'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
1101. தோ3ஷஞ = கற்றறிந்தவன், வைத்தியன்.

1102. தோ3ஷா = கை, புயம், இரவு, இருட்டு.

1103. தோ3ஹ : = கறத்தல், பால்.

1104. தோ3ஹத3ம் = மசக்கை, விருப்பம், கர்ப காலம்.

1105. தோ3ஹனம் = பால் கறத்தல்.

1106. தௌ3ர்ப3ல்யம் = பலவீனம்.

1107. தௌ3ர்பா4க்யம் = துரதிர்ஷ்டம்.

1108. தௌ3ர்ஹ்ருத3ம் = கெட்ட எண்ணம், பகைமை, கர்பகாலம்,
கர்பிணியின் விருப்பம்.

1109. தௌ3ஹித்ர: = பெண் வயிற்றுப் பேரன்.

1110. தௌ3ஹித்ரீ = மகள் வயிற்றுப் பேத்தி.
 
1111. த்4யு = நாள், ஆகாயம், பிரகாசம், சுவர்க்கம்.

1112. த்4யுதி: = ஒளி, ஒளிக்கதிர், பிரகாசம், காந்தி.

1113. த்4யூதம் = சூதாடுதல், சொக்கட்டான் ஆடுதல்.

1114. த்4யூதகர: = சூதாடி.

1115. த்4யோத: = வெளிச்சம், உஷ்ணம், புகை.

1116. த்3ரப்ஸ: = சொட்டு, துளி.

1117. த்3ரப்ஸம் = நீர் கலந்த தயிர், மோர்.

1118. த்3ரவ: = சொல்லுதல், திரிதல், பரவுதல், சொட்டுதல், கசிதல்,
திரவம்.

1119. த்3ரவிணம் = செல்வம், திரவியம், தங்கம்.

1120. த்3ரஷ்டவ்ய = பார்க்கத் தகுந்த, பிரியமான, அழகான.
 
1121. த்3ரஷ்டுகாம = பார்க்க விரும்பும்.

1122. த்3ராக் = சீக்கிரமாக, உடன், உடனடியாக.

1123. த்3ராக்ஷா = திராட்சைக் கொடி, திராட்சைப் பழம்.

1124. த்3ராப: = சேறு, ஆகாயம், சுவர்க்கம், சிப்பி, சிவன், முட்டாள்.

1125. த்3ரு = மரக்கட்டை, மரத்தால் செய்யப்பட கருவி.

1126. த்3ருத = வேகமானது, ஓடினது, உருக்கப்பட்ட.

1127. த்3ருத: = தேள், மரம், பூனை.

1128. த்3ரும: = மரம், பாரிஜாத மரம்.

1129. த்3ருஹிண : = சிவன், பிரமன்.

1130. த்3ரோண: = ஏரி, ஒரு வித மேகம், அண்டங்காக்கை, தேள், மரம், கௌரவ பாண்டவ குரு.
 
1131. த்3ரோணீ = மரத் தொட்டி.

1132. த்3ரோஹ : = சதி, வஞ்சனை, நம்பிக்கை த்ரோஹம்.

1133. த்3வந்த்3வம் = ஜோடி, ஸ்திரீ புருஷன், சண்டை, கலஹம், குஸ்தி, சந்தேஹம், கோட்டை.

1134. த்3வய = இருமடங்கான, இருவகையான.

1135. த்3வார் = வாயில், வழி, உபாயம், யுக்தி.

1136. த்3வாரம் = கதவு, வழி, நுழைவு, துளை, ஸ்தானம்.

1137. த்3வாரபாலக : = வாயில் காப்போன்.

1138. த்3விகு3ண = இருமடங்கு, இரட்டிப்பு.

1139 . த்3விதீய = இரண்டாவது.

1140. த்3விஜ: = அந்தணன், க்ஷத்திரியன், வைஸ்யன்.
 
1141. த்3விப: = த்விரத: = யானை.

1142. த்3விபத3: = மனிதன், இரண்டுகால் பிராணி.

1143. த்3விச'தம் = இருநூறு.

1144. த்3விஸஹஸ்ரம் = இரண்டாயிரம்.

