• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சில நேரங்களில் சில மனிதர்கள்.. [ TVK ]

kk4646

Active member
.........”சில நேரங்களில் சிலமனிதர்கள்”………

வரும்போது அரைக் கிலோ வெண்ணை வாங்கிட்டு வாங்க... .......சாயந்திரம் வாக்கிங் கிளம்பும்போது ஒய்ப்போட ஆர்டர்...

வீட்டிலிருந்து கிளம்பி இரண்டாவது மெயின் ரோடு ... ஒரு கிலோ மீட்டர் ..அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் ஒரு கிலோ மீட்டர் ... திரும்பி அதே வழி..

இரண்டாவது மெயின் ரோடு கடைசியில்.. வலது புறம் திரும்பினால் ரயில்வே ஸ்டேஷன் ரோடு.. அந்த திருப்பத்துக்கு ஒரு பத்தடி முன்னால் ஆட்டோ ஸ்டாண்டு ..

அங்கே ஆட்டோ ட்ரைவர்கள் பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சவங்கதான்.. அடிக்கடி ஆட்டோ சவாரி.. எனக்கு.. ஆட்டோ ட்ரைவர் ரெண்டு ..மூணு பேரோட போன் நம்பர் தெரியும்.. போன் செஞ்சால்.. வீட்டுக்கு ஆட்டோ வந்துடும்..

ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்தில் வந்த அப்புறம் தெரிஞ்சது.. ரெண்டு ஆட்டோ ட்ரைவர்கள்.. ஒரு பெண்மணிகிட்ட ஏதோ பேசிகிட்டு இருந்ததும்.. அந்த அம்மணி கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லிட்டு இருந்ததும் ..

இரண்டு ஆட்டோ ட்ரைவர்களும் எனக்கு தெரிஞ்சவங்கதான்...சரி என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாம்னு ..கொஞ்சம் பக்கத்தில்.. ...

அந்த பெண்மணிக்கி கிட்டத்தட்ட அறுபது வயசு இருக்கலாம்.. பார்த்தவுடனேயே தெரிஞ்சது ஒரு விதவைன்னு ..கழுத்தில கொஞ்சம் நகை….கையில ஒரு பை வேற..

[ மனைவி அடிக்கடி சொல்லும் ஒரு வசனம்... தேவை இல்லாம எதிலையாவது மூக்கை நுழைக்கிறதே.. உங்க தொழில் .. ].

சார் .. இந்த அம்மாவுக்கு மூணாவது மேட்டுத் தெருவுக்குப் போகணுமாம் ..வழி கேக்கறாங்க.. என் விசாரிப்புக்கு ஒரு ட்ரைவரின் பதில்..

அப்பிடி ஒரு தெருவே இந்த ஏரியாவில கிடையாது... எனக்குத் தெரியும் ... அப்பிடி இருக்கும்போது ஆட்டோ ட்ரைவர் எப்பிடி வழி சொல்ல முடியும்.. சரி .. இந்த அம்மாவிடம் நாமளே கேப்போம்...

அம்மா...இந்த ஏரியாவில நீங்க சொல்ற மூணாவது மேட்டுத் தெரு கிடையாது ..நீங்க சரியான தெரு பேர் சொன்னிங்கன்னா.... பரவாயில்லே...

இல்லை இல்லை ..மூணாவது மேட்டுத் தெருதான்.. நான் ஏற்க்கனவே ஒருதரம் வந்திருக்கேன்... அப்போ சாயங்கால நேரம் இந்த ஆட்டோ ஸ்டாண்டு வரைக்கும் வழி ஞாபகம் இருக்கு..இதுக்கப்புறம் ஞாபகம் வரமாட்டேங்குது.. இந்த அம்மாவின் பதில்..

எனக்கு என்ன செய்யரதுன்னு தெரியலே.. இருந்தாலும் இந்த வயசான பெண்மணிக்கி உதவி செய்யணும்ன்னு மனசில நினைப்பு..

அம்மா நீங்க எங்கிருந்து வரிங்க... தனியாவா வந்திங்க .இங்கே யார் வீட்டுக்குப் போகணும்...என் கேள்வி..

