• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

3 Shiva Temples to change your fortunes

சிவ வழிபாடு பல்வேறு பகுதிகளில் பல மாறுபட்ட முறையில் உள்ளன.

அருவுருவம் வழிபாடு, லிங்க வழிபாடு, உருவ வழிபாடு என இவை மாறுபட்டிருந்தாலும் சைவ மதத்தினர் மத்தியில் நம் அண்டசராச்சரத்தை காத்து, ஒவ்வொரு செயலையும் தீர்மானிப்பவராக சிவன் வணங்கப்படுகிறார்.

இத்தகைய சிவபெருமானுக்கு இந்தியாவில் உள்ள மூன்று பிரசித்தமான கோவில்கள் எங்கே உள்ளது என தெரிந்துகொள்வோம்.

உத்தரகன்ட் மாவட்டத்திலேயே வெகு பிரசித்தமான கோவில் கோகர்ணாவில் உள்ள மஹாபலேஷ்வரர் கோவில் ஆகும்.

பிரணா லிங்கம் மற்றும் ஆத்மலிங்கம் என அழைக்கப்படும் என்ற சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது.

காசியில் உள்ள சிவன் கோவிலுக்கு நிகரான பெருமையை பெற்றுள்ள இந்த மஹாபலேஷ்வரர் கோவில் ஏழு முக்திக்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

கோவிலுக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் எதிரிலுள்ள அரபிக்கடலில் மூழ்கி எழுகின்றனர்.

வெண் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோவில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.

பக்தர்கள் இங்கு சதுரவடிவ சாளிகிராம பீடத்தினுள்ளே வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை பீடத்தின் மேலுள்ள துவாரத்தின் வழியாகக் காணலாம்.

இந்த சிவலிங்கத்தை தரிசித்தவர்களுக்கு விசேஷ அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும், 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சிவன் சிலையும் இந்த கோவிலில் உள்ளது.

இந்துக்கள் தங்கள் இறந்த உறவினர்களுக்கான கிரியைகளை நிறைவேற்ற இங்கு வருகை தருகின்றனர்.

சிவராத்திரியின் போது பக்தர்கள் இந்த தலத்தில் பெருமளவு எண்ணிக்கையில் கூடுகின்றனர்.

மேலும், இதனருகே உள்ள இடங்குஞ்சி, ஹாஃப் மூன் பீச், பத்ரகாளி கோவில், கோகர்ணா பீச் உள்ளிட்டவை பிரபலமான சுற்றுலாத் தலங்களாகவும் உள்ளன.



முருதேஸ்வர் ஆலயமும், அதன் ராஜகோபுரமும் கர்நாடகாவில் கண்டுக கிரி என்னும் குன்றில் அமைந்துள்ளது.

மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது இக்கோவில். இங்கு வரும் பயணிகள் 123 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலையுடன், சிவலிங்கத்தையும் காணலாம்.

இந்தக் கோவிலை சுற்றிலும் நிறைய கான்க்ரீட் கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் கோவிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இச்சிறப்புகளை காட்டிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.



உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது.

அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்

சிவபெருமான். முருதேஸ்வரின் புகழுக்கு காரணமாக விளங்கி வரும் முருதேஸ்வர் ஆலயமும், சிவன் சிலையும் மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ அமைந்திருக்கிறது.

இதன் காரணமாகவே ஆரம்பத்தில் நான்கு கைகளுடன் காணப்பட்ட சிவன் சிலையின் உடுக்கை பிடித்திருந்த கை கடல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

அதேபோல் கடும் மழையின் காரணமாக அதன் தங்க முலாமும் அழிந்து போயின.
சுற்றுலாத் தலங்கள்
பத்க்கல் நகரம் மற்றும் சஹயாத்ரி குன்றில் காணப்படும் உல்லாச விடுதிகள், திப்பு சுல்தானின் கோட்டை போன்றவை முருதேஸ்வருக்கு வெகு அருகில் காணப்படும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

பத்க்கல் நகருக்கு அருகில் ஜன சஞ்சாரமற்ற புறாத் தீவு என்றழைக்கப்படும் நேத்ராணி தீவு உள்ளது.

பத்க்கல்லிலிருந்து படகுகளோ, மீன்பிடி படகுகளோ அமர்த்திக்கொண்டு பயணிகள் புறாத் தீவுக்கு செல்லலாம்.

ஆடு, மாடுகளை தவிர வேறு ஜீவன்களையே காண முடியாத புறாத்தீவு பயணிகளின் அலுத்து போன நகர வாழ்க்கைக்கு அருமருந்தாக இருக்கும்.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவில் வருடந்தோறும் சிவபெருமானின் அருளை வேண்டி வரும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோவில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் தலமாகும்.

இக்கோவிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்து, இந்தியாவின் இத்தகைய உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாகக் கருதப்படும் பார்வதி தேவி, இங்கு இன்றும் காணப்படும் ஒரு மிகப் பழமையான மாமரத்தின் கீழ் அமர்ந்து, தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோவில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சிறந்த கைவினைக் கலைக்கு மிக உன்னதமான ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

1649330443446.png
 

Latest ads

Back
Top