• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


பெய்யெனப் பெய்யும் பனி!

பொய்யா மொழிப் புலவரின் வரியான
'பெய்யெனப் பெய்யும் மழை' என்பதற்கு,

'பெய்ய வேண்டும் என்று வேண்டியதும்
பெய்யும் மழை போன்று இன்பம் தரும்',

என்றும் சிலர் பொருள் உரைப்பார்! நான்
இன்று அது போல அனுபவம் பெற்றேன்!

'பிக்காஸா ஆல்பம்' தயாரித்து, அதிலே
பிம்பம் ஒன்றிற்கு 'பனிப் பொழிவு' எனத்

தலைப்பு இட்டவுடன், என்ன ஆச்சரியம்!
புகைப்படத்தில் வந்தது பனிப் பொழிவு!

முயற்சி நான் செய்யாது, தானாக வந்து,
மகிழ்ச்சி அளித்தது இந்த 'கிராஃபிக்ஸ்'!!


:dance: . . . :thumb:
 
Here is the snow fall added in a photo! :smow:

DSC00075-SNOW.gif
 
Oh what a beauty absolutely spell bound there is nothing in this world to beat nature

Dear Sir,

The snow fall is 'created' by some graphics without my request!

I was awestruck and elated to see this graphics added automatically,

when I wrote the comment 'Snow fall' for this photo, taken by my sister. :)
 
kavigyare chennayil mazaikkka oru kavithai koorungalen

mazai peyyattum

choodu kurayattum

payirkal sezhippaka valarattum

thanni kashtam theerattum

minvettu kurayattum

ungal kovamum thaniyattum

sorry
 
Last edited:

I guess my interest in writing poems will not cease, Krish Sir. :typing:
Whenever I get new thoughts / experiences, I shall surely share in the Literature section! :peace:
 

சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 1


இறை அருள் இன்றேல் நமது பயணங்கள்
நிறைவேறாக் கனவாகிப் போவது நிஜமே!

சென்ற வருடம் செய்ய விழைந்த பயணம்,
செல்லாப் பயணமாக மாறித்தான் போனது.

காஜிரங்கா காண்டாமிருகங்களின் தரிசனம்
காண முடியாமல் போய்விட்டது. அதனால்,

காஜிரங்காவை மறந்துவிட்டு, இந்த முறை
காமாக்யா தேவியை தரிசிக்க விழைந்தோம்!

காலிம்பாங்க், ஷில்லாங், கொல்கத்தாவும்
ஜாலியாக அத்துடன் இணைந்திட, அதுவே

பதினொரு நாட்கள் பயணமாய் உருவாகிட,
அதிவேகமாக விமான டிக்கட்டுகள் வாங்கி,

வானிலை ஆராய வலைத் தேடல் செய்திட,
வானிலை ஷில்லாங்கில் மட்டும் குளிர்ந்திட,

புதிய பயண உடைகள் தைக்க, பருத்தியில்
புதிய துணிகளை வாங்கித் தொடங்கினேன்

தையல் நாயகிப் பணி! புகைப்படங்களிலே
மையல் கொண்டவளாதலால், காமராவை

எடுத்து, SOS மாத்திரைகளும் வாங்கி வர,
அடுத்து வந்தது ஒரு மிகப் பெரிய லிஸ்ட்!

சாம்பார் வெங்காயம், அக்மார்க் எண்ணெய்,
சம்பா ரவை, மூன்று பருப்புகள், காபிப்பொடி,

இட்லி அரிசி என எங்கள் cousin சலிக்காமல்
எட்டுக் கிலோ பொருட்கள் கேட்டிருந்தார்!!

தொடரும்..............
 
hi
i used to stay in gauhati for 3 yrs...i visited kamaakya/shillong/darjeeling/kalingpong ....nice places visit ....six sisisters of north east...

best of luck....
 
Dear TBS Sir,

Yes! Nice places to visit. Long and winding hilly roads; dexterous taxi drivers; nice scenery all along the valleys.

