கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டிய மந்திரம்

praveen

Life is a dream
Staff member
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
 
Back
Top