• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ மஹாகணபதி மங்கள மாலிகா ஸ்தோத்திரம்

praveen

Life is a dream
Staff member
1
ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய
கௌரீவாமாங்க வாஸிநே
த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய
ஸ்ரீகணேசாய மங்களம்.

2.
ஆதி பூஜ்யாய தேவாய
தந்தமோதக தாரிணே!
வல்லபா ப்ராணகாந்தாய
ஸ்ரீகணேசாய மங்களம்.

3
லம்போதராய ராந்தாய
சந்திரகர்வாபஹாரிணே
கஜாநநாய ப்ரபவே
ஸ்ரீ கணேசாய மங்களம்!!

4.
பஞ்சஹஸ்தாய வந்திதாய
பாராங்குபர தராயச
ஸ்ரீமதே கஜகர்ணாய
ஸ்ரீகணேசாய மங்களம்!!

5.
த்வை மாதுராய பாலாய
ஹேரம்பாய மஹாத்மனே
விகடாயா குவாஹாய
ஸ்ரீகணேசாய மங்களம்

6.
ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய
க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே
ஸித்தி புத்தி ப்ரமோதாய
ஸ்ரீகணேசாய மங்களம்.

7.
விலம்பியக்ஞஸுத்ராய
ஸர்வ விக்னநிவாரிணே
தூர்வாதள ஸுபூஜ்யாய
ஸ்ரீகணேசாய மங்களம்

8.
மஹாகாயாய பீமாய
மஹாஸேநாக்ரஜன்மனே
த்ரிபுராரிவோத் தர்த்ரே
ஸ்ரீகணேசாய மங்களம்

9.
ஸிந்தூர ரம்ய வர்ணாய
நாகபத்தோ தராயச
ஆமோதாய ப்ரமோதாய
ஸ்ரீகணேசாய மங்களம்

10
விக்னகர்த்ரே துர்முகாய
விக்னஹர்த்ரே பரிவாத்மனே ஸுமுகாயைகதந்தாய
ஸ்ரீகணேசாய மங்களம்

11
ஸமஸ்த கணநாதாய
விஷ்ணவே தூமகேதவே
த்ரியக்ஷாய பாலசந்த்ராய
ஸ்ரீ கணேசாய மங்களம்

12
சதூர்திபராய மான்யாய
ஸர்வவித்யாப்ரதாயினே
வக்ரதுண்டாய குப்ஜாய
ஸ்ரீகணேசாய மங்களம்

13
துண்டினே கபிலாக்யாய
ஸ்ரேஷ்டாய ருணஹரிணே
உத்தண்டோத்தண்டரூபாய
ஸ்ரீகணேசாய மங்களம்

14
கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய
பக்தேஷ்ட ஜயதாயினே
விநாயகாய விபவே
ஸ்ரீகணேசாய மங்களம்

15
ஸச்சிதா நந்த ரூபாய
நிர்குணாய குணாத்மனே
வடவே லோக குரவே
ஸ்ரீகணேசாய மங்களம்

16.
ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய
ப்ரஸன்னவதனாயச
ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய
ஸ்ரீகணேசாய மங்களம்

17.
ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர
ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்
விபூதி மாத்ருகாரம்யாம்
கல்யாணை ஸ்வர்ய தாயி நீம்

18.
ஸ்ரீமஹா கணநாதஸ்ய
ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்ய :
படேக் ஸததம் வாணீம்
லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்

பொருள் விளக்கம்:

1. ஸ்ரீநீலகண்டரின் பிரிய புத்திரனும், ஸ்ரீஅம்பாளின் இடது மடியில் வசிப்பவரும், முப்பத்திரண்டு ரூபங்கள் உள்ளவருமான ஸ்ரீமகாகணபதிக்கு மங்களம்

2. முதலில் பூஜிக்கத் தகுந்தவரும், தேவரும், தந்தம், கொழுக்கட்டை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டிருப்பவரும், ஸ்ரீவல்லபா தேவியின் நாதனுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

