• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இறுதி ஸம்ஸ்காரம்-1.final rites.

kgopalan

Active member
இறுதி ஸம்ஸ்காரம்-1.


இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம்முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்றுதோன்றலாம்.

”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது?ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது.


இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பைமுனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாகஎடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்றுகேட்கலாம்


.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில்அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்றுதெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால்தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும்ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம்தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச்சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காகசாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகியஎல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும்வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவதுஅந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்தஉடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது.ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி,தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும்ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால்இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம்ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்றுசப்தங்களைக் கேட்கிறது.


இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும்,கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்றுஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாகஇருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது.


நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தைவைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாகமுழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடுஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜைஎன்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம்பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினைவைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம்ஞானத்துக்குப்போக வேண்டியவர்களா யிருக்கிறோம்.






யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லதுஅர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும்ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய

சரீரம்தானேஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளேஇருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும்ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காகஇருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறைஎன்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?



ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக்கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட,


அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத்தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்தநல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம்செய்வோம்
 
ஒருவர் இறந்த பின் செய்ய பட வேண்டிய காரியங்கள்.

பலர் அசுப காரியங்கள் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வது கூட தவறாக நினைக்கிறார்கள். எவரும் இதை பற்றி தெரியாமல், தப்பித்து கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிண ஊர்தி ஓட்டுபவர்கள். பிணம் தூக்கி கொண்டு செல்பவர்கள், இதை செய்து வைக்கும் வாத்யார்கள் இல்லங்களில் அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக தான் இருக்கிறார்கள்.

ஒருவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில் இறந்தால் இவை ஒவ்வொன்றிர்க்கும் ப்ராயசித்தம் செய்தாக வேண்டும். ஒருவர் உத்திராயணத்தில், சுக்ல பக்ஷத்தில், பகலில் இறந்தால் ப்ராயசித்த ஹோமம் கிடையாது.

பர்யுஷிதம்=பழையதானது இறந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் மாத்திரம் செய்தால் போதும். இறந்த 4 மணி நேரத்திற்குள் தஹனம் செய்தால் பர்யுஷித ஹோமமும் தேவை யில்லை.

இந்த விஷயம் தெரியாமல் என் அப்பாவிற்கு எங்காத்து வாத்தியார் நிறைய ஹோமம் செய்தார். உங்கள் வீட்டில் உங்கள் வாத்தியார் ஹோமம் ஒன்று மட்டும் செய்து ஏமாற்றி விட்டார் என்று பேசுகிறார்கள். மற்றும் சிலர் உண்மையில் இவ்வளவு காரியம் உள்ளதா அல்லது வாத்தியார் ஏமாற்றுகிறாரா தெரியவில்லை எங்கிறார்கள்.

இம்மாதிரி விவரமாக எழுதி கொடுத்தாலும் படிப்பது இல்லை. முன்னதாக தெரிந்து கொள்வதில் எந்த தவறுமில்லை.

கர்ண மந்திரம் சொல்ல வேண்டும். பிறகு தஹனத்திற்கு வேண்டிய சாமாங்கள், ஆதார் கார்டு ஜெராக்ஸ் காப்பி, மருத்துவ சான்று, ஆஸ்பத்திரி யில் இறந்தால் எல்லாம் அவர்களே கொடுத்து விடுவார்கள். அதை ஜெரொக்ஸ் காப்பி எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.

ஒரிஜனலும் கையில் எடுத்து சென்று தஹனம் செய்யுமிடத்தில் காண்பித்து அங்கு தஹனம் செய்ய பணம் கட்ட வேன்டும். பிறகு ஸஞ்சயனம், பிறகு தடாக தீரம், கிருஹ த்வாரம் என இரு இடங்களில் குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.


பிறகு நக்ன சிராத்தம் நித்ய விதி; ஏகோத்திர விருத்தி சிராத்தம், நவ சிராத்தம், பத்தாம் நாள் பங்காளி தர்ப்பணம், க்ஷவரம், ப்ரபூத பலி,பாஷான உத்தாபனம், உயிருடன் இருக்கும் மனைவிக்கு கணவன் இறந்த பத்தாம் நாள் புடவை சாற்றுதல். சாந்தி ஆனந்த ஹோமம். அப்பம், பொரி ஓதி யிடுதல், சரம ஸ்லோகம் வாசித்தல்.

வ்ருஷப உத்ஸர்ஜனம், ஏகாதச ப்ராஹ்மண போஜனம், ஆத்ய மாசிகம், ஆவ்ருத் தாத்ய மாசிகம், ஹோமம், சபிண்டீகரணம்; ஆத்ய சோதகும்பம்; தானங்கள், ஐயங்கார்களுக்கு சேவா காலம். வேத ப்ரபந்த பாராயணங்கள். சேவை, சாற்று முறை. உபன்யாசம் ஐயங்கார்களுக்கு, உதக சாந்தி, நவ கிரஹ ஹோமம். ஸோதகும்பம், மாசிகம், ஊனம் ஒரு வருடத்திற்கு நாள் குறித்தல்.

பெண்கள் கசப்பு எண்ணய் தேய்த்து குளித்தல் ;பத்திய சாப்பாடு, அவரவர் ஊருக்கு கிளம்புதல்.

நக்ன சிராத்தம்:- இறந்தவர்களுக்கு ஏற்படும் ஐந்து விதமான பாதிப்புகளிலிருந்து விடுபட செய்ய படுகிறது.

நித்ய விதி:- கல்லில் ஆவாஹனம் செய்ய பட்ட ஆன்மாவிற்கு தினமும் ஆகாரம் வாஸ உதகம். தில உதகம்.பிண்டங்கள் போடுவது.

ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்:-பத்தாம் நாள் வரை தினமும் செய்ய வேண்டிய சிராத்தம்.
நவ சிராத்தம்:- 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்ய வேண்டிய சிராத்தம். 1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்.

பாஷான உத்தாபனம்:- ஆன்மாவை யதா ஸ்தானம் செய்து கல்லை எடுப்பது.

தஹனம்:- இறந்தவருக்கு செய்ய படும் முதல் நாள் கிரியை. மரணத்தால் ஆன்மாவை விட்டு பிறிந்த சரீரத்திற்கு செய்ய படும் கர்மா.

அக்னி நிர்னயம்:- ப்ரேதாக்னி, உத்தபனாக்னி,கபாலாக்னி,பைத்ரு மேதித ப்ராயசித்த ஹோமங்கள்;
தஹனம் செய்ய சுடுகாடு அல்லது நகரமானால் எலக்ட்ரிக் கிரிமடோரியம் சென்று பணம் கட்டி இறப்பு சான்றிதழ் , ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற்று கொள்ள வேண்டி இருக்கிறது. தமிழ் நாட்டில்.

உதல் நாள் தேவையான சாமாங்கள்:- ஆஸந்தி (பாடை) பச்சை மூங்கில் ஒன்பது அடி நீளத்தில் இரண்டு, பச்சை தென்னங்கீற்று இரண்டு, குறுக்கு கொம்புகள் 12; கப்பானி கயிறு 2 முடி; நெல் பொறி 100 கிராம்; நெய் 200 கிராம்; கருப்பு எள்ளு 50 கிராம்; கற்பூரம் 4 கட்டி; தீபெட்டி 1;

வெற்றிலை 12; பாக்கு 6; பழம் 2; புஷ்பம் 2 முழம்; கரை இல்லாத வெள்ளை மல் 2 மீட்டர்; சுமங்கலி ஆனால் சிவப்பு துணி 2 மீட்டர்; விராட்டி 8; சுள்ளி 12; அத்தி இலை ஒரு கொத்து; மண் பானை மீடியம் சைஸ்-1; பெரிய மண் மடக்கு 2; சிறிய மடக்கு-4;

இரண்டு பழைய துண்டுகள் அல்லது டவல். சந்தன கட்டை-1. சுடு காடு என்றால் சவுக்கு கட்டை, வெட்டியானுக்கு பணம், விராட்டியும் அதிகம் வேன்டும். வாய்க்கரிசி போட அரிசி, 500 கிராம்;

ஆஸ்பத்திரியில் மரணம் என்றால் அவர்களே வீட்டிற்கு ப்ரீஸர் பெட்டி வைத்து அனுப்பு கிறார்கள். இக்காலத்தில் வெளி நாட்டிலிருந்து இங்கு கர்த்தா வர மூன்று நாட்கள் ஆகிறது. கர்த்தாவின் சகோதரர் இங்கு இருந்தால் சகோதரர் தஹனம் செய்து விட வேண்டும்.

வீட்டில் மரணம் என்றால் கர்த்தாவும் இங்கே இருந்தால் கர்ண மந்திரம் ஜபம் செய்யலாம்.
உடலை குளிப்பாட்ட வேண்டும். இந்த தண்ணீர் வெளியே ஒடி விட வேண்டும். அம்மாதிரி உள்ள இடத்தில் உடலை தெற்கு பக்கம் தலை வைத்து வைக்க வேண்டும்.

தெற்கு நோக்கி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தர்ப்பம் வீட்டில் இருந்தால் உடலுக்கு அடியில் வைக்கலாம். துளசி இலையும் கங்கை ஜலமும் பக்கத்தில் வைக்க வேன்டும்.

அந்த காலத்தில் ரேழியில் உடலை வைப்பார்கள். குளிப்பாட்டும் தண்ணீர் வாசலுக்கு ஓடி விடும்.
உயிர் பிறிய போவது தெரிந்தால் பூஜை அறை அல்லது பூஜை அலமாரியில் இருந்து கங்கை தண்ணீர், தர்ப்பம் எடுத்து வைத்து கொண்டு, பூஜை அறை விளக்கையும் அனைத்து விட்டு கதவை சாற்றி வைக்க வேண்டும்.

கர்த்தாவிற்கு ஒன்பது ஐந்து வேட்டிகளும், ஒன்பது கஜ புடவை, உள்ளாடைகள் கர்த்தாவின் மனைவிக்கும் பீரோவிலிருந்து எடுத்து வைத்து கொண்டு பிரோவை மூடி விடவும். வாத்தியாருக்கு சொல்லி அனுப்பவும். தானம் கொடுக்க மணி, தீபம், பித்தளை சொம்பு இத்யாதிகள் எடுத்து வைத்து கொள்ளவும்.

நகரத்தில் எலக்டிரிக் கிரிமடோரியத்தில் தஹனம் ஆன ஒரு மணி நேரத்தில் ஒரு மண் பானையில் அவர்களே எலும்பும் சாம்பலும் கொடுத்து விடுகிறார்கள். அதை வாங்கி கொண்டு நேரே ஸமுத்திரத்திற்கோ அல்லது ஆற்றிர்கோ சென்று அங்கு போட்டு விட்டு குளித்து விட்டு வீட்டிற்கு வந்து விடலாம்.


இங்கு வந்து பாஷாண ஸ்தாபனம் செய்து விடலாம். தற்காலத்தில் பல செளகரியங்களை உத்தேசித்து 3,5,7,9 ம் நாள் தான் பாசாண ஸ்தாபனம் செய்கிறார்கள். தாய் தந்தை காரியம் ஆரம்பிக்க ஒற்றைபடை நாள் பார்க்க தேவையில்லை.

பிள்ளை இல்லாதவர்கள் கணவனுக்கு மனைவி செய்வதாயின் எந்த ஒரு ஆணிடம் வேன்டுமானாலும் பில் கொடுத்து பண்ண சொல்லலாம். பங்காளிகளாக இருப்பின் ப்ராசீனா வீத துடன் செய்யலாம்.

என்று ஆரம்பித்தாலும் தேவையான சாமான் கள்:- நக்னத்திற்கு வெங்கல பானை, சிப்பல், கரண்டி
விளக்கு, குள பாத்திரம், பத்தாறு வேஷ்டி ஒரு ஜோடி; அரிசி, வாழைக்காய், சொம்பு, பயற்றம் பருப்பு, வெல்லம், வெற்றிலை பாக்கு, தக்ஷிணை.

செங்கல்லால் கட்ட பட்ட குண்டம்-2; அல்லது பூந்தொட்டி 2; கிருஹ த்வார குண்டத்தில் கட்ட ஓலை, மண் பானை, தீப்பெட்டி, திரி நூல், எண்ணைய்; காஸ் அடுப்பு அல்லது குமுட்டி, கரி,

நாள் ஒன்றுக்கு 50 கிராம் அரிசி போட்டு பொங்கிய சாதம் கொண்டு ஒரு பெரிய பிண்டமும், ஒரு சிறிய பிண்டமும் தேவை. தினமும் இள நீர்-1; வெல்லம், எள்ளு, நெய், தயிர், சிறிதளவு தொன்னயில் எடுத்து வைத்து கொள்ளவும்.

பத்து நாட்களுக்கு குண்டம் கார் ஷெட்டில் வைத்து கொள்ளலாம். இல்லாவிட்டால் சிட் ஔட் அல்லது பின்புறம் தென்னை மரம் இருந்தால் அதன் அடியிலும் வைத்து கொள்ளலாம். இறந்தவரின் பெண் அல்லது மருமகள் ஸ் நானம் செய்துவிட்டு சொட்ட சொட்ட ஈரத்துடன் குமுட்டி அடுப்பு மூட்டி பிண்டம் தயாரித்து கொடுத்து விட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும்.

மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேன்டும். நாய், பூனை எதுவும் அங்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.கிரஹ த்வார் குன்டத்தின் மேலே இறந்தவரின் பழைய வேட்டியோ, புடவையோ போட்டு வைக்க வேண்டும்.

ஏகோத்திர வ்ருத்தி சிராத்தத்திற்கு முதல் நாள் முதல் அல்லது ஆரம்ப நாள் முதல் அரிசி, வாழைக்காய்; சேம்பு, வெல்லம், பயற்றம் பருப்பு, வெற்றிலை பாக்கு தக்ஷிணை , வாத்தியார், அசிஸ்டென்ட் வாத்தியார் தக்ஷிணை தர வேண்டும். பழைய ப்லாஸ்டிக் கேரி பேக்குகளில் போட்டு கொடுக்கலாம்.
 
அந்திம காலம் என்று தெரிந்தவுடன் செய்ய வேண்டியவை.





ப்ராணாவஸ்தையில் இருப்பவர்களுக்கு நெற்றியில் வீபூதி இட வேண்டும்.துளசி வாயில் போடு. கங்கை தண்ணீர் கொடுக்கவும்.எல்லோரும் சேர்ந்து நாம ஸ்மரணம் சொல்ல வேண்டும்.





பூஜை அலமாரி/ ரூமை மூடி வைக்கவும். வேண்டிய துணிகளை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.குடம், சொம்பு அரிசி முதலியவைகளை எடுத்து வைத்துக்கொள்ளவும்.





தச தானம், தீப தானம், தீர்த்த பாத்திர தானம், காவேரி ஸ்நான ப்ரதி நிதி கோமூல்ய தானம் செயது ஜப தக்ஷிணை கொடுக்க வேண்டியது. பகவத் நாம ஸங்கீர்த்தனம்,உத்க்ராந்தி கோதானம் செய்யவும். உறவினர்களுக்கு தெரிவிக்கவும்.





புத்ரன் வலது தொடையில் இறக்கும் தருவாயில் உள்ளவரின் தலையை வைத்து கொண்டு வலது காதில் கர்ண மந்திர ஜபம் செய்ய வேண்டியது.


ராம நாமா சொல்ல வேண்டும்.





கீழே தர்ப்பையை தெற்கு நுனியாக பரப்பி அதன் மேல் தென் புறமாக உடலை வைக்கவும். இரு கை கட்டை விரல்களையும், இரு கால் கட்டை விரல்களையும் சேர்த்து கட்டவும்.





ப்ரேதத்தின் பக்கத்தில் தொன்னையில் துளசி இலை வைக்கவும். உயிர் நீங்கிய பின் ஒன்றரை மணி நேரத்திற்கு தீட்டு கிடையாது.பிறகு தான் துக்கம் விசாரிக்க வரவேண்டும்.