1145. த்3விஷத் = எதிரி, விரோதி.

1146. த்3வீப: = த்வீபம் = தீவு, புகலிடம், பூமியின் ஒரு பகுதி.

1147. த்3வீபவதீ = பூமி.

1148. த்3வேஷ: = வெறுப்பு, எதிர்ப்பு, பிரியம் இன்மை.

1149. த்3வைகு3ண்யம் = இருபங்கு கூடுதல், இருமடங்கு , இரட்டிப்பு
விலை, இருமைத் தன்மை.

1150. த்3வைதம் = இருமைத் தன்மை.
 
1151. த4னம் = செல்வம், நிதி, பணம், மூலதனம்.

1152. த4னஞ்ஜய : = அர்ஜுனன், நெருப்பு, அக்னி.

1153. த4னாதி4ப: = த4னாதி4பதி = த4னாத்4யக்ஷ: = குபேரன்.

1154. த4னிக: = பணக்காரன், கணவன், கடன் தருபவன்.

1155. த4னு4: = த4னூ = வில்.

1156. த4னுஸ் = வில், நான்கு முழ நீளம், வட்டத்தில் வில்,
பாலைவனம், தனுர் ராசி.

1157. த4னுர்த4ர: = வில்லேந்தியவன்.

1158. த4ன்ய : = செல்வம் படைத்த , அதிருஷ்டம் உடைய.

1159. த4ன்வின் = வில்லேந்தியவன், சிவன், விஷ்ணு, அர்ஜுனன்.

1160. த4ம : = சந்திரன், கிருஷ்ணன், யமன், பிரம்மா.
 
1161. த4மனி = த4மனீ = நாணல், கழுத்து, உயிர்நாடி, ரத்தக் குழாய்.

1162. த4ர : = மலை, பஞ்சுக்குவியல், சுமப்பவன், கூர்மாவதாரம்.

1163. த4ரணி: = த4ரணீ = பூமி, தரை, மண்.

1164. த4ரணீத4ர: = ஆதிசேஷன், விஷ்ணு, மலை, ஆமை, அரசன்.

1165. த4ரணீஸுத : = செவ்வாய் கிரகம், நரகாசுரன்.

1166. த4ர்ம: = மதம், கருமம், கடமை, ஒழுக்கம், பழக்கம், வழக்கம்,
யுதிஷ்டிரர், யமதர்மன்.

1167. த4ர்மசாரிணீ = த4ர்மபத்நீ = மனைவி.

1168. த4ர்மஞ = தர்ம விதிகளை அறிந்த.

1169. த4ர்மத : = சரியான வழியில், தர்மமான முறையில்.

1170. த4ர்மஸம்ஹிதா: = த4ர்மசா'ஸ்த்ரம் = அறநூல், தர்ம சாஸ்திரம்.
 

1171. த4ர்மாத்மன் = ஒழுக்கமுடைய, புண்ணியசாலியான.

1172. த4ர்மிஷ்ட: = மத, தர்ம காரியங்களில் ஈடுபடும்.

1173. த4ர்ஷ: = துணிவு, மமதை , கர்வம், அவமதித்தல், பெண்ணை பலவந்தம் செய்தல்.

1174. த4ர்ஷணம் = பிடிவாதம், தைர்யம், அவமதிப்பு, அவமானம், அக்கிரமித்தல், பலாத்காரம், வசை, நிந்தித்தல்.

1175. த4வ : = ஆட்டம், உதறல், மனிதன், கணவன், யஜமானன், போக்கிரி, ஏய்ப்பவன்.

1176. த4வள : = வெண்மை, உயர்ந்த ரக எருது, சீனநாட்டுக் கற்பூரம், தவ என்னும் மரம்.

1177. தா4 = வைக்க, தாங்க, அமைக்க, இழைக்க, பொறுக்க, அடுக்க, கொடுக்க, பிடிக்க, இயற்ற.

1178. தா4து = ஆதரப் பொருள், மூலதத்வம், பூமி, நீர், அக்னி, காற்று, ஆகாயம், ரசம், ஆன்மா, பரமாத்மா, அறிவுப்புலன், எலும்பு, பார்த்தல், ருசித்தால், கேட்டல், தொடுதல், நுகர்தல்.

