"துண்டு விழுது..." [ TVK ]

kk4646

Active member
என்னங்க ..இங்க கொஞ்சம் வரிங்களா..

மனைவியின் குரலில் இருந்த குழைவு ஆச்சரிப்பட வைத்தது..

என்ன விஷயம் எதுக்கு கூப்பிட்டே..

ஒண்ணும் இல்லேங்க இந்த மாசம் மளிகை சாமான் வாங்க பட்ஜட்ல துண்டு விழுது.. பணம் வேணும்..

என்னது இது ..அப்பிடி என்ன புதுசா அதிகமா வாங்கிட்டே ..அதான் வழக்கம்போல ஆயிரம் ரூபாய் குடுத்தேனே மளிகை சாமான் வாங்க.. அப்புறம் என்ன..

இல்லேங்க பணம் போறலே நீங்க பணம் குடுத்தாத்தான் மளிகை சாமான் வாங்க முடியும் ..
அப்பிடி எனத்தத்தான் வாங்கரையோ....சரி சரி எவ்வளவு துண்டு விழுது சொல்லித்தொலை ..
ஆயிரம் ரூபாய் துண்டு விழுதுங்க..

ஏய் உனக்கு பைத்தியமா ..ஏற்கனவே ஆயிரம் ரூபாய் குடுத்தாச்சு ..இப்போ இன்னொரு ஆயிரமா ..

ஆமாம் ..நீங்க குடுத்த ஆயிரம் ரூபாய் போறலேன்னு சொன்னேனே..

அப்போ இரண்டாயிரம் ரூபாயிக்கி இந்த மாசம் மளிகை சாமானா.. ஏன் ஊரிலேந்து உன்னோட அப்பா அம்மா வராங்களாக்கும்..

அதெல்லாம் இல்லேங்க..

அப்போ என்னதான் செஞ்சே அந்த ஆயிரம் ரூபாயில..

புடவை வாங்கிட்டேங்க..

[ டிவிகே ]
 
Back
Top