ஓ அமெரிக்கா ...


அவசர விசா!


தந்தையார் இறந்த செய்தி கேட்ட மகள்,
இந்தியாவிற்கு உடனே வர விழைந்தாள்!

அவளுக்கு மட்டும் தந்தனர் அவசர விசா;
அவளின் குழந்தை கணவன் பொறுப்பிலே!

அழுதரற்றும் உறவுகளைப் பாராதது, அக்
குழந்தைக்கும் நல்லதுதான்; இது நிஜமே!

எட்டு நாட்களுக்குள் பயணத்தை முடித்தாள்.
எப்படி அதற்கு மேல் கணவன் சமாளிப்பான்?

:ballchain:
 

அவசர விசா!


தந்தையார் இறந்த செய்தி கேட்ட மகள்,
இந்தியாவிற்கு உடனே வர விழைந்தாள்!

அவளுக்கு மட்டும் தந்தனர் அவசர விசா;
அவளின் குழந்தை கணவன் பொறுப்பிலே!

அழுதரற்றும் உறவுகளைப் பாராதது, அக்
குழந்தைக்கும் நல்லதுதான்; இது நிஜமே!

எட்டு நாட்களுக்குள் பயணத்தை முடித்தாள்.
எப்படி அதற்கு மேல் கணவன் சமாளிப்பான்?

:ballchain:
hi

this is reality in american life....i had same for my mother last year.....
 
ஆண்டு விழா!

இசை பயிலக் குழந்தைகளை மிகவும்
ஆசையுடன் அனுப்பினால் போதாது!

ஆண்டு விழாவில் பங்கேற்க, தவறாது
கொண்டு செல்லவது கட்டாயமாகும்!

விமான டிக்கட், விடுமுறை நேரத்தில்
சாமானிய விலையில் கிடைத்திடாது!

அது பற்றி ஆசிரியைக்கு என்ன கவலை?
எது எப்படியாயினும் மேடையேற்றணும்!

கடினமான கீதத்தைக் கற்றுக் கொடுக்க,
கடினமாயிற்று அது பல குழந்தைகளுக்கு!

முடிவில், எளிய ஸ்வர வரிசைகளை, புது
வடிவில் பாட வைக்க முடிவாகிவிட்டது!

பெற்றோரின் பர்ஸ் தேய்ந்தது என்றாலும்,
மற்றவர் கேட்கக் குழந்தைகள் பாடுவாரே!

மேடையில் ஏறிச் சோடை போகாமல் பாடி,
ஜூலையில் வருவார் இந்தியாவைத் தேடி!

:plane:
 
ஆண்டு விழா!

இசை பயிலக் குழந்தைகளை மிகவும்
ஆசையுடன் அனுப்பினால் போதாது!

ஆண்டு விழாவில் பங்கேற்க, தவறாது
கொண்டு செல்லவது கட்டாயமாகும்!

விமான டிக்கட், விடுமுறை நேரத்தில்
சாமானிய விலையில் கிடைத்திடாது!

அது பற்றி ஆசிரியைக்கு என்ன கவலை?
எது எப்படியாயினும் மேடையேற்றணும்!

கடினமான கீதத்தைக் கற்றுக் கொடுக்க,
கடினமாயிற்று அது பல குழந்தைகளுக்கு!

முடிவில், எளிய ஸ்வர வரிசைகளை, புது
வடிவில் பாட வைக்க முடிவாகிவிட்டது!

பெற்றோரின் பர்ஸ் தேய்ந்தது என்றாலும்,
மற்றவர் கேட்கக் குழந்தைகள் பாடுவாரே!

மேடையில் ஏறிச் சோடை போகாமல் பாடி,
ஜூலையில் வருவார் இந்தியாவைத் தேடி!

:plane:
hi

i visited to india for ten days last week...just return USA today..i know the pain...
 
தேவை அன்புப் பாவை!!

உதவி செய்ய இயலும் நிலையில்
உடல் நமக்கு ஒத்துழைத்தால்தான்,

அமெரிக்காவில் குடிபெயர்ந்து, நாம்
அமைதியாய் வாழ்ந்திட இயலும்!

கோளாறுகள் பல உடலில் இருப்பின்,
கோளாறாகத்தான் வாழ்வு இருக்கும்!

ராஜா, ராணி போலிருக்க விழைந்து,
குஜா தூக்கிகளாய் மாறிடுவர் சிலர்!

இருவருக்கு மட்டும் சமைப்பது போய்,
அறுவருக்கு சமைக்க வேண்டிவரும்!

அக்கரை பச்சையாக ஆகத் தேவை,
அக்கறை காட்டும் அன்புப் பாவை!!


:hug:
 
பழைமையில் ஆர்வம்!

அமெரிக்க வாழ் குழந்தைகள் அறிந்தது
I pad மற்றும் ஆய் pad; நாம் அறிந்ததே!

தம் தாத்தா பாட்டிகள் சிறுவராய் இருந்து,
தம் இல்லங்களில் பார்த்தவை அறியார்!

முறம், ஆட்டுக் கல், அம்மி-குழவி, உரல்,
முற்றம் இன்ன பிற அவர்கள் காணாதவை!

பழங்கால வீடு மாதிரிகளுடன், அக் கால
பழக்க வழக்கங்களை விளக்கும் இடமாகச்

சிங்காரச் சென்னையில் ஓர் இடம் உண்டு!
பாங்கான பெயரே, 'தட்சிண சித்ரா' என்று!

திருகைக் கல்லில் ஆட்ட, ஒரே திசையில்
திரும்பும் எந்திரத்தில் பானை செய்ய, என

ஒவ்வொரு செயல் செய்து பார்க்கவும், நாம்
ஒவ்வொரு கட்டணம் செலுத்த வேண்டும்!

கிளி ஜோசியர் அமர்ந்திருந்தார், வாயாடிக்
கிளி ஒன்று கூண்டிலிருந்து ஊரைக் கூட்ட!

பழங்கால ஆட்ட பாட்டமும் அங்கு உண்டு;
பழங்கால ஆபரணங்களும் விற்பது உண்டு!

அக்கறையுடன் குழந்தைகள் சுற்றி வந்தனர்;
அக்கால வாழ்வு பற்றி அறிந்துகொண்டனர்!

:thumb:
cheer2.gif
 

துப்பாக்கிக் கலாச்சாரம்! :ohwell:


யார் வேண்டுமானாலும் துப்பாக்கியால்
யாரை வேண்டுமானாலும் சுட்டு விடலாம்!

அப்பாவிப் பள்ளிக் குழந்தைகள் ஆயினும்
தப்பமாட்டார் இந்தக் கொடூரத்திலிருந்து!

நெஞ்சில் ஈவு இரக்கமின்றிக் கொல்லுவர்
அஞ்சாது, மென் பொருள் எஞ்சினீயரையும்!

இப்போது ஒருவன் தன் குடும்பத்தாரையும்
இனிய தன் உயிரையும் மாய்த்துவிட்டானாம்!


News: Florida sheriff's deputy kills 3 family members and himself - CNN

 
பழையன கழிந்து புதிய ''ஸ்மைலீ''-கள் புகுந்தனவே - சொல்ல
விழைந்த சில கருத்துகள் வேடிக்கையாக மாறிவிட்டனவே! :confused:

குறிப்பு:
இறைவனை வேண்டும் ''ஸ்மைலீ'' தான் மிக வேதனையாகிறது!! :eek:
 
Back
Top