1179. தா4த்ரு = நிர்மாணிப்பவன், இயற்றுபவன், நடத்துபவன், தாங்குபவன், படைப்பவன், ரக்ஷிப்பவன், விஷ்ணு, பிரம்மா.

1180. தா4த்ரீ = வளர்ப்புத் தாய், செவிலித்தாய், பூமி, நெல்லிமரம்.

 
1181. தா4ன்யம் = தானியம், நெல், அரிசி.

1182. தா4மன் = இருப்பிடம், இடம், வீடு, காந்தி, ஒளி, புகழ்,சக்தி, உடல், பேட்டை, தளம், கூட்டம், நிலை, நிலைமை.

1183. தா4ரணா = சமாளித்துக்கொள்ளல், உதவி செய்தல், ரட்சித்தல், ஞாபக சக்தி, மன வலிமை, பக்தி, கூர்மை, ஒழுங்கு.

1184. தா4ரா = நீரோட்டம், மழை, தாரை, ரேகை, ஒழுக்கு, ஓரம், எல்லை, கத்தி /வாள் முனை, சக்கரம், பரிதி, வேலி, புகழ், இரவு.

1185. தா4ர்மிக = நற்குணம் படைத்த.

1186. தா4வ = ஓட, தாவ, முன் செல்ல, ஆக்ரமிக்க,மோத, துவைக்க.

1187. தி4ஷணா = பேச்சு, துதி, புத்தி, அறியும் சக்தி, பூமி, கோப்பை.

1188. தீ4: = புத்தி,கற்பனை, மனம், பக்தி, பிரார்த்தனை, யாகம்.

1189. தீ4ர = தைரியமான, நிலையான, உறுதியான, திடமான, அமைதியான, சாந்தமான, கம்பீரமான, கெட்டிக்கார, ஆழ்ந்த.

1190. தீ4ரம் = குங்குமப்பூ
 
1191. தீ4ர: = கடல், சிந்தனைத் திறன், ஆன்மா.

1192. தீ4ரதா = தீ4ரத்வம் = தைரியம், மனவலிமை, அமைதி மனப் பான்மை.

1193. து4னி: = து4னீ = ஆறு.

1194. து4ர் = நுகத்தடி, கடையாணி, சுமை, பளு, முக்கிய இடம், உச்சி, சிகரம்.

1195. து4ரிண : = பாரம் சுமக்கும் பிராணி, தலைவன், முக்கியமனிதன்.

1196. தூ4 =ஆட்ட, கிளற, அசைக்க, தள்ள, எரிய, அடிக்க, விசிற.

1197. தூ4ப் = புகைதர, வாசனையாக்க, பிரகாசிக்க, மணமுள்ளதாக்க.

1198. தூ4ம: = புகை, ஆவி, வால் நட்சத்திரம், தூமகேது, ஏப்பம்.

1199. தூ4ர்த்த: = மோசக்காரன், போக்கிரி, சூதாடி, ரசிகன் , காதலன்.

1200. தூ4லி = தூசி, பொடி.
 
1201. த்4ருதி: = எடுத்தல், பிடித்தல், கைவசம் ஆக்குதல், ஸ்தாபித்தல், தாங்குதல், உதவுதல், தைரியம், ஊக்கம், துணிவு, அடக்கம், மகிழ்ச்சி, உறுதி, சுகம், யாகம், சந்தோசம்.

1202. தே4னுகா = பெண் யானை, பால் தரும் பசு.

1203. தை4ர்யம் = உறுதி, துணிச்சல், அமைதி, அடக்கம் , பொறுமை.

1204. தை4வத்வம் = சாமர்த்தியம், திறமை.

1205. தோ4ரணி: = தோ4ரணி = தொடர்ந்துள்ள வரிசை, பாரம்பரியம்.

1206. த்4யானம் = தியானித்தல், ஆலோசித்தல், சிந்தித்தல்.

1207. த்4ருவ : = துருவ நட்சத்திரம், தீர்க்க ரேகை, ஆலமரம், கட்டு முளை,
பிரமன், விஷ்ணு, சிவன், பாட்டின் முதல் அடி.

