'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
1351. நிருத்ஸுக = ஊக்கம் இல்லாத, அசட்டையான.

1352. நிருத்3த4 = தடை செய்யப்பட, அடக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட.

1353. நிரூட4 = தொன்றுதொட்டு வரும், பரம்பரையாக வந்த.

1354. நிரூடி4: = புகழ், கீர்த்தி, அறிமுகம், பயிற்சி, தேர்ச்சி, சாமர்த்தியம்.

1355. நிரூபணம் = பார்வை, பார்த்தல், அலசிப்பார்த்தால், தேடுதல்,
நிரூபித்தல், விவரமாகக் கூறுதல்.

1356. நிரோத4னம் = சூழ்தல், தடை செய்தல், நாசமாக்குதல், அழித்தல், அடக்குதல்.

1357. நிர்க3மனம் = வெளியே செல்லுதல்.

1358. நிர்கு3ண = நற்குணம் இல்லாத, கெட்ட.

1359. நிர்ஜன = மனிதர்களே இல்லாத, தனி இடமான.

1360. நிர்ஜ்ஜர : = நீரூற்று, நீர் வீழ்ச்சி, யானை.
 
1361. நிர்ணய: = நிச்சயித்தல், தீர்மானித்தல்.

1362. நிர்நேஜனம் = கழுவுதல், சுத்தம் செய்தல், பரிஹாரம் செய்தல்.

1363. நிர்விஷ்ட = குறிப்பிடப்பட்ட, நியமிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட .

1364. நிர்தோ3ஷ = குற்றமற்ற, மாசற்ற.

1365. நிர்த4ன = ஏழ்மையான, பொருளில்லாத.

1366. நிர்தா4ரணம் = நிர்ணயித்தல், நிச்சயித்தல்.

1367. நிர்ப3ந்த4: = வற்புறுத்துதல்.

1368. நிர்ப4ய = பயமில்லாத.

1369. நிர்ப4ர = அதிகமான, தீவிரமான.

1370. நிர்மல = தூய்மையான, சுத்தமான, களங்கமற்ற, அழுக்கற்ற.
 
1371. நிர்மாணம் = படைத்தல், அளத்தல், உற்பத்தி செய்தல்.

1372. நிர்மால்யம் = பூஜை பொருட்களின் மிகுதி, பூஜை செய்யப்பட்ட பூக்களின் மிகுதி, சுத்தமான தன்மை.

1373. நிர்முக்த = விடப்பட்ட, பற்றுக்களில் இருந்து விடுபட்ட.

1374. நிர்மூல = வேரில்லாத, ஆதாரமற்ற.

1375. நிர்மூலனம் = வேரோடு அழித்தல்.

1376. நிர்யாணம் = யாத்திரை, புறப்படுதல், பேரின்பம், விடுபடுதல்,
மோக்ஷம்.

1377. நிர்வசனம் = முதுமொழி, வழிமொழி, அட்டவணை, விளக்கம்.

1378. நிர்வாபணம் = கொட்டுதல், தெளித்தல், காணிக்கை, விதைத்தல், இளைப்பாறுதல்.

1379. நிர்வாஹ : = நிர்வாகம், போதுமானது, பூர்த்திசெய், நிறைவேற்று.

1380. நிர்வ்ருத்தி : = முழுமை, முடிவு, பேரின்பம்.
 
1381. நிர்வேத3: = வெறுப்பு, திகட்டல், திருப்தி, துக்கம், சோகம்.

1382. நிலய: = வசிக்கும் இடம், கூண்டு.

1383. நிவாரணம் = தடுத்தல், அப்புறப்படுத்துதல்.

1384. நிவாஸின் = வசிக்கின்ற, இருக்கின்ற, ஆடை அணிகின்ற.

1385. நிவ்ருத்தி : = திரும்புதல், மறைவு, தேக்கம், ஓய்வு, வைராக்கியம், பேரின்பம், விடுபடல்.