We had some hurdles on the first two days of the 11 day trip but later on it was a fantastic experience. :)
 

சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 2

கடல் கடந்த பயணத்திற்கே தொப்பாஜியாக
உடல் பெருத்த பெட்டிகள் இல்லை! ஆனால்,

ஆசையாய் வீட்டிற்கு அழைப்பவரின் சின்ன

ஆசையை நிறைவேற்றாது இருக்கலாமோ?

இருவரின் பெட்டிகளிலும் நான்கு கிலோ என
இருவரும் பகிர்ந்தோம் அந்தச் சுமையினை!

எண்ணெய் Jip lock பைகளில் புகுந்து அவை
என்னவரின் பெட்டியுள் ஏறின leak proof ஆக!

மறு நாள் பயணம் என்றிருந்த வேளையிலே
ஒரு வினோதம்! எடுத்துப் போக, cousin-னின்

மகன் தந்தான் நான்கு ரஸ்க் பாக்கெட்டுகள்,
தன் அப்பாவுக்குப் பிடிக்குமென்று சொல்லி!

இதையும் மறுக்க முடியாதல்லவா? எனவே
இன்னொரு கைப்பை கூடியது அதை வைக்க!

இரு பெட்டிகள் செக்-இன் செய்ய ; அத்துடன்
இரு கைப் பைகள் இருவரும் எடுத்துப் போக.

இனிய இல்லத்தைப் பூட்டி, வாடகைக் காரில்
இனிய பயணத்தை அழகாய்த் துவக்கினோம்.

அதிகாலை வேளை; இருபது நிமிடங்களிலே
அடைந்தோம உள் நாட்டு விமான நிலையம்!

பிரச்சனை ஏதும் இல்லாமல் செக் இன் செய்து,
பிரச்சனைகள் சில உருவாகும் என அறியாது

சின்னக் குழந்தையின் ஆர்வத்துடன், சிங்காரச்
சென்னையை விட்டுப் பறக்க ஆரம்பித்தோம்!

:plane:

தொடரும் ...............

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 3

ஐம்பது ஆண்டுகள் கழித்துச் சந்திக்கும் ஒரு
எழுபது வயது கொல்கத்தா நண்பர், எம்மை

எளிதில் அடையாளம் கண்டு கொண்டு, தம்
இனிய இல்லத்திலே மதிய உணவளித்தார்.

க்ஷேம நலன் விசாரித்து, ஆனந்தித்த பின்பு
சேர்ந்தோம் மீண்டும் விமான நிலையம்.

பாக்டோக்ரா சென்ற பின், காலிம்பாங்கிற்கு
வாகனம் ஏற்பாடும் ஆகியிருந்தது எமக்கு!

எந்திரக் கோளாறு என அறிவித்த Air India,
எடுத்தது விமானத்தை மிகத் தாமதமாக!

இருட்டுவதற்குள் தரை இறங்குவோமென
இருவரும் நினைக்க, இடி மழை வந்துவிட,

விமானம் திரும்பியது கொல்கத்தாவுக்கே!
விமானத்தின் பயணிகள் உரத்த குரலிலே

அதிகாரிகளிடம் சண்டை போட, அவரும்
அடுத்த நாள் விமானத்தில் அனுப்புவதாக

பயணச் சீட்டுகளில் எழுதி, பயணிகள் பலர்
சயனம் செய்ய விடுதியும் தந்துவிட்டார்!

என்னவரின் basketball விளையாட்டை, தம்
சின்ன வயதில் ஊக்குவித்த நண்பர் இருக்க,

விடுதி எமக்கு வேண்டாமென மறுத்தோம்;
சடுதியில் நண்பரின் இல்லம் அடைந்தோம்!

மிகப் பெரிய பங்களா; எங்கு நோக்கினாலும்
மிக அரிய பீங்கான் பொருட்கள் இருந்தன!

தொடரும் ...............

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 4

அனைத்து மரச் சாதனங்களும் பழைமையே;
ஆனால் குளிர் சாதன வசதியுடன் அறைகள்!