1208. த்4ருவம் = ஆகாயம், காற்று மண்டலம், விண்வெளி, சுவர்க்கம், அவசியமாக, நிச்சயமாக.

12009. த்4வஜ : = கொடி, மரியாதைக்கு உரிய மனிதர், அடையாளம்.

1210. த்4வனி: = ஒலி, எதிரொலி, கூச்சல், இசையின் நாதம், கர்ஜனை, சொல், உட்பொருள் .
 
1211. த்4வமஸ: = த்4வம்ஸனம் = நாசம், அழிதல், இழப்பு.

1212. ந = மெலிந்த, ஒல்லியான, காலியான, சூனியமான, பிரிக்கப்படாத, புகழப்படாத.

1213. ந: = முத்து, விநாயகர், சொத்து, செல்வம், போர்.

1214. நகுல: = கீரிப்பிள்ளை, நான்காவது பாண்டவன், மகன், சிவன்.

1215. நக்தம் = இரவில், இரவுப் பொழுதில்.

1216. நக்தச்சர : = இரவில் திரியும் விலங்கு,திருடன், அரக்கன்.

1217. நக்தாஞ்ஜரீன் = பூனை, ஆந்தை, திருடன், பேய், பிசாசு, அரக்கன்.

1218. நக்ரம் = முதலை.

1219. நகம் = கை, கால் விரல்களின் நகம்.

1220. நக3 : = மலை, மரம், செடி, சூரியன், பாம்பு, ஏழு என்னும் எண்.
 

1221. நக3ரம் = நக3ரீ = பட்டணம், நகரம்.

1222. நகா3தி4ப = நகே3ந்த்3ர = இமயமலை.

1223. நக்3ன = நக்3னக = ஆடை இல்லாத.

1224. நட : = நடிகன், நடனம் ஆடுபவன், அசோகமரம், நாணல்.

1225. நடீ = நாட்டியக்காரி, நடிகை.

1226. நத = வளைந்த, வணங்கிய, மூழ்கிய, சாய்ந்த, கோணலான.

1227. நத்3 = சப்தம் செய்ய, ஒலி எழுப்ப, சொல்ல, கேட்க, நடுங்க.

1228. நத்3த4 = கட்டப்பட்ட, உடுத்திக் கொள்ளப் பட்ட, கட்டுண்ட.

1229. நந்த3 : = மகிழ்ச்சி, சுகம், யாழ், விஷ்ணு, தவளை.

1230. நந்தா3 = மகிழ்ச்சி, ஆனந்தம், செழுமை, கணவனின் சஹோதரி, பார்வதி.
 
1231. நந்தி3: = சிவன், விஷ்ணு , நந்தி தேவன், சூதாட்டம்.

1232. நந்தி3னீ = மகள், கணவனின் சஹோதரி, தெய்வீகப் பசு,
கங்கை, கருப்பு துளசி.

1233. நம்புஸக: = நம்புஸகம் = அலி, பேடி.

1234. நப்த்ரு = பேரன்.

1235. நப4ஸ: = ஆகாயம், மழைக்காலம், கடல்.

1236. நமஸ்கார: = நமஸ்க்ருதி: = வணங்குதல், நமஸ்கரித்தல்.

1237. நம்ர = வினயமுள்ள, வணங்கிய, கோணலான, பக்தியுள்ள.

1238. நய: = தலைமை தாங்குதல், வழி நடத்துதல், அரசியல் திறன்.

1239. நயனம் = வழி காட்டுதல், தலைமை தங்குதல், ஆளுதல்,
அடைதல், கண்.

1240. நராதி4ப: = நரபதி: = நரேந்த3ர = நரேச: = அரசன்.
 
1241. நரபுங்க3வ: = நரசா'ர்து3ல: = தலை சிறந்த மனிதன்.

1242. நரகேஸரின் = நரசிம்ஹ: = நரஹரி = நரசிம்ஹ அவதாரம்.

1243. நரக: = நரகம்.

1244. நர்த்தக: = நர்த்தன: = நாட்டியக்காரன்.