1386. நிவேத3னம் = தெரிவித்தல், அர்ப்பணித்தல், சமர்ப்பித்தல்.

1387. நிவேத்3யம் = நைவேத்3யம் = இறைவனுக்கு சமர்பிக்கும் நைவேத்யம்.

1388. நிவேச'னம் = நுழைதல், இருப்பிடம், வீடு, மணம் புரிதல்.

1389. நிசா' = இரவு, மஞ்சள்.

1390. நிச்'சய = தீர்மானமான அபிப்பிராயம், திட நம்பிக்கை.
 
1391. நிச்'சல = அசையாத, திடமான, ஸ்திரமான.

1392. நிச்'சித = நிச்சயிக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட.

1393. நிச்'வாஸ : = பெருமூச்சு, மூச்சு விடுதல்.

1394. நிஷாத3 : = வேடன், சங்கீதத்தில் ஒரு ஸ்வரத்தின் பெயர்.

1395. நிஷித்3த4 = தள்ளிவைக்கப்பட்ட, தடுக்கப்பட்ட.

1396. நிஷூத3னம் = கொல்லுதல்.

1397. நிஷேவணம் = அனுபவித்தல், சேவகம், ஆராதனை,
தொண்டுபுரிதல், பூசித்தல், அனுஷ்டித்தல்.

1398. நிஷ்கம் = தங்கம், தங்க நகை, தங்க நாணயம்.

1399. நிஷ்கர்ஷ : = வெளிக்கிளப்புதல், இழுத்தல், அளத்தல், நிச்சயித்தல்.

1400. நிஷ்காம = ஆசையற்ற.
 
1401. நிஷ்காரண = காரணமில்லாத.

1402. நிஷ்க்ருதி: = விடுபடல், பிராயச்சித்தம், விலக்குதல்,
கெட்ட நடத்தை.

1403. நிஷ்க்ரமணம் = வெளிச் செல்லல், புறப்பாடு.

1404. நிஷ்டா2 = ஸ்திரத்தன்மை, திடத்தன்மை, சிரத்தை, உயர்வு, மேன்மை.

1405. நிஷ்டீ2வ : = நிஷ்டே3வ: = நிஷ்டீ2வம் = நிஷ்டே2வனம் = உமிழ்தல்.

1406. நிஷ்டூ2ர = கடினமான, கஷ்டமான, கூர்மையான, கொடுமையான, முரடான.

1407. நிஷ்ண = நிஷ்ணாத = சாமர்த்தியமுள்ள, கெட்டிக்கார, திறமையான.

1408. நிஷ்பத்தி: = பிறப்பு, உண்டாக்குதல்,முழுமை, முடிவு, செழிப்பு.

1409. நிஷ்பன்ன = உண்டான, வளர்க்கப்பட்ட, முடிக்கப்பட்ட, பூர்த்தியான, தயாராக உள்ள.

1410. நிஸர்க3: = தானம் செய்தல், நன்கொடை, மலம் கழித்தல், இயற்கை, ஸ்வபாவம், பண்டமாற்றல்.
 
1411. நிஸூத3னம் = கொலை செய்தல்.

1412. நிஸ்ருஷ்ட = கொடுக்கப்பட்ட, அர்பணிக்கப்பட்ட, விடப்பட்ட, தள்ளப்பட்ட.

1413. நிஷ்பந்த3 : = நடுக்கம், அசைவு.

1414. நிஸ்யந்த3: = நிஷ்யந்த3: = பாய்தல், வடிதல், கசிந்தோடுதல், பெருக்கு, ஓடை.

1415. நிஸ்வன: = நிஸ்வான: = நிஸ்வநிதம் = குரல், சப்தம்.

1416. நிஹத = கொல்லப்பட்ட, வதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, அடிக்கப்பட்ட.

1417. நிஹீன = மட்டமான.

1418. நிக்ஷிப்த = எறியப்பட்ட, அனுப்பப்பட்ட, வைக்கப்பட்ட, விடப்பட்ட.