ஒரு பொருளை தயாரித்து மூன்று மணி நேரமாகி விட்டால் அது பழையது ஆகி விடுகிறது. அசுத்த பொருளை அக்னியில் போடக்கூடாது. உடலை ஹவிஸ் என அக்னியில் போடுகிறோம்.





இறந்து பத்து மணி நேரத்திற்கு மேல் உடலை வைத்து கொள்ள கூடாது.


அப்படி வைத்து கொண்டால் பர்ஷியுத ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.





ப்ராயஸ்சித்தம் க்ருச்சரம் - இது சாந்திராயணம், தப்தம், ப்ராஜாபத்யம் என பல வகை படும். இறந்த மூன்று மணி நேரத்திற்குள் கொளுத்த கூடாது.





ப்ராயஸ்சித்தம் செய்தவர் பிழைத்து விட்டால் தோஷமில்லை.காதில் ராம ராமா என்று சொல்லி கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும்.





சுவாஸம் கண்டுவிட்டது ப்ராணன் வெளியே செல்ல ஆரம்பிக்கும் போது ஆயுஷ; என்ற கர்ண மந்திரம் வலது காதில் சொல்ல வேண்டும்.





இதன் அர்த்தம் :- ஆயுசும் ப்ராணனும் ஒன்றாக சேரட்டும். ப்ராணன் , அபாணன் முதலியவைகளும் , கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்களும், மனதும் ஒன்றாக சேர்ந்து சுவர்க்கம் செல்லட்டும்.


கர்ண மந்திரம் சொன்ன பிறகு தான் தீட்டு துவங்கும். இறந்தவரின் பெண், மருமகள், சகோதரி ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சொட்ட சொட்ட


தண்ணீர் கொண்டு வந்து காலிலிருந்து தலை வரை பூத உடலுக்கு ஸ்நானம் நம் செய்விக்க வேண்டும்.





ஈர வஸ்த்ரம் பிழியாமல் உடுத்துவது , அப்பிரதக்ஷிணமாக சுற்றுவது , படுத்திருக்கும் போது நெற்றிக்கு இடுவது , ப்ரேத காலத்தில் செய்வதால் மற்ற காலங்களில் செய்ய கூடாது.





ப்ரேதத்தை மூட வாங்கிய துணியிலேயே கொஞ்சம் கிழித்து வைத்து கொண்டு அதயே பத்து நாளும் வஸ்த்ரோதகம் விட உபயோகிக்க வேண்டும்.





பவித்ரம் ஒரே தர்பையால் ஆனது இப்போது உபயோகிக்க வேண்டும்.


அக்னி பரிஷேசனங்களுக்கும், ஔபாஸனத்திற்கும் மந்திரமில்லை.


சவத்துடன் தொடர்பு இருக்கும் படி கயிற்றால் தொட்டு கொண்டே ப்ரேயு வாகும் ஸம் என்ற மந்திரத்தை கூறி ஹோமம் செய்ய வேண்டும்.





இது யமனுக்காக செய்ய படுகிறது. புது வஸ்த்ரம் போர்த்தவும் பழைய வஸ்த்ரம் எடுக்கவும் மந்திரம் உண்டு.





மயானத்திற்கு போகு முன் எள், பச்சரிசி, வேகாதபடி பாகம் செய்த அரிசி,


அத்தி கொத்து நெய், தர்பை, ஒடு, சல்லி, மணல் ஆகியவைகளை முன்னாடி அனுப்ப வேண்டும்.





கர்த்தா ஒரே வஸ்திரத்துடன் இருக்க வேண்டும். தலை குடுமி அவிழ்ந்தி ருக்க வேண்டும். நெருப்பு சட்டியை முன்னே எடுத்து செல்ல வேண்டும். பிரேதத்திற்கு பின் பங்காளிகள் செல்ல வேண்டும். பக்கத்திலோ முன்னோ செல்ல கூடாது.





வழியில் மூன்று முறை ப்ரேதத்தை கீழே வைத்து பலி கொடுக்க வேண்டும். அல்லது மயானத்திலாவது மூன்று முறை கீழே வைத்து பலி கொடுக்கா விட்டால் வழியிலுள்ள ஜீவன்கள் இந்த ஜீவனை ஹிம்சிக்கும்.





இதற்காக அரிசியை களைந்து தீயில் பாதி வெந்ததாக பாகம் செய்ய வேண்டும். ப்ரேத காரியத்தில் அன்னத்தை தெற்கு பக்கமாக இறக்கி வைக்க வேண்டும். தேவ காரியத்தில் அன்னம் நன்றாக வெந்தபின் வடக்கு பக்கமாக இறக்கி வைக்க வேண்டும்.





மயானத்தில் உடலை தகிக்க போகும் இடத்திற்கு மேற்கில் உடலையும், அக்கினியையும் வைக்க வேண்டும். எல்லோரும் வடக்கு புறம் செல்ல வேண்டும். அத்தி கொத்தால் இடத்தை சுத்தம் செய்ய அபேதவீதா என்ற மந்திரம்.





ஸ்வர்ணத்தினால் ப்ரேதத்தை துடைக்க வேண்டும். வலது தொடையை கையால் தட்டி கொண்டு மூன்று முறை ப்ரேதத்தை அப்பிரதக்ஷிணமாக சுற்ற வேண்டும். இதில் சிறிய சகோதரன் முதலிலும் கர்த்தா கடைசியிலும் செல்ல வேண்டும்.





உடலை சிதையில் வைத்த பின் நெய்யை வாய், வலது கண்,இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது இடது காது ஆகிய இடங்களில் சொட்ட வேண்டும். அக்காலத்தில் ஸ்வர்ணம் வைக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார்கள். ஸ்வர்ணத்திற்கு பதில் நெய் சொட்டு விடுகிறோம்.





பெரும்பாலும் இந்த ஏழு த்வாரங்கள் வழியே தான் ப்ராணன் போகிறது. பிறகு எள்ளுடன் கலந்த அரிசியை (வாய்க்கரிசி ) பந்துக்கள் போட வேண்டும்.





தம்பதிகளில் ஒருவர் இறந்தால் ஒளபாசனாக்னி உபயோகிக்க வேண்டும்.


பத்னி இல்லாதவருக்கு, புருஷன் இல்லாதவருக்கு உத்தபனாக்னி ஸம்ஸ்காரம்.


தீயில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி அதில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி அதில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி யதே உத்தபனாக்னி எனப்படும்.





பருஹ்ம மேத ஸம்ஸ்காரம்;- ப்ருஹ்ம வி நாப்னோதி பரம் பிர்குர்வை வாருணி என்ற மந்திரம் சொல்ல வேண்டும். ராம சிவ நாமங்கள், பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி காதில் சொல்ல வேண்டும். துளசி தீர்த்தம் வாயில் விட வேண்டும்.





தக்ஷிணாயனம், இரவு, கிருஷ்ண பக்ஷம் இவைகளில் இறந்தால் ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும். உடல் அக்னியில் ஹோமம் செய்ய படுவதால் சுத்தமாக இருக்க வேண்டும்.





பிணத்தை சிதையில் வைத்த பின் வெள்ளி நாணயங்களை பிணத்தின் கையில் வைத்து எடுத்து பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். பின் வாய்கரிசி போட்டு அபிரதக்ஷிணமாக வந்து பானையை உடைத்து எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும்.





பின் க்ஷவரம் செய்து ஸ்நானம் செய்து வீடு திரும்ப வேண்டும்.





இதற்குள் அலம்பின வீட்டிற்கு ஒரு வாத்தியார் புண்யாஹ வாசனம் செய்திருப்பார். அன்றைய சாப்பாடு சம்பந்தி பொறுப்பு.





மத்யானமே கல் ஊன்றுவது வழக்கம். தனிஷ்டா பஞ்சகம்= அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இதில் இறந்தால் ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.





ப்ரேதத்தின் வாயில் ஸ்வர்ண தகட்டை வைத்து வ்யாஹிருதிகளால் ஹோமம் செய்து பாதி நெய்யை அக்னியிலும் பாதி நெய்யை ஸ்வர்ண தகட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும். இக்காலத்தில் ஸ்வர்ண தகட்டிற்கு பதில் நெய் விடுகிறார்கள்.





ஐந்து கூர்ச்சம் தர்ப்பைகளால் செய்து ஆவாஹனம் செய்து பூஜித்து தஹன சமயத்தில் ,ப்ரேதத்தின் தலை, கண், வயிறு, நாபி, கால் ஆகிய இடங்களில் வைத்து ஹோமம் செய்து ப்ரேதத்துடன் எரிக்க வேண்டும்.








ப்ராமணனுக்கு அஸ்தி ஸஞ்சயனம் நான்காவது நாள் செய்ய வேண்டும்.


அஸ்திகளை இடது கை மணிக்கட்டில் கம்பளி கயிறு, கண்டங்கத்ரிகாய் ,அத்தி இலை கட்டி கொண்டு இடது கையால் சேகரிக்க வேண்டும். கடலில் போடும் வரை அகமர்ஷண சூக்தம் சொல்ல வேணும்.





மறு நாள் விடியுமுன் ஸ்நானம் செய்து ஈர வஸ்த்ரதுடன் உப்பு போடாத அரிசி மாவினால் 11 அடைகள் தட்டி பயரை சுண்டி எடுத்து கொண்டு சஞ்சயனத்திற்காக மயானம் செல்வர்.





பின் சாம்பலில் ஒரு உருவம் மாதிரி செய்து ,கால் பக்கம் நின்று கண், காது, மூக்கு, மார்பு, கை கால்களில் மந்திரம் சொல்லி அடைகளை எறிந்து விட்டு


அஸ்தியை பானையுடன் ஆற்றிலோ, சமுத்திரத்திலோ போட்டுவிட்டு வீடு திரும்ப வேண்டும்.





க்ருஹ த்வார குண்டத்தில் மேல் பச்சை தென்னை ஓலையை வளைத்து வைத்து தென்னம் பாளைகளை வெட்டி வைத்து மேல் பக்கம் வேஷ்டி, ருத்ராக்ஷ மாலைகள் சாற்றி விளக்கு ஏற்றி வைத்து மூன்று இழைகளில் கோலம் போட வேண்டும்.





பிறக்கும் ஜீவன் , பால்யம், யெளவனம், முதுமை அடைவது போல் இறக்கும் ஜீவன் பூத அணு சரீரத்துடன் சேர்ந்து ஒரு நிலை அடைகிறது. பிரேத நிலை அடைந்த பின்பு தான் யாதனா சரீரம் ஏற்படுகிறது.





ப்ரேத சரீரம் இறந்த பத்து நாட்களில் புத்ரனால் அளிக்க படும் பிண்டத்தினாலும் , எள், தண்ணீர் தர்ப்பணத்தினாலும் உண்டாகிறது.


ஜீவன் யம லோகம் செல்ல 12 மாதமாகிறது. தனி யான ஜீவனுக்கோ சூக்ஷ்ம சரீரத்திற்கோ போதல் வருதல் கிடையாது.





ஆகவே ஜீவன் பூத உடலை விட்டு கிளம்பு முன்பே , அடுத்த உடலுக்கு ஆரம்பமான சில பூத பரமாணுக்கள் சூக்ஷ்ம சரீரத்திற்கு சஹாயமாக அளிக்க படுகிறது. இதை பற்றி கொண்டே சூக்ஷ்ம சரீரம் செல்கிறது.





புண்ய பாவங்களை அனுபவிப்பதற்கு ஏற்ப அந்த உடல் ஓராண்டில் பூர்ண மாகிறது.





ஆசைகள் உள்ளவர்களை பூத ப்ரேத பிசாச லோகங்களை தாண்டி செல்ல விடாமல் உலகம் ஆகர்ஷிக்கிறது. இந்த ஆசை அகலவே எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டியது இருப்பவர் செய்யும் கடமை. இறக்க வேண்டியவன் இவன் தான் என நிர்ணயம் செய்த பின் தன் உடலில் ஜீவன் புக முடியாமல் வருந்தும்.





உடல் தீயிட்ட பின் பசி தாகம் என அலறும். நக்ன சிராத்தம் செய்தால் தான் சாந்தி அடையும்.





அந்த காலத்தில் வீட்டில் கிரஹ குன்டமும், ஆற்றங்கரையில் தீர்த்த குண்டம் என இரு குண்டங்கள் ஏற்படுத்தி சிறிய கருங்கல் மூன்றை தர்ப்பையால் ஒன்றாக கட்டி ஊன்றுவார்கள். கருங்கல் சிலைகளில் தேவதைகள் தங்குவது போல்





இந்த ஜீவனும் இந்த கல்லில் தங்கும். பிண்டம் போடுதலும் ஜல தர்ப்பணமும் செய்ய ப்படும். தீர்த்த கரையில் ஜல தர்ப்பணம் மட்டும் தான். தாகம் அடங்கவே இது. பங்காளிகளும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பத்து நாளும் பிண்ட தானம் செய்ய செய்ய பிரேத உடல் உருவாகிறது.





பத்து தினம் , தினமும் காலையில் பெண் பிண்டம் செய்து தர , வாஸோதகம், திலோதகம் விட்டு இறந்தவர் ஆத்மாவை த்ருப்தி செய்ய வேண்டும். 90 வயதில் இறந்தாலும், இந்த ப்ரேத சரீரம் ,30 வயதில் இறந்தவர் எப்படி இருந்தாரோ அதே மாதிரி உண்டாகிறது. அந்த காலத்தில் பெண்கள் மாலையில் பிலாக்கணம் பாடுவார்கள்.





தகனத்தால் உண்டான எரிச்சல், பசி தாகம் அடங்க , ப்ரேத சரீரம் விருத்தியாக திலோதகம், வாஸோதகம் கொடுக்க படுகிறது. உதகம் என்றால் தண்ணீர் என்று அர்த்தம். திலம் என்றால் கருப்பு எள்.


முன்பு உடலுக்கு போற்றிய புது துணியை சிறிது கிழித்து வைத்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா. அந்த துணியால் தான் தினமும் மூன்றாக மடித்து ஒரு தர்பையும் அத்துடன் வைத்துகொண்டு மந்திரம் சொல்லி ஜலத்தில் தோய்த்து தோய்த்து மூன்று முறை பாஷாணத்திலேயே பிழிய வேண்டும்.





முதலில் சிறியவன் தான் ஆரம்பிக்க வேண்டும். எல்லா சகோதரர்களும் விட வேண்டும்.முதல் நாள் 3 தடவை. இரண்டாம் நாள் 4 தடவை; 3ம் நாள் 5 தடவை; 4ம் நாள் 6; 5ம் நாள் 7; 6ம் நாள் 8; 7ம் நாள் 9; 8ம் நாள் 10;





9ம் நாள் 11 தடவை; 10 ம் நாள் 12 தடவை; என்ற முறைப்படி வாஸோதகம் அளிக்க வேண்டும். வீட்டில் இம்மாதிரி வாஸோதகம் விட்ட பின் காலை உணவிற்கு ஒரு பிண்டம்; மாலை உணவிற்கு ஒரு பிண்டம் ஸமர்ப்பிக்க


வும்.





இந்த வஸ்த்ரம் சொம்பு இவைகளை மாற்றக்கூடாது. கிரஹ குண்டத்திற்கு வஸ்த்ரம், ருத்ராக்ஷம், பச்சோலை பந்தல், இளநீர், தீபம் முதலியன தேவை.


மேலிருந்து உரி போல கட்டி அதில் ஒரு சிறிய துவாரமுள்ள மண் பானையை வைத்து அதில் தீர்த்தம் விட்டால் 24 மணி நேரமும் அதிலிருந்து கிரஹ த்வார குண்டத்தில் தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும். அந்த காலத்தில் ஓட்டு வீட்டில் இது முடிந்தது.





தினமுமொரு இளநீர் காயும் வைக்க வேண்டும். தர்ப்பணத்தால் தாகம் அடங்கும். பசிக்கு தினமும் ஆம சிராத்தம் செய்ய வேண்டும். முதல் 3 என்று பத்தாம் நாள் 12 என்ற படி ஒவ்வொரு நாளும் ஒன்று அதிக மாக 75 பேருக்கு அரிசி, பயற்றம் பருப்பு; காய், தக்ஷிணை தர வேண்டும்.





