பயணக் க(வி)தைகள்...

அந்தப் புறச் சுவரில், தாய் மகிஷாஸுரமர்த்தினி!

IMG_3593.JPG
 
இன்னும் சிறிது தூரத்திலே, கலங்கரை விளக்கம்!
மின்னும் விளக்கோடு கம்பீரமாய் உயர்ந்திருக்கும்!

IMG_3615.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 9


சிறியோர் துள்ளி குதித்து, படிகளில் ஏறிச் செல்ல,
பெரியோர் விலகி இருந்து கம்பீரத்தை ரசித்தனர்!

கீழிறங்கு முகமாகச் சாய்வான அழகிய கற்பாதை!
கீழிறங்கிச் சென்றால், அதிசயம் கண்டு மகிழலாம்!

பிரம்மாண்டமான அளவில் பாறை ஒன்று, நம்மை
பிரமிக்க வைக்கிறது, சிறு பகுதியின் மேல் நின்று!

பந்து போல் இருப்பதை, 'கண்ணனின் வெண்ணைப்
பந்து' என்று குறிப்பிடுவது சரியே! அதன் அடியிலே

மக்கள் அமர்வதைப் பார்த்த உடனே, அட்ரீனலின்
நமக்குள் சுரந்து அச்சம் எழுப்புகிறது! ஒருவேளை

சிறு நில நடுக்கம் ஏற்பட்டு, அந்த உருண்டைக் கல்
விறு விறு என்று இறங்கி உருண்டால்!! நினைவே

பய அலைகள் எழுப்புகிறது! ஆனால், அனைவரும்
பயம் இன்றி அதன் அடியில் அமர்ந்தும், அதனைத்

தூக்குவது போலவும், தள்ளுவது போலவும் நின்று,
சீக்கிரம் தமது காமராவிலே சிறைப் பிடிக்கின்றார்!

எங்கள் பலத்தை நாங்களும் காட்ட வேண்டாமோ?
நாங்கள் பாறையைத் தள்ளுவதுபோலப் 'போஸில்'

படம் எடுத்து ஆனந்தித்தோம்! சுற்றி வந்தால்தான்
அதன் முழு வடிவம் தெரிகின்றது. ஒரு கோணத்தில்,

பெரிய பாத்திரம் போலவே காட்சி தருகின்றது; இந்த
அரிய கல்லின் அழகைக் கண்டு களித்த பின், எங்கள்

கடைசி நிறுத்தமான முட்டுக்காடு படகுத் துறையை
அடைந்தோம்; அங்கு பயணிகள் நாங்கள் மட்டுமே!

தொடரும் .............................
 
பிரம்மாண்டமான அளவில் பாறை ஒன்று, நம்மை
பிரமிக்க வைக்கிறது, சிறு பகுதியின் மேல் நின்று!

IMG_3631.JPG
 
நாங்கள் பாறையைத் தள்ளுவதுபோலப் 'போஸில்' படம் எடுத்து ஆனந்தித்தோம்!

IMG_3634.JPG
 
............................................... சுற்றி வந்தால்தான்

அதன் முழு வடிவம் தெரிகின்றது. ஒரு கோணத்தில்,


பெரிய பாத்திரம் போலவே காட்சி தருகின்றது;

IMG_3636.JPG
 
தெம்புடன், அன்புடன், பேன் பார்க்கும் ஒரு குரங்கு!

IMG_3625.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 10

எங்கள் பயணத்தில் அதிசயிக்க வைத்ததை

உங்களுடன் பகிர மறந்துவிட்டேன்! இதோ!

கலங்கரை விளக்கத்தின் அருகே ஒரு மரம்;
கலை நயம் ததும்ப விளங்கியது! மரத்தின்

தண்டுப் பகுதியில் புதிரான வடிவங்களைக்
கண்டு அதிசயித்தும், அவை புரியவில்லை!

நன்கு செதுக்கி வைத்ததுபோல வடிவங்கள்;
அன்னை இயற்கையால் அரிய மாற்றங்கள்!

அருகில் ஒரு சிறு வண்டு, பின் கால்களால்
உருட்டிச் செல்கின்றது, உருண்டை ஒன்று!

விடியோ எடுக்க மனம் விழைய, அதையும்
விடியோ எடுத்து காமராவில் சேகரித்தேன்!

தன்னைவிட மிகப் பெரிய அளவிலே அதை
உன்னிப்பாக உருட்டிச் சென்றது சிறு வண்டு!

பிஞ்சு வெள்ளரிக் காய்களும், மாங்காய்களும்
அங்கு அழகு வடிவங்களில் வைத்து, குளிர்ந்த

மோரும் பானையில் இட்டு விற்கிறார், அங்கு
மேலும் கீழும் நடப்போரின் தாகம் தீர்த்திடவே!

பாசி மணிகள் பல வண்ணங்களிலும், பவழமும்
நேசிப்போர் ஆனந்திப்பார், இவ்விடம் வந்ததும்!