1245. நர்த்தனம் = அபிநயம், நடனம்.

1246. நலினம் = தாமரைப்பூ, அல்லிப்பூ, தண்ணீர்.

1247. நவ = நவீன = நவ்ய = புதிய, நவீன, தற்காலத்திய.

1248. நவகம்= ஒன்பது பதார்த்தங்களைக் கொண்டது.

1249. நவதி: = நவதீ = நவதிகா = தொண்ணூறு.

1250. நவதா4 = நவச' : = ஒன்பது வகையான, ஒன்பது மடங்கு.
 
1251. நவன் = ஒன்பது.

1252. நவநிதி4: = குபேரனுடைய ஒன்பது பொக்கிஷங்கள்.

1253. நவநீதம் = புதிய வெண்ணை.

1254. நவம = ஒன்பதாவதான.

1255. நவரத்னம் = முத்து, மாணிக்கம், வைரம், வைடூர்யம்,
கோமேதகம், பவழம், புஷ்பராகம், மரகதம், நீலம் ஆகிய ஒன்பது விலை உயர்ந்த ரத்தினங்கள்.

1256. நச்'வர = அழியக்கூடிய, சாஸ்வதமில்லாத, திடமில்லாத.

1257. நஷ்ட = மறைந்துபோன, வீணாகப் போன, ஓடிப்போன,
பறந்துபோன,பாழடைந்த.

1258. நஸ்யம் = மூக்குப்பொடி.

1259. நஹி = இல்லவே இல்லை, நிச்சயமாக இல்லை.

1260. நாக: = சுவர்க்கம், ஆகாயமண்டலம்.
 
1261. நாகு: = எறும்புப் புற்று.

1262. நாக3: = நல்லபாம்பு, யானை, மேகம், எண் ஏழு , கடுமையான மனிதன்.

1263. நாக3ர = நாக3ரிக = நாக3ரக = நல்ல, கெட்டிக்கார, தந்திர, நகரத் தொடர்புள்ள.

1264. நாடகம் = நாடகம், கூத்து, பிரபந்தம்.

1265. நாடி3: = நாடீ3 = தாமரைத் தண்டு, உடலில் உள்ள நாடி, தமனி, குழல், புல்லாங்குழல்.

1266. நாணகம் = காசு, நாணயம்.

1267. நாதிதூ3ர = வெகு தூரத்தில் இல்லாத.

1268. நாத2: = எஜமானன், ரக்ஷிப்பவன், கணவன், மூக்கணாங்கயிறு.

1269. நாத3: = சப்தம், கர்ஜனை, கூச்சல், ஸ்வரம்.

1270. நானா = பலவிதமான, பலமுறைகளில், தனிதனி உருவில்.
 
1271. நாந்தீ3 = மகிழ்ச்சி, நலம், சுபகாரியங்களுக்கு முன்பு செய்யப்படும் சடங்கு / பிரார்த்தனை.

1272. நாபித: = நாவிதன்.

1273. நாபி4: = தொப்புள், முக்கிய இடம், நடு இடம், கேந்திரம், முக்கியமானவன்.

1274. நாமகரணம் = பெயரிடுதல்.

1275. நாமதே4யம் = பெயர்.

1276. நாயக : = வழி காட்டி, தலைவன், எஜமான் , கணவன்,
காப்பியத்தின் கதாநாயகன்.

1277. நாரங்க3: = நாரத்தை மரம், காமுகன், இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன்.

1278. நாரிகேல: = நாலிகேர: = நாரிகேர: = தென்னை மரம், தேங்காய்.

1279. நாளம் = தண்டு, குழாய், கைப்பிடி.

1280. நால: = பம்பு, குழாய், வாய்க்கால்.
 
1281. நாச': = மறைவு, அழிவு, நாசமடைதல், துரதிர்ஷ்டம்,
கை விடுதல்.

1282. நாஸிகா = மூக்கு.

1283. நாஸ்தி = இல்லை, இன்மை.

1284. நாஸ்திக: = நாத்திகன், கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

1285. நிகட: = நிகடம் = அருகாமை.

1286. நிகாம: = அதிகமாக, மிகுதியாக, விருப்பப்படி.

