எதை ..எழுதுவது.... [ TVK ]...

kk4646

Active member
எதை எழுதுவது... [ டி வி கே ]

கவிதை எழுதத் தேடுகிறேன்..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...

உள் மனதில் உறங்கிடும் நினைவுகள்.. ..
உள்ளத்தில் ஓடிவரும் ஓசைகள்..

பருவ வயதின் ஏக்கங்கள்....
பல நூறு கனவுகள்...

மண முடித்த வாழ்க்கையில் ...
மறக்க முடியா ..தென்றல்கள்...புயல்கள்...

கடந்து சென்ற காலங்கள்...
கதை சொல்லும் அனுபவங்கள்...

வாழ்க்கைப் பயணத்தில் ..
வழி தவறிய ஒருவனாய் .. நிற்கின்றேன்...

எதை எழுதுவது...எப்பிடி எழுதுவது..?

கவிதையாய் எழுதிடத் தேடுகின்றேன் ..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...

[ டி வி கே....]
 
hi

எதை எழுதுவது....


காலத்தின் கையில் ஒரு virus ...

சில நேரங்களில் கடந்து வாழ்க்கையே நினைக்கவா ..

இல்லை நடக்க போற வாழ்க்கையே நினைக்கவா ...

இப்படி நடக்கு மென்று வாழ்க்கையை நினைக்கவா ....

இல்லை நடப்பதெல்லாம் வாழ்க்கையை நினைக்கவா ...

புரியாத வாழ்க்கையே வாழ்வு என்று நினைக்கவா ....

புரிந்த மாதிரி வாழ்வே என்று நினைக்கவா ...

ஒன்றும் இல்லாத வழக்கையே நினைக்கவா ..

எல்லாம் இருந்தும் இல்லாத வாழ்க்கையே நினைக்கவா ...
 
Back
Top