3+4+5+6 +7+8+9+10+11 +12= 75 மொத்தம். இதனால் ப்ரேதத்தின் பசி தீரும். இந்த அரிசி தானம் செய்யும் போதெல்லாம் இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும். தண்டுலா; வைசுவதேவத்யா: பாகேன அன்னம் பசந்தியே. தஸ்மாத் தண்டுல தானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.





நவ சிராத்தம்:- இறந்தவருக்கு 1,3,5,7,9, 11 ஆகிய நாட்களில் செய்ய வேண்டியது. இது இறந்தவருக்கு ப்ரேத ஸ்வரூபத்தை அகற்ற கூடியது. ஆகாரமாகவும் ஆகிறது.





கிரஹ குண்டத்தினருகே படைத்த இரு பிண்டங்களையும் வஸ்த்ரத்தில் எடுத்து கொண்டு ப்ராசீனாவீதியாய் குளம் அல்லது நதியில் இறங்கி தெற்கு முகமாக நின்று பிண்டங்களை ஜலத்தில் விழும்படி ஆகாயத்தில் எறிய வேண்டும். ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் எறிய வேண்டும்.





முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும்.





பத்தாம் நாள் ப்ரேத உடல் அகலுவதற்காக வ்ருஷ உத்ஸர்ஜனம் செய்ய படுகிறது. ( காளை கன்று உடம்பில் சூலம் மாதிரி குறியிட வேண்டும்.).


3 லிட்டர் அரிசியின் அன்னம், உப்பு போடாமல் செய்த11.இட்லி11,அடை,11 அப்பம்,11முறுக்கு 11 ,வடை இத்யா திகளை கல் ஊன்றிய இடத்தின் அருகில் வைத்து படைப்பதையே பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி எங்கிறார்கள்.





இரவு ஒரு மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு ஈர வஸ்த்ரத்துடன் பெண்ணும், மருமகளும் இவைகளை தயாரித்து வைப்பர். ப்ரபூத பலியின் போது ப்லாக்கணம் பாடுவார்கள்.





அந்த காலத்தில் இதை வபனம் செய்யும் நாவிதரிடம் மூட்டை கட்டி கொடுப்பர். அவர் உப்பு தண்ணீரில் தோய்த்து இதை சாப்பிடுவர். இக்காலத்தில் சலூன் காரர்கள் வாங்குவதில்லை ஆதலால் ஆற்றில் சமுத்திரத்தில் கரைக்க வேண்டி யிருக்கிறது. பிறகு ஸ்நானம் செய்துவிட்டு வீடு திரும்ப வேண்டும்.








ஊன்றிய கற்களை பத்தாம் நாள் எடுத்தவுடன் ப்ரேத சரீரத்திற்கு அதிக பசி ஏற்படும். ப்ரேத சரீரம் பூரணமாக வளர்ந்து இப்போது, தான் பூரண சரீர முள்ளவன் என எண்ணுகிறது.








கணவன் இறந்திருந்தால் நாலாம் நாள் இறந்தவரது மனைவியை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து கீழே நெல் தெளித்து அதன் மேல் நடந்து வர செய்வர். பால் பழம் கொடுப்பர். புக்ககம் கொண்டு விடுவர்.








எட்டாம் நாள் இட்லி எண்ணைய் மிளகாய் பொடி எல்லா வீடுகளுக்கும் இறந்தவரின் பெண் போடுவது வழக்கம்.





நார் மடி புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின் மற்ற உறவினர்களும் போடுகின்றனர். எல்லா சுமங்கலிகளையும் அப்புரம் போக சொல்லி விட்டு பூவையும் தாலியையும் அகற்றி விடுவர். சிலர் 10ம் நாள் இரவு நடு நிசிக்கு பின் தாலி கழற்றி பால் கிண்ணத்தில் போடுவர்.





அன்று மாலை சரம ஸ்லோகம் வாசிக்க சொல்வர். கில ஊர்களில் 13 ம் நாள் சரம ஸ்லோகம் வாசிகின்றனர்.





கர்த்தா நான்கு பாத்திரங்களில் எள், ஜலம், வாசனை திரவியம், சந்தனம் ஆகிய வற்றால் நிரப்பவேண்டும். இதில் 3 பித்ருக்களுக்கும், ஒன்று மரணமடைந்த வருக்கும் வைக்க படும். இந்த ஒற்றை கிண்ண திரவியத்தை





மற்ற கிண்ணங்களிலும் விட வேண்டும். இதுவே இறந்த ஜீவனுக்கு பித்ரு லோகம் செல்லும் வரை ஆகாரமாகும்.பிண்டான்னம் 7 தலை முறைக்கு போய் சேரும்.





12ம் நாள் சபிண்டீகரணம் செய்த பின் முந்தய பித்ருக்களுடன் சேர்க்க வேண்டும். ஜீவன் யம லோகம் போக ஒராண்டு காலம் ஆகுமாதலால் கிரமபடி அதன் பின்பே சபிண்டீ கரணம் செய்ய வேண்டும்.





ஆனால் கர்த்தா அது வரை உயிருடன் இருப்பார் என்ற நிலை இல்லாததால் 12 மாதங்களில் செய்ய வேன்டிய மாஸ்யங்களை முன்னமேயே செய்து சபிண்டீகரணமும் செய்ய படுகிறது.





யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் அன்னம், தீர்த்தம், கிடைக்கும்படி சோத கும்பம் மாஸ்யம் செய்ய வேண்டும்.


பித்ருக்கள் தாகம் அடங்க சோதகும்பம். ஊன மாஸ்யம்-4. மாஸ்யம் 12.


ஜீவன் யம லோகம் செல்லும் காலத்தில் அதற்கு வேண்டிய ஸகல செளகரி யங்களையும் சபின்டீகரணதன்று தானமாக செய்ய வேண்டும். வைதரணி நதி கடந்து செல்ல பசு மாடு தானம் செய்ய வேண்டும்.





11ம் நாள் ஏகோதிஷ்டம்:- இது சோதகும்பத்தின் விரிவானது. சோதகும்பம் சுருக்க மானது. 16 மாசிக சிராத்தம், சபிண்டீகரண சிராத்தம் செய்த பின்பே இறந்த ஜீவனுக்கு பித்ரு லோகத்தில் இடம் கிடைக்கிறது. அன்று பசு தானம் விசேஷம்..





ஸ்தூல உடம்பிலிருந்த வாசனையால் இறந்தவனின் சரீரம் பசி தாகம்


இருப்பதாகவும், கண் ,காது இல்லை. வஸ்த்ரம் இல்லை என வருந்தும்


சபிண்டீகரணதன்று இக்குறைகள் போக சகல தானங்களும் செய்ய படுகிறது.





தற்கால சாந்திக்காக அரிசி, பருப்பு, தேங்காய், தீபம், வஸ்த்ரம் அனைத்தும்


தானமாக வழங்க படுகிறது.





பிராயஸ்சித்த ஹோமம்.:-


இனிமேல் இரு தர்ப்ப பவித்ரம்.


அக்னி மூட்டி ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம்.எள்ளினால் ஹோமம் செய்ய வேண்டும். விஸ்வேதேவஸ்ய என்ற மந்திரத்தால் ஸவிதாவிற்கு ஹோமம்.


யமோதாத் என்ற மந்திரத்தால் யமனுக்கு ஹோமம். உஸந்தஸ்த்ர என்று பித்ருக்களுக்கு ஹோமம். . வியாக்ருதியை தனியாகவும் சேர்த்தும் ஹோமம்.





தீட்டு அகலவும் துக்கம் நீங்கவும் சாந்தி ஹோமம்.


தீட்டு அகல ஏற்றது மாவிலங்க இலை. இதை தலைகீழாக வைத்து அக்னிக்கு ஹோமம். தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ஏற்றது பலாச இலை.





ப்ரேதங்களுக்கு ஏற்றது அத்தி இலை.





அக்னியில் பக்குவமான நெல் பொரியை எல்லோரும் சாப்பிட வேண்டும். சரம ஸ்லோகம் வாசிப்பர். அதாவது இறந்தவரது வருஷம், அயனம், ருது, பக்ஷம், திதி கோத்திரம் சர்மா இவைகளை பாட்டாக எழுதி சொர்க்க லோகம் செல்வதாக வாசிப்பர்.





பெண் அப்பம், பொரி, லட்டு செய்து எல்லோருக்கும் வினியோகிப்பர்.





துறவிகளுக்கு:-





ஸித்தியான துறவிகளுக்கு ஸ்ரீ ருத்ரம் சொல்லி சுத்த ஜலம் அபிஷேகம். டோலி செய்து அதில் உட்கார வைத்து உபனிஷத் பாராயணம் செய்து கொண்டு நதிதீரம் அல்லது தடாக தீரம் எடுத்து செல்லவும். தீட்டு கிடையாது





ஒரு தண்டம் அளவு கொம்பு வைத்து அதற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும். இதம் விஷ்ணு மந்திரம் சொல்லி கொம்பை மூன்றாக உடைத்து கொம்பை வலது கரத்தில் வைத்து, கமண்டலத்தை இடது கரத்தில் வைத்து





புருஷ சூக்தம் ஜபம் செய்து தலை பிளக்கும் வரை தேங்காய்களை உடைக்க வேண்டும். கபாலம் பிளந்த பின் பிரணவத்தாலும் வ்யாஹ்ருதியாலும் உப்பை கொட்டி மூட வேண்டும். பின் ப்ரதக்ஷிண நமஸ்காரம்.அவப்ருத ஸ்நானம். பத்து நாள் வரை நித்ய பூஜை. பாயச தானம்





தர்ப்பணம் செய்ய வேண்டும். பிண்டம் அளிப்பது போல் பாத்திரத்துடன் பாயச தானம்.பத்தாவது தினத்தில் நித்ய பூஜை, மஹா பூஜை செய்ய வும். பிராமண போஜனம். பதினோராவது நாளில் ப்ரத்யாப்தீகம் போல பார்வண சிராத்தம். சமாதிக்கு பூஜை செய்து 12 ம் நாளில் நாராயண பலி செய்யவும்.





நாராயண பலி;- சுக்ல பக்ஷமானால் கேசவாதி முதல் 12 நாமாக்களுக்கு 12 பிராமணர்களையும் விஸ்வம்பரர் விஷ்ணுவிற்காக ஒருவரும் வரிக்க வேண்டும். கிருஷ்ண பக்ஷமானால் ஸங்கர்ஷ்னர் முதல் 12 நாமாக்களால் வரிக்க வேண்டும்.





விசுவம்பரர் விஷ்ணு இலைக்கு எதிரில் கிழக்கு நுனியாக தர்ப்பையை போட்டு அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு 3 வியாஹ்ருதிகளை தனி தனியாக கூறி பலிம் ததாமி என்று சொல்லி 3 பலிகள் வைத்து அதன் மேல் அக்ஷதையும் நீரும் விட வேண்டும்.
 
இறுதி ஸம்ஸ்காரம்-4.
ஆத்மா வேறு இந்த சரீரம் வேறு என்ற திடமான மனது ஏற்படத்தான் கர்மானுஷ்டானம்.ஒரு ஜீவனை வேத மந்திரங்களல் இப்படி சுத்தி செய்து அந்த மந்திரங்களோடு சேர்ந்த கர்மாக்களில் ஈடு படுத்த தான் 40 ஸம்ஸ்கா ரங்கள். என விதிக்க பட்டது.

கடைசியாக இந்த உடலை தேவதைகளுக்கு ஆஹூதியாக ஹோமம் செய்து விடுகிறோம். தர்ம சாஸ்த்ரம் இந்த உடலுக்கு நெய்யை ஊற்றி இதையும் ஒரு
திரவியமாக அக்னியில் ஹோம மந்திரங்களோடு போட சொல்கிறது.

பகவத் கீதை படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம்.பாபம் , புண்ணியம் என்ற இரண்டில் இந்த பிறவியில் செய்ததில் எது குறைவோ அது முதலில் அனுபவிக்க பட வேண்டும்.

இறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. இந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்களுக்கு பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று
பெயர்.
உயிருடன் இருக்கும்போது மாதா பிதாக்கள் செய்வது மக்களை காக்கும். இறந்த பிறகு அவர்களுக்காக மக்கள் செய்யா விட்டால் ( ப்ரேத சரீரத்தை பித்ரு சரீரமாக மாற்றாவிட்டால்) அது மக்களை தாக்கும்.

ப்ரேத நிலையில் துக்கம் அனுபவிக்கும். ஆதலால் நம் குடும்பத்திற்கு க்ஷேமம் கிடைக்காது. குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்காது. அங்க ஹீனத்துடன் குழந்தை பிறக்கும்.

இறந்தவுடன் யம கிங்கிரர்கள் இந்த ஸூக்ஷம சரீரத்துடன் கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்ம ராஜா முன்பு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு. 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவிடுவார். இவைகள் 48 நிமிடங்க ளில் நடைபெறுகிறது.

உயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து ப்ராயச்சித்தம் பைத்ருமேத கர்மா முதலியவைகளை செய்ய வேண்டும். வேதத்தில் 6 வது ஆரண்யக ப்ரஶ்னத்தில் சொல்ல படுகிறது. யம புரியில் யம தர்ம ராஜன் கிருஹத்தை காப்பாற்றுகின்ற நான்கு கண்களை யுடைய இரு நாய்கள் புண்ய சாலிகளை ஹிம்சிக்காமலும், பாபிகளை ஹிம்சித்தும் கொண்டு சேர்க்கிறது என்று.

ஸ்தூல சரீரம் எறிக்கபட்ட உடனேயே ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்ல படுகிறது. இறந்த தினத்திலிருந்து 10 நாள் வரை தினமும் கொடுக்க படும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் உண்டாகிறது.

முதல் நாள் தலை, 2ம் நாள் கண்,காது,மூக்கு; 3ம் நாள் கைகள், மார்பு, கழுத்து, 4ம் நாள் தொப்புள், குதம், லிங்கம். 5ம் நாள் துடைகள், 6ம் நாள் தோல்; 7ம் நாள் நரம்புகள்; 8ம் நாள் ரோமங்கள்; 9ம் நாள் வீரியம், 10 ம் நாள் அகோர பசி. ஆதாரம் வைத்திய நாத தீக்ஷிதீயம். கருட புராணத்தில் சிறிய மாற்றங்களுடன் சொல்ல பட்டிருக்கிறது.

ப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம் தீர்கின்றது. 11ம் நாள் விருஷௌத்ஸர்ஜனம் , பிறகு ஆத்ய மாசிகம், பஞ்சதச மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யம புரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கங்களும் குறைகிறது.

ஸபிண்டீ கரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களுடன் சேர்க்கபடுகிறது.

சாஸ்திரத்தில் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததுடன், உத்கிராந்தி கோ தானம், தச தானம், பஞ்ச தானம் செய்ய சொல்லி இருக்கிறது. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.
இறக்கும் தருவாயில் பசு, பூமி, எள், தங்கம், தீபம் , தீர்த்த பாத்திரம் இவைகளை தானம் செய்வது விசேஷம். தான பலன் மிக மிக அதிகம். ராம , சிவ, நாராயணா என்ற பகவான் நாமாக்களை ஜபிக்க வேண்டும். கீதை, உப நிஷத்,ஸஹஸ்ர நாமம் முதலியவைகளை சொல்ல சொல்லி கேட்கலாம்.


கன்றோடு கூடிய கறக்கும் பசு; 300 கிலோ நெல் விளைய க்கூடிய ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு பூமி தானம் ; தான்யம் 307.2 கிலோ;
எள்ளு 25.6 கிலோ; நெய் 3.2 கிலோ; வெல்லம் 3 கிலோ; உப்பு 307.2 கிலோ

வேஷ்டி ஒன்பது ஐந்து ஒன்று; வெள்ளி 25 கிராம்; தங்கம் 0.75 கிராம்.
ஆதாரம் மாதத்ரமானம் சாரங்கர் ஸம்ஹிதா வைத கிரந்தம். அந்த காலத்து அளவை இந்த காலத்து அளவுக்கு மாற்றி எழுதபட்டது.