1419. நிக்ஷேப: = வைத்தல், எறிதல், போடுதல், புதையல்.

1420. நீச = இழிவான, மட்டமான, சிறிய, கெட்ட.
 
1421. நீட3: = நீட3ம் = பறவைக்கூடு, படுக்கை, இருப்பிடம்.

1422. நீதி: =
நீதி, ஒழுக்கம், நடத்தை, வழிமுறை, கொள்கை.

1423. நீரம் = தண்ணீர், சாறு.

1424. நீரஜம் = தாமரை, முத்து.

1425. நீராஜனம் = தீப ஆராதனை.

1426. நீல = நீலமான, கறுப்பான.

1427. நீலம் = துத்தம், கண் மை, விஷம்.

1428. நீலகண்ட2: = மயில், சிவன்.

1429. நீலலோஹித: = நீலக்3ரீவ : = சிவன்.

1430. நீலாம்ப3ரம் = பலராமன், சனீஸ்வரன், பிசாசு, அரக்கன்,
நீல நிற அல்லது கருப்பு நிற ஆடை அணிந்தவன்.
 
1431. நீலாம்பு3ஜம் = நீலோத்பலம் = கருநெய்தல் புஷ்பம்.

1432. நீலி = நீல நிறமான.

1433. நீவார: = செந்நெல், ஒரு தானியம்.

1434. நீஹார: = மூடு பனி, பனி.

1435. நுதி : =துதித்தல், புகழுதல், பாராட்டுதல், பூசித்தல்.

1436. நூதன = நவீனமான, புதிய, புதிதான, வியப்பான.

1437. நூனம் =அவசியம், சந்தேகமில்லாமல், நிச்சயமாக.

1438. நூபுர: = நூபுரம் = சிலம்பு.

1439. ந்ரு = மனிதன்.

1440. ந்ருதம் = ந்ருத்யம் = நடனம், நாட்டியம், அபிநயம்.
 
1441. ந்ருப: = ந்ருபதி: = அரசன், பிரபு, ஆளுபவன்.

1442. நேத்ரு = தலைவன், தலைமை தாங்குபவன்.

1443. நேத்ரம் = கண், கயிறு, பட்டு, ஆடை, வாஹனம், எஜமான், தலைவன்.

1444. நேதி3ஷு = நேதீயஸ் = மிக அருகில் உள்ள, மிக சமீபத்தில்.

1445. நேபத்யம் = ஆபரணம், அலங்காரம், நடிகர்கள் அலங்காரம் செய்து கொள்ளும் அறை.

1446. நேம : = அம்சம், பாகம், காலம், எல்லை, வேலி, கபடம், வஞ்சனை, அகழி, தீவு, துவாரம்.

1447. நேமி: = நேமீ = பரிதி, சுற்றளவு, பூமி.

1448. நைக3ம = வேதத்துடன் தொடர்பு உடைய.

1449. நைஜ = தன்னுடைய, தனக்கு சொந்தமான.

1450. நைபுண்யம் = திறமை, அறிவு, முழுமை.
 
1451. நைமித்திக = விசேஷ காரணத்தால், அசாதரணமான.

1452. நைரந்தர்யம் = நிரந்தரத்தன்மை, இடைவிடாத, தொடர்ந்த.

1453. நைர்கு3ண்யம் = குணம் இல்லாத, நற்குணம் இல்லாத.

1454. நைஷ்கர்ம்யம் = வேலையில்லாத, கர்மாவிலிருந்து விடுபட்ட.

1455. நைஷ்டிக = நிச்சயமான, நிர்ணயிக்கப்பட்ட, திடமான.

1456. நைஷ்டிக: = வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து
கொள்ளாதவன்.

1457. நைஸர்கி3க = இயற்கையான, உடன் பிறந்த.

1458. நோ = இல்லை, வேண்டாம்.

1459. நௌ = படகு, கப்பல்.

1460. நௌகா = சிறு படகு.
 
