கஸல் கவிதைகள்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
R

ramachandran girija

Guest
இந்த தலைப்பில் இந்த திரியினை துவக்குவதில் மகிழ்கின்றேன்.
இனிய கவிதைகள் இந்த தலைப்பில் படைக்க என்னாலும் இயலும் என்ற நம்பிக்கையில் !!!
 
அரசியல் கூட்டங்களுக்கு
அழைக்காமலேயே போகின்றாயே !!
அழைத்தும் என்னைக் காண வராத உன்
அலட்சியம் நெஞ்சை தைக்கின்றது !!!

*** ஆக்கம் ரா.கிரிஜா
 
மயிலிறகாய் வருடா விட்டாலும்
மனதினை ரணப்படுத்தாமல்
மனிதனாய் நடக்க மாட்டாயா?

*** ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
நேசமே காதலாய்
சுவாசமே சுகமாய்
நீ அருகில் இருந்தால் !!

*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
காதலே நோய் என்றால்
கண்விழி பார்வை
கண்ணாளா நோய் மருந்து !!

*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
பட்டுத் தெறித்திடாமல்
நிதானித்து விழுகின்றன
உன் முகம் தாங்கிய மழைத்துளிகள்...
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் (my family friend)
 
இதழ்களின் முத்தத்தை
இதழ்களில் கவ்வி
இதயத்தில் சேமிக்கிறேன்

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
பார்க்க மறந்தது உன் கண்கள்
பறக்க நினைக்கவில்லை உன் கால்கள்
பார்த்து பிடிக்காது போனதோ
பாவை என் மனம் காலடியில்

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
பார்த்தவுடன் மனக்கதவம் பெயர்த்தாய்
பார்த்து பார்த்து நின்றதிலே
பாதையை மறந்தேன் நான்

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
ஜாதி ஜாதி என்கிறார்கள்
ஜாதி மல்லி யில் கூட
ஜெகத்தில் பிடிக்கவில்லை எனக்கு

***** ஆக்கம் ரா. கிரிஜா
 
மோகப் பார்வை அல்ல உனது
தாகப் பார்வை தெரியும் எனக்கு
வேகம் விவேகம் அல்ல

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
வனம் சென்று துறவு கொள்ள
வசந்தம் விடுவதில்லை
வருவாயோ என்ற எதிர்பார்ப்பில்
வனமும் பிடிக்கவில்லை

***** ஆக்கம் ரா. கிரிஜா
 
தென்றலாய் நீ என்மனம்
தவழ துடிக்கையிலே
தீக்காற்றாய் சுழல்வது ஏனடா நீ?

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
கண்ணழகில் காரணத்தை தேடுகிறேன் -
பெண்ணழகு பிடிக்காமல் நீயும்
பணமே அழகு என்று போனதும் ஏனோ?

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
அன்ன நடை என்ற வார்த்தை
அன்பில் தோய்ந்து வந்தது
அதுவே இன்று நீ போகையில்
பின்ன நடையானதே !!!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
சோகமுகிலாய் மனமே இடிக்க
சாகும்குயிலாய் பாடல் படிக்க
வேகும் வீணை உடல் துடிக்க
வேந்தனே நீ வேறு ஒருபெண்ணுடன் !!!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
தொட மறந்தாய் துன்புற்றேன்
பாட மறந்தாய் பீடையுற்றேன்
வாட செய்தாய் வடிவிழந்தேன்
ஓடி விட்டாய் இறந்தேனடா !!

*** ஆக்கம் ரா.கிரிஜா
 
விடை பெறுமோ வசந்தம்?
வினாக்களிலேயா நானும்?
விடை தருவாயா காதலா?

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
பள்ளி மன சிந்தனையில்
பாவை மனம் உன் நினைவில்
பார்வைகளில் கண்மணியாய் நீ !

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
புது உதிரம் விடுத்து
பழமை நினைவடுக்கம்
பாவை உடல் வியர்வையில் !!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
துள்ளி வரும் பாக்களிலே
துடித்து நின்ற நாட்களும்
துவண்டு நிற்கும் நானும் !!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
சுகமுடனே பகிர்ந்தது
சுவாசம் முட்டுகின்றது
சோகமாய் நான் !!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
உள்மனத்து உணர்ச்சிகளும்
உன்னாலே மறந்ததடா !!!
உன்னாலே மரத்ததடா !!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
ஒத்தடங்கள் நன்றாக கொடுத்து நின்றாலும்
ஒன்றாக இருந்த காலங்களின் நினைவுத்தடங்கள்
ஓடிட செய்கிறதே வாழ்க்கை ஓரம் !!!

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
அல்லி மலர் என்று என்னை வர்ணித்து
அள்ளிப் போகாமல் ஏனடா
அழ வைத்து போகிறாய்??

**** ஆக்கம் ரா. கிரிஜா
 
Status
Not open for further replies.
Back
Top