இவைகளை சொன்னபடி கொடுக்க முடியாவிட்டால் அதன் விலையை பணமாக கொடுக்கலாம். பூரா அளவும் கொடுக்க முடியாவிட்டால் அவரவர் சக்திக்கு குறையாமல் கொடுக்கவும்.


இறண்டு வயதிற்குள் இறந்தால் புதைக்க வேண்டியது. ஸம்ஸ்காரம் கிடையாது.
இரண்டு வயதிற்கு மேற்பட்டால் ஏகார்ச்ச விதி தஹன ஸம்ஸ்காரம்.
இதில் புருஷருக்கு உபனயனம் ஆன பிறகும், ஸ்த்ரீகளுக்கு கல்யாணம் ஆன பிறகோ இறந்தால் பைத்ருமேதிக விதிபடி தஹன ஸம்ஸ்காரம்.

ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் புருஷர்களுக்கு மட்டும் தான். ஸ்த்ரீகளுக்கு இல்லை.

ப்ரும்ம மேத ஸம்ஸ்கரம் ஶ்ரோத்ரியன் இல்லாதவருக்கும், ஆசாரியனாக இல்லாதவருக்கும் கிடையாது.ப்ருஹ்ம மேத ஸம்ஸ்காரத்தின் மஹிமையும் பலனும் மிக சிறப்பாக உள்ளது.

முறைப்படி பித்ருமேதம் செய்வது மோக்ஷப்ராப்தி.= மறுபிறப்பில்லாமை.
ப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

தகப்பனாருக்கு பிள்ளையாக பிறந்தவன் இதனை அறிந்து முறைப்படி பித்ரு மேதத்துடன் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரமும் இனைத்து செய்ய வேண்டும்.
இறந்தவன் ஶ்ரோத்ரியனாக இருந்தால்= வேத அத்யயனம் செய்து

அனுஷ்டானம் உள்ளவனாக இருப்பது. புத்ரனும் இதற்கு வேண்டிய மந்த்ரம் அத்யயனம் செய்துஇருந்தால் மிகவும் உசிதம் ஶ்ரத்தை உடையவனாக இருந்தால் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரம் செய்யலாம்.

ஆதலால் ப்ராஹ்மணர்கள் ஒவ்வொருவரும் வேத அத்யயனம் தவறாமல் செய்து முடிந்த வரை அனுஷ்டானங்களை கடை பிடித்து தன்னுடைய பிதாவை ப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய செய்வது புத்ரனின் கடமையாகும்.

தர்ம சாஸ்திரதின் கட்டளை:- ஒவ்வொரு புத்ரனும் காசி, கயா சிராத்தங்கள் அவசியம் செய்ய வேண்டும். அப்போதுதான் புத்ரன் 100% புத்ரன் ஆகிறான்.

பிறகும் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய சிராத்தங்களை ஆயுள் முடியும் வரை உரிய காலத்தில் செய்ய வேண்டும்.

நமது ஸனாதன தர்மப்படி இறப்பது என்பது ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு செல்வது போல. உயிர் பிரியும் போது பூமியில் இருப்பது தான் விசேஷம். கட்டிலில் இருந்து கீழே இறக்கு தெற்கு பக்கம் தலை வைத்து தர்ப்பங்களின் மேல் படுக்க வேண்டும்.

ப்ராணன் வெளியில் செல்லும் சமயம் தெரிந்தாலும், தெரியா விட்டாலும் பசு தானம் செய்ய வேண்டும். இந்த சரீரத்தை விட்டு ப்ராணன் கஷ்ட படாமல் போவதற்கும் இந்த பசு மாடு தானம் உதவுகிறது.

கர்ண மந்திரம்:- ப்ராணன், அபானன், வ்யானன், ஸமானன்.உதானன் என்ற ஐந்தும், தோல் கண், காது, மூக்கு, நாக்கு என்ற ஐந்து ஞான இந்திரியங்கள். வாக்கு, கை, கால், குய்யம்,குதம் முதலிய ஐந்து கர்மேந்திரியங்கள், மனஸ்,

சித்தம், புத்தி, அஹங்காரம், என்ற நாங்கும் சேர்ந்து மொத்தம் 19; இந்த 19ம் சேர்ந்து ஸூக்ஷ்ம சரீரமாக சொல்ல படுகிறது. இவைகள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து , பூத பஞ்சகத்தை=(பூமி, ஆகாயம், ஜலம், காற்று, தீ) அடைந்து,

பிறகு பூமி, அந்தரிக்ஷம், த்யு லோகம் அடைந்து , கடைசியாக ஸூக்ஷ்ம சரீரத்தை இந்த மந்த்ரமானது ஸ்வர்க்கம் வரை செல்லும்படி செய்கிறது.

ஸூர்யோதயத்திற்கு மேல் ப்ராணன் சென்று அதாவது காலை 6 மணிக்கு மேல் 6-15 மணிக்குள் ப்ராணன் போனால் மாலை 4 மணிக்குள் தஹனம் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் பழசாகி விடுகிறது.

பகலில் இறந்து முன் இரவில் தஹனம் செய்தாலும்,இரவில் இறந்து பகலில் தஹனம் செய்தாலும், அது யாதா யாமம்=பழசாகி விடுகிறது. ப்ராயஸ்சித்தம் செய்து புதிது ஆக்க வேண்டும்.

ப்ருஹ்மசாரி, உப நயனமாகாத பையன், கல்யாணமாகாத பெண், மனைவியை இழந்த புருஷன், புருஷனை இழந்த ஸ்த்ரீ இவர்களுக்கு ஸ்ம்ருதி வாக்கிய படி அக்னி தயாரிக்க வேண்டும்.

தம்பதிகளில் முதலில் இறந்த ஒருவருக்கு ஒளபாசனாக்னியில் ப்ரேதாக்னி ஸந்தான ப்ரயோகம் செய்ய வேண்டும்.

கபாலாக்னி;- மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடான பிறகு அதில் கொஞ்சம் விராட்டி தூளை போட்டு அக்னி உன்டு பண்ணுவது. இது ப்ருஹ்மசாரிக்கு ஏற்பட்டது.

துஷாக்னி:- அக்னியில் மண் பாத்திரம் நன்றாக சூடான பின் அதில் கொஞ்சம் உமியை போட்டு அக்னி உண்டுபண்ணுவது. இது உப நயனமாகாத பையனுக்கும், விவாஹமாகாத பெண்ணுக்கும் ஏற்பட்டது.

உத்பன்னாக்னி:- தர்பை முஷ்டி மூன்று எடுத்துக்கொண்டு, அதில் ஒன்றை அக்னியில் காண்பித்து , இதில் உண்டான அக்னியில் இரண்டாவது முஷ்டியை காண்பித்து, இதில் உண்டான அக்னியை மூன்றாவது முஷ்டியில் காண்பித்து அந்த அக்னியில் தான் மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் தஹன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

இந்த அக்னி, ஸம்ஸ்காரத்திற்கு யோக்கிய மாவதற்காக 12 வ்யாஹ்ருதிகள் அக்னியில் நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும். ஒளபாஸனாக்னிக்கு சொல்ல பட்ட ப்ரேதாக்னி ஸந்தான முறை வேறு. அது இதற்கு பொருந்தாது.

மாத விடாய் இருந்து அந்த ஸமயத்தில் இறந்தாலும், 6 மாதத்திற்கு மேல் கர்ப்பிணி ஸ்த்ரீ இறந்தாலும் அவைகளுக்கு உரிய ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.

மாத விடாய் இருக்கும் போது கணவன் இறந்தாலும், ப்ரஸவித்து பத்து நாட்களுக்குள் கணவன் இறந்தாலும், கணவன் மனைவி இவர்களில் யாரோ ஒருவர் போயிருக்கும் இடமே தெரியாம லிருக்கும்போது, யாராவது ஒருவர் இறந்தாலும் விசேஷ அக்னி சொல்ல பட்டிருக்கிறது.


அபர காரியங்கள் குளிகன் காலத்தில் ஆரம்பிக்க கூடாது. எப்பொழுதும் ஆசமனம், ப்ராணாயாமம், நமஸ்காரம், ஸ்நானம், இவைகளை உபவீதியாகவே செய்ய வேண்டும்.

தீட்டு உள்ளவர்கள் வீபூதியை ஜலத்தில் குழைத்து இட்டு கொள்ள கூடாது.
ஸந்தியா வந்தனம் செய்யும் போது வீபூதியை எடுத்து அப்படியே இட்டு கொள்ளலாம்.

இறந்தவள் சுமங்கலியாக இருந்தால் நெற்றியில் குங்குமம் இருக்க வேண்டும்.கர்த்தா கர்மா செய்யும்போது வீபூதி இட்டுக்கொள்ளக்கூடாது.
எப்போழுதுமே கோபி சந்தனத்தின் மேல் வீபூதியை குழைத்து இட்டு கொள்ள கூடாது.

இறந்தவர் விதவையாய் இருந்தால் வீபூதியை குழைத்து இட வேண்டும்.
ஸம்ஸ்காரம் நடக்கும் நாட்களில் ஒரு வேளை சாப்பாடு; பூமியில் படுத்து உறங்க வேண்டும். ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்.கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
கர்த்தாவின் நியமங்கள் கர்த்தாவின் மனைவிக்கு அப்படியே உண்டு.
உயிர் பிறிந்ததிலிருந்து 24 மணி நேரம் வரை கர்த்தாக்கள் தஹனம் முதலியவை செய்து முடித்திருந்தாலும் கூட ஆகாரம் சாப்பிடக்கூடாது.
 
இறுதி ஸம்ஸ்காரம்-1.


இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம்முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்றுதோன்றலாம்.

”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது?ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது.


இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பைமுனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாகஎடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்றுகேட்கலாம்


.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில்அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்றுதெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால்தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும்ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம்தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச்சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காகசாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகியஎல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும்வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவதுஅந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்தஉடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது.ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி,தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும்ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால்இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம்ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்றுசப்தங்களைக் கேட்கிறது.


இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும்,கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்றுஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாகஇருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது.


நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தைவைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாகமுழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடுஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜைஎன்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம்பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினைவைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம்ஞானத்துக்குப்போக வேண்டியவர்களா யிருக்கிறோம்.






யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லதுஅர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும்ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய

சரீரம்தானேஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளேஇருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும்ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காகஇருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறைஎன்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?



ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக்கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட,


அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத்தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்தநல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம்செய்வோம்
Every one should think for a moment that death is a certainty every living being in this world.One should be more fortunate to be born as a human being.One should rise above painful emotion and imagine how his body should be treated once he dies some day.Then it can be realized how a dead body should be cremated or buried with all due respect by the surviving progeny.
 
இறுதி ஸம்ஸ்காரம்-5.
கர்த்தா வியாதியினால் முறைப்படி ஸ்நானம் செய்ய முடியாவிட்டால் கெளன ஸ்நானங்கள் விதிக்க பட்டிருக்கிறது. கங்கா ஜலம் ப்ரோக்ஷனம், ப்ராஶனம் செய்யலாம்.

கர்த்தாவிற்கு 10 நாட்களுக்குள் வேறு தீட்டு ஏற்பட்டால் கர்த்தா செய்யும் கர்மா தடைபடாது, 11ம் நாள் தீட்டு குறுக்கிட்டால் அன்று கர்மாவை முடித்து கொன்டு , ஸபிண்டீகரணம் முதலியவற்றை தீட்டு போனவுடன் நாள் பார்த்து செய்ய வேண்டும்.

தாய், தகப்பனாருக்கு ஸபிண்டீகரணம் செய்ய நல்ல நாள் பார்க்கவேண்டாம்.
மற்றவர்களுக்கு நல்ல நாள் பார்த்து தான் ஸபின்டீகரணம் செய்ய வேண்டும்.

மரண தினம் சரியாக தெரியாவிட்டாலும், மாதம் சரியாக தெரியாவிட்டாலும் ஆஷாடம் அல்லது மாக மாதம் திதி தெரியாவிடில் அமாவாசை அல்லது கிருஷ்ண பக்ஷ ஏகாதசி, மரண செய்தி என்று அறிய படுகிறதோ அந்த நாளின் திதியையும் வைத்துக்கொள்ளலாம்.

அனேக புத்திரர்கள் இருந்து மூத்த புத்ரன் (ஜ்யேஷ்ட புத்ரன்) முதல் நாள் வரா விட்டால் இதர புத்திரர்கள் தஹன க்ரியை செய்யலாம். ஸஞ்சயனதிற்கு
ஜ்யேஷ்ட புத்ரன் வந்து விட்டால் ஜ்யேஷ்ட புத்ரன் ஸஞ்சயனம் செய்யலாம்.

பத்து நாட்கள் வரை ஜ்யேஷ்ட புத்ரனால் வர முடியாவிட்டால் இதர புத்திரர்கள் 10 நாள் வரை செய்ய வேண்டிய அபர க்ரியைகளை அந்தந்த உரிய காலத்தில் செய்து விடலாம்.

பத்து நாட்கள் பிறகு வருகிற ஜ்யேஷ்ட புத்ரன் , ஸஞ்சயனத்துக்கு பிறகு இறந்த செய்தி கேள்வி பட்டால், அன்று முதல் 10 நாள் தீட்டு காத்து 75 திலோதகம் செய்து, வ்ருஷோத்ஸர்ஜனம், ஆத்ய மாசிகம் செய்து , தீட்டு

போன பிறகு ஆவ்ருத்த ஆத்ய மாசிகம் செய்து, நாள் பார்த்து ஸபின்டீகரணம் செய்ய வேண்டும். தற்காலத்தில் செல் போன் மூலம் உடனே தெரிந்து கொள்வதால் மரண தினத்திலிருந்து பத்து நாள் தீட்டு காத்தால் போதும்.

ஜ்யேஷ்டன் அபர க்ரியை செய்து கொண்டிருக்கும் போது கனிஷ்ட புத்ரன் முதல் நாள் வர முடியாவிட்டால் , 10 நாட்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டு
விட்டு போன நாட்களின் உதக தானத்தை செய்கின்ற தினத்தன்று சேர்த்து செய்து விடலாம்.தசம தினம் வரை=பத்தாவது நாள் முடிய ஜ்யேஷ்டனோடு சேர்ந்து செய்யலாம்.

கனிஷ்ட புத்ரன் ஸபின்டீகரணம் செய்த பிற்கு ஜ்யேஷ்டன் வந்தால் , வபனம் செய்து கொண்டு 75 உதக தானம் செய்து மறுபடியும் ஸபின்டீகரனம் செய்ய வேண்டும்.

தாயாதிகள் கர்மா நடக்கும் இடத்திற்கு வர முடியாவிட்டால் இருக்கும் இடத்திலேயே தர்பையால் ஆவாஹனம் செய்து, 30 வாஸோதகம், 75 திலோ தகம் செய்யவும். இதற்கு மந்திரம் சொல்லும் வாத்யாரும் ஸ்நானம் செய்ய வேணும்.

முதல் நாள் வபனம் கழுத்து வரை தான், கர்த்தாவிற்கு மட்டும் தான். தாயாதிகள்=பங்காளி=ஸபிண்டர்-=ஞாதிகள் ப்ரத்யக்ஷமாக இருந்தால் , அவர்களும் தினசரி கர்த்தாவுடன் தர்ப்பணம் செய்ய முடியுமானால் ,

அவர்களும் சிறியவனாய் இருந்தால் வபனம் செய்து கொண்டு,செய்ய வேண்டும்.தாயாதிகள் பத்து நாளும் விடாமல் தினமும் செய்ய வேண்டும். நடுவில் நிறுத்த க்கூடாது. முடியா விட்டால் பத்தாம் நாள் வந்து 10 நாளுக்கும் சேர்த்து செய்ய வேன்டும்.

தகப்பனார் இல்லாத பத்து நாள் தீட்டு காரர்கள் , இறந்தவர் வயதில் பெரியவராக இருந்தால் வபனம் உண்டு. பத்தாவது நாள் தான் கர்த்தாவிற்கும் , ஞாதிகளுக்கும் ஸர்வாங்க வபனம் விதிக்க பட்டிருக்கிறது.