1461. ந்யாய: = ஒழுங்கு, முறை, திட்டம், சட்டம், அரசாங்கம்.

1462. ந்யாஸ : = வைத்தல், ஸ்தாபித்தல், தள்ளி விடுதல், விட்டு விடுதல்.

1463. ந்யூனம் = குறைவான, குற்றமுள்ள.

1464. பக்வ = சமைக்கப்பட்ட, ஜீரணம் ஆகிய, பழுத்த, நிறைந்த.

1465. பங்கம் = சேறு, குழம்பிய மண், பாவம்.

1466. பங்கஜம் = பங்கேருஹம் = தாமரை.

1467. பங்கு3: = நொண்டி மனிதன், சனி கிரகம்.

1468. பச் = சமைக்க, ஜீரணிக்க, உணவு தயாரிக்க.

1469. பஞ்சதத்வம் = பஞ்சபூ4தம் = பூமி, ஜலம், வாயு, அக்னி, ஆகாசம்.

1470. பஞ்சத்வம் = அழிவு, மரணம்.
 
1471. பஞ்சபாண: = மன்மதன்.

1472. பஞ்சானன: = பஞ்சவக்த்ர = சிவன்.

1473. பஞ்சாம்ருதம் = ஐந்து இனிப்புப் பொருட்களின் கலவை.

1474. பஞ்சாச'த் = ஐம்பது.

1475. பஞ்ஜரம் = கூடு, கூண்டு.

1476. பட: = படம் = துணி, திரைச் சீலை.

1477. படலம் = கூரை மூடி, திரை, கூட்டம்.

1478. படு = திறமையுள்ள, கூர்மையான, அறிந்த.

1479. படுத்வம் = அறிவுத்திறன், திறமை.

1480. பட்டிகா = பலகை, தகடு, பட்டி, சட்டம், பத்திரம், பட்டியல்.
 
1481. பட2னம் = படித்தல், மனப்பாடம் செய்தல்.

1482. பண: = சூதாட்டம், பணயம், சொத்து, வியாபாரம், கடை, வியாபாரி.

1483. பணி: = உலோபி.

1484. பண்டி3த: = படித்தவன், அறிவாளி.

1485. பண்யவீதி = கடை வீதி.

1486. பத் = கீழே விழ, அஸ்தமிக்க, பறக்க, மட்டமாகிப்போக.

1487. பதங்க3: = ப
வை, சூரியன், வந்து, விட்டில் பூச்சி.

1488. பதாகா = கொடி.

1489. பதி: = கணவன், எஜமானன், அரசன், அதிகாரி.

1490. பதித = கீழே விழுந்த, ஜாதி கடத்தப்பட்ட.
 
1491. பத்னீ = மனைவி.

1492. பத்ரம் = இலை, காகிதம், கடிதம், தஸ்தாவேஜு, இறகு, கத்தி.

1493. பத்ரிகா = கடிதம், பத்திரிகை.

1494. பத2: = பாதை, வழி.

1495. பதி2க: = வழிப் போக்கன், யாத்திரிகன்.

1496. பத்யம் = நன்மை தருவது, பத்திய உணவு.

1497. பத3ம் = கால், பாதம், காலடி, சின்னம், இடம், நிலை, பதவி.

1498. பத3வி: = பத3வி = இடம், வழி, நிலைமை.

1499. பத்3த4தி: = வழி, முறை, வரிசை.

1500. பத்3மம் = தாமரைப்பூ.
 
1501. பத்3மநாப4: = பத்3மேச'ய : = விஷ்ணு.

1502. பத்3மப4வ : = பத்3மபூ4: = பத்3மஸம்ப4வ : = பிரமன்.

1503. பத்3மா = பத்3மாலயா = பத்3மஹஸ்தா = பத்3மாவதி = லக்ஷ்மி தேவி.

1504. பத்3யம் = செய்யுள், கவிதை.

1505. பனஸ: = பலாமரம்.