மந்தவெளியிலேந்து வரேன்.. என் முதல் மருமகள்.. பஸ் ஏத்தி விட்டாள்... என் மூணாவது பிள்ளை சுப்பிரமணியம் வீட்டுக்குப் போகணும்..

என் முகத்தில நான் ரொம்ப நல்லவன்னு எழுதி ஒட்டி இருக்கு.. அதான் நான் கேட்டதுக்கு சரியா பதில் சொல்றாங்க..

அம்மா நீங்க .. தப்பா தெரு பேரு சொல்றீங்க.. கொஞ்சம் ஞாபகப் படுத்திச் சொல்லமுடியுமா.. என் கேள்வி..

இல்லை இல்லை ..தெரு பேரு அதுதான்..இந்த அம்மா.. கொஞ்சம் விடாப்பிடியா..

கொஞ்சம் யோசனை எனக்கு.. அம்மா உங்ககிட்ட போன் இருக்கா.. இருந்தா போன் பண்ணி வழி கேளுங்களேன்..

ம்ம்.. இருக்கு...ஆனா எனக்கு நம்பர் பாத்து போன் பண்ண சரியா வரமாட்டேங்குது.. எப்பவாவது.. என் பிள்ளையில ஒருத்தன்.. மருமகள் யாராவது போன் பண்ணுவாங்க பேசுவேன்..

ம்ம்.. சரி நான் வேணும்னா உங்களுக்காக போன் பண்ணி கேக்கட்டுமா..

சரி.. இந்தாங்க.. பையிலிருந்து ஒரு மொபைல் போன்..எடுத்து.. ஒண்ணு பண்ணுங்க ..நங்கநல்லுர்ல என் ரெண்டாவது மருமகள்.. லக்ஷ்மி இருக்கா.. அவ நம்பர் இதுல இருக்கு .. என் பெரிய பிள்ளை அவங்க நம்பர் எல்லாத்தையும் இதில போட்டுக் குடுத்திருக்கான்.. அவ கிட்ட கேட்டா ..வழி சொல்லிடுவா..

சரிம்மா உங்க பேர் என்னான்னு சொல்லட்டும்..

மாமியார் பார்வதின்னு சொல்லுங்க ..அம்மாவின் பதில்..

என்னை நானே அறிமுகம்.. லக்ஷ்மிகிட்ட.. இங்க இரண்டாவது மெயின் ரோட் ஆட்டோ ஸ்டாண்ட் கிட்ட பார்வதி அம்மான்னு ஒருத்தர் ..அவங்க பிள்ளை சுப்பிரமணியம் வீட்டுக்கு போக வழி தெரியாம நிக்கறாங்க.. உங்க மாமியார்ன்னு சொல்றாங்க.. கொஞ்சம் வழி சொல்லமுடியுமா.. ?

நான் சொல்லி முடிக்கலே... என்னது...மாமியார் கிழவி அங்கவந்து நிக்கறாளா சட்டுன்ன வந்தது பதில்..

இல்லே.. நீங்க சரியான விலாசம் சொல்ல முடியுமா.. அவங்க மூணாவது மேட்டுத் தெருன்னு சொல்றாங்க.. அப்பிடி ஒரு தெருவே இங்கே கிடையாது..

கிழவிக்கி ஒரு இடத்தில நிக்கமுடியாதே.. கால்ல சக்கரம்தான் கட்டி இருக்கு.. இப்பத்தான் மூணு வாரத்துக்கு முன்னால இங்கிருந்து மந்தவெளிக்கி போனாங்க.. அதுக்குள்ள அங்கேயா.. மருமகளின் குரலில் எரிச்சல் தெரிஞ்சது..

இங்க பாருங்க ..மேட்டுதெரு கிழக்குத் தெருன்னு தெரு தெருவா சுத்தற வேலைய விட்டுட்டு ..அவளை ஒழுங்கா,, மந்தவெளிக்கே திரும்பிப் போகச்சொல்லுங்க.. போன் கட்..

அதிர்ச்சியில் திகைச்சுப் போனேன் நான்.. இப்பிடி ஒரு “பாய்ச்சலை” எதிர்பாக்கவில்லை..

அம்மா உங்க மருமகள்.. உங்களை மந்தவேளிக்கே திரும்பிப் போகச் சொல்றாங்க.. இப்பத்தான் நீங்க நங்கநல்லூர்லேந்து மந்தவெளிக்கிப் போனிங்களாம்.