இரவு உணவு மற்றும் நல்ல ஓய்வுக்குப் பின்
மறு நாள் காலை நகர் வலம் வந்தோம். புதிய

மற்றும் பழைய ஹௌராப் பாலங்கள் கண்டு,
சற்றே Saint Paul Cathedral இன் உள்ளே சென்று

மிகப் பெரிய பிராத்தனைக் கூடத்தை ரசித்து,
மிக விரைவில் வெளிப்புறத்தின் படமெடுத்து,

மிக ஏழ்மை தவழும் சில பகுதிகளைக் கடந்து,
மிகப் பழைமையான Tram, Bus ஆகியன கண்டு,

உரிய நேரத்தில் விமானம் ஏறினோம்; அன்று
சரியாக பாக்டோக்ராவை அடைந்தாலும், ஒரு

பெட்டி வரவே இல்லை! அதுதான் என்னவரின்
பெட்டி; leak proof நல்லெண்ணெய் அடங்கியது!

அந்த நல்லெண்ணெய் கொல்கத்தா நகரினை
சொந்தம் போல நேசிக்கிறதோ? அறியேனே!

அசடு வழிந்த அதிகாரி, மறு நாள் பெட்டியைத்
அனுப்புகிறேன் எனச் சொல்லி, என்னவருக்கு

உடை வாங்கக் கொஞ்சம் பணமும் தர, புதிய
உடை கிடைத்தது நம் ஏர் இந்தியா தயவால்!

எல்லாமே கந்தரகோளம் ஆகிறதென வருந்தி,
எல்லாம் வல்ல சக்தி வினாயகனை வேண்டி,

காத்திருந்த டாக்சியில் காலிம்பாங்க் செல்ல,
காத்திருந்தது இரவு உணவு Guest house இல்!

தொடரும் ..................

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 5

கொல்கத்தா நண்பரின் சொத்து அந்த இல்லம்.
கொடுத்தார் நாங்கள் வசதியாய்த் தங்கிவிட!

நேபாளிப் பெண் சிறிய மகனுடன்; விருந்தினர்
தேவைகளை கவனிக்கிறாள், புன்னகையுடன்!

'எப்பொழுது எழுவாய்?' என்று நான் வினவிட,
'எப்போதும் நாலரை மணிக்கு!' என்றுரைக்க,

'இருட்டில் என் செய்வாள்?' என நான் வியக்க,
மறு நாள் புரிந்தது; விடியல் நேரமே நாலரை!

சிங்காரச் சென்னையின் ஆறு மணி போன்று
பாங்காக வெளிச்சமானது நாலரை மணிக்கு!

ஏழு மணிக்குள் தயாராகி, சிற்றுண்டி உண்டு,
ஏறினோம் வாடகைக் காரில் நகர் வலம் வர.

'லாவா' ஒரு இடத்தின் பெயர் ; ஆங்கிலத்தில்
'லாவா' என்றால் எரிமலைக் குழம்பு ஆகும்!

ஆனால் இந்த 'லாவா' மிகவும் உயர் மட்டம்;
போனால் குளிர்ப் பகுதியாக உள்ளது. இங்கு

புத்த மடாலயம் ஒன்று அமைத்திருக்கிறார்;
சுத்தமான பராமரிப்பு; அமைதியோ அமைதி!

மலைப் பகுதியாதலால், படிக்கட்டுக்கள் பல;
அலை போன்று அசைகின்றன கொடிகள் பல!

புன்னகை தவழ் முகத்துடன் புத்த பிக்ஷுக்கள்
தன் அமைதி வாழ்வை அங்கே வாழ்கின்றார்!

பிரம்மாண்டமான வடிவில் அமைந்த இரண்டு
பிரதான தியான மண்டபங்கள் உள்ளன அங்கு!

தொடரும் ............

 
பிரம்மாண்டமான வடிவில் அமைந்த இரண்டு
பிரதான தியான மண்டபங்கள் உள்ளன அங்கு!

IMG_0656.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 6

அழகான தோட்டம் உள்ளது மலை உச்சியில்;

அழகாக செய்கின்றது இள வட்டம் Hang Gliding!

வண்ண வண்ணமாக அவர்கள் பறப்பது கண்டு
எண்ணம் எழுகிறது நாமும் செய்யலாமே என!

அசுர அளவில் ஒரு பந்து; அதற்குள்ளே இருவர்;
அதனை உருட்டக் கூக்குரலுடன் சில வாலிபர்.