1506. பனஸம் = பலாப்பழம்.

1507. பயஸ் = தண்ணீர், பால்.

1508. பயஸ்வினி = கறவைப்பசு, நதி, இரவு, பெண் வெள்ளாடு.

1509. பர = வேறான, மேலான, சிரேஷ்டமான, அதிகமான, வெளியே,
தூரத்தில் உள்ள.

1510. பரகீய = பிறருக்குச் சொந்தமான.
 
1511. பரதந்த்ர = பிறருக்கு கட்டுப்பட்ட, சுதந்திரம் இல்லாத.

1512. பரத்ரா = மறுபிறவியில், வேறு உலகில்.

1513. பரதே3வதா = உயர்ந்த கடவுள், தேவி.

1514. பரதே3சி'ன் = அயல் நாட்டான்.

1515. பரந்தப : = வீரன், எதிரிகளை வெல்பவன்.

1516. பரப்3ரஹ்மன் = பரம் பொருள்.

1517. பரம = மிகவும் மேலான / நேர்த்தியான /அதிகமான / முக்கியமான.

1518. பரமபதம் = மோக்ஷம்.

1519. பரமபுருஷ: = பரமாத்மன் = பரம்பொருள்.

1520. பரமாணு : = மிகச் சிறிய அணு.
 
1521. பரமேச்'வர: = பரம்பொருள், இறைவன், கடவுள், விஷ்ணு, சிவன்.

1522. பரம் = மிகவும் மேலான நிலை, முக்தி, பரம் பொருள்.

1523. பரம்பர = பரம்பரீண = பாரம்பர்ய = மேன்மேலும், வழிவழி வந்த, தொடர்ந்து வரும்.

1524. பரலோக: = வேறு உலகம், மேல் உலகம்.

1525. பரவச' = பிறரை அண்டி இருக்கும், பிறர் மீது ஆதாரப்படும்.

1526. பரசு' : = கோடரி.

1527. பரஸ்தாத் = அப்பால், பின்னர், பின்னால், ஒன்றுக்குப் பிறகு.

1528. பரஸ்பர = ஒருவரோடு ஒருவர் இணைந்து, ஒத்துழைப்புடன்,
மற்றொருவர் உதவியுடன்.

1529. பராக்ரம : = வீரம், சூரத்தனம், தைர்யம், ஆக்கிரமித்தல்.

1530. பராஜய : = தோல்வி, படு தோல்வி.
 
1531. பராஜித = ஜெயிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட.

1532. பராத்பர = எல்லாவற்றுக்கும் மேலான.

1533. பராதீ4ன = பிறர் வசப்பட்ட, பிறரை அண்டியுள்ள.

1534. பராபர = முன்னும் பின்னும், மேலும் கீழும், அருகிலும் தொலைவிலும்.

1535. பராப4வ : = தோல்வி, மானபங்கம், அழிவு, அவமதிப்பு, பிரிந்துபோதல்.

1536. பராவர்த்த: = திரும்புதல், திரும்பி வருதல், திரும்பப் பெறுதல், மாற்றிக்கொள்ளுதல்.

1537. பராஹத = அடித்துத் தள்ளப்பட்ட, அடிக்கப்பட்ட.

1538. பரிகர: = சுற்றம், குடும்பம், சேர்க்கை, தொடக்கம், இடுப்பில் கட்டும் துணி.

1539. பரிகல்பித = நிர்ணயிக்கப்பட்ட, பகிர்ந்தளிக்கப்பட்ட, ஸ்திரமான, தீர்மானிக்கப்பட்ட.

1540. பரிகீர்ண = பரப்பப்பட்ட, சிதறுண்ட, சூழப்பட்ட.
 
1541. பரிக்ரம = இங்கும் அங்கும் திரிதல், சுற்றுதல், பிரதட்சிணம் செய்தல், வரிசை முறை.

1542. பரிக்ளாந்த = பரிக்ளிஷ்ட = சோர்வடைந்த, களைத்துப்போன.

