இரு துருவங்கள்...
எல்லா குணங்களுக்கும் நேர் எதிர் இருப்பது, வாழ்வில் நாம் காண்பது! இதில் ஒரு வகை பற்றிய கண்ணோட்டமே
இது. எல்லோரும் அழகாகப் பிறப்பதில்லை; அப்படிப் பிறந்தால் அழகன் / அழகி என்று யாரைப் புகழ முடியும்? அக
அழகுதான் மேன்மை என்று எல்லோருமே அறிந்தாலும், 'கண்ணுக்கு லட்சணமாக' இருப்பதையே மனிதர்
விரும்புவர்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே நிறத்தில் அணிந்து அசத்தும் அலங்காரப் பிரியர்கள் இருந்த காலனியில்,
இன்னொரு எதிர் துருவமாக ஒரு பெண்மணி. இருந்தார். மெத்தப் படித்த அவருக்கு, தம் உடை பற்றிய சிந்தனையே
கிடையாது! நீலப் புடவைக்குப் பச்சை நிறச் சோளி என்பதுபோலவே தேர்வு செய்வார். அவரைக் கண்டால் நான்
ஆச்சரியப்படுவேன்! 'இப்படிக்கூட ஒரு பெண் இருக்க முடியுமா?', என்று.
யாரோ ஒரு மாமி சொன்னார், ஐம்பது வயதுக்கு மேல் கண் மை இடக்கூடாதாம்! யார் வைத்த சட்டமோ? யாம்
அறியோம் பராபரமே! இசை உலகில் கொடிகட்டிப் பறந்த, பாரத் ரத்னா. திருமதி M. S. சுப்புலட்சுமி அவர்கள், முதிய
வயதிலும், படிய வாரி, பூ வைத்து, வரிசைப் பொட்டுக்கள் இட்டு, கண்மை இட்டு, மின்னும் வைரங்கள் காதிலும்
மூக்கிலும் ஜொலிக்க, இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியதை ரசிக்காதவர் யார்? அதீதமான ஒப்பனைகள்தான் 'காமெடி'
போல மாறுமே தவிர, சாதாரண ஒப்பனைகள் அழகைக் கூட்டவே செய்யும்.
பெரிய திரை சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் மேக்கப் அணிவது அவசியம். இப்போது யதார்த்தம் என்ற பெயரில்
மேக்கப் இல்லாத முகங்களை வைத்து அச்சுறுத்தும் பல திரைப் படங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன!
எண்ணெய்க் கத்திரிக்காய் போல, எண்ணெய் வழியும் முகத்தை யார்தான் பார்த்து ரசிக்க முடியும்?
கல்யாண வீட்டிற்கு, கசங்கிய சேலையில் செல்வதும், துக்க வீட்டிற்கு பட்டுடையில் செல்வதும் உலகம் ஒத்துக்
கொள்ளாத விஷயங்கள். இடம், பொருள், ஏவல் என்பதையும் அறிந்து உடுத்துதல் அவசியம்.
அதிகமான ஒப்பனை செய்து, அசாதாரணமாக இருப்பதைத் தவிர்ப்போம். ஒப்பனையை வெறுத்து ஒதுக்காதும்
இருப்போம். இரு துருவங்களுக்கும் இடையே, சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் எளிய ஒப்பனைகள் செய்வோம்!
:first: