நவராத்திரி ஸ்பெஷல்....[ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
நவராத்திரி ஸ்பெஷல்....[ tvk ]

"நவராத்திரி"

நவராத்திரியில இந்த ஆண்கள் படற பாடு கொஞ்சநஞ்சமில்ல..... அதைப் பத்தி யாராவது யோசிக்கறீங்களா......
ஆபிஸ்ல இருந்து பர்மிஷன் போட்டுகிட்டு சீக்கிரமா வரணும்.... பர்மிஷன் கேட்டா மேனேஜர் நக்கலா ஒரு பார்வை பார்ப்பாரு.... அவருக்குத் தெரியுமா.....பர்மிஷன் அவர்கிட்டதான் கேக்க முடியும்.....வீட்டுல கேக்க முடியாதுனு......


வீட்டுக்கு வந்த உடனே வீட்டுக் காரம்மா "ஏங்க காலையிலயே உங்களை சுண்டலுக்கு கொண்டைக் கடலையை ஊறப் போடுங்கனு சொன்னா நீங்க பாட்டுக்கு பொறுப்பே இல்லாம ஆபிஸுக்கு போயிட்டீங்க...." அப்படினு சொல்றதையும் வழிஞ்சுகிட்டே கேட்டுகிட்டு......


சரி நாலு வீட்டுக்கு கூட்டிகிட்டு போகச் சொல்லுவாளேனு ஒரு நல்ல டிரஸ் எடுத்துப் போடலாமுன்னு பார்த்தா.......ஒரு அசரீரி வரும்....


"இப்ப எதுக்கு உங்களுக்கு அலங்காரம்? இது பொண்ணுக பண்டிகைதான.... போய் புள்ளையை ரெடி பண்ணுங்க..... இந்த லட்சணம் போதும்......"


சரினு இவங்களை எல்லாம் இழுத்துகிட்டு ஒவ்வொரு வீட்டுக்கா போகும் போது அங்க கிடைக்கிற சுண்டல் எல்லாத்தையும் கலக்காம கையில பேலன்ஸ் பண்ணி குழந்தையையும் கூட்டிகிட்டு பசியோட வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்டா.....
"ஏங்க அதுதான் கையில நிறைய சுண்டல் வச்சுருக்கீங்களே....அதுதான் டிபன்......."


சரினு அதையும் சமாளிச்சு ஒரு வழியா நவராத்திரியை வெற்றிகரமா முடிச்சுட்டு அப்பாடானு உக்காந்தா.......


"ஏங்க இந்த நவராத்திரிக்கு எனக்கு நிறைய blouse bit வந்திருக்கு....எப்ப நாம ஷாப்பிங் போலாம்?"
"அதுதான் நிறைய இருக்கேமா.....அப்புறம் எதுக்கு ஷாப்பிங்?"
"என்னங்க இப்படி பச்சைப் புள்ளையா இருக்கீங்க.... blouse bitக்கு தகுந்த மாதிரி saree எடுக்கணும்ங்க....."
"#@%&%#@#%&"


பார்த்தீங்க இல்ல....இவ்வளுவு அவதிப் படற ஆணுக்கு நவராத்திரி அப்ப ஒரு shirt bit வேண்டாம்.....ஒரு கர்ச்சீப் வச்சுத் தரலாம் இல்ல.....


இதையெல்லாம் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லுவாங்க......


TVK.... Source: FaceBook
 
நல்ல அனுபவங்கள்தான்! ஆனாலும், முக்கியமான ஒன்றை விட்டுவிட்டார் நண்பர்!

வெள்ளையும் சள்ளையுமாய் இருக்கும் இரண்டு மூன்று வேஷ்டிகள் காணாமல் போய்,


கொலுப்படி
களை
மறைத்து வைப்பதைத்தான் சொல்லுகிறேன்!! :lol:
 
நல்ல அனுபவங்கள்தான்! ஆனாலும், முக்கியமான ஒன்றை விட்டுவிட்டார் நண்பர்!

வெள்ளையும் சள்ளையுமாய் இருக்கும் இரண்டு மூன்று வேஷ்டிகள் காணாமல் போய்,


கொலுப்படி
களை
மறைத்து வைப்பதைத்தான் சொல்லுகிறேன்!! :lol:

பட்டுப் புடவை தான் படிக்கு உகந்தது...அதுவும் சிகப்பு கலர் தான் பிடிக்கும்!
music.gif
 
பட்டுப் புடவை தான் படிக்கு உகந்தது...அதுவும் சிகப்பு கலர் தான் பிடிக்கும்!
music.gif



அதுசரி...வேஷ்டியவிட புடவை விலை ரொம்ப அதிகமாட்சே...??


வீட்டுக்காரர்.. தலையில் மேலும் ..மேலும் ..மிளகாய் அரைக்க இப்பிடி..
ஒரு யோஜனையா...


tvk
 
This joke is relevant for some 30 years back and applicable to towns and villages and not big cities like Chennai.
 
Status
Not open for further replies.
Back
Top