1543, பரிகா2 = அகழி.

1544. பரிக3மனம் = எண்ணிக்கை, முழுவதும் கணக்கிடுதல்.

1545. பரிக3த = சுற்றப்பட்ட, சூழப்பட்ட, அறியப்பட்ட, அடையப்பட்ட, நினைக்கப்பட்ட .

1546. பரிக்3ருஹீத = பிடிக்கப்பட்ட, தழுவப்பட்ட, சூழப்பட்ட, சுற்றப்பட்ட, அடையப்பட்ட, திருமணம் செய்யப்பட்ட, ஒப்புகொள்ளப்பட்ட, எடுத்துக் கொள்ளபட்ட.

1547. பரிக்3ரஹ : = பிடித்தல், எடுத்தல், சுற்றுதல், உடுத்தல், செல்வம், பொருள், சொத்து, பரிவாரம், மனைவி, திருமணம், நன்கொடை, தானம், க்ரஹணம், அடைதல், வேலைக்காரன்.

1548. பரிக4 : = இரும்புத்தடி, கதவின் தாழ்ப்பாள், பானை, வீடு, அகழி, தடை.

1549. பரிசய: = குவியல், அப்யாசம், பயிற்சி, பழக்கம், நட்பு.

1550. பரிசர : = வேலையாள், சேவகன், பணிவிடை.
 
1551. பரிசாரக; = வேலைக்காரன்.

1552. பரிசித = பழகின, தெரிந்த, குவிக்கப்பட்ட, பழக்கப்பட்ட.

1553. பரிச்சி2த3: = மூடி, சால்வை, போர்வை, துணி, பொருள், சமூஹம், சாமான்கள், பரிவாரம்.

1554. பரிச்சி2ன்ன = வெட்டப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, பிரிவாகப்பட்ட.

1555. பரிச்சே2த3: = பகுத்தறிதல், வெட்டுதல், தீர்மானித்தல், எல்லை, வரம்பு, வகுத்தல், பிரிதல், புத்தகத்தின் ஒரு பகுதி.

1556. பரிஜன: = உறவினர்கூட்டம், வேலையாள்கள் கூட்டம்.

1557. பரிணத = வளைந்த, பழுத்த, பக்குவமடைந்த, வினயமுள்ள, வணக்கத்துடன் கூடிய, கிழமான.

1558. பரிணதி: = வளைதல், வணங்குதல், பழுத்தல், மலர்ச்சி, முழுமை, முடிவு, மாற்றம், பயன், விளைவு.

1559. பரிணத்3த4 = கட்டப்பட்ட, விஸ்தாரமடைத்த, சுற்றிக் கட்டப்பட்ட.

1560. பரிணய: = பரிணயம் = திருமணம்.
 
1561. பரிணாம: = பரீணாம: = மாறுதல், மாறுபாடு, ஜீரணித்தல், பயன், பக்குவத்தன்மை, கனிவு, முதிர்ச்சி, முழுமை, முடிவு, மூப்பு, ஒரு வகைச் சொல்லணி.

1562. பரிணாஹ : = பரீணாஹ : = பரிதி, சுற்றளவு, அகலம்.

1563. பரிணேத்ரு: = கணவன்.

1564. பரிதாப : = துன்பம், துக்கம், சோகம், அதிக உஷ்ணம் .

1565. பரிதுஷ்டி: = மிக அதிகமான மகிழ்ச்சி / திருப்தி / சந்தோஷம்.

1566. பரித: = சுற்றிலும், எல்லாப் பக்கங்களிலும்.

1567. பரித்யாக3: = விட்டு விடுதல், விலக்குதல்.

1568. பரித்ராணம் = காப்பாற்றுதல், விடுவித்தல்.

1569. பரிதி4: = சுவர், வேலி, சூரியனைச் சுற்றி உள்ள வட்டம்,
சுற்றளவு, சக்கரத்தின் பரிதி, யாக குண்டத்தின் முப்புறத்திலும் வைக்கப்படும் சமித்துக்கள்.