பத்தாம் நாள் சிறியவர் முதல் பெரியவர் வரை வாஸோதகம், திலோதகம் செய்ய வேண்டும்.

சில வாரத்தைகளுக்கு விளக்கங்கள்.
ப்ரஸ்தம், காரிகளம், த்ரோணம் , நிஷ்கம் இவைகள் எல்லாம் அந்த காலத்து அளவை குறிக்கிறது.

உத்க்ராந்தி = மூச்சு உடலை விட்டு வெளயேறுதல்.
வ்ருஷோத்சர்ஜனம்:- காளையை ருத்ர தேவனாக பூஜை செய்து இஷ்டம் போல் ஸஞ்சாரம் செய்யும் படி விட்டு விடுதல்.

ஆஹிதாக்னி:- ஆதானம் என்ற ஒரு கர்மா செய்து அக்னி ஹோத்ரம் செய்பவர்.

அனாஹிதாக்னி:= வெறும் ஒளபாஸனம் மட்டும் செய்பவர்.
ப்ராஶனம்:- தீர்த்தம், அன்னம் வாயில் உட்கொள்வது.

க்ருச்ரம்= தர்ம சாஸ்திரத்தில் சொல்லிய முறைப்படி 12 நாள் நியமத்துடன் இருக்க வேன்டிய ஒரு முறை. இதற்கு ப்ராஜாபத்ய கிருச்சரம் ப்ரத்யாம்னாயம்

பரிஸ்தரணம்:- அக்னியை சுற்றி நான் கு பக்கங்களிலும் தர்ப்பையை பரப்புதல்
பரீதீ:- அக்னியை சுற்றி நான் கு பக்கமும் சமித்து வைத்தல்.

தர்வீ = நெய் ஹோமம் செய்வதற்கு ஸாதனமாக உள்ள இலைக்கு பெயர்.
ப்ரோக்ஷணீ = சுத்தி செய்வதற்கு யோக்கியமான ஜலத்திற்கு ப்ரோக்ஷணி என்று பெயர்.

ஆயாமதம்= ஒரு ஒட்டை அளவுள்ள தர்பை நடுவில் முடி போட்ட பவித்ரம்.

ஸாதனம் செய்த பாத்திரம் ;= ஸூத்ரத்தில் சொன்னபடி தர்ப்பைகளின் மேல் வைப்பது ஸாதனம் என்று பெயர்.

துஷாக்னி :- உமியை கருக்கி எடுத்த அக்னிக்கு பெயர்.
கபாலாக்னி:= மண் பாத்திரதிலிருந்து சூட்டினால் வரட்டி முதலிவைகளை போட்டு உண்டாக்கபட்ட அக்னி.

உத்தபனாக்னி:- மும்முறை தர்பைகளை கொளுத்தி அதிலிருந்து உண்டு பண்ண பட்ட அக்னி.

தனிஷ்டா பஞ்சகம்;- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி. இந்த ஐந்து நக்ஷத்திரம். இதில் மகர ராசி உள்ள அவிட்டம் 1,2, பாதங்களுக்கு தோஷம் இல்லை.

கும்ப மீன ராசியிலுள்ள மேற்படி நக்ஷத்திரத்தில் இறந்தால் தான் தோஷம். இதற்கான தோஷ பரிகாரம் முதல் நாள் காரியத்தில் செய்ய வேன்டும். 13ம் நாள் இதற்கான சாந்தி செய்ய வேண்டும்.

தான் பெற்ற பிள்ளை:- ஒளரஸ புத்திரன் என்று பெயர்.
ஸ்வீகாரம் ஒரு புத்ரனை எடுத்து கொண்டால் ஸ்வீகார புத்ரன் என்று பெயர்.

பெளத்ரன்;- பிள்ளையின் பிள்ளை.
தெளஹித்ரன்;- பெண்ணின் பிள்ளை.

பத்னீ;- பல பேர் இருந்தால் மூத்தவள். மனைவி; ப்ராதா=சகோதரன் ; உடன் பிறந்தவன்; ஸ்த்ரீகள் விஷயத்தில் கணவனின் ஸஹோதரன் ; ஸஹோதரனி ன் பிள்ளைகள் .


ஸ்த்ரீகளுக்கு= ஸபத்னீ புத்ரன்= சக்களத்தியின் மகன்.
கணவன்=பர்த்தா.
பெண்--- துஹிதா.

பின்னோதர ப்ராதா:- மாற்றாந்தாய்க்கு பிறந்த சகோதரன்.
ஸ்நுஷா=மாற்றுப்பெண்.
மாப்பிள்ளை= ஜாமாதா.

அந்த்யேஷ்டி;-கடைசி யக்ஞம் . தஹண ஸம்ஸ்காரம்.
ஆத்மா=உள்ளுடம்புடன் இருக்கும் உயிர்.

தாயாதி= 10 நாள் தீட்டுக்காரன்.==பங்காளி, ஸபிண்டர் ஞ்யாதி எனவும் கூறப்படுவர். ஒரு மூல புருஷனிடமிருந்து பிரிந்து வந்த ஏழு தலைமுறை வரை உள்ளோர்.

ஒருவர் இறந்தால் அவருடைய புத்ரன் ஈம சடங்குகள் செய்ய வேண்டும். இந்த ஒளரஸ புத்ரன் இல்லாதவர்களுக்கு ஸ்வீகார புத்ரன் செய்ய வேண்டும்.

ஒருவருக்கு மேற்படி இரு புத்ரர்களும் இல்லை. இறந்து விட்டார். யார் செய்வது என்று வரிசையாக வைத்னாத தீக்ஷிதியம் புத்தகத்தில் உள்ளது.

இந்த வரிசைபடி ஒருவர் இல்லாவிட்டால் அடுதவர் செய்யலாம். எல்லோரிலும் மூத்தவன் தான் கர்மா செய்ய அருகதை உடையவன்.

கர்மனுஷ்டானத்திற்கு அருகதை இல்லாதவன் :- அங்கஹீனன், மஹாரோகி
ஸுராபானம் முதலிய கெட்ட குணம் உள்ளவன் மூத்தவனாக இருந்தாலும் ப்ரயோஜனமில்லை. நற்குணம் உள்ள புத்ரனே உயர்ந்தவன்.

ஒளரஸ புத்ரன். 02. பெளத்ரன்;03.பெளத்ரனின் பிள்ளைகள்; 04. ஸ்வீகார புத்ரன்; 05. ஸ்வீகார பிள்ளையின் புத்ரர்கள்.06. சொத்தை பெற்றுக்கொள்ளும் தெளஹித்ரன். 07. பத்னீ ( பலர் இருந்தால் மூத்தவள்).

சில ஸ்ம்ருதிகளில் பத்னீ என்பதற்க்கு பதிலாக ப்ராதா என்று எழுத பட்டிருக்கிறது. இதன் படி பத்னியை காட்டிலும் முன்னுரிமை உடன் பிறந்தவனுக்கு உண்டு என்பது சாஸ்திர ப்ரமானம். இப்படியும் அனுஷ்டிக்கலாம்.

8. ஸ்த்ரீகள் விஷயத்தில் தன் சொந்த பிள்ளை; இல்லாவிட்டால் தெளஹித்ரர்கள். , இல்லாவிட்டால் சக்களத்தியின் மகன்=ஸபத்னி புத்ரன்.

9. கணவன்[ 10 பெண்[ 11.ஸஹோதரன்[12, ஸஹோதரனின் பிள்ளைகள்
13.பின்னோதர ப்ராதா; 14. இவர்களின் பிள்ளைகள்; 15.தகப்பனார் 16 தாயார்; 17. மருமகள், 18. பிள்ளையின் பெண்; 19. பெண்ணின் பெண்.

20. பெளத்ரனின் மனைவி; 21. பெளத்ரணின் பெண்; 22. ஸ்வீகார பையனின் பத்னீ; 23 சகோதரி= அக்கா; 24. மருமான்; 25. பத்து நாள் தாயாதி; 26. 3 நாள் தாயாதி;

27. தாய் வழியில் 10 நாள் தீட்டுக்காரன்; 28. தாய் வழியில் 3 நாள் தீட்டுக்காரன். 29. மாப்பிள்ளை; 30. ஸ்நேகிதன்; 31. சொத்து அடைபவன்.
32. அரசன்; 33. சிஷ்யன்;

34. வீட்டோடு வீடாக இருக்க கூடிய ப்ராமண வேலைக்காரன். 35. குரு; 36. ஆசாரியன்; 37. கூட அத்யயனம் செய்தவர்கள்.
இந்த வரிசை கிரமத்தில் கர்த்தாவாகி காரியங்கள் செய்யலாம்.
 
iRuthi samSkaram-6.
சாவு தீட்டு, ப்ரஸவ தீட்டு அகலும் தினத்தில்புருஷர் வழக்கப்படி காலையில் ப்ராதஸ் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் முத்லிய கர்மாக்களை செய்து, தீட்டு நீங்குவதற்காக காலை 8-30 மணிக்கு மேல் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.புது பூணல் மாற்றி கொள்ள வேண்டும்.





மரணம் நேர்ந்தால் , இறந்தவரை நாடி தடாக குண்டம், கிருஹ குண்டம் என இரு பள்ளத்தில் சிறிய கருங்கல்லை புதைத்து , அதில் ப்ரேத ரூபனான இறந்தவர் ஆவாஹனம் செய்ய படுகிறார். அப்படி கிருஹ குண்டத்திற்காக கல் புதைக்க பட்ட வீடு ஸபிண்டிகரணம் முடியும் வர அசுத்தமே.





கிரஹ குண்டம் வேறு இடத்தில் ஏற்பட்டிருந்தால் பசுஞ்சாணி ஜலம் தெளித்து , புண்யாஹ வசனம் செய்தால் அந்த வீடு சுத்தமாகும். அத்தகைய வீட்டில் வாடகைக்கு குடியுருப்போர் இடம் சுத்தமானால் பூஜை செய்யலாம்.





க்ருச்ரம்:- நமது உடலில் உண்டான பாபமகல க்ருச்ரம் செய்து கொள்ள வேண்டும்.இதன் பொருள்;- உடலை வாட்டுவது, கஷ்ட படுத்துவது என்பதாகும். அதாவது உபவாஸத்தாலும் , பஸ்சாபத்தாலும் நமது பாபமகல வழி தேடுவது.





க்ருச்ரப்ரதினிதி:- உபவாஸமிருக்க முடியாதவர் ஒரு ப்ராஜாபத்ய க்ருச்சரத்திற்கு பதில் பத்து ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். அதுவும் முடியாதவர் விதிபடி 100 ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.





அதற்கும் சக்தி இல்லாதவர் 30 முறை வேத பாராயணம் செய்ய வேண்டும்.அதற்கும் சக்தி இல்லாதவர் 60 அல்லது 24 அல்லது 12 ப்ராமணருக்காவது போஜனம் அளிக்க வேண்டும். அதுவும் முடியாதவர் ஒரு பசு மாடு தானம் செய்ய வேண்டும்.





அதுவும் முடியாதவர் கோமூல்யம் என்ற பசுவின் விலை அல்லது ஒரு வராஹனை தர வேன்டும்.





ஒரு கர்மாவை செய்ய நமக்கு யோக்கியதை உண்டாக வேண்டுமானால் 7 அல்லது 6 அல்லது 3 க்ருச்சரமாவது தானம் செய்ய வேண்டும்.





ஒருவர் இறந்தவுடன் 3 மணி நேரம் கழித்த பின்பே அவ்வுடலை அப்புற படுத்த வேண்டும். 9 மணிக்கு மேல் வைத்து க்கொள்ள நேர்ந்தால் ப்ராயஸ்சி த்தம் செய்ய வேண்டும்.3 க்ருச்சரம் தத்தம் செய்து, பஞ்சகவ்ய ஸ்நானம் உடலுக்கு செய்வித்த பின் தஹனம் செய்ய வேன்டும்.





இரவு 9 மணிக்கு மேல் தஹனம் செய்ய கூடாது.உடலை தூக்கி அக்னியில் ஹோமம் செய்ய முடியாது. ஆதலால் சிதை அடுக்கி உடலை அதன் மேல் வைத்து தீயிட வேண்டும்.





தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில், கட்டிலின் மேல் உயிரிழந்தால் , இந்த ஒவ்வொரு தோஷத்திற்கும் மும்மூன்று க்ருச்சரம் அல்லது ஒவ்வொரு க்ருச்சரமாவது செய்த பிறகே தஹனம் செய்ய வேண்டும்.





இறக்க போகின்றவனே சக்தி இருந்தால் ஸ்நானம் செய்து ஸங்கல்பம் செய்து கொண்டு தன் கையால் ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்யலாம். சக்தி இல்லாத பக்ஷத்தில் புத்ரர் அல்லது கர்மா செய்பவர் இதை செய்யலாம்.





ப்ராயஸ்சித்தம் செய்து கொண்டவர் பிழைத்து கொண்டால் தோஷமில்லை.


ப்ராயஸ்சித்தம் செய்து கொண்டவர் ,அவர் 3 பிழைத்திருந்து பிறகு இறக்க நேர்ந்தால் மறுபடியும் ப்ராயஸ்சித்தம் செய்ய கொள்ள வேண்டும்.





இந்த 3 நாளிலும், பிறகும் அவர், மனதினால், வாக்கினால், உடலினாலாவது பாபம் செய்யக்கூடும். ஸ்நான சந்தியாக்களை விடக்கூடும். ஆதலால் ப்ரயஸ்சித்தம் மறுபடியும் செய்து கொள்ள வேண்டும்.





நமக்கு எது மறு உலகிலும், மறு பிறப்பிலும் தேவையோ அவைகளை தானம் செய்ய வேண்டும்.





தேவீ பாகவதம் கூறுகிறது. பரீக்ஷித் மஹாராஜன் கட்டிலில் படுத்து கொண்டு உயிரை விட்டதால் நரகம் சென்றான். ஜனமேஜயன் தேவீ பாகவத நவாஹம் செய்து இவரை மீட்டு ஸ்வர்கம் அனுப்பினான் என்று.





ப்ராணன் விரைவில் போய் விடும் என தெரிந்தால் கட்டிலில், படுக்கையில் படுக்க விடக்கூடாது. ரேழியில் தர்பையை பரப்பி அதன் மீது படுக்க விட வேண்டும்.





புண்ய சாலியாக இருந்தால் முகத்திலுள்ள துவாரங்கள் வழியாக அனாயாஸ மாக உயிர் போய் விடும். பாபிகளுக்கு பல நாள் கஷ்ட பட்டு மல ஜலம் கழிக்கும் துவாரம் வழியாக ப்ராணன் போகும்.





க்ஞானிக்கு சிரஸ் வெடித்து ஸுஷும்னா நாடி வழியாக ப்ராணன் போகும்.த்ரோனரது ஜீவன் இம்மாதிரி போனதாக பாரதம் கூறுகிறது.





ஜீவன், மனஸ், 5 க்ஞானேந்திரியம், 5 கர்மேந்திரியம், 5 ப்ராணன் இவைகளுடன் அவரவர் செய்த கர்மா இவைகளுள் ஒன்றாக சேர்ந்து ஒரு பொரி போல் லோகாந்திரம் செல்கிறது. ஜீவன் முக்தி அடைந்தவருக்கெல்லாம்





இங்கேயே லயமாகி விடும். மேலே செல்லாது. உபாஸகர்களது ஜீவன் ப்ரும்ம லோகம் சென்று அங்கு வெகு காலம் தங்கி ப்ருஹ்ம விசாரம் செய்து ப்ருஹ்





மாவுடன் முக்தி பெறும். 48 ஸம்ஸ்காரங்களும் ஒழுங்காக செய்து,பூமி தானம், மஹா தானம் செய்தாலும் ப்ருஹ்ம லோகம் செல்லலாம். ஆனால் வேதாந்த க்ஞானம் இல்லாதவர் திரும்ப வேண்டியது தான்.