மலர்களும் பல வண்ண ஜாலங்கள் காட்ட, நாம்
மன அமைதியுடன் அமரச் சில நிழற்குடைகள்.

அரசாங்க விருந்தினர் மாளிகை அங்கு; அதில்
அருமையாகக் 'கோன் ஐஸ்க்ரீம்' கிடைத்தது!

அருகில் இருந்த மார்கெட்டில் சில பரிசுகளை,
பொறுமையாகத் தேடி வாங்கினேன் அன்று!

மெத்து மெத்தெனக் கால்களைக் கவ்வும், நல்ல
மென்மையான சப்பல்கள் இவ்விட விசேஷம்!

உணவகங்களில் வெஜிடேரியன் மிக அபூர்வம்;
மணக்கும் கடுகெண்ணெய் நாசியை வருத்தும்!

மோமோ என்ற பண்டம் மிகப் பிரபலமானதாம்!
மைதா மாவினை கெட்டியாகப் பிசைந்து, நமது

கொழுக்கட்டை போலச் செய்து, உள்ளே வைக்க
காய்கறியும், நான்வெஜ்கறியும் உபயோகிப்பார்!

கொழ கொழத்த அதன் வடிவம் வாட்டியது எனை!
கொழுக்கட்டை போல எனினும் மறுத்தேன் அதை!

ஒரு வெஜிடபிள் ரைஸ் மட்டுமே ஆர்டர் செய்து,
இருவரும் பகிர்ந்துண்டு, பசியாற விழைந்தோம்!


தொடரும் .........
 
அசுர அளவில் ஒரு பந்து; அதற்குள்ளே இருவர்;
அதனை உருட்டக் கூக்குரலுடன் சில வாலிபர்.

IMG_0740.JPG
 
மோமோ என்ற பண்டம் மிகப் பிரபலமானதாம்!

n506540_30264901_6216.jpg


Photo courtesy: Google images
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 7

வெஜ் ரைஸுடனே வந்தன சில கிண்ணங்கள்;

வெறும் தாளித்த வென்னீர் ஒன்றில்; மற்றதில்

புளி நீர்; பச்சை மிளகாய் நீர்; அருகே உப்பு ஜாடி;
இனி அவரவர் இஷ்டப்படி கலக்கி ருசிக்கலாம்!

ரெடிமேட் திரவத்தினை நாமே தயாரிக்கலாம்!
அதிரடி ஐடியாவான இதனை நான் ரசித்தேன்!

எதிரில் அமர்ந்த காதல் ஜோடியில், அம் மங்கை
எளிதில் வெறுப்பேற்றினாள் நூடுல்ஸை உண்டு!

வாய் நிறைய நூடுல்ஸ் தொங்கி, தட்டுவரை வர,
வாய் மூடி, பல்லால் கடித்தாள், மீதி தட்டில் விழ!

இப்படி உண்ணும் முறையை நான் கண்டதில்லை!
எப்படியோ உணவை முடித்து வெளியே வ்ந்தோம்!

நொடியில் அறியலாம் புத்த மதத்தினர் வீட்டினை;
கொடிகள் பல நிறங்களில் அலங்கரிக்கும் அதை!

ஓரிடத்தில் தங்க நிறத்தில் புத்தரும், சீரியஸாக
வேறிடத்தில் புத்தரையும் படமெடுத்தேன் நான்!

ஒரு தேவியின் ஆலயமும் அருகிலேயே அழகிய
மாருதியின் ஆலயமும் சென்று தரிசித்தோம்.

அழகான பூந்தோட்டம் தேவியின் ஆலயத்தில்;
அழகான படிக்கட்டுகள் மாருதியின் ஆலயத்தில்.

விஞ்ஞானத்தில் ஈடுபாடு இருப்பவர் யாரேனும்
விஞ்ஞான அருங்காட்சியகத்தை விடுவார்களா?

மலை உச்சியில் உள்ள் Delo என்ற இடத்தில்தான்
அமைத்துள்ளார் இந்த அருங்காட்சியகத்தினை!

தொடரும் ....................
 

Latest ads

Back
Top