1570. பரிநிர்வாணம் = முழு அழிவு, பிறப்பில்லாத கடைசிச் சாவு.
 
1571. பரிநிர்வ்ருத்தி : = மோக்ஷம், வீடுபேறு.

1572. பரிபக்வ = முற்றிலும் பழுத்த, நன்கு கனிந்த, நன்கு சமைக்கப்பட்ட.

1573. பரிபாடி: = பரிபாடீ = விதம், முறை, ஒழுங்கு.

1574. பரிபாட2: = முழு வரலாறு, வேதம் முழுவதும் ஓதுதல்.

1575. பரிபாலனம் = காத்தல், நடத்தல், வளர்த்தல், போஷித்தல்.

1576. பரிபூஜனம் = சன்மானம் செய்தல், பூஜித்தல், மரியாதை செய்தல்.

1577. பரிபூர்ண = முழுவதும் நிரம்பிய, முற்றிலும் பூர்த்தி அடைந்த,

1578. பரிபோஷணம் = போஷித்தல், வளர்த்தல், நடத்துதல்.

1579. பரிப்ளுத = நனைந்த, மூழ்கிய, வெள்ளத்தால் சூழப்பட.

1580. பரிபா4ஷா = பரிபாஷை, விரிவுரைக் குறிப்பு. சொற்பொழிவு, நிந்தனை, வசை, புத்தகத்தில் உள்ள சொற்களின் அட்டவணை.
 
1581. பரிபோ4க3 : = இல்லற இன்பம் துய்ப்பது.

1582. பரிப்4ரம: = பரிப்4ரமணம் = சுற்றுதல், அலைந்து திரிதல்.

1583. பரிமள : = நல்ல மணம், வாசனை, மணமுள்ள பொருள்.

1584. பரிமாணம் = பரீமாணம் = அளவு, நிறை, பரிமாணம்.

1585. பரிமார்ஜனம் = துடைத்தல், சுத்தம் செய்தல், தூசைக்கூட்டுதல்.

1586. பரிமித = மிதமான, அளவிடப்பட்ட, வரையறுக்கப்பட்ட.

1587. பரிமிலனம் = சந்திப்பு, தொடுதல், தொடர்பு, சேர்க்கை.

1588. பரிவர்த்தனம் = பண்டமாற்று, மாற்றிக்கொள்ளுதல்.

1589. பரிவாத3: = பரீவாத3: = அபவாதம், பழி, நிந்தனை, குறை
கற்பித்தல்.

1590. பரிவார: = பரீவார: = வேலைக்கார வர்க்கம், உடன் இருப்பவர்களின் கூட்டம், போர்வை, உறை, மூடி.
 
1591. பரிவாஹா: = பரீவாஹா: = கரை புரண்டோடுதல், அதிக வெள்ளம், ஓடுகால்.

1592. பரிவ்ருத = வியாபித்த, சூழப்பட்ட, மறைக்கப்பட்ட, அறியப்பட்ட.

1593. பரிவேஷணம் = உணவு பரிமாறுதல், சூழ்தல், வட்டம்.

1594. பரிவ்ராஜ் = பரிவ்ராஜக: = தபஸ்வி, மேலான துறவி.

1595. பரிசீ'லனம் = தேடுதல், தொடுதல், ஆராய்ச்சி செய்தல்.

1596. பரிசுத்3த4= மிகத் தூய்மையான, மிகவும் சுத்தமான.

1597. பரிசேஷ = பரீசேஷ = பாக்கி, மிகுதி, முடிவு.

1598. பரிச்'ரம : = உழைப்பு, களைப்பு, துன்பம், செயல்.

1599. பரிஷத்3 = சபை, கூட்டம்.

1600. பரிஷத3 : = பரிஷத்ய: = சபையின் அங்கத்தினன்.
 
Status
Not open for further replies.
Back
Top