சுவாசம் கண்டுவிட்டது என்றால் என்ன? ஸாதாரண மரண காலத்தில் , கழுத்தில் உள்ள உதானன் என்பவர் ப்ராணன் போகாதபடி வழியை தடுத்திருப்பவர். அவர், வழி திறந்து விடும் வரையிலும்,





இந்த ஜீவன் விட வேன்டிய மூச்சு கணக்கு முடிகிற வரையிலும், ப்ராணன் கிளம்பி கிளம்பி அடங்கும்.. இதையே சுவாசம் கண்டு விட்டது இனி பிழைக்க மாட்டார் என படுகிறது.





ஜீவன் எப்படி உடலை விடுகிறது? பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன்,


மல வழியில் அபானன், தொப்புளில் ஸமானன், உதானன்; சரீரமெங்கும் வ்யானன் தங்கி இருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யானன்





ரத்ததிலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபானன், ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும் போது, ஜீர்ணம், மல ஜலம் நின்று விடும்.எல்லாம் ஹிருதயதில் வந்து தங்கும்.





ஸகல இந்திரியங்களின் சக்திகள் ஒடுங்கி மனதில் லயமாவதால் கண், காது, நாக்கு, மூக்கு, தோல் வேலை செய்யாது. உதானன் ப்ராணனுக்கு வழியை திறந்து விடும் போது, பாலோ, ஜலமோ வாயில் விட்டால் வெளியே





வழிந்து விடும். உள்ளே செல்லாது. இதற்கு முன்பு தான் உள்ளே செல்லும். டாக்டர் இறந்து விட்டார் என கூறிய பிறகு தான் மேற்கொண்டு காரியங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.





ஜீவன் வேறு உடலை பிடித்துக்கொண்டு தான் இந்த உடலை விடுகிறது என சில இடங்களில் சொல்ல படுகிறது. ஜீவனுக்கு இந்த உடலை விட மனம் வருவதில்லை. ஆதலால் இவனுக்கு அடுத்த படியாக வர போகிற உடலை யம கிங்கரர் படமாக காட்டியவுடன் ஜீவன் இந்த உடலை விடுகிறது.





ஸூக்ஷ்ம சரீரமே யமலோகம் கொன்டு போகப்பட்டு திருப்ப படுகிறது. ஜீவன் இறப்பதில்லை. உடல் தான் இறக்கிறது. பழைய வஸ்திரத்தை எறிந்து விட்டு புது வஸ்த்ரம் தரிப்பது போல இவ்வுடலை விட்டு விட்டு வேறு உடலை தரிக்கிறது என கீதாச்சாரியாரும் கூறுகிறார்.





இறந்தவர் போக உத்திர மார்க்கம், தக்ஷிண மார்க்கம் என இரு வழிகள் உண்டு. இதையே தேவ யானம், பித்ரு யானம், என்றும், அர்ச்சிராதி மார்கம் தூமாதி மார்க்கம் என்றும் கூறுவர்.





உத்திர மார்க்கமாக செல்பவர் புண்யம் செய்தவர், அவர் புண்யத்திற்கு ஏற்றபடி யம லோகம் வழியாக ஸ்வர்க்கம் அல்லது மற்ற மஹர் லோகம்,, ஜனோ லோகம், தபோலோகம், , ப்ரும்ம லோகம் செல்வர். பாபிகளோ யம லோகம் செல்வர்.





ப்ரும்ம லோகம் செல்பவர் உத்தராயணத்தில், சுக்ல பக்ஷத்தில் பகலில் இறப்பர். அவரை பகல் தேவதை சுக்ல பக்ஷ தேவதையிடமும், அது உத்ராயண தேவதையிடமும், அது வருஷ தேவதையிடமும் கொண்டு விடும், அங்கிருந்து ப்ருஹ்ம லோகம் செல்வர். உபனிஷத் வித்தை உபா ஸனம் செய்தவருக்கும் இதே வழி.





கர்ம மார்கத்தில் ஈடுபட்டவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில் இரவில் இறப்பவர் இரவு தேவதை , க்ருஷ்ண பக்ஷ தேவதையிடமும், அது தக்ஷிணாயன தேவதையிடமும்,





அது ஸம்வத்ஸர தேவதையிடமும் அது யம லோகம், மற்றும் ஸ்வர்க்கத்திற்கும் அழைத்து செல்லும் அவரவர் செய்த புண்ய பாபத்திற்கு ஏற்றபடி லோகம் கிடைக்கும்.





ஆசாரம் என்பது என்ன?





சுத்தம் என்பது தெய்வ குணம். நமது உடல், வாக்கு, மனம், நாம் அணியும் ஆடை, உண்ணும் உணவு, கையாளும் பொருட்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். இவை சுத்தமாக இருப்பது ஆசாரம் என கூறப்படுகிறது. அசுத்தமாயின் அனாச்சாரம்.





சுத்தமான உணவை உட்கொண்டால் தான் , மனம் சுத்தமாக இருக்கும். உணவு, அதை செய்பவர், உண்பவர், உடன் உட்காருபவர், அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும்.





புருஷர்கள், பெண்கள் பந்தியிலோ, சிறுவர் பந்தியிலோ உட்கார்ந்து உண்ண கூடாது. அதிலும் தன் மனைவியுடன் உட்கார்ந்து பந்தியில் சாப்பிட கூடாது. ஆனால் விவாஹம், யாத்திரை இக்காலங்களில் உண்பது தவறல்ல.





விளக்கு நிழல், மனிதர் நிழல், ,வஸ்த்ர ஜலம், தலை மயிரிலுள்ள ஜலம்,பெண் மக்கள் பாத தூளி, முறத்தால் உண்டாகும் காற்று, பெருக்கும் போது மேலே விழும் புழுதி, ஆகிய இவைகள்





நம் மேல் பட்டால் இந்தரனுக்கு சமமான பணமிருந்தாலும் அதை தொலைத்து விடும். நமது பூர்வ புண்ணியத்தையும் கொண்டு போய் விடும்.





பகலில், தூக்கம், ஸ்த்ரீ புருஷ ஸங்கமம். பால் அருந்துதல் கூடாது. மத்தியானத்திற்கு மேல் அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்தல் கூடாது.





வஸ்த்ரம் அனியாதவனையும், கச்சம் உடுத்தாதவனையும் ,கெளபீனம் மாத்திரம் தரித்து இருப்பவனையும் மூதேவி வந்தடைகிறாள்.. ஆதலால் அவசியமான காலம் தவிர , மற்ற காலமெல்லாம் உரியவர் கச்சத்துடன் தான் இருக்க வேண்டும்.





நமது ஸ்ம்ருதி கண்டிக்கிறது. கச்சமே இல்லாதவர், வால் விட்டு கச்சம் கட்டுபவர், விகச்சர், மேல் நோக்கி கச்சமணிபவர், அரைஞானில் கச்சமணிபவர்


ஆகிய இந்த ஐவரும் வஸ்த்ரம் இல்லாதவர் போலாவார். அவர்களை கர்ம காலத்தில் காணக்கூடாது. கண்டால் அணிந்த ஆடையுடன் ஸ்நானம் செய்ய வேண்டும்.








வஸ்த்ரத்துடன் நுனி தசை எனப்படும். அது தொங்கினால் அதன் வழியாக ஆத்ம சக்தி பூமியில் இறங்கிவிடும். ஆதலால் நுனி தெரியாமல் கச்சம் அணிய வேண்டும். கச்சமில்லாமல் ஸந்தியாவந்தனம் , காயத்ரி ஜபம் , மற்ற கர்மாக்கள் பயனை தராது.





இரவில் வேஷ்டி துவைக்க கூடாது. குப்பையை பெருக்கி வெளியில் கொட்ட கூடாது. மரத்தின் நிழலில் தங்க கூடாது. ரஹஸ்யமான விஷயத்தை பேச கூடாது. பட்டு வேஷ்டி ஆத்ம சக்தி சிதராமல் ரக்ஷிக்கிறது.





என்றைக்கும் காலையில் 108 முறை நின்று கொண்டு , முகத்திற்கு நேராக கைகளை மூடிக்கொண்டு காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். தீட்டு வந்த போது 10 காயத்ரி செய்ய வேண்டும்.





ஸாயம் ஸந்தியா அனுஷ்டானத்தில் இரு பக்ஷங்களிலும் வருகின்ற சதுர்த்தி, அஷ்டமி, சதுர்தசி தினகளில் 54 காயத்ரீ செய்ய வேண்டும். சப்தமியில் 37, அமாவாசை, பூர்ணிமை, ப்ரதமை ஆகிய நாட்களில் 36.





த்ரயோதசி, விஷூ இவைகளில் 28 காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். ஸ்ரீவத்ஸ ஸோம தேவ சர்மா எழுதிய ஸதாசாரம் புத்தகத்தில் உள்ளது.





பூணல் அறுந்து போகாமல் இருந்தால் கூட நான்கு மாதத்திற்கு ஒரு முறை புது பூணல் தரிக்க வேண்டும். ஒரு இழை அறுந்தாலும், தீட்டு வந்து நீங்கியதும் புது பூணல் தரிக்க வேண்டும்.





அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பெளர்ணமி, ஸங்க்ரமணம், மன்வாதி, யுகாதி , ஞாயிற்றுகிழமை, தாய் தந்தை சிராத்ததிற்கு முதல் நாள், சிராத்த நாள், சிராத்த மறு நாள் , தீட்டு போவதற்கு முதல் நாள் ஆகிய தினங்களில் இரவில் சாப்பிட கூடாது.





8 வயதிற்கு மேற்பட்டோரும், 80 வயதுக்கு உட் பட்டோரும் ஏகாதசி அன்று இரு வேளையும் சாப்பிட கூடாது.





பலஹீனமானவர், நோயாளி ஆகியோர் ஒரே வேளை பால் பழம் சாப்பிடலாம். இம்மாதிரியும் உபவாசம் இருக்க முடியாத அசக்தர் கஞ்சி வடிக்காத அரிசி சாதத்தில் உப்பு, புளி, காரம் சேர்க்காமல், ஒரே வேளை உண்டு உபவாசம் இருக்கலாம்.





இதுவே ஒரு பொழுது எனப்படுகிறது. ஆண், பெண் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டியது. தீட்டில் ஏகாதசி வந்தால் உபவாசம் இருக்க வேண்டும். பூஜை செய்ய க்கூடாது. விரதம் இஹ பர ஸுகம் அளிக்கிறது.





ஒரு நாளும் இரவில் நெல்லிக்காய் , இஞ்சி, தயிர், நெல்வருத்த மாவு இவைகளை சாப்பிட கூடாது.





மஞ்சள், நெய், உப்பு, புழுங்கரிசி, வெல்லம், மருந்து, பாக்கு இவைகளுக்கு பாவ தோஷமில்லை. அன்னியர் அதை பாகம் செய்தது ஏற்க தக்கதல்ல என்று எண்ண வேண்டாம். பாவ தோஷமில்லை.





உபவாசம் என்பது எதையும் உண்ணாமல் இருப்பது. அப்படி உபவாசம் இருக்கும் போது உடலுக்கு அதிக கஷ்டம் ஏற்பட்டால் தீர்த்தம், கிழங்கு, நெய், பால், மருந்து பழம், கஞ்சி வடிக்காத அன்னம் இவைகளில் ஒன்று சாப்பிடலாம்.





உபவாச காலத்தில் ஒருவர் செய்யும் சிராத்தத்திற்கு பிராமணர் அகப்படாமல் அது நின்று போகுமென்றால் அங்கு ப்ராஹ்மணார்த்தம் சாப்பிடலாம்.உபவாச பலன் உண்டு.





எந்த தீட்டு வந்தாலும் ஏகாதசி விரதம் இருந்தாக வேண்டும்.ஸந்தியா வந்தனம் போல் இது முக்கியமானது. பூஜை, தானம் ஆகியவைகளை தான் நேராக செய்யாமல் தீட்டில்லாதவரை கொண்டு செய்விக்கலாம்.





உபவாசம் என்பது சரிர சுத்திக்காகவும், மனசுத்திகாகவும், தேவ ப்ரஸாதம் பெறுவதற்காகவும் ஏற்பட்ட கர்மா. நினைத்த படி ஸாஸ்திரமில்லாமல் உபவாசம் இருக்க கூடாது. சாஸ்திரம் உபவாசம் இரு என்று விதித்த காலத்தில் சாப்பிட கூடாது.





மனது ஒருமை பட உபவாசம் ஒரு சிறந்த சாதனம். உடலே தர்மத்திற்கு முதல் சாதனம். கடினமான உபவாசம் நோய் வாய்படும்படி கை கொள்ள வேண்டாம். கலி யுகத்தில் அன்னத்தை ஆஶ்ரயித்தே ஜீவன் இருக்கிறது.





மற்ற யுகங்களில் ஜீவன் ரத்தம், மாமிசம், எலும்பு ஆகியவைகளை ஆஶ்ரயித்து இருக்கிறது. ஆதலால் அநாவசியமான அதிக உபவாசத்தால் உடலை கெடுத்து கொள்ள வேண்டாம். ஓயாமல் சாப்பிடவும் கூடாது.





கிடைத்த போதெல்லாம் உண்பது, அளவு கடந்து உண்பது குடிப்பது இவை எல்லாம் பாபமே. பலஹாரம் என்பது பால் பழம் சாப்பிடுவதே. உப்புமா, அடை தோசை, சப்பாத்தி, பூரி, தொட்டுக்கொள்ள 4 கிண்ணம் கூட்டு, முதலியவை கடின மான உணவு.





ஆதலால் உபவாசமாகாது. எனினும் கருணை கூர்ந்து பெரியோர் ஒரு வேளை பலஹாரம் செய்தால் கூட உபவாச பலன் உண்டு என்றார்கள்.





நித்யோபவாசம்:- பகல் இரவு இரண்டே வேளை புஜித்து , இடையில் ஒன்றும் புஜிக்காமலிருந்தாலும் , இந்த உணவிலும் ஒவ்வொரு கவளத்தையும் கோவிந்தா கோவிந்தா என்று கூறி புஜிப்பதும் நித்யோபவாசமாகும்.





தன் ஊரில் தன் வீட்டிலுள்ள போது சாஸ்த்ரம் கூறிய படி ஆசாரம் அனுஷ்டிக்க வேண்டும். வெளியூர் சென்றால் அதில் பாதி ஆசாரம் அனுஷ்டித்தால் போதும், நகரங்களில் கால் பங்கும், ப்ரயாணம் செய்யும் போது வழியில் முடிந்த வரை ஆசாரம் அனுஷ்டிக்க வேண்டும்.





வஸ்த்ரமே இல்லாதவன், கச்சம் கட்டாதவன், கெளபீனம் மாத்திரம் கட்டியவன் கலஹத்தில் ஆசை உள்ளவன் , இத்தகைய க்ருஹஸ்தனிடம் மூதேவி தாண்டவமாடுவாள். ஆதலால் பஞ்ச கச்சம் அவசியம் தேவை.





---------------------------------------------
 
Namaskarams
kgopalan Mama

How much effort and time you have sacrificed for people like me {in the middle of ocean and searching for light house in any directions} in this forum.

Thanks or Gratitude etc are very tiny words to say for your efforts. Let may pray sincerely from my Heart every possible time for your LONG HEALTHY PEACEFUL and GUIDING SERVICE life.

With Namaskarams

= sankarcs
 
கர்ண மந்திர ஜபம். ---உபவீதி----ப்ராணாயாமம் ----- ப்ராசீனாவீதி
------------ கோத்ரஸ்ய---------சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அஸ்ய அஹணி பிது: ப்ரேதஸ்ய முமூர்ஷோ ப்ராண உத்க்ரம ண காலே ப்ராணானாம் ஸக உத்க்ரமண ஸித்தியேர்த்தம் மோக்ஷ ஸாம்ராஜ்ய ஸித்தியர்த்தம் அக்ஷய புண்ய லோக அவாப்த்தியர்த்தம் பரம பத ப்ராப்தியர்த்தம் கர்ண மந்திர ஜபம் கரிஷ்யே.

தாயார் அல்லது தகப்பனார் தலையை புத்ரன் தனது வலது தொடையில் வைத்துக்கொண்டு ஒரு தர்பத்தை வலது காதில் நுனி படும்படி வலது கையால் பிடித்து கொண்டு குனிந்து காதர்கே கர்ண மந்திரம் ஜபிக்க வேண்டும்.

ஆயுஷ: ப்ராணம் சந்தனு; ப்ராணாத் அபானம் சந்தனு; அபானாத்து வ்யானம் சந்தனு; வ்யானாது சக்ஷஸ் சந்தனு; ஶ்ரோத்ராது மனஸ் சந்தனு; மனஸ் வாசம் சந்தனு;வாச ஆத்மானம் சந்தனு; ஆஹ்மன ப்ருத்வீ சந்தனு;ப்ருத்வ்யா அந்தரிக்ஷம் சந்தனு; அந்தரிக்ஷம் து திவம் சந்தனு; திவஸ்ஸவ சந்தனு;

வடகலையர்கள் , சியாமா சரணம் ஆனவர்கள் அஷ்டாக்ஷரி---- ஓம் நமோ நாராயணாயா 10 தடவை; சரணாகதி மந்திரம் 3 தடவை; ஸ்ரீ மன் நாராயணாயை சரணம் சரணம் ப்ரபத்தயே.ஸ்ரீபதே நாராயணாய நம: சரம ஸ்லோகம் ஒரு தடவை; சர்வ தர்மான் பரிதயஸ்ச மாமேகம் சரணம் வ்ரஜா

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச ஜபம் ஆனதும் தர்பையை அங்கேயே போட்டு விட்டு ப்ரதக்ஷிணமாக கர்த்தாக்கள் வெளியே வர வேண்டியது.


ஒருவர் இறந்த உடன் நடத்த பட வேண்டிய காரியங்கள்:- கர்ண மந்திர ஜபம். தஹனம், சஞ்சயனம்; நக்ன சிராத்தம்; பாஷாண ஸ்தாபனம்; நித்ய விதி; ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்; நவ சிராத்தம்; பங்காளி தர்ப்பணம்; ப்ரபூதபலி. பாஷாண உத்தாபனம்; சாந்தி ஆனந்த ஹோமம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்;

ஏகாதச ப்ராஹ்மண போஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம்; ஷோடசம்; சபிண்டீகரணம்; ஆத்ய சோதகும்பம்; இயல் சேவா காலம்; சுப ஸ்வீகாரம்.

நக்ன சிராத்தம்:-- இறந்தவர்களுக்கு ஏற்படும் ஐந்து விதமான பாதிப்புகளிடமிருந்து விமோசனம் ஏற்பட செய்ய படுகிறது.

பாஷாண ஸ்தாபனம்:--தடாக தீரம், க்ருஹத்வார ம் என இரு இடங்களில் குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.

நித்ய விதி:- ஆவாஹனம் செய்ய பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள்;அளிப்பது.

ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்:- பத்தாம் நாள் வரை தினமும் செய்ய வேண்டிய சிராத்தம்.

நவ சிராத்தம்:- 1,3,5,7,9,11,ஆகிய ஒற்றைபடை நாட்களில் செய்ய வேண்டிய சிராத்தம்.

பங்காளி தர்ப்பணம்:- பத்தாம் நாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து பத்து நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்க வேண்டும். இறந்தவரை விட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் செய்து கொண்டு தர்பிக்க வேண்டும். கர்த்தாக்கள் பிறகு தர்பிக்க வேண்டும்.

ப்ரபூத பலி:- பத்தாம் நாள் 500 கிராம் அரிசி சாதம், உப்பில்லா இட்லி, தோசை, வடை, தேங்குழல், வகைக்கு 11 எண்ணிக்கை, அதிரசம், எள்ளூருண்டை, வகைக்கு 11 எண்ணிக்கை, தேங்காய்-1; இளனீர்-1; அகத்திக்கீரை1 கட்டு; துண்டுகளாக்கி வேக வைத்த வாழைக்காய்-1; வேக வைத்த பயறு 50 கிராம்; வெற்றிலை 10; பாக்கு 10, வாழைப்பழம் 10, பழைய புடவை அல்லது வேட்டி-1; சமர்ப்பிக்க வேண்டும்.

இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் பலியில் சில விசேஷம் உண்டு. கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போற்றுதல் உண்டு.

பாஷாண உத்தாபனம்:- ஆன்மாவை யதாஸ்தானம் செய்து கல்லை எடுப்பது,பலியை ஜலத்தில் சேர்ப்பது.கர்த்தாக்கள் க்ஷவரம். சாந்தி ஆனந்த ஹோ மம்; சாரு ஸம்பாவனை; அப்பம் பொரி ஓதி இடுதல்.
பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு.

பதினொன்றாம் நாள் :-- புண்யாஹாவசனம்; நவ சிராத்தம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம் இத்யாதி.

12ம் நாள்:- புண்யாஹாவசனம்; ஒளபாசனம்; ஶோடசம்; சபிண்டீகரணம்; தானங்கள்; சோதகும்பம்; சேவா காலம். ஐயங்கார்களுக்கு வேத ப்ரபந்த பாராயணங்கள்;

13ம் நாள்:- சேவை; சாத்துமுறை; உபன்யாசம். ஊனம், மாசிகம், சோதகும்பம் நாள் குறிக்க உதவி; ஐயங்கார்களுக்கு. உதக சாந்தி, நவகிரஹ ஹோம ம். ப்ராஹ்மண போஜனம் ஐயருக்கு.

14 ம் நாள்:- பெண்கள் கசப்பு எண்ணைய் என்று எண்ணைய் தேய்த்து குளிப்பார்கள். பத்திய சாப்பாடு. பிறகு அவரவர் ஊருக்கு கிளம்புவார்கள்.




நித்ய விதி :- முதல் நாள் முதல் பத்தாம் நாள் வரை.

மணல் 1 பாண்டு. பால் 1 கப் ; தயிர் 1 கப் ; இள நீர் -1.தினமும்.; கருப்பு எள் 100 கிராம்; தேன் 1 பாட்டில்; நெய் 100 கிராம்;செங்கல்-16; அல்லது 2 மண்தொட்டி; இஞ்சி தினமும் ஒரு துண்டு; வெல்ல சக்கரை 100 கிராம்.

முதல் நாள் அரிசி 4x 250 கிராம்; பயற்றம் பருப்பு (பாசிபருப்பு) 4 x 100கிராம்; வாழைக்காய் 4 எண்ணம்.
இரண்டாம் நாள்:-4----4-----4; மூன்றாம் நாள் 6------6------6; நாங்காம் நாள் 6-----6-----6; ஐந்தாம் நாள் 8---8----8

ஆறாம் நாள்:- 8-----8------8; ஏழாவது நாள் 10------10-----10; எட்டாவது நாள் 10-----10-----10; ஒன்பதாம் நாள் 12----12-----12; பத்தாம் நாள் 12-------12-------12; மொத்தம் 20கிலோ பச்சரிசி; 8கிலோ பாசி பருப்பு; 80 நம்பர் வாழைக்காய்; தக்ஷிணை 80 பேருக்கு தலைக்கு 100ரூபாய் வீதம் 8000 ரூபாய்.



பத்தாம் நாள்:- பச்சரிசி 2 கிலோ; தேங்காய்-4; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; வாழைபழம் 12; சந்தனம் 10 கிராம்; நெல் 50 கிராம்; தேன் 50 கிராம்; தயிர் 100 கிராம்; நெய் 250 கிராம்; கட்டி கற்பூரம் 50 கிராம்; பித்தளை சொம்பு-1; தீபெட்டி1; மாவிலை கொத்து 4; விசிறி 1; பஞ்ச பாத்திர உத்திரிணி-1;விறாட்டி 75; சிறாக்கட்டு 10 நம்பர்; மணல்- 1 பாகெட்.; தொடுத்த பூ 2 முழம்;

பத்து கொட்ட:- 500 கிராம் அரிசி சாதம்; உப்பில்லாமல் பக்ஷணங்கள்:- இட்லி-11 நம்பர்; தோசை 11; வடை 11; அதிரசம்-11; எள்ளுருண்டை 11; தேங்குழல் 11; துண்டுகளாக்கி வேக வைத்த ஒரு வாழைக்காய் கறி; பயறு 50 கிராம் வேக வைத்தது; தேங்காய் -1; இள நீர்-1; வெற்றிலை-10; பாக்கு-10; வாழபழம்-10; அகத்திகீரை 1 கட்டு.
அம்மாவின்/அப்பாவின் பழைய புடவை/வேஷ்டி-1;

பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு;

சாந்தி-----ஆனந்த ஹோமத்திற்கு :- அரிசி 500 கிராம்; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம் -6;மாவிலை கொத்து, துளசி; நெல் 100 கிராம்;

12 கிலோ அரிசி; 24 வாழைக்காய்; 12 பேருக்கு தலைக்கு 500 ரூபாய் தக்ஷிணை; க்ஷவரம்- ஏற்பாடு.

வைதீகாள் 2பேர் தக்ஷிணை ப்ரம்ம தண்டம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம் செய்ய 4000 ரூபாய், வாத்தியார் தக்ஷிணை 5000ரூபாய்;


11 வது நாள்:- மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம், குங்குமம், வெற்றிலை 25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரி பூ 100 கிராம்; துளசி 10 ரூபாய்க்கு;கலச வஸ்த்ரம்-1; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து-4; அரிசி-1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்

பித்தளை சொம்பு-1; நெல் 25 கிராம்; பசும்பால் 250க்ராம்;அரிசி மாவு 100 கிராம்; ஆத்து சாமாங்கள்:- பித்தளை கிண்ணம்-6; தட்டு/ட்ரே 4; விசிறி-1; தீப்பெட்டி-1.

ஒத்தனுக்கு வேண்டிய சமையல் சாமாங்கள், தான சாமாண்கள் .9 x5 வேஷ்டி-1; பஞ்சபாத்திர உத்திரிணி-1; பித்தளை சொம்பு-1; தங்க காசு-1; எள்ளுடன் டபரா-1.;8 முழ வேட்டி-1; துண்டு-1; நுனி வாழை இலை-3; அரிசி-1 கிலோ, பாசி பருப்பு 100 கிராம்; வாழைக்காய்-1; குடை1; தடி1; விசிறி1; செறுப்பு1; ஆசன பலகை1. ஒத்தனுக்கு தக்ஷிணை 750 ரூபாய்; வாத்யார் தக்ஷிணை 7500ரூபாய்.

ருத்திர ஜபம்—4 பேர் –6000ரூபாய் தக்ஷிணை; அரிசி 1 1 கிலோ; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம்-6;அரிசி மாவு 100 கிராம்;பசும் பால் 250; நெய் 250;ருத்திர கலசம், கலச துண்டு, தானம்- பித்தலை சொம்பு ஜலத்துடன்; வஸ்த்ரம், தங்கம்; டபராவில் எள்ளு;

பதினோராம் நாள் காய்ந்த வேஷ்டி துண்டு 2 தேவை. ஈரம் இல்லை. ஒருத்தனுக்கு சமையலுக்கு ஒருவருக்கு தனியாக கொடுக்க வேண்டும். புண்யாஹ வசனம், ருத்ர ஹோம ம் ,ரிஷபோத்ஸர்ஜனம் கரிஷ்யே என்று ஸங்கல்பம். திதி வார யோக கரண, லக்ன தோஷ , ப்ராஜாபத்ய இத்யாதி தோஷ நிவ்ருத்தியர்த்தம் ஹிரண்ய தானம் கரிஷ்யே.

வடை, அதிரசம், எள்ளுருண்டை, தேங்குழல் இரண்டிரண்டு போட வேண்டும். சமையலுக்கு வாழைக்காய், பாகற்காய், புடலங்காய்,அவரைக்காய், சேப்பங்கிழங்கு,, பயத்தம் பருப்பு பாயசம், நுனி இலை 4.

கர்மா செய்த சொம்பில் ருத்ரஆவாஹனம்.சொம்பிற்கு நூல் சுற்றி மாவிலை, கூர்ச்சம், தேங்காய் வைத்து சந்தனம், குங்கும்ம் இட்டு வைக்க வேண்டும் ருத்ர ஹோமத்திற்கு 50 கிராம் நல்ல எண்ணேய், 50 கிராம் பச்சைபயறு போட்டு ஹோமம். தனியாக ஒருத்தனுக்கு 50 கிராம் நெய், 500 கிராம் சுர்ய காந்தி எண்ணய்,

மறு நாள் மாசிகத்திற்கு 3 பேருக்கு 500 கிராம் சூர்ய காந்தி எண்ணை, 100 கிராம் நெய் தனியாக வாங்கி கொடுக்கவும்.

தானம்:- பித்தளை டபராவில் எள்ளு, 9X5 வேஷ்டி; தங்கம் 400 மில்லி கிராம்,

ரிஷபோதுத்சர்ஜன ஹோமம். ஹோமத்திற்கு கற்பூரம், தீப்பெட்டி, விராட்டி, சுல்லி, 6 செங்கல், மணல்; நெய் 250 கிராம்.

கும்பத்தில் சாம்ப பரமேஸ்வரம் ஆவாஹயாமி. 1 உபசார பூஜை; அர்ச்சனைக்கு உதிரி புஷ்பம் தேவை. 2 வாழைபழம், தாம்பூலம் நைவேத்யம்.பசும்பால் 250 மில்லி. அத்தி இலை தேவை.பேப்பர்

தீட்டு சமையல் தனியாக செய்ய வேண்டும். மடி சமையல் தனியாக வேறு இடத்தில் செய்ய வேண்டும்.



ஆத்ய மாசிகம்:- அரிசி; நறுக்கிய வாழைகாய்; வேக வைத்த பயறு; 50 கிராம்; சவுக்கு விறகு உடைத்தது 10 கிலோ; விராட்டி 200; செங்கல்-30; உமி 2 பாக்கெட்;வீட்டிற்குள் செய்ய கூடாது.வீட்டின் வெளியே அல்லது மொட்டை மாடியில் ; ஷாமினா மேலே போட்டுக்கொண்டு செய்யலாம்.

காளை கன்று குட்டிக்கு துண்டு-1; மாலை 1; வாழைபழம்-4, ; சுமங்கலியாக இறந்தால் பசு மாடு கன்று இரண்டிற்கும் பூஜை மாட்டிற்கு புடவை; மாலை1; வாழைப்பழம்-6. மாடு, கன்று கொண்டு வருபவனுக்கு
500ரூபாய். மாடு, காளை கன்று கிடைக்காவிடில் மட்டைதேங்காயில் ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம்.


12ம் நாள் சபிண்டீகரணம்:-
மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம்; வெற்றிலை25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரிபூ 10 ரூபாய்; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து 4; அரிசி 1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்; பித்தலை சொம்பு1; கலச வஸ்த்ரம்1;துளசி5 ரூபாய்; நெல் 50 கிராம்;பித்தளை கிண்ணம்10; தட்டு/ட்ரே4; விசிறி1; தீபெட்டி1; நல்ல எண்ணய் 100 மில்லி; திரினூல் 2 ரூபாய்.

த்வாதச சிராவணாலுக்கு 12 பித்தளை டபரா அரிசி போட்டு கொடுக்க வேண்டும். யம தர்ம ராஜா தர்பாரின் ஜூரிகள் இவர்கள்.. தக்ஷிணை 12000ரூபாய்.

பாதேய சிராத்தம் :8முழம் வேஷ்டியில் தயிர் சாதம், ஊறுகாய் கட்டி தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும்.

ஷோடசம்:- 16 பேருக்கு 8 கிலோ அரிசி, 16 வாழைக்காய் வெற்றிலை பாக்கு தக்ஷிணை 4800 ரூபாய்;

12 மாசிகமும், 4 ஊண மாசிகமும் செய்த பிறகு தான் ப்ரேதத்தை பித்ருவாக மாற்ற முடியும். கர்த்தா ஒரு வருட காலம் உயிருடன் இருப்பார் என்ற உறுதியிம் இல்லாததால் இன்று 16 மாசிகமும் அரிசி, வாழைகாய், தக்ஷிணை கொடுத்து முடிக்கிறோம்.

இன்று இவர்களுக்கு பார்வண விதிபடியும் சிராத்த மாகவே செய்து சாப்பாடு போடலாம். நேரம் அதிக ம் ஆகும். மறு நாள் 13ம் நாள் ப்ரேத ஸ்வரூபத்தை பித்ருவாக மாற்றலாம். வசதி உள்ளவர்கள் செய்யலாம்.


3 பிராமணாளுக்கு சிராத்த சமையல் ; எண்ணய், சீயக்காய் கொடுக்க வேண்டும் 3 பித்தளை சொம்பு ஜலத்துடன் தானம்; 3000ரூபாய் தக்ஷிணை. 9 x 5 வேஷ்டி-3; குடை3, விசிறி3, தடி3; ஆசன பலகை-3, செருப்பு3.

ஒளபாசனம். மாத்யானிகத்திற்கு பிறகு மாசிகம் சிராத்தம் 3 பேர்; சந்தனம், அக்ஷதை,எள்ளு,தீபெட்டி கற்பூரம், உதிரி புஷ்பம், தொடுத்த புஷ்பம், 2 கிண்ணம், ; மரகரண்டி; அனுக்ஞை; பார்வண ஏகோதிஷ்ட சபிண்டீ கரண சிராத்தம் விசுவேதேவர் இப்போது கால காமர் என்ற பிரிவிலிருந்து வருவர்; பித்ருக்கள் ;ஏகோதிஷ்டம்= ப்ரேதம்

திதி வார லக்ன தோஷ நிவ்ருத்தியர்த்தம் ப்ராஜாபத்ய க்ருச்சர ஹிரண்ய தானம். விசுவேதேவருக்கு சதுரம்; பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹருக்கு முக்கோணம், ப்ரேதம் டு பித்ருவுக்கு வட்டம். என்று போட்டு காலலம்பலாம்.



சோத கும்பம்- சமாராதனை சமையல்; புண்யாஹா வசனம்; தக்ஷிணை2000ரூபாய்; 9 x 5 வேஷ்டி-1. பித்தளை சொம்பு-1, பஞ்ச பாத்திர உத்திரிணி-1, குடை-1; விசிறி-1; தடி-1; ஆசனபலகை -1; செறுப்பு-1; இள நீர் -1,

ஈயம் பூசிய டபராவில் பானகம், நீர்மோர் கொடுக்க வேண்டும். தாம்பூல தானம், பழங்கள், காய்கள் தானம்;

தானம்:- வைகரணீ பசு மாடு தானம், மட்டை தேங்காய்; காமதேனு, ருண தேனு, மோக்ஷ தேனு;பாப தேனு 4 மட்டை தேங்காய்; நெளகா தானம் கரும்பில் ஓடம் செய்து அதி காமாக்ஷி விளக்கில் எண்ணைய், திரி போட்டு ஏற்றி விளக்கு ஜோதி நம் பக்கம் பார்த்திருக்க தானம், ஒவ்வொன்றிர்க்கும் தக்ஷீணை ;

தச தானம்:- பூமி, பசு, தங்கம், வெள்ளி; நெய், உப்பு, வெல்லம், எள்ளு, 9 x 5 வேஷ்டி;தான்யம்.
பஞ்ச தானம்:- 9 x 5 வேஷ்டி, தீபம், மணி, புத்தகம், ஜலத்துடன் பித்தளை சொம்பு.
ருத்ராக்ஷம், சிவலிங்கம், சாலகிராமம்; கம்பளம், கோபி சந்தனம்; விபூதி சம்படம். ஜமக்காளம், போர்வை, தலை காணி;
வாத்யார் தக்ஷிணை 12000ரூபாய்;

சுப ஸ்வீகரணம். 13 ம் நாள்.
உதக சாந்தி அண்ட் நவகிரஹ ஹோமம்:-

எவெர்சில்வெர் பேசின்-1. நல்ல எண்ணெய் 200 கிராம். எல்லோரும்முகம் பார்த்து தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன்.
உதக சாந்திக்கு ஒரு பித்தளை குடம். நவகிரஹத்தீற்கு ஒரு பித்தளை சொம்பு. 4 வாத்யார் தக்ஷிணை 12000 ரூபாய். வாத்யார் தக்ஷிணை 20000 ரூபாய். சரம ஸ்லோகம் படித்தல், பொரி உருண்டை, பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ். 10ம் நாள் சரம ஸ்லோகம் படிக்கும் வழக்கமும் உள்ளது.

கோதுமை 2கிலோ; அரிசி 3 கிலோ; உளுந்து 1 கிலோ; எள்ளு 100 கிராம்; நவதானிய செட்; நவகிரஹ வஸ்த்ரம் செட்; நவகிரஹ ஹோமகுச்சி 1 செட்; அரச சமித்து 500; தர்ப்பை 5 கட்டு; நாயுருவி சமித்து ஒரு கட்டு. கலச துண்டு-2; தொடுத்த புஷ்பம் 12 முழம்; நூல் கண்டு, மாவிலை கொத்து 10; பழங்கள், உதிரி புஷ்பம்.500 கிராம் தேங்காய்-6; வாழைபழம் 25; கட்டி கற்பூரம் 25 கிராம்;

மஞ்சள் பொடி 50 கிராம்; சந்தனம் 50 கிராம்; குங்குமம் 50 கிராம்; வெற்றிலை 50, பாக்கு 50 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட்; திரி நூல்; நெய் 500 கிராம்; பச்சை கற்பூரம் 1 டப்பா; ஏலக்காய் பொடி, குங்கும பூ; அருகம் பில் 2 கட்டு; எலிமிச்சம் பழம்12; செங்கல் 16; மணல் 1 பான்டு; சிறாக்கட்டு 5; விராட்டி 30; ஹவிஸ் 250 கிராம்; நுனி வாழை இலை 10; பித்தளை கிண்ணம்6; தட்டு/ட்ரே4;

ஆத்து சாமான் கள்:- குடம்-1; சொம்பு-1; பஞ்ச பாத்திர உத்திரிணி 1; சந்தன பேலா, குங்கும சிமிழ்; மணி; தூப கால், தீப கால், குத்து விளக்கு, எண்ணை ;திரி. தீப்பெட்டி;கற்பூர தட்டு ; ஊதுவத்தி ஸ்டேண்ட்; விசிறி; கத்தி; கத்திரிகோல்; மனை பலகை/தடுக்கு.;பழைய பேப்பர்;வீட்டு நபர்களின் பெயர்=சர்மா; கோத்ரம்; நக்ஷத்ரம், ராசி உறவு முறை இவைகளை எழுதி வாத்யாரிடம் கொடுத்து விடவும்.


தஹன தின க்ரியைகள்:--

பலர் அசுப காரியங்கள் பற்றி பேசுவது தெரிந்து கொள்வது கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அசுப காரியங்களில் ஈடு படும் வாத்யார்கள் பிண ஊர்தி ஓட்டுபவர்,இல்லத்தில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தானே இருக்கிறது. எவரும் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது.

தஹனம் இறந்தவர்களுக்கு செய்யும் முதல் நாள் க்ரியை.மரணத்தால் ஆன்மாவை விட்டு பிறிந்த சரீரத்திற்காக செய்யபடும் கர்மா.

ஜீவ ப்ராய சித்தம் சாமாங்கள் ஏற்பாடுகள். ஐயங்காருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம். அக்னி நிர்ணயம்.


ப்ரேதாக்னி ஸந்தானம்; உதபனாக்னி; கபாலாக்னி;பைத்ருமேதித ப்ராயஸ்சித்தாதி ஹோமங்கள். ஸ்மசானத்தில் க்ரியைகள். தஹனம் செய்ய பட வேண்டிய ஸ்மசானம், அல்லது நகர்மானால் எலக்ற்றிக் க்ரிமடோரியம் போன்ற இடத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு புக்கிங்க் செய்ய வேண்டியது.

ஆதார் கார்டு ஜெராக்ஸ் காபி. டாக்டர் சர்டிபிகேட், காபி எடுத்தி கொள்வது. க்ரிமடோரியத்தில் பணம் கட்டி ரசீது, தஹன சான்று பெற்று கொள்வது.கர்ண மந்திரம் சொல்ல வேண்டியது.பூஜை அறையிலிருந்து கங்கை ஜல சொம்புகள்,மற்றும் தேவையானவற்றை எடுத்து கொண்டு பூஜை அறையின் கதவை சாற்றி விட வேண்டியது. அன்று வீட்டில் சமையல் செய்ய கூடாது. ஆதலால் கேடரரிடம் தேவையான வைகளை ஆர்டர் கொடுத்தல். உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது.

சவம் குளிப்பாட்டிய ஜலம் வெளியே ஓட க்கூடிய இட த்தில் தெற்கு நுனியாக சில தர்ப்பங்கள் போட்டு அதன் மீது சவத்தை தெற்கில் தலை வைத்து படுக்க வைக்க வேண்டும்.துளசி பக்கத்தில் போட வேண்டும். தலை மாட்டில் தெற்கு நோக்கி விளக்கு எரிய வேண்டும். வாத்யாருக்கு உடன் தெரிவிக்க வேண்டியது.

வாத்யாருக்கு உங்கள் வேதம், சூத்ரம், இறந்தவர் உறவு தெரிவிக்கவும். தேவையான சாமாங்கள்:- பாடை=ஆஸந்தி; பச்சை மூங்கில்; 9 அடி நீளத்தில் இரண்டு; பச்சை கீற்று-2;குறுக்கு கொம்புகள் 12; கப்பாணி கயிறு 2 முடி; நெல் பொறி 100 கிராம்; நெய் 200 கிராம்; எள் 50 கிராம்; கற்பூரம் 4 கட்டி;;

தீப்பெட்டி-1;வெற்றிலை12; பாக்கு 6; பழம்-2; புஷ்பம் 2 முழம்; கரை இல்லாத வெள்ளை மல் துணி 2 மீட்டர்; சுமங்கலி ஆனால் சிவப்பு துணி; விராட்டி8; சுள்ளி 12; அத்தி இலை 1 கொத்து; மண் பானை மீடியம் சைஸ்-1;; சிறிய மண் மடக்கு 4; இரண்டு பழைய துண்டுகள்,/டவல்;

ஆத்மா வேறு சரீரம் வேறு என்ற சித்த சுத்தி ஏற்படுவதற்காகத்தான் கர்மானுஷ்டானம். கடைசியில் இந்த தேஹத்தையும் ஆஹூதியாக தேவதைகளுக்கு ஹோம ம் செய்துவிட வேண்டும் என்பதற்குத்தான் ப்ரேததிற்கு நெய்யை தடவி அதையும் ஒரு திரவியமாக வேத மந்திரங்களோடு செய்ய வேண்டும் என தர்ம சாஸ்திரம் விதித்து இருக்கிறது.

இறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. அந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்கள் பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று சொல்ல படுகின்றன. பைத்ரு மேதிக கர்மாவை செய்யா விட்டால் இறந்தவர் ப்ரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை.புண்ய சரீரம் கிடைப்பது இல்லை. ஸுகானுபவம் இல்லை.துக்கத்தில் மூழ்கியவர்களாக இருக்கிறார்கள்.

இறந்தவுடன் யம கிங்கரர்கள் இந்த ஸூக்ஷ்ம சரீரத்தோடு கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்மராஜன் முன் கொண்டு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு . 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவு போடுகிறார்.


இவை 48 நிமிடத்தில் நடை பெறுகிறது.

ஆகையால் நாமும் ப்ராயஸ்சித்தம் போன்ற கர்மாக்களை செய்து அந்த ஜீவனுக்கு உரிய அக்னியை தயார் செய்து இறந்தவரின் ஆசிரமத்திற்கும், வேதத்திற்கும் தகுந்த படி உயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து பைத்ரு மேத கர்மா ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்தூல சரீரம் எரிக்க பட்ட வுடன் ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாம் உபயோகபடுத்தும் தர்பை விஷ்ணுவினுடைய ரோமத்திலிருந்து உண்டானது.அந்த தர்பையின் மூலத்தில் ப்ரம்மா, மத்தியில் ஜனார்த்தனர், நுனியில் சங்கர் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.

எள்ளும் விஷ்ணுவினுடைய வியர்வையிலிருந்து உண்டானது. தர்பை, எள்ளு, துளசி இவைகள் பிள்ளை இல்லாதவரையும் துர்கதி அடையாமல் காப்பாற்று கிறது. இறந்த தினத்திலிருந்து பத்து நாள் வரை தினமும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் பெறுகிறது. பிறகு ப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம்

தீர்ந்து பிறகு 11ம் நாள் வ்ருஷோத்ஸர்ஜத்தினாலும், ஆத்ய மாசிகம், பதினைந்து மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யமபுரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கமும் போகின்றது.ஸபிண்டீகரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களோடு சேர்க்க படுகிறது.


உத்க்ராந்தி கோதானம், தச தானம், பஞ்ச தானம் இவைகள் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததோடு தவறாமல் செய்வது அளவிட முடியாத பலனை கொடுக்க வல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.

கோ தானம்:- கன்றோடு கூடிய கறக்கும் பசு. பூமி தானம்:- 300 கிலோ நெல் விளைவிக்க கூடிய 20 செண்ட் ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு. எள்ளு:- 25.6 கிலோ; தங்கம்:-18.75 கிராம்; வெள்ளி :-25 கிராம்; நெய்:- 3.2 கிலோ; வேஷ்டி 9x5; தான்யம்:- 307.2 கிலோ; வெல்லம் :-3 கிலோ; உப்பு :-307.2 கிலோ.
 
தனிமனிதன் ஒருவனே இந்த காரியங்களை செய்ய முடியாது என்பதாலேயே, இறப்பிலும் பலரது உதவிகள் தேவைப்படுகிறது. இங்கே பதிவிட்டதை ஒருபிடிஎப்ஃ புஸ்தகமாக வெளியிடலாம். நிற்க, வியாதி உள்ளவர்கள் இறந்தால், அந்த வியாதி பரவாமல் இருக்கவே சீக்கிரமே தகனம் செய்யப்படுகிறது. குளிப்பாட்டல் மூலம் இதயம் மறுபடி துடித்தல், வாக்கரிசி, கொள்ளி வைத்ததும் இதயம் துடித்து உயிர் பிழைத்தவர்கள் உள்ளார்கள். எனது கொள்ளுப் பாட்டியின் தாய் வழியில் அப்படி நடந்ததாம். உயிர் பிழைத்தவருக்கு எல்லா கிரியைகளையும் செய்ததால், அவரை நடைபிணம் என்று சொல்லி ,அவரை ஊரைவிட்டு விலக்கி, ஒரு குடிசையில் இருக்க சொல்லிவிட்டார்களாம். ஊருக்குள் வரக் கூடாது. தினமும் ஒருவேளை வேலையாள் மூலம் உணவு வழங்கப்பட்டதாம். சுமார் 10 வருஷம் கழிந்து அவர் இறந்ததும் வெட்டியானின் மூலம் அவர் தகனம் நடந்ததாம். இன்று மூளை இறப்பை கண்ட பின்தான் இறப்பு சான்றிதழ் தரப்படும் (கிராமங்களை இந்த முறை உள்ளதா என்று தெரியாது). மாமா கோபாலன் அவர்கள் நமது முன்னோர்கள் வழி முறை தெளிவாக கொடுத்துள்ளார். நல்ல சேவை. நன்றி மாமா கோபாலன்.
 
வைதீக சிகாமணி கோபாலன் அவர்களே, இது மாதிரி புஸ்தகம் இருக்கா என்று யாருமே கேட்க முடியாது. கடவுள் உங்கள் மூலம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டான். அன்புடன் நமஸ்காரம்.
சிறு வயதில் மார்கழி மாதம், ராத்திரியில் ",ராக்ஷக்ஷோ பாக்யஸ்மாம், மிதோ மிதொ மித்ரமாவஸ்யாத்,..." யோனோ தோரே அகஜகம் அம்ஜக்னே மா ஜிட்டே திராத தருஷி ,... பிரம்மணே காதுமைரதி... என்று ஜபிப்பார்கள் . அதெல்லாம் அதர்வண வேத மந்திரங்களா? சற்று விளக்குவீர்களா? நன்றி
 

Latest ads

Back
Top