThiNNan also wanted to worship Kudumi Devan in a similar fashion. He parted from his God half-heartedly and went in search of the things he needed to offer to his God.

He collected the tastiest bits of the cooked meat in a cup made of a large leaf. For pouring water on God, he filled his mouth with the river water. To offer leaves and flowers, he put them on his own head.

He removed the leaves and flowers seen on God using his feet covered by his leather footwear - since he held his bow in one hand and the leaf with cooked meat in the other.

He let the water in his mouth fall on top of the God. He tilted his head so that all the flowers and leaves fell down from his head on to the head of the God. He offered the cooked meat and stood in vigil throughout the night.

The next day dawned. Birds woke up and went about their daily business in pursuit of food. ThiNNan also left the side of his God to get fresh offerings for the day.

Soon after ThiNNan went away, the brahmin priest came to worship Siva lingam. He was utterly shocked to find pieces of meat near God. He got very angry and upset not knowing who could do such a heinous action!

He cleaned the place, took bath again and performed the daily pooja. He went back with a heavy heart wondering who was behind these sinful actions
.
 

Latest ads

Back
Top