வகை வகையான தொப்பிகள், இளைப்பாறிட
வகை வகையான தொட்டில்கள், நாற்காலிகள்,

வரிசையில் பரப்பி வைக்கப்பட்டு, வந்தோரை
வரிசையில் வந்து வாங்கவே தூண்டுகின்றன!

:flock:


 

நன்கு செதுக்கி வைத்ததுபோல வடிவங்கள்;

அன்னை இயற்கையால் அரிய மாற்றங்கள்!

IMG_3616.JPG
 

அருகில் ஒரு சிறு வண்டு, பின் கால்களால்

உருட்டிச் செல்கின்றது, உருண்டை ஒன்று!

IMG_3607.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 11

முட்டுக்காடு படகுத் துறையில், விடுமுறையில்

முட்டி மோதும் கூட்டமிருக்கும்! ஆனால், அன்று

வேலை நாள் என்பதால் வெறிச்சோடிக் கிடந்தது;
வேலை இன்றிப் படகோட்டிகள் உலவி வந்தனர்!

அறுவர் செல்லும் மோட்டார் படகு வாடகையைத்
தருமாறு நுழைவுச் சீட்டு தருபவர் கேட்க, அதுவும்

நலமே என்றெண்ணி, மூவரும் புறப்பட்டோம்! நம்
நலம் வேண்டி வைத்திருந்த உயிர்க் காப்பு சட்டை.

சுத்தமே செய்யப்படாது, பல மாதங்கள் அழுக்கேறி,
புத்தம் புதிதில் கொண்ட வெண்மை நிறம் இழந்து,

அதைத் தொடவே தயங்க வைத்தாலும், நாங்கள்
அதையும் அணிந்தோம், எங்கள் பாதுகாப்புக் கருதி!

சென்ற முறை காணாத பல காட்சிகள், கண் முன்
அன்று விரிந்தன; குளிர்ப் பிரதேசங்களில் வாழும்

பல வகைப் பறவைகள், பனிக் காலத்திலே இங்கே
பல ஆண்டுகளாக வருவது வழக்கமாம்; இப்போது

இந்தச் சூழலில் சுகம் கண்ட பறவைகள், தாம் இங்கு
வந்த வேலை முடிந்தும், திரும்பவே இல்லையாம்!

அழகிய பெலிகன்கள், வண்ண வண்ண நாரைகள்,
அழகாய் நீரில் தத்திச் செல்லும் குட்டிப் பறவைகள்

மனதைக் கொள்ளை கொள்ள, எங்கள் காமராவில்
மனம் நிறைத்த காட்சிகளைச் சிறைப் பிடித்தோம்!

இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால், படகோட்டி,
இன்னும் கொஞ்ச தூரம் ஓட்டுவதாகச் சொன்னான்!


:fish2: . . தொடரும் ......................

 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 12

ஆசை யாரை விட்டது? அந்தப் படகோட்டியின்

ஆசை, இன்னும் கொஞ்சம் பணம்; எங்களுக்கு

இன்னும் பறவைகள் கண்டு, ரசித்து, மகிழ்ந்து,
இன்னும் படங்கள் எடுத்துக் குவித்திட ஆசை!

சூப்பர் காமரா வைத்திருந்த தங்கை மகன், ஒரு
சூப்பர் புகைப்படக் கலைஞன், கேரளாவில்! தன்

வலைத்தளத்தில் வனவிலங்குப் படங்கள் ஏற்றி,
நிலையான புகழ் பெற்ற, முதல் தரக் கலைஞன்!

வானில் பறக்கும் பெலிகனைப் படம் எடுத்தால்,
வானில் பறக்கும் விமானம் போலவே உள்ளது!

என் குட்டிக் கமராவில் நானும் விடாது சுட்டு,
என் ஆசை தீரப் படங்களை நிரப்பிவிட்டேன்!

தூரம் செல்லச் செல்ல, குடும்பங்களாக, வெகு
தூர தேசத்திலிருந்து வந்த பறவைகள் கூட்டம்!

மீன் பிடித்தும், நீரில் அளைந்தும், குஞ்சுகளைத்
தன் பார்வையிலே வைத்தும், இறகு கோதியும்,

சிறகு விரித்து உயரப் பறந்தும், நீர் அருகில் வந்த
பிறகு, வட்டமடித்தும், மனம் மயங்கச் செய்தன!

வண்ண நாரைகள், கொண்டை வைத்த நாரைகள்,
சின்ன அளவுப் பறவைகள் என, அரிய பட்டாளம்!

தாழ்வான பாலத்தின் அடியிலே
எம் படகு செல்ல,
தானே எழுந்தன பய அலைகள்! படகு கரையைத்

தொட்டதும், மன நிறைவோடு சீருந்தில் அமர்ந்து,
எட்டினோம் எம் இனிய இல்லம், பயணம் முடித்து!

உலகம் உய்ய வேண்டும் :pray:
ராஜி ராம்
 
Back
Top