செல்வம் குறைய காரணம்.

kgopalan

Active member
செல்வம் குறைய காரணம்.

செல்வம் குறைவதின் அறிகுறிகள் :-
1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது
 
Some are common sense. Being clean by taking a shower everyday and keeping the house clean is all common sense.

I dont understand the rule about cleaning the house after dark. This is understandable at a time when there was no electricity etc. These days one can wash and dry clothes any time and even clean the house at night also.

So some rules appear outdated and some may be followed out of superstition and fear
 
ஐயா, நான் பிறந்தது 1937ல். என் பாட்டி பிச்சைகாரனுக்கு அரிசி போடும்போது அரிசி எடுக்கும் படியிலிருந்து அரிசி எடுத்து ஒரு கொட்டாங்கச்சியில் போட்டு பிறகு பிச்சைகாரனுக்கு போட வேண்டும். என்று சொல்வார்கள். நாங்கள் அம்மாதிரியே செய்து வந்தோம். 1964 ம் ஆன்டு எங்க்கள் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்கள் அரிகி பிச்சை காரனுக்கு படியிலிருந்து அரிசியை போட்டார்கள். என் பாட்டி சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. என்ன ஆகிறது என்று பார்த்தேன். அந்த காலத்தில் சைக்கிள் ரிப்பேர் , காற்றடித்தல் , தொழிலில் வரும் வருமானத்தில் அந்த குடும்பம் ஓடிகொண்டிருந்தது. இவரை முனிசிபாலிடி கெளன்சிலர் தேர்தலுக்கு நிற்க வைத்து அவர்களே காலை வாரி விட்டு படு தோல்வி அடைய விட்டார்கள். குடும்பம் சாப்பாட்டிற்கு கஷ்டபட்டது.

பிறகு தான் எனக்கு புரிந்தது. என் பாட்டி சொன்னது சரியாக நடக்கிறது. என்று. இதற்கு விஞ்ஞ்சான அடிபடையில் நிரூபிக்க முடியாது. ஆனால் உன்மை.
 
ஐயா, ஒருவரின் தகப்பனார் மளிகை கடை வைத்திருந்தார். எலி தொல்லைகாக பூனை வளர்த்தார். சிராத்தம் செய்யும் நாளன்று அந்த பூனையை ஒரு கூடை கவிழ்த்து போட்டு மூடி விடுவார். இவர் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். பிறகு மேற்படிப்புக்கு அந்த கிராமத்தை விட்டு நகரம் சென்றார். படித்து பட்டம் பெற்றார். நகரத்தில் வேலை கிடைத்தது. பல வருடங்க்கள் ஓடி விட்டபின் தகப்பனார் காலமானார். தகப்பனாருக்கு சிராத்தம் செய்யும் நாளன்று ஒரு பூனையை தேடி கண்டுபிடித்து தூக்கி கொண்டு வந்து அவரது வீட்டில் ஒரு கூடையை போட்டு கவிழ்த்து மூடி விட்டு மாலையில் வெளியே விட்டார். சிறு வயதில் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் தகப்பனார் இம்மாதிரி செய்வார். இது என் வீட்டு வழக்கம். நானும் அப்படியே செய்து விட்டேன் என்றார். இது தவறு.இம்மாத்ரி செய்வதால் அந்த பூனையை பட்டினி போட்ட பாவம் தான் வரும். அந்த காலத்தில் முனிவர்கள் எழுதி வைத்தபடி தான் நடக்க வேண்டும். நாம் கெட்டு பொவதற்காக அவர்கள் எழுதி வைக்க வில்லை. அவர்களை போல் நாமும் ஆவதற்குண்டான வழி முறைகளை கண்டறிந்து எழுதி வைத்தார்கள்.இம்மாதிரி செய்ய க்கூடாது . உன் தகப்பனார் மளிகை கடைக்கு எலி தொல்லை குறைக்க செய்த ஏற்பாடு இது. இது வீட்டு வழக்கம் இல்லை என்று அறிவ்றை கூறுகிறேன்.
 
ஐயா , அந்த காலத்தில் பூனை குறுக்கே வந்தால் ,-புதிதாக நீங்கள் ஒரு காரியம் செய்ய ஆரம்பிக் க செல்லும் போது மட்டும் தான் அக்காரியம் துவங்க வேண்டாம் என உங்கள் குல தெய்வம்/ இஷ்ட தெய்வம் உங்க்களுக்கு சகுன மாக காண்பிக்கிறது.அந்த நாளின் நக்ஷத்திரம் அவருக்கு பொருத்தமாக இல்லை. அவரின் நக்ஷத்திரத்திற்கு பொருத்தமான உள்ள நக்ஷத்திரத்தை ஜோதிடர் மூலம் அறிந்து கொண்டு செல்ல வேண்டும்.

அந்த காலத்தில் பூனைகள் வீடுகள் இருக்குமிடத்தில் மட்டும் தான் அதிகம் நடமாடும்.அக்காலத்தில் குதிரைகளில் செல்லும் அரசாங்க அலுவலர்கள் பூனை குறுக்கே சென்றால் இந்த இடத்தில் வீடுகள் உள்ளன. குதிரை குளம்படி சப்தம் புழுதி அங்க்குள்ள வயதானவர்களை பாதீக்கும் என வேறு வழியில் குதிரையை திருப்பிகொண்டு செல்வதற்காக அவர்களுக்கு மட்டும் சொல்ல பட்ட ஆணை. அந்த காலத்து பெண்களுக்கு படிப்பு அறிவு கொடுக்க படாததால் என் பாட்டி சொல்வார்கள் எனக்கு ஏன் அம்மாதிரி போக கூடாது என்று தெரியாது. நீயும் போகாதே என்றே சொல்லி கொன்டு வந்து விட்டார்கள்.
 
Thank you for your explanations. But it is all belief based in the end for those who follow. In some cases traditions came into practice due to some reason and then the reason got lost and only the tradition is left in place.
 
Back
Top