1287. நிகாஸ: = தோற்றம், பார்வை, தொடுவானம், அருகாமை.

1288. நிக்ருதி: = கெட்ட தன்மை, நிராகரித்தல், அவமதித்தல், ஏழ்மை,
வசை, திட்டுதல்.

1289. நிக்ருந்தனம் = வெட்டுதல், நஷ்டமாக்குதல், வெட்டும் கருவி.

1290. நிகேதனம் = வீடு, இருப்பிடம், மாளிகை.
 
1291. நிகி2ல: = முழுதும், முழுமையாக.

1292. நிக3ம: = வேதம், வேத வாக்கியம், வேதத்தின் உரை, நம்பிக்கை, தொழில், கூட்டம், சந்தை, அங்காடி, நகரம்.

1293. நிகூ3ட3 = மறைக்கப்பட்ட, ரகசியமான.

1294. நிக்3ரஹ் = அடக்குதல், அழுத்துதல், ஓடிப்பிடித்தல், சிறையில் வைத்தல்,திட்டுதல், கண்டிப்பு, அருவருப்பு.

1295. நிக4ண்டு = நிகண்டு, அகராதி.

1296. நிஜ = இயற்கையாக ஏற்பட்ட, உடன் பிறந்த, தன்னுடைய,
விசேஷமான, தனித்தன்மை வாய்ந்த.

1297. நிடிலம் = நெற்றி.

1298. நிதம்ப3 : = பிருஷ்டம், மலைச் சரிவு, நதியோரம், தோள்பட்டை.

1299. நிதராம் = முழுதும், அதிகமாக, நிரந்தரமாக, நிச்சயமாக, தொடர்ந்து.

1300. நிதாந்த = அசாதாரணமான, தீவிரமான.
 
1301. நித்ய = நிரந்தரமான, சாஸ்வதமான, அழிவற்ற, மாறாத,
அவசியமான, தவிர்க்க முடியாத, குறிக்கப்பட்ட.

1302. நித்யத்வம் = ஸ்திரத் தன்மை, சாஸ்வதமானது, இடைவிடாதது, அவசியமானது.

1303. நித3ர்ஷக : = பார்க்கின்ற, நிரூபித்துக் காட்டும், குறிப்பிடும், குறித்துக்காட்டும்.

1304. நித3ர்ச'னம் = தோற்றம், பார்வை, பிரமாணம், சாக்ஷி, உவமை, உதாரணம், சகுனம், சட்டம், விதி,அடையாளம்.

1305. நிதா3னம் = நாடா, பட்டி, கயிறு, முதன்மையான காரணம், முடிவு, புனிதத் தன்மை, சுத்தம்.

1306. நிதே3ச': = ஆணை, கட்டளை, பேச்சு, வர்ணனை, அருகாமை, சுற்றுப்புறம், பாத்திரம்.

1307. நித்3ரா = தூக்கக் கலக்கம், தூக்கம்.

1308. நித4ன = ஏழையான.

1309. நித4ன: = நிதனம் = அழிவு, நாசம், ஆபத்து, கெடுதி, முடிவு, முடித்தல்.

1310. நிதி4: = வீடு, வசிக்குமிடம், இருப்பிடம், கஜானா, கடல், விஷ்ணு.
 
1311. நிநத3: = நிநாத3: = சப்தம், குரல், வண்டுகளின் ரீங்காரம்.

1312. நிந்தா3 = மாசு கற்பித்தல், குறி சொல்லல், வசை, பழித்தல்.

1313. நிந்தாஸ்துதி = வஞ்சப் புகழ்ச்சி, ஒரு சொல்லணி.

1314. நிபதனம் = கீழே விழுதல், கீழே பறத்தல், கீழிறங்குதல்.

1315. நிபாத: = கீழே விழுதல், ஆக்கிரமித்தல், குதித்தல், எரிதல், பொழிதல், விழுதல், ஒழுங்கின்மை .

1316. நிபுண: = திறமையுள்ள, கெட்டிக்கார, படித்தறிந்த, நுட்பமான,
மிருதுவான, சரியான, முடிந்த, குறைவற்ற.

