• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

Status
Not open for further replies.
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு




என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


Thiruvalluvar | ???????????? ?????? ??? ?????? ????????!
 
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் போதியோ
என்தூங்கும் என்கண் இனிரா?



முதல் இரண்டு வரிகளை விடவும் அடுத்த இரண்டு வரிகள் மிகவும் பிரசித்தம்
அவையும் ஒரு திருக்குள் போலவே அமைந்துள்ளதைப் பாருங்கள்
 
............
தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ..........
நான் படித்த கதை வேறு மாதிரி!

வள்ளுவர் தினமும் சாப்பிடும் சமயம் ஓர் ஊசியை அருகில் வைத்திருப்பாராம். வாசுகி அம்மையார் இறக்கும் தருவாயில்

இதன் காரணத்தைக் கேட்டாராம். அப்போது வள்ளுவர் பதிலளித்தாராம், ஏதாவது சோற்றுப் பருக்கை கீழே விழுந்தால் அதை


எடுப்பதற்காக வைத்திருந்த ஊசிக்கு ஒரு நாளும் வேலை இருக்கவில்லை; ஏனெனில் அம்மையார்
பரிமாறும் நேர்த்தியால்,

ஒரு பருக்கைகூடக் கீழே சிந்தியதில்லை! :thumb:
 
VR mam invading PJ never seen that before, BTW, all posts are mor than 2 lines, cos its not about thirukkural but thiruvall
 
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் போதியோ
என்தூங்கும் என்கண் இனிரா?



முதல் இரண்டு வரிகளை விடவும் அடுத்த இரண்டு வரிகள் மிகவும் பிரசித்தம்
அவையும் ஒரு திருக்குள் போலவே அமைந்துள்ளதைப் பாருங்கள்


Thanks VR Ji
 
நான் படித்த கதை வேறு மாதிரி!

வள்ளுவர் தினமும் சாப்பிடும் சமயம் ஓர் ஊசியை அருகில் வைத்திருப்பாராம். வாசுகி அம்மையார் இறக்கும் தருவாயில்

இதன் காரணத்தைக் கேட்டாராம். அப்போது வள்ளுவர் பதிலளித்தாராம், ஏதாவது சோற்றுப் பருக்கை கீழே விழுந்தால் அதை


எடுப்பதற்காக வைத்திருந்த ஊசிக்கு ஒரு நாளும் வேலை இருக்கவில்லை; ஏனெனில் அம்மையார்
பரிமாறும் நேர்த்தியால்,

ஒரு பருக்கைகூடக் கீழே சிந்தியதில்லை! :thumb:


Thanks Raji Madam
 
நண்பருக்கு நன்றி. இதன் பொருளை நான் அறிந்தாலும், அறியாத சில செய்திகள் இந்த இடுகையில் உண்டு.

இதோ:



''அடிசிற் கினியாளே அன்புடை யாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதாய் போதியோ
என்தூங்கும் என்கண் இரா.

அடிசில்: உணவு, சோறு.
படிசொல்: பதிசொல் என்று பாடபேதமாகக் கொள்வாரும் உண்டு. எதுகை நோக்கி, படிசொல் என்றமைந்தது என்பர். சொற்படி என்று மாற்றிப் போட்டு அன்வயப்படுத்துவோரும் உண்டு.

பொருள்: நல்ல சுவையான உணவை எனக்கு அளித்தவளே! என்மேல் அளவற்ற அன்பு பூண்டிருந்தவளே! என் சொற்படி தவறாமல் நடந்தவளான பாவையே! (நான் துயிலப் போகையில்) என் பாதத்தை வருடி, பிடித்துவிட்டு, நான் தூங்கிய பிறகு தூங்கி, நான் விழித்துக் கொள்வதற்கு முன்னால் விழித்தெழுந்தவளே! பேதையே! போய்விட்டாயா! இனிமேல் இரவு வேளைகளில் என் கண் எவ்வாறு துயில் கொள்ளும். (உன் நினைவுகள் என்னைக் கொல்லும் அல்லவா.)