3. தொங்குகின்ற வயிற்றை உடையவரும், சாந்தமூர்த்தியும், சந்திரனின் கர்வத்தைப் போக்கியவரும், யானை முகத்தை உடையவரும், பிரபுவுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

4. ஐந்து கைகளை உடையவரும், எல்லோராலும் நமஸ்கரிக்கத் தக்கவரும், பாசம்- அங்குசம் ஆகியவற்றைத் தரித்தவரும் ஸ்ரீமானும் யானையின் காதுகளை உடையவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

5. துர்கை, சாமுண்டா தேவி இரண்டுபேரும் வளர்த்ததால், இரண்டு தாய்களை உடையவரும், சிறுவனும், ஹேரம்பனும் (ஹே- மஹேஸ்வரனின் அருகில், ரம்பதே - இருக்கிறார்) மஹாத்மாவும், விரிந்த கன்னத்தை உடையவரும், மூஞ்சூரை வாகனமாக கொண்டவருமான கணபதிக்கு மங்களம்.

6. ஒளியுள்ள தந்தத்தை கொண்டவரும், ஒருவராலும் ஜெயிக்க படாதவரும், பிரார்த்தித்து வேண்டிக்கொண்ட பொருளை சீக்கிரம் அளிப்பவரும், ஸித்தி- புத்தி என்ற இரண்டு மனைவிகளுக்கு சந்தோஷத்தை அளிப்பவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

7. பூநூலை அணிந்தவரும், இடையூறுகளை நீக்குகிறவரும், அருகம்புல்லால் பூஜிக்கத் தக்கவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

8. பெரிய சரீரத்தை உடையவரும், பயங்கரமானவரும் சுப்ர மணியருக்கு முன்னதாகப் பிறந்தவரும், ஸ்ரீபரமசிவனிடம் வரம் பெற்றவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

9. குங்குமப்பூவைப் போல் அழகிய நிறத்தை கொண்டவரும், நாகத்தை வயிற்றில் கட்டிக்கொண்டவரும், சந்தோஷ ரூபியும், ஆனந்தரூபியுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

10. மாறுபாடான முகம் கொண்டவரும், விக்னங்களை போக்கு கின்றவரும், சிவபுத்ரனும் மங்களமான முகத்தை உடையவரும், ஒரு தந்தத்தை உடையவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

11. எல்லா கணங்களுக்கும் தலைவரும், எங்கும் வியாபித்தவரும், பாபிகளுக்கு இடையூறின் உருவமாக இருப்பவரும். முக்கண்ணனும் நெற்றியில் சந்திரனை தரித்தவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

12. சதுர்த்தி திதிக்கு நாயகனும், பூஜிக்கத் தக்கவரும். எல்லா வித்தைகளையும் கொடுப்பவரும், வளைந்த துதிக்கையை உடைய வரும், குள்ளமாக இருப்பவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

13. நர்த்தனம் செய்கின்றவரும், கபில கணபதி என்ற பெயரை உடையவரும், கடனைப் போக்குகிறவரும், மிகப் பயங்கரமான ரூபமுடையவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

14. கஷ்டங்களைப் போக்குகின்றவரும், யானை, மனிதன் ஆகிய இரண்டு உருங்களாக இருப்பவரும், பக்தர்கள் கோரிய ஜயத்தை அளிப்பவரும், விநாயகரும், ப்ரபுவுமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

15. ஸத், சித், ஆனந்தம் இந்த உருவாக இருப்பவரும் முக்குணம் அற்றவரும், கல்யாண குணங்கள் நிரம்பியவரும், பிரும்மசாரி ரூபியும் உலகங்களுக்கு ஆசார்யருமான கணபதிக்கு மங்களம்.

16. ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

17-18. ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான... ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத் திரத்தை யார் எப்போதும் படிக்கிறாரோ, அவர் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்….

வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த ஸ்தோத்திரத்தை முழுவதுமாக கூறி விநாயகரின் அருளை பெறுவோமே ...
 

Latest ads

Back
Top