1317. நிப3ந்த4: = கட்டுதல், இறுக்குதல், பற்று, நேசம், விலங்கு.

1318. நிப3ந்த4னம் = ஒன்று சேர்த்துக்கட்டுதல், அமைதல், நிர்மாணித்தல், கைது செய்தல், இயற்றல், ஒழுங்கு படுத்துதல்,
கவிதை, புத்தகம், தலைமுடியின் முடிச்சு, விரிவுரை.

1319. நிப3ர்ஹனம் = கொல்லுதல், அழிதல்.

1320. நிபி3ட3 = நெருக்கமான, கடினமான.
 
1321. நிபோ3த4: = அறிதல், புரிந்து கொள்ளுதல், தெரிவித்தல்.

1322. நிப்4ருத = வைக்கப்பட்ட, மூடப்பட்ட, அமைதியான, ஸ்திரமான, அசைவற்ற, திடமான், சுகுணமுள்ள, தனிப்பட்ட.

1323. நிமக்3ன = மூழ்கிப்போன, அமுக்கப்பட்ட, முக்கியமற்ற.

1324. நிமந்த்ரணம் = அழைப்பு, கூப்பிடுதல், ஆஜராக உத்தரவு.

1325. நிமித்தம் = காரணம், நோக்கம், அடையாளம், குறி.

1326. நிமிஷ: = நிமேஷ: = கண் இமைத்தல், கண் இமைக்கும் நேரம்.

1327. நிமீலனம் = இமை கொடுத்தல், கண்களை மூடுதல், பூரண சந்திர கிரஹணம்.

1328. நிம்ப3: = வேப்பமரம்.

1329. நியதி: = அடக்கல், அதிர்ஷ்டம், தலைவிதி, புலன் அடக்குதல்.

1330. நியந்த்ரு = எஜமானன், ஆளுபவன், தலைவன், ரதம் ஓட்டுபவன்.
 
1331.நியமனம் = தண்டித்தல், கட்டுப் படுத்துதல், ஆணையிடுதல், எல்லை , வரம்பு முறை, விதிமுறை.

1332. நியோக3: = ஒரு காரியத்தில் கட்டுண்டிருத்தல், இணைப்பு, செயல், முயற்சி.

1333. நிரந்குச' = தன்னிச்சைப்படி, சுதந்திரமான, கட்டுக்கடங்காத.

1334. நிரதி: = அன்பு, ஆசை, பக்தி.

1335. நிரதிச'ய = இணையற்ற, ஒப்பற்ற, அசாதரணமான.

1336. நிரந்தரம் = இடைவிடாது, தொடர்ந்து, எப்போதும்.

1337. நிரபராத4 = குற்றமற்ற, மாசற்ற.

1338. நிரபேக்ஷ = பற்றில்லாத, ஆசைகள் இல்லாத, இச்சையற்ற.

1339. நிரர்த2க = உபயோகமற்ற, பொருளற்ற.

1340. நிரவதி4 = எல்லையற்ற, முடிவில்லாத.
 
1341. நிரஸனம் = அப்பால் கடத்தல், அழித்தல், கொலை, அப்புறப் படுத்துதல்.

1342. நிராகார = உருவமற்ற, உருவமில்லாத.

1343. நிராகார: = பரம்பொருள், சிவன், விஷ்ணு.

1344. நிராகரணம் = நிராகரித்தல், கண்டனம், வெளியேற்றுதல்.

1345. நிராதங்க = பயமில்லாத, சுகமான, ஆரோக்யமான.

1346. நிராமய = பூரணமான, நோயற்ற, மாசற்ற, முழுமையான,
சுத்தமான.

1347. நிராலம்ப3 = உதவியற்ற, சுதந்திரமான.

1348. நிரீக்ஷக: = பார்வை வைக்கும், விசாரிக்கும், ஒன்றின் மீது
பார்வையைச் செலுத்தும்.

1349. நிரீக்ஷணம் = பார்வை, பார்த்தல், ஆலோசித்தல்.

1350. நிருக்தம் = விவரணம், விரிவுரை, ஆறு வேத அங்கங்களில் ஒன்று.
 
Status
Not open for further replies.
Back
Top