திருவள்ளுவர் இயற்றியதாக அவர் பெயரில் யாரோ ஒருவர் திரித்துவிட்ட புளுகுப் பாடல் இது. இயற்றியவர் திருவள்ளுவர் அல்லர். காரணம், திருவள்ளுவர் காலத்தில் தூங்குதல் என்ற சொல்லுக்கு defer என்ற பொருள் மட்டும்தான் இருந்தது. Sleep என்ற சொல்லை உறக்கம் என்று குறிப்பிட்டார்கள். தூக்கம் என்ற சொல்லுக்கு sleep என்ற பொருள் பிறந்தது மிகமிகப் பிற்காலத்தில்தான். ஆகவேதான் தமிழறிஞர் ஒருவர் (பெயர் நினைவில்லை) ‘இதை இயற்றியவர் வள்ளுவர் என்றால், குறளை அவர் இயற்றவில்லை. அப்படியல்லாமல் குறளை இயற்றிவர் வள்ளுவர் என்றால் இதை அவர் இயற்றவில்லை’ என்று குறிப்பிட்டார்.

இந்தமாதிரியான புளுகுமூட்டைப் பாடல்கள் இடைக்காலத்தில் ஏராளம். இப்படிப்பட்ட புளுகுமூட்டைப் பாடலைத்தான் மேற்கோள் காட்டி ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டத்தை இயற்றவில்லை என்று பெரியவர் ரீல் ஓட்டிக் கொண்டிருக்கிறார். (இயற்றியது வாணியன்தாதனாக இருந்தால் அதற்கு அவர் காட்டியுள்ள மேற்கோள் பாடல்கள் எல்லாமே மேற்சொன்னதைப் போன்ற, பிற்காலப் புலவர்கள் திரித்த புளுகுமூட்டைகள். சான்றாக ஏற்க இயலாதவை. சரி... இப்போதைக்கு அது வேணாம். அப்புறம் வந்து கவனிச்சுக்கறேன்.)

கத்திரிக்காய் காய்த்தாயிற்று. போயி வாங்கிபாத் பண்ணலாமா, கொத்ஸு பண்ணலாமா, நாலு துண்டு போட்டுக் கறியா, இல்ல கணிதமேதை ராமானுஜத்தின் தாயார் கோமளத்தம்மாள் பண்ணுவது போல (ராமனுஜனுக்கு இது மிகவும் பிடிக்குமாம்) எட்டுத் துண்டுகளாக நறுக்கி, ஆனால் முழுசா வெட்டிடாம, ஒட்டிக்கொண்டிருக்கும்படியாக கறியா.... அடுத்த ரெசிபிய ஆரம்பிங்க சொல்றேன். வள்ளுவராவது, வாசுகியாவது! மொதல்ல, வாசுகி என்பது ஆம்பளப் பேருங்கறது தெரியுமோ? ஆதிசேஷன் தம்பி, பரமசிவன் கழுத்துப் பாம்பின் பெயர் வாசுகி. ம்க்கும்.''

அன்புடன்,
ஹரிகி.''

:)
 
மொதல்ல, வாசுகி என்பது ஆம்பளப் பேருங்கறது தெரியுமோ? ஆதிசேஷன் தம்பி, பரமசிவன் கழுத்துப் பாம்பின் பெயர் வாசுகி. ம்க்கும்.''
Hence I Google searched and found this from Baby Name Guesser - the first name Vasuki

''It's a boy!

Based on popular usage, it is 8.906 times more common for Vasuki to be a boy's name.

The popularity of Vasuki is: 3.664 (where 0 = extremely rare, 6 = super popular)''
 
வாசுகி என்ற பெயரில் என்னுடன் ஒரு நண்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்தான்.
ஒருநாள் மாலை கிரிக்கெட் மைதானத்தில் காட்ச் பிடிக்க முனைந்தபோது பந்து
வெகு உயரத்திலிருந்த் அவன் நெற்றியில் விழுந்து ஒரு எலுமிச்சம் பழமாகப் புடைக்க,
வாசுகிப் பாம்பின் தலை நுனியில் இருந்த ரத்தினம் போல் அது கொஞ்சநாள் அவன்
முகத்துக்கு அழகு செய்தது!

ரமணி
 
.......... வாசுகிப் பாம்பின் தலை நுனியில் இருந்த ரத்தினம் போல் அது கொஞ்சநாள் அவன்
முகத்துக்கு அழகு செய்தது! .....
:)
 
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

10959411_1540986146153341_2483506352150454090_n.jpg



உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார்.

தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,


அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


Thiruvalluvar | ???????????? ?????? ??? ?????? ????????!

picture Source: History Student Karur

FB
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top