ஆமாம் போனேன்.. அதனால என்ன.. வழிகேட்டா வழி சொல்ல வேண்டியதுதானே.. அத விட்டுட்டு .. அப்பிடி செய்யாதே ..இப்பிடி சொல்லாதேன்னு.. அவளுக்கு எப்பவும் இதேதான் வேலை..

மாமியார் மருமகள் சண்டையில் “அம்பயரா” இருக்க நான் தயாரில்லை..

அம்மா.. உங்க பிள்ளை சுப்பிரமணியம் போன் நம்பர் ஏதாவது இருக்கா.. என் கேள்வி..

இருக்கே இந்த போன்லயே பாருங்க..கொஞ்சம் அலட்சியமான பதில்..

ஐயோடா .. இத நீங்க முதல்லியே சொல்லியிருக்க வேண்டாமா.. தேவை இல்லாம நங்கநல்லூருக்கு போன்...[ எனக்கும் இப்போ இவங்க மேல எரிச்சல் வருது.. ]

ம்ம்..சொல்லியிருக்கலாம் என்னவோ தோணலேன்னு...பதில்... [ இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும் ] ..

சுப்ரமணியம் சாருக்கு போன்..மறுபடியும் அதே. “பல்லவி”..உங்க அம்மா .. வழி தெரியாம மூணாவது மேட்டுத் தெருன்னு சொல்றாங்க.. நீங்க எங்க இருக்கிங்க..

மூணாவது மெயின் ரோடு நான் இருக்கறது.. அதைத்தான் மாத்தி சொல்றாங்க.. இவங்களை யார் இப்போ வரலே வரலேன்னு கெஞ்சினது.. சரி சரி அவங்க அங்கேயே இருக்கட்டும் ..ஒரு சின்ன வேலையில இருக்கேன்.. முடிச்சிட்டு ..நான் வந்து அழைச்சுட்டுப் போறேன்..

அம்மா உங்களை இங்கேயே இருக்கச் சொன்னார்.. அவர் வந்து அழைச்சிட்டு போறேன்னு சொன்னார்.. இந்தாங்க போன்..

இந்த அம்மாவின் முகத்தில் லேசா நிம்மதி தெரிஞ்சது..

எனக்கு கொஞ்சம் இரண்டு மனசு... இவங்களை இங்கேயே விட்டுட்டு போவதா ..இல்லே இவங்க பிள்ளை வரும் வரை காத்திருப்பதான்னு..

ஏற்க்கனவே இருட்ட ஆரம்பிச்சாச்சு.. இவங்களை தனியா விட்டுட்டு போகவேண்டாம் ..இவங்க பிள்ளை வர வரைக்கும் இருக்கலாம்ன்னு மனசு சொல்லித்து..

அஞ்சு நிமிஷம்...பத்து ..இருபது நிமிஷம் ..அந்த சுப்ரமணியத்தக் காணோம்...எனக்கும் நேரம் ஆகுது... அம்மா கொஞ்சம் உங்க போன குடுங்க.. அவருக்கு மறுபடியும் ஒரு போன்...

சார் நீங்க வந்து உங்க அம்மாவை அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னிங்க.. உடனே வந்தது பதில்..

என்னது நீங்க இன்னமும் போகலையா.. நான்தான் சொன்னேனே ..கொஞ்சம் வேலை இருக்கு வரேன்னு..

அப்பிடி இல்லே சார் இருட்டிப் போச்சு ..இவங்க தனியா நிக்கறாங்க.. என் பதில்..

தனி என்ன தனி.. தனியா பஸ்சில ஏறி வரத்தெரியறது.. அப்புறம் என்ன.. சரி சரி நான் வரேன்..

அடுத்த மூணாவது நிமிஷம் ஒருத்தர் மூணாவது மெயின் ரோடுலேந்து திரும்புவது தெரிஞ்சது.. [ இரண்டாவது மெயின் ரோடுக்கு அடுத்ததுதான் ] ..

இந்த அம்மாவும் பாத்துட்டாங்க.. அடுத்த செகண்ட் வேகமா நடந்து.. பாதி வழியிலியே ..அவர் கையைப் பிடிச்சு ..அவரோட ..பேசிண்டே...மூணாவது மெயின் ரோடுக்குள்ள நுழைஞ்சாச்சு...என்ன திரும்பிப் பாக்காம.. போயிட்டு வரேன்னு ..ஒரு வார்த்தை சொல்லாம..

ரயில்வே ஸ்டேஷன் வரை வாக்கிங் கட்.. நேரமாச்சு..திரும்பி வீட்டுக்கு..

என்னங்க வெண்ணை வாங்கிட்டு வந்திங்களா.. வீட்டுக்குள் கால எடுத்து வெச்சவுடனேயே கேள்வி ஒய்புகிட்டேந்து..

சொரேர்ன்னது எனக்கு.. வெண்ணை வாங்க மறந்தாச்சு.. மறந்துட்டேன்.. நாளைக்கி வாங்கிண்டு வந்துடறேன்.. என் பதில்..

அதான பார்த்தேன்.. என்னிக்கி நீங்க நான் ஒண்ணு கேட்டு உடனே செஞ்சிறிகிங்க.. ஏதாவது சாக்கு போக்கு சொல்லாம.. மனைவியின் கோபம் நியாயமானதுதான்..

இல்லேம்மா என்ன நடந்ததுன்னு சொல்றேன்.. நடந்தது எல்லாத்தையும் .. நங்கநல்லூர் மருமகளைத் தவிர..

ஓஹோ... ஊர் பேர் தெரியாத எவளோ ஒருத்தி மேல இருந்த கரிசனம் .. வீட்ல பொண்டாண்டி பேர்லேயும் இருக்கணும்.. அதுதான் எப்பவும் கிடையாதே உங்களுக்கு..

சரி சரி..நீ கத்தாதே.. நான் இப்பவே போய் வெண்ணை வாங்கிண்டு வரேன்..

ஒண்ணும் ..தேவை இல்லே.. வேற ஒருத்தி.. காத்திருப்பா ..அங்க.. ஐயா வருவாங்கன்னு.. நாளைக்கிப் பாத்துக்கலாம்..

வாயை மூடிக்கரதுதான் நல்லது..

ராத்திரி படுக்கப் போகும்போது சாயந்திரம் நடந்தது எல்லாம் நிழல் படம் மாதிரி தெரிஞ்சது..

வயசான ஒரு பெண்மணிய.. தன்னந்தனியா பஸ் ஏத்தி அனுப்பின மூத்த மருமகள்.. [ அனுப்பி வெச்சாங்களா.. இல்லே துரத்திவிட்டாங்களா.. ? ].....வழி கேட்டா எரிஞ்சு விழுந்த நங்கநல்லூர் மருமகள்.. நடு ரோட்ல நின்ன அம்மாவ உடனே வந்து அழைச்சிட்டுப் போகாம.. ஆடி அசைஞ்சு வந்த பிள்ளை..

அந்த அம்மாதான் இருக்கட்டும் .. ஏதுடா ஒருத்தன்.. அவ்வளவு நேரம் சம்பளம் வாங்காத.. காவல்காரனா கூடவே நின்னு பத்திரமா அனுப்பி வெச்சானேன்னு நினைக்கலே.. அவங்க பிள்ளையும் அப்பிடித்தான்.. ஒரு தேங்க்ஸ் கூட கிடையாது..

என் மனைவிதான் ஆகட்டும் .. யார் எப்பிடிப் போனா என்ன ..எனக்கு என் காரியம் நடக்கணும் .. நான் கேட்டது எனக்கு நடக்கணும்ன்னு எண்ணம்..

ச்சே...என்ன உலகம்டா இது... அவங்கவங்களுக்கு .. அவங்கவங்க காரியம்தான் முக்கியமா இருக்கே ஒழிய.. மத்தவங்களப் பத்தியோ.. சொந்த பந்தம்.. பத்தியோ.. நினைக்கிறது இரண்டாம் பட்சம்தான்..

ஜெயகாந்தன் எழுதின ஒரு கதையின் தலைப்பு ஞாபகத்துக்கு வருது.. அது சரிதான் .. “ சில நேரங்களில் சில மனிதர்கள் “ இப்பிடித்தான்.. என்ன செய்வது..

டி வி கே.
 

Latest ads

Back
Top