சாப்பிட வாங்க!

Status
Not open for further replies.
சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்க!



ஃபுட்ஸ்[TABLE="align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]


ஹோட்டல்: பார்த்தசாரதி விலாஸ், 19, மேல விபூதி பிராகாரம்,
திருவானைக்கோவில், திருச்சி 620 005
உணவு: காலை சிற்றுண்டி
செலவு: ஒருவருக்கு
rupee_symbol.png
30 முதல்
rupee_symbol.png
50 வரை



மிழகமெங்கும் உள்ள சிறந்த உணவகங்களை சுவை, தரம், சேவையின் அடிப்படையில் தரம்பிரித்து, வாசகிகளுக்கு அடையாளம் காட்டும் 'சாப்பிட வாங்க' தொடருக்காக இம்முறை பாரம்பரிய உணவகம் ஒன்றில் காலை உணவு சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம், அது... திருச்சி, திருவானைக்கோவில் நகரில் இருக்கும் 'பார்த்தசாரதி விலாஸ் ஓட்டல்'!


பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆல யத்தின் அருகில், மேல விபூதி பிராகாரத்தில் இருக்கிறது உணவகம். வாசலிலேயே 'ஆனந்த விகடன் புகழ் பார்த்தசாரதி விலாஸ் ஓட்டல்’ என்று போர்டு வைத்து இருக்கிறார்கள். இந்த உணவகம் பற்றிய செய்தி பல ஆண்டுகளுக்கு முன் விகடனில் வந்திருப்பதுதான் காரணம். உள்ளே நுழைந்தவுடன் உணவகத்தின் வயது நமக்குக் கண்ணில்படுகிறது. 70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த உணவகம், ஒரே இடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவதே ஆச்சர்யம்தான்!



p64d.jpg

பழங்கால கட்டடம் என்பதால், கிடைக்கும் இடத்தில் எல்லாம் சாப்பாட்டு மேஜைகள் போட்டுள்ளனர். கிடைத்த மேஜையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். பரிமாறுபவர்கள், அதிக நாள் பழகியவர்கள் போல சிநேகமாகப் பேசி, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதைக் கொடுக்கிறார்கள். கூட்டம் அதிகமாகிவிட்டால் முதலாளியும் களம் இறங்கி வந்தவர்களைக் கவனிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சாப்பிட்ட பின் நாமே இலையை எடுக்க வேண்டும். புதிய ஆட்கள் இலையை எடுக்காமல் எழுந்துவிட்டால், அவர்களைத் துரத்திப் போய் இலையை எடுக்கச் சொல்லும்போது, வேடிக்கையாக இருக்கிறது.



அதிகாலை 4.30 மணிக்கே நெய் பொங்கல், காபி கிடைப்பது இந்த உணவகத்தின் சிறப்பு. இதற்காகவே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்தெல்லாம் விடியற்காலை முதல் பேருந்தை பிடித்து வந்து சேரும் வாடிக்கையாளர்கள், அதிகாலையில் சுடச்சுட நெய் பொங்கலையும் டிகிரி காபியையும் ஒரு கை பார்த்து விட்டு திருப்தியுடன் செல்கிறார்கள். அதற்கு பிறகு, ஆறு மணியில் இருந்து இட்லி, வடை, சாம்பார் வடை, நெய் ரோஸ்ட் என கிடைக்கும்.



p64c.jpg
p64.jpg

பொங்கல் சீக்கிரம் காலியாகி விடுகிறது. நெய் ரோஸ்ட் செம ஓட்டம். முன்பெல்லாம் பட்டர் ரோஸ்ட் போடுவார்களாம். தோசையைக் கல்லில் போடுவதற்கு முன் பட்டர் ஷீட்டில் இருக்கும் வெண்ணெயை அப்படியே ஷீட்டோடு கல்லில் தடவி தோசை வெந்ததும் அதைச் சுருட்டி தோசை மீது அந்த பட்டர் ஷீட்டை வைத்து விடுவார்களாம். இது, பட்டர் ரோஸ்ட்டுக்கு... சிறப்பு அடையாளம். சுவை சுண்டியிழுக்குமாம். ஆனால், இப்போது நெய் ரோஸ்ட் மட்டும்தான் கிடைக்கிறது.


இங்கு சாப்பிட வருபவர்கள் போலவே, பார்சலுக்கும் ஆட்கள் குவிகிறார்கள். இங்கு கிடைக்கும் பாட்டில் மோருக்கும் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். நல்ல தரமான பாட்டில் மோர் ஐந்து ரூபாய்தான். 'மனதுக்கு நிறைவாக அன்னை அகிலாண்டேஸ்வரியின் தரிசனம்... அடுத்து, நாவுக்கு ருசியாக பார்த்தசாரதி விலாஸ் டிபன்' என திட்ட மிட்டு வரும் கூட்டம் உண்டு!
- சுவைப்போம்...
படங்கள்: ப்ரீத்தி கார்த்திக், தே.தீட்ஷித்


http://www.vikatan.com/article.php?...acebook&utm_medium=AvalVikatan&utm_campaign=5

 
Status
Not open for further replies.
Back
Top