'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
851. தீரம் = கரை, தடம், ஓரம், முனைப்பகுதி.

852. தீர்ண = கடக்கப்பட்ட, தாண்டிச்செல்லப்பட்ட, பரவிய, மிஞ்சப்பட்ட, மேலேசென்ற.

853. தீர்த்த2ம் = வழி, பாதை, சாலை, நீர் நிலை, புனிதத் தலம், ஆற்றுப்படிக்கட்டு, சாதனம், ஆற்றைக்கடக்கும் இடம்.

854. தீவர = கடல், வேட்டையாடுபவன்.

855. தீவ்ர = கடுமையான, உக்கிரமான, அடர்ந்த, கொடுமையான,
கூர்மையான, காரமான, சூடான, பயங்கரமான.

856. துங்க3 = உயரமான, மேலான, நீண்ட, முக்கியமான, முதன்மையான.

857. துங்கீ3 = இரவு, மஞ்சள்.

858. துச்ச2 = காலியான, லேசான, சூன்யமான, சிறிய, அற்பமான,
மட்டமான, ஏழையான, திக்கற்ற.

859. துண்ட3ம் = வாய், முகம், பன்றியின் நீண்ட மூக்கு, கருவியின் நுனி, யானைத் துதிக்கை.

860. துத்தம் = மயில் துத்தம்.
 
Last edited:
861. துமுலம் = கலவர சப்தம் , கூச்சல், ஆரவாரம், குழப்பம் .

862. துரங்க3: = துரங்க3ம் = குதிரை.

863. துர்ய = துரீய = நான்காவதான.

864. துர்யம் = துரீயம் = ஆத்மாவின் நான்காவது நிலை, பிரமத்துடன் இணைந்த நிலை.

865. துலனம் = எடை, ஒப்பிடுதல், எழுப்பி நிறுத்துதல், உவமை தருதல்.

866. துலா = தராசு, துலா ராசி.

867. துலாகோடீ = பெண்கள் அணியும் சலங்கை, கொலுசு.

868. துலாபா4ர: = மனிதனின் எடைக்குச் சமமாக வேறு ஒரு பொருளை நிறுத்துதல்.

869. துல்ய = ஒப்பான, ஒரே விதமான, ஒரே வகையான, தகுதியுள்ள.

870. துல்யம் = ஒரே காலத்தில், ஒரே ரீதியில்.
 
871. துஷார: = மூடு பனி, குளிர், பனிக்கட்டி, பனி, ஒரு வகைக் கர்ப்பூரம்.

872. துஷ்டி: = மகிழ்ச்சி, சந்தோஷம், திருப்தி.

873. துஹின = குளிரான, சீதளமான.

874. தூர்ண = வேகமான, துரிதமான, விரைந்து செல்லும்.

875. தூலம் = விண்வெளி, ஆகாயம், காற்று, புல்கட்டு, முசுக்கட்டை மரம்.

876. தூஷ்ணீம் = மெளனமாக, சப்தம் செய்யாது, பேசாது.

877. த்ருணம் = புல், புற்கதிர், நாணல், வைக்கோல், அற்பமானது.

878. த்ருதீயம் = மூன்றில் ஒரு பங்கு.

879. திருப்தி: = சந்தோஷம், திருப்தி, மகிழ்ச்சி, திகட்டல்.

880.த்ருஷ்ணா = தாகம், ஆவல், ஆசை, பேராசை, விருப்பம்.
 
Last edited:
881. த்ரூ = தாண்டிச்செல்ல, கடக்க, மிதக்க, நீந்த, ஜெயிக்க, நிரப்ப.

882. தேஜஸ் = கூர்மை, தீச்சுடர், வெப்பம், ஒளி, பிரகாசம், காந்தி, ஜோதி, வலிமை, சாமர்த்தியம், தைரியம், ஆன்ம பலம், மஹிமை, சாரம், சத்து, சக்தி, நெருப்பு, வேகம், புதிய வெண்ணை, தங்கம்.

883. தேஜஸ்வின் = பிரகாசமான, பளபளப்புள்ள, சக்திவாய்ந்த, வீரம் பொருந்திய, நன்கு அறியப்பட்ட, கௌரவமான, புகழுள்ள.

884. தேஜோமய = புகழுள்ள, பிரகாசிக்கும்.

885. தைஜஸ் = உலோகப்பொருளால் ஆன, சுறுசுறுப்பான, ஆசை கொண்ட, சக்தியுள்ள, வலிமையுள்ள.

886. தைலம் = எண்ணெய், சாம்பிராணி.

887. தோகம் = சந்ததி, குழந்தை.

888. தோடக: = வெண் கடுகு, சங்கராச்சாரியாரின் சீடர்.

889. தோமர: = தோமரம் = இரும்புத் தடி, ஈட்டி.

890. தோயம் = ஜலம், நீர், தண்ணீர்.
 
891. தோயகர்ப4 : = தேங்காய்.

892. தோயாத3: = மேகம்.

893. தோரணம் = வளைவு அமைக்கப்பட்ட வாயில், அலங்கரிக்கப்பட்ட வாயில், நுழை வாயில்.

894. தோஷணம் = மகிழ்ச்சி, திருப்தி படுத்துதல்.

895. த்யஜ் = விட்டுவிட, தள்ளிவிட, தியாகம் செய்ய, தவிர்க்க, விடுபட, தள்ளிவைக்க.

896. த்யக்த = தள்ளப்பட்ட, கை விடப்பட்ட, தவிர்க்கப்பட்ட.

897. த்யாக3: = விடுதல், தள்ளுதல், தியாகம் செய்தல், ராஜினாமா செய்தல், தானம் செய்தல், உதவுதல்.

898. த்ரயீ = மூன்று, மூன்று மடங்கு, மூன்று விதமான, புத்தி, மூன்று வேதங்கள் ( ருக், யஜுர், ஸாம)

899. த்ராணம் = காத்தல், தன்னைக் காப்பற்றிக் கொள்ளுதல், உதவி, புகலிடம்.

900. த்ராஸ : = பயம், கவலை, விலை உயர்ந்த மணிகளில் உள்ள தோஷங்கள்.
 
901. த்ரிகோணம் = முக்கோணம்.

902.
த்ரிகு3ண = முப்பிரி, மும்முறை, மூன்று விதம், மூன்றுமடங்கு, முக்குணங்கள் (ரஜஸ், தமஸ், ஸத்வம் )

903. த்ரித3சா': = முப்பது (33 )தேவர்கள்.

904. த்ரிதி3வம் = சுவர்க்கம், ஆகாயம்.

905. த்ரிதா4 = மூன்று பாகங்களாக.

906. த்ரிதா4மன் = மூன்று உலகங்களிலும் பிரகாசிப்பவன், விஷ்ணு, சிவன், அக்னி, யமன்.

907. த்ரிநயன: = த்ரிணயன: = த்ரி நேத்ர: = த்ரிலோசன: = சிவன்.

908. த்ரிபுட: =அம்பு, உள்ளங்கை, முழம், ஏழு அக்ஷரமுள்ள தாளம்,கரை, குஹை.

909. திரிபுராந்தக: = த்ரிபுரஹர: = த்ரிபுராரி = சிவன்.

910. த்ரிபலீ = கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றின் சேர்க்கை.
 
911. த்ரிபு4வனம் = த்ரிலோகம் = மூன்று உலகங்கள்.

912. த்ரிமது4: = த்ரிமது4ரம் = பால், தேன், சர்க்கரை.

913. த்ரிமூர்த்தி = பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் ஒரே உருவம்.

914. த்ரியாமா = இரவு.

915.
த்ரிராத்ரம் = மூன்று இரவுகளின் காலம், ஒரு யாகம்.

916. த்ரிலிங்க3: = மூன்று லிங்கங்கள் (ஸ்ரீ சைலம், த்ராக்ஷாராமம்,
காளஹஸ்தி)

917. த்ரிலோகீ = மூன்று உலகங்கள்.

918. த்ரிவர்க3: = அறம், பொருள், இன்பம்; ஸத்வம், ரஜஸ், தமஸ்.

919. த்ரிவிக்ரம: = விஷ்ணுவின் ஒரு அவதாரம்.

920. த்ரிவேணி = கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமம்.
 
921. த்ரிச'ங்கு: = ஓர் அரசனின் பெயர், சாதகப் பறவை, பூனை, மின்மினி.

922. த்ரிம்ச' = முப்பதாவது.

923. த்ரிம்ச'த் = முப்பது.

924. த்ருட் = கிழிக்க, உடைக்க, துண்டாக்க, தூளாக்க.

925. த்ரைகாலிக = மூன்றுகாலங்களுடன் (இறந்த, நிகழ், எதிர்) தொடர்புடைய.

926. த்ரைகு3ண்யம் = மூன்று மடங்கு, முக்குணங்களின் சேர்க்கை.

927. த்ரைமாஸிக = மூன்ற மாதங்களுக்கு ஒருமுறை.

928. த்ரைவித்3யம் = மூன்று வேதங்கள் (ருக், யஜுர், ஸாம)

929. தவச் = மனிதனின் தோல், மரவுரி, பசு / மான் / புலித்தோல்.

930. த்வரித = சீக்கிரமான, வேகமான.
 
931. த்வாத்ருச' = உன்னைப் போன்ற, உன் வகையான.

932. த்விஷ் = பிரகாசம், ஒளி, அழகு, அதிகாரம், சுமை, பளு, விருப்பம், பழக்கம், பேச்சு, தீங்கிழைத்தல்.

933. த2: = மலை, காப்பாளன்.

934. த2ம் = பயம், காத்தல்.

935. த3க்3த4 = எரிந்துபோன, சாம்பலான, பஞ்சமான, அமங்கலமான, காய்ந்த, போக்கிரியான.

936. த3ண்ட்3 = தண்டிக்க, தண்டனை கொடுக்க.

937. த3ண்ட3ம் = குச்சி, தடி, கழி, கதை, செங்கோல், துறவியின் தண்டம், யானையின் துதிக்கை, தாமரைத்தண்டு, கர்வம், உடல்.

938. த3ண்ட3த4ர: = அரசன், யமன், நீதிபதி.

939. த3ண்ட3நீதி = நீதி சாஸ்திரம், நீதி வழங்கல்.

940. த3ண்ட3பாணி = முருகன், யமன், போலீஸ்காரன்.
 
941. த3ண்ட3ப்ரமாண : = சாஷ்டாங்க நமஸ்காரம்.

942. த3ண்டி3ன் = தண்டம் ஏந்திய துறவி, காவலாளி, படகோட்டி, யமன், அரசன்.

943. த3த்த = கொடுக்கப்பட்ட, அளிக்கப்பட்ட, வைக்கப்பட்ட.

944. த3த்தக: = சுவீகாரப் பிள்ளை.

945. த3தி4 = தயிர், துணி, சாலமரப் பிசின்.

946. த3ந்த: = பல், யானைதந்தம், அம்பின் நுனி, குன்று, மலையுச்சி.

947. த3ந்தாத3ந்தி = பற்களைக் கடித்துப் போடும் சண்டை.

948. த3ந்தாவல: = த3ந்தின் = யானை.

949. த3ம் = பழக்கப்பட, வசமாக்க, பழக்க, ஜெயிக்க, அமைதியாக்க.

950. த3ம: = தன்னடக்கம், மனவலிமை, சேறு, தண்டனை.
 
951. த3மனம் = பழக்குதல், வசம் ஆக்குதல், தண்டித்தல், அடித்தல்.

952. த3ம்பதி = கணவன், மனைவி.

953. த3ம்ப4: = வஞ்சனை, கர்வம், வச்சிராயுