'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
1601. பரிஷ்கர: = பரிஷ்கார: = அலங்கரித்தல், சுத்தப்படுத்துதல்.

1602. பரிஷ்க்ருத = அலங்கரிக்கப்பட்ட, சுத்தம் செய்யப்பட்ட, சமைக்கப்பட்ட.

1603. பரிஸமாபனம் = பரிஸமாப்தி: = பர்யவஸானம் = பூர்த்தி செய்தல், முடிவு.

1604. பரிஸர : = அருகாமை, இடம், அகலம், சாவு.

1605. பரிஹரணம் = விலக்குதல், தள்ளிவிடுதல், அப்பால் கடத்தல், நிராகரித்தல், கொண்டு போதல், பித்ரு தர்ப்பணம் செய்தல்.

1606. பரிஹார: = தியாகம், நிவாரணம், பரிகாரம், மாற்று, காத்தல்.

1607. பரிஹாஸ : = ஏளனம் செய்தல், பரிகாசம் செய்தல்.

1608. பரீக்ஷ: = பரீட்சை செய்பவன், சோதனை செய்பவன்.

1609. பரீக்ஷா = பரீட்சை, தேர்வு.

1610. பரு: = கணு, முடிச்சு, அவயவம், சுவர்க்கம், மலை, கடல்.
 
1611. பருஷ = கடினமான, கசப்பான, கூர்மையான, தீவிரமான, கொடுமையான.

1612. பரேத்3யு : = மறுநாள், மற்றொரு நாள்.

1613. பரோக்ஷ: = கண்ணுக்குப் புலப்படாத, இல்லாத, அறியப்படாத.

1614. பர்ஜன்ய : = மேகம், இந்திரன்.

1615. பர்ணம் = இலை, இறகு, அம்பின் இறகு.

1616. பர்யங்க: = கட்டில், மஞ்சம், படுக்கை.

1617. பர்யடனம் = அலைந்து திரிதல், யாத்திரை செல்லுதல், சுற்றுதல்.

1618. பர்யந்த: = வரம்பு, எல்லை, முடிவு, ஓரம், விளிம்பு.

1619. பர்யாகுல = அழுக்குப் படிந்த, கலங்கிய, கலக்கம் அடைந்த.

1620. பர்யாப்தி = பெற்ற, அடைந்த, நிறைந்த, நிரம்பிய.
 
1621. பர்வணி = பௌர்ணமி, அமாவாசை, திருநாள், உற்சவம்.

1622. பர்வத: = மலை, பாறை, எண் ஏழு.

1623. பர்வன் = கணு, முடிச்சு, அவயவம், பகுதி, பாகம், படி, படிக்கட்டு, அமாவாசை, பௌர்ணமி, சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம், உற்சவம், திருநாள்.

1624. பல: = பலால: = வைக்கோல், பதர், உமி.

1625. பலாயணம் = ஓடிவிடுதல், பறத்தல்.

1626. பலாச' : = புரச மரம்.

1627. பலித = தலை நரைத்த, கிழ, வெளுத்த.

1628. பல்லவ: = பல்லவம் = தளிர், மொட்டு, திறமை, முளை.

1629. பல்லீ = சிறு கிராமம், வீடு, குடிசை, பட்டினம்.

1630. பல்வலம் = சிறு குட்டை
 
1631. பவன: = காற்று.

1632. பவனம் = புனிதமாகுதல், சுத்தம் செய்தல், புடைத்தல், சல்லடை.

1633. பவமான: = காற்று, ஒரு யாகத்திற்கான நெருப்பின் பெயர்.

1634. பவித்ர = புனிதமான, சுத்தமான.

1635. பசு' : = விலங்கு, பசு, பலியிடப்படும் மிருகம்.

1636. பச்'சாத் = பின்னால், பிறகு, மேற்கில் இருந்து.

1637. பச்'சிம = மேற்கு.

1638. பக்ஷ: = இறகு, சிறகு, பக்கம், கட்சி, வகுப்பு, பதில், கூட்டம், சுவர்,
நிலைமை.

1639. பக்ஷபாத: = அன்பு, பிரியம், ஓர வஞ்சனை, ஒரு பக்கத்தை
சார்ந்த.

1640. பக்ஷின் = பறவை.
 
1641. பக்ஷிராஜ: = கருடன்.

1642. பாக: = சமைத்தல், வறுத்தல், சுடுதல், ஜீரணித்தல், பழுத்தல், பக்குவமாதல், முடிவு, பயன், விளைவு, ஆந்தை, சிறுகுழந்தை.

1643. பாகண்ட: = நாத்திகன்.

1644. பாக3ல = பைத்தியம் பிடித்த, புத்தி கெட்டுப் போன.

1645. பாவக: = சமையல்காரன், நெருப்பு.

1646. பாசனம் = சமைத்தல்.

1647. பாஞ்ச பௌ4திக = ஐந்து தத்துவங்களுடன் கூடியன.

1648. பாடல: = மங்கலான சிவந்த நிறம், பாதிரிப்பூ.

1649. பாட2: = படித்தல், வேதம் ஓதுதல்.

1650. பாட2க: = குரு, உபாத்தியாயர், மாணவன்.
 
1651. பாண: = வியாபாரி, விளையாட்டு, பந்தயம், கை.

1652. பாணி: = கை.

1653. பாணிக்3ரஹணம் = பாணிக்3ரஹ : = திருமணம்.

1654. பாண்டு3ர = வெளுத்துப் போன, மங்கலான வெண்மை நிறமுள்ள.

1655. பாதகம் = பதக: = பாவம், குற்றம்.

1656. பாதாலம் = கீழ் உலகம்.

1657. பாதிவ்ரத்யம் = கற்பு.

1658. பாத்ரம் = தகுதிவாய்ந்தவன், அடையத் தகுந்தவன், தானம் வாங்கத் தகுந்தவன், நாடகத்தில் வரும் பாத்திரம்.

1659. பாத2: = நெருப்பு, அக்னி, சூரியன்.

1660. பாதே3யம் = கட்டுச் சோறு.
 
1661. பாத3: = பாதம், கால், ஒளிக் கிரணம், வேர், மலை அடிவாரம், கால் பங்கு, செய்யுளின் ஒரு அடி, பாகம், பகுதி.

1662. பாத3கமலம் = பாத3பத்3மம் = பாத3பங்கஜம் = பாதா3ரவிந்த3ம் = தாமரைப்பூ போன்ற கால்கள்.

1663. பாத3க்3ரஹனம் = பாதங்களைப் பற்றுதல்.

1664. பாத3சாரின் = காலாட்படை வீரன், கால்நடையாகச் செல்பவன்.

1665. பாத3ப: = மரம்.

1666. பாத3மூலம் = குதிகால், மலை அடிவாரம், தாழ்ந்த நிலம்.

1667. பாத3ரக்ஷா = பாத3ரக்ஷ: = செருப்பு.

1668. பாத3ஸேவனம் = பணிவிடை செய்தல், வணங்குதல்.

1669. பாது3கா = பாதக்குறடு.

1670. பாத்3யம் = காலைக் கழுவும் நீர்.
 
1671. பானம் = பானகம் = பானீயம் = பானம், குடிநீர், குடித்தல்.

1672. பாந்த2 : = வழிப்போக்கன், யாத்ரிகன்.

1673. பாபிஷ்ட = பாபீய = பாவமுள்ள, மிகக்கெட்ட.

1674. பாமர : = மட்டமான, மூடன்,

1675. பாயஸ : = பாயஸம் = பாயசம்.

1676. பாயு: = மலத்வாரம்.

1677. பார: = பாரம் = எதிர்க்கரை, எதிர்ப்பக்கம்.

1678. பாரமித = தேர்ச்சி பெற்ற, கரை ஏறிய, நன்கு அறிந்த.

1679. பரணம் = பாரணா = விரதம் முடிந்த பின் உண்ணுதல்.

1680. பாரத : = பாரத3: = பாதரசம்.
 
1681. பாரம்பர்யம் = தலைமுறை தலைமுறையாகத் தொடருவது.

1682. பாராவத: = புறா.

1683. பாரிஜாத: = பாரிஜதாக: = பாரிஜாத மலர்.

1684. பாரிதோஷிகம் = பரிசுப்பொருள்.

1685. பாரிஷத3 = சபையைச் சேர்ந்த.

1686. பாருஷ்யம் = கடினம், கொடுமை, க்ரூரம், அவமதித்தல்.

1687. பார்த்தி2வ : = அரசன்,

1688. பார்வணம் = முன்னோருக்கு அமாவாசை போன்ற காலங்களில்
செய்யும் சடங்கு.

1689. பார்ச்'வ: = பக்கம், அருகாமைல், உடலின் கக்கத்திற்கும்
இடுப்புக்குமிடைப்பட்ட பகுதி.

1690. பால: = பாலக: = காப்பாற்றுபவன் = அரசன்.
 
1691. பாலி: = பாலீ = ஓரம், வரம்பு, கூர்மை, வரிசை, மரபு, மடி, தொடை, பெண், புகழுதல்.

1692. பாலிகா = பாலிகை, காதின் நுனி.

1693. பாவக: = பாவன: = அக்னி, நெருப்பு.

1694. பாவனம் = புனிதமாகுதல், சுத்தம் செய்தல், பசுஞ்சாணம்.

1695. பாச' : = கயிறு, சூதாட்டக்காய், இழிவு, குவியல், கூட்டம்..

1696. பாச'பாணி= பாச'ப்3ருத் = பாச'ஹஸ்த: = வருணன்.

1697. பாசி'ன் = வருணன், யமன், வேடன்.

1698. பாசு'பத: = சிவனைப் பூஜிப்பவன்.

1699. பாசா'ன : = கல்.

1700. பாச்'சாத்ய = பின்தங்கிய, மேற்கத்திய, காலத்தால் பின்னதான.
 
1701. பிக: = குயில்.

1702. பிங்க3: = மஞ்சள், மங்கலான சிவப்பு அல்லது பழுப்பு நிறம், எருமை. எலி.

1703. பிங்க3ள : = மஞ்சள் / பழுப்பு வர்ணம், நெருப்பு, கீரி, குரங்கு, ஒருவகைப் பாம்பு, ஒரு முனிவரின் பெயர், ஒரு ஆண்டின் பெயர்.

1794. பிச்ச2ம் = மயில் தோகை, பறவையின் கொண்டை, இறகு.

1705. பிண்ட3ம் = உருண்டை, கவளம், உணவு, குவியல், சேர்க்கை, கூட்டம், உடல்.

1706. பிண்யாகம் = பிண்யாக: = பிண்ணாக்கு, தூபம் வாசனைப் பொருள், குங்குமப்பூ, பெருங்காயம்.

1707. பிதர : = முன்னோர்கள்.

1708. பிதரௌ = தந்தையும், தாயும்.

1709. பிதாமஹ : = தந்தையைப் பெற்ற பாட்டன்.

1710. பித்ருவத் = தந்தையைப் போல.
 
1711. பினாக: = பினாகம் = சிவனுடைய வில்.

1712. பினாகபாணி = பினாகின் = சிவபிரான்.

1713. பிபாஸா = தாகம்.

1714. பிபீல: = பிபீலிக: = ஆண் எறும்பு.

1715. பிபீலீ = பிபீலிகா = பெண் எறும்பு.

1716. பிப்பல : = அரசமரம், முலைக் காம்பு.

1717. பிப்பலம் = தண்ணீர், அத்திப் பழம், அரசம் பழம்.

1718. பிப்பலீ = திப்பிலி

1719. பிசா'ச: = பிசாசு, பேய்.

1720. பிசு'ன = நிந்திக்கும், கோள் சொல்லும், மட்டமான, கெட்ட.
 
1721. பிஷ்டம் = மாவு, பொடியாக்கப் பட்ட தானியம்.

1722. பிஹித = சாத்தப்பட்ட, மறைக்கப்பட்ட, கட்டப்பட்ட.

1723. பீட2கம் = பீடம் = மதபீடம், இருக்கை, ஆசனம்.

1724. பீடி2கா = முன்னுரை, முகவுரை, பின்னுரை போன்றவை.

1725. பீட3னம் = துன்பம் கொடுத்தல்,கஷ்டம் உண்டாக்குதல், எடுத்தல், பிழிதல், நெருக்குதல்.

1726. பீடா3 = பீடை, கஷ்டம், வேதனை, துன்பம், நஷ்டம், கேடு, அலட்சியம்.

1727. பீத = மஞ்சள் நிறமான, குடித்துள்ள, பரவிய, நனைந்த.

1728. பீதம் = தங்கம்.

1729. பீதலம் = பீதலகம் = பித்தளை.

1730. பீத2: = அக்னி, சூரியன், நேரம்.
 
1731. பீன = பருத்த, கொழுத்த, பெரிய, தடித்த.

1732. பீனஸ: = மூக்குச் சளி.

1733. பீயுஷ: = பீயூஷம் = அமிர்தம், பால்.

1734. பீலு: = பூச்சி, புழு, யானை, பூ, அம்பு, ஒரு மரம், அணு.

1735. பும்ஸ = புருஷன், ஆண், மனித இனம்.

1736. பும்ஸகோகில : = ஆண் குயில்.

1737. புங்க3: = புங்க3ம் = கூட்டம்.

1738. புட: = புடம் = தொன்னை, உறை, மூடி, மடிப்பு, புத்தகத்தின் பக்கம்.

1739. புண்ட3ரீகம் = வெண்தாமரை, வெள்ளைப் புலி.

1740. புண்ட்3ர: = செங்கரும்பு, வெண்தாமரை, நெற்றியில் இடும் திலகம் .
 
1741. புண்ய = புனிதமான, சுத்தமான, நல்ல, குணமுள்ள, இன்பமான.

1742. புண்யச்'லோக: = புண்ணிய நடத்தையுள்ள . உதாரணங்கள்:-
நளன், யுதிஷ்டிரன், ஜனார்த்தனன் முதலியோர்.

1743. புனர் = மறுபடியும், மேலும்.

1744. புனராக3மனம் = புனராவர்த்த: = திரும்பி வருதல்.

1745. புனராவ்ருத்தி = உருப்போடுதல், திரும்பி வருதல், மறுபிறவி எடுத்தல்.

1746. புனருக்தி: = திரும்பத் திரும்பச் சொல்லுதல், பயனற்ற தன்மை.

1747. புனருத்தா2னம் = மறுபடி உயிர் பெறுதல்.

1748. புனருத்3தா4ரணம் = புத்துயிர் ஊட்டல்.

1749. புரதம் = முன்னே, எதிரே.

1750. புரந்த3ர: = இந்திரன், சிவன், விஷ்ணு, அக்னிதேவன், திருடன்.
 
1751. புரம் = பட்டணம் , கோட்டை, வீடு, இருப்பிடம், உடல், அந்தப்புரம், குங்குலியம்.

1752. புரந்த்4ரீ = திருமணமான குடும்பப்பெண்.

1753. புரஸ்கார: = புரஸ்கரணம் = சன்மானம் / மரியாதை செய்தல்,
பூஜை, பூர்த்தி செய்தல், தயாரித்தல் .

1754. புரா = முன்காலத்தில், எல்லாவற்றுக்கும் முதலில், சீக்கிரத்தில்.

1755. புரி: = நகரம், பட்டணம், ஆறு, அரசன்.

1756. புரீஷம் = அழுக்கு, மலம், சாணம்.

1757. புருஷகார: = முயற்சி, மனிதச் செயல்.

1758. புருஷத்வம் = ஆண்மை, வீரியம், மனித இயல்பு.

1759. புருஷார்த்த2: = மனித வாழ்வின் குறிக்கோள் (அறம், பொருள்,
இன்பம் , வீடு முதலியன)

1760. புருஷோத்தம: = விஷ்ணு, பரம்பொருள், மேன்மையான மனிதன்.
 
1761. புரோத4ஸ் = புரோஹித: = புரோஹிதர்.

1762. புலக: = மயிர்க்கூச்சு, புழு, கல், வைரம், மாணிக்கக் கல்லில் தோஷம்.

1763. புளிந்த3: = காட்டுமனிதன், மலை சாதியினன், வேடன்.

1764. புஷ்கரம் = கரு நெய்தல் பூ, தாமரைப்பூ, பேரிகை, வாள் உரை, தண்ணீர், அம்பு, ஆகாயம்.

1765. புஷ்கர: = ஏரி, குளம், பேரிகை, மத்தளம், சூரியன், சிவன்.

1766. புஷ்கரிணீ = குளம், தாமரைக் குளம், பெண் யானை, தாமரைச் செடி.

1767. புஷ்கள = அதிகமான, மிகுதியான, மேலான, பூரணமான, அருகில் உள்ள.

1768. புஷ்டி: = வளர்ப்பு, போஷனை, முழுமை, மோக்ஷம், நலம், செல்வம்.

1769. புஷ்பம் = மலர், புஷ்பராகக்கல். பெண்களின் மாத விடாய்.

1770. புஷ்பகம் = குபேரனின் விமானம், பூ, கங்கணம்.
 
1771. புஷ்பித = மலர்ந்த, பூக்கள் நிறைந்த, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட.

1772. பூக3: = குவியல், கூட்டம், சங்கம், பாக்குமரம்.

1773. பூஜனம் = பூஜை, பூஜித்தால், கௌரவித்தல்.

1774. பூஜார்ஹம்= பூஜ்ய = பூஜிக்கத் தக்க.

1775. பூஜித = பூஜிக்கப்பட்ட, புகழப்பட்ட.

1776. பூத = புனிதமான, சுத்தம் செய்யப்பட.

1777. பூயம் =பூய: = சீழ்.

1778. பூர: = நிரப்புதல், பூர்த்தி செய்தல், திருப்தி செய்தல்.

1779. பூரண: =பாலம், அணை, கடல்.

1780. பூர்ண = முழுமையான, பூர்த்தியான, வலிமையுள்ள.
 
1781. பூர்ணகாம: = விருப்பம் பூர்த்தியடைந்த.

1782. பூர்ணகும்ப3: = தண்ணீர் நிறைந்த சொம்பு.

1783. பூர்தம் = பூர்த்தி: = முழுமை, நிறைவு, திருப்தி, மகிழ்ச்சி, முடிவு.

1784. பூர்வ = எதிரிலுள்ள, கிழக்கத்திய, முந்தைய, முன்காலத்திய, முன் நடந்த, முன்னே சொல்லப்பட்ட.

1785. பூர்வக்ருத = முன்னர் செய்யப்பட்ட.

1786. பூர்வஜ: = அண்ணன், முன்னோன்.

1887. பூர்வஜா = தமக்கை.

1788. பூர்வஞானம் = முன் பிறவியைப் பற்றிய அறிவு.

1789. பூர்வத: = முதலில், முன்னால், ஆரம்ப
த்தில் .

1790. பூர்வத்ர = முன்னால், முன் பகுதியில்.
 
1791. பூர்வ புருஷ: = பிரமன், தந்தை, தாத்தா, முப்பாட்டன்.

1792. பூர்வப2ல்கு3னி = பூர நக்ஷத்திரம்.

1793. பூர்வபா4த்3ரபதா3 = பூர்வ ப்ரோஷ்ட2பதா3 = பூரட்டாதி நக்ஷத்திரம்.

1794. பூர்வவத் = முன்போலவே.

1795. பூர்வபர = முதலும் கடைசியும், முன்னதும் பின்னதும், கிழக்கத்தியதும் மேற்கத்தியதும்.

1796. பூர்வாபி4முக2 = கிழக்குமுகமாக.

1797. பூர்வார்ஜிதம் = முன்னோ
ர்கள் விட்டுச் சென்ற சொத்து.

1798. பூர்வாஷாடா4 =பூராட நக்ஷத்ரம்.

1799. பூர்வேத்3யு: = நேற்று, கடந்த நாள்.

1800. பூஷன் = சூரியன்.
 
1801. ப்ருச்சா2 = கேட்டல், கேள்வி.

1802. ப்ருத2க் = வேறாக, தனித் தனியாக, தனிப்பட்ட, தவிர, தனியாக.

1803. ப்ருத்2வீ = பூமி, பூதத்வம்.

1804. ப்ருது2 = ப்ருது2ல = அகன்ற, விஸ்தாரமான, பெரிய, அதிகமான.

1805. ப்ருது2கம் = அவல்.

1806. ப்ருஷ்ட = கேட்கப்பட்ட.

1807. ப்ருஷ்டத: = பின் புறமாக, பின்னாலிருந்து.

1808. ப்ருஷ்டம் = முதுகு, பின்புறம், மேற்பரப்பு, புத்தகத்தின் பக்கம்

1809. பேசக: = ஆந்தை, கோட்டான், பேன், படுக்கை, மேகம், யானையின் வால்.

1810. பேட: = பேடக: = பெட்டி, பை, கூடை, கூட்டம்
 

1811. பேடிகா = பேடி = பெட்டி, சிறுபை, கூடை.

1812. பேலி: = பேலின் = குதிரை.

1813. பேச' = பேச'ல = பேஷ = பேஷல = பேஸல = மிருதுவான, அழகான, நல்ல, சாமர்த்தியமுள்ள, கபடமுள்ள.

1814. பைதாமஹ = பிரமன் / தகப்பன் வழிப் பாட்டனுடன் தொடர்புடைய.

1815. பைத்ருக = தகப்பன் வழிப் பரம்பரையாக வந்த.

1816. பைத்ருகம் = இறந்து போன தகப்பன் முதலிய முன்னோருக்குச் செய்யப்படும் சடங்கு.

1817. பைசா'ச: = பிசாசு, பேய், ஒரு வித மட்டமான ஹிந்து திருமணம்.

1818. பைசு'னம் = பைசு'ன்யம் = வஞ்சனை, கோள் சொல்லுதல்.

1819. போத: = கன்று, 10 வயதான யானை, துணி, படகு, கப்பல்.

1820. போஷணம் = போஷித்தல், வளர்த்தல்.
 
1821. பௌத்ர: = மகனின் மகன்.

1822. பௌத்ரீ = மகனின் மகள்.

1823. பௌராணிக: = புராண அறிவு உடையவன், புராணம் சொல்பவன்.

1824. பௌருஷம் = மனித முயற்சி, வீரம், ஆண்மை.

1825. ப்ரகடனம் = வெளிப்படுத்துதல், தெளிவாக்குதல்.

1826. ப்ரகரணம் = நிரூபித்தல், விவரித்தல், காலம் , தருணம், விஷயம்.

1827. ப்ரகர்ஷ: = மேன்மை, வலிமை, சக்தி, விசேஷத் தன்மை.

1828. ப்ரகாண்ட3: = ப்ரகாண்ட3ம் = அடிமரம், கிளை, தளிர்.

1829. ப்ரகார: = முறை, வழி, ரீதி, சமமான தன்மை, பலவிதமான.

1830. ப்ரகாஷ: = காந்தி, ஒளி, பளபளப்பு, விவரித்தல், காட்டுதல்.
 
1831. ப்ரகாஷக: = பிரகாசிக்கச் செய்பவன், சூரியன், பதிப்பாளர்.

1832. ப்ரகீர்ண = சிதறிய, பரப்பப்பட்ட, களைப்புற்ற, கலங்கிய, குழம்பிய, பலவகையான, கலந்த.

1833. ப்ரக்ருத = பூர்த்தியான, நிறைவேற்றப்பட்ட, தொடங்கப்பட்ட, நியமிக்கப்பட்ட, உண்மையான, மேன்மை நிறைந்த.

1834. ப்ரக்ருதி : = இயற்கை நிலை, இயற்கையான ஸ்வபாவம், இயற்கையான உருவம், மாயை, உருவம், பூமி, மூல காரணம்.

1835. ப்ரக்ருஷ்ட = மேலான, ச்ரேஷ்டமான, நீண்ட, அமைதியற்ற, இழுத்து வெளியே தள்ளப்பட்ட, களைத்துப்போன.

1836. ப்ரகோஷ்ட: = முன்னங்கை, முற்றம்.

1837. ப்ரக்ரம : = காலடி, சுவடு, போக்கு, ஒழுங்கு, முறை, அளவு, தருணம், ஓய்வு.

1838. ப்ரக்ரியா = முறை, உயர்வு, அதிகாரம், அத்தியாயம்.

1839. ப்ரக்யா = ப்ரக்யாதி: = புகழ், கீர்த்தி, நன்கு அறியப்படுவது.

1840. ப்ரக்3ருஹீத = பிடிக்கப்பட்ட, அடையப்பட்ட , ஒப்புக் கொள்ளப்பட்ட.
 
1841. ப்ரக்3ரஹ: = ப்ரக்3ராஹ = பிடித்தல், எடுத்தல், தூக்குதல், எடுத்துச் செல்லல், தாங்கிச் செல்லல், தலைக்கயிறு, கடிவாளம், தராசின் கயிறு.

1842. ப்ரசண்ட3 = தீவிரமான, கடுமையான, உஷ்ணமான, கோபம் அடைந்த, தைரியம் உள்ள, பயங்கரமான.

1843. ப்ரசார: = பிரசாரம், விளம்பரம் செய்தல், சுற்றுதல், அலைந்து திரிதல், செயல் முறை, உபயோகம், வழக்கம், சாலை, வழி,
மாடு மேயும் இடம்.

1844. ப்ரசுர = அதிகமான, ஏராளமான, பெரிய, விசாலமான, விஸ்தாரமான, பூரணமான, நிரம்பிய.

1845. ப்ரசேதஸ் = வருணன்.

1846. ப்ரசோதி3த = தூண்டப்பட்ட, கட்டளை இடப்பட்ட, குறிக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட.

1847. ப்ரச்ச2த3: = மூடும் துணி / பொருள், போர்வை, படுக்கை விரிப்பு.

1848. ப்ரச்ச2ன்ன = மூடப்பட்ட, ஒளித்து வைக்கப்பட்ட,
ரகசியமான, ஆடை அணிந்த.

1849. ப்ரஜா = வழித்தோன்றல், குழந்தை, பிறப்பு, உற்பத்தி, ஆண்மை, வீரியம், மக்கள், பிராணி, மனித இனம்.

1850. ப்ரஜாபதி = பிரமன்.
 
Status
Not open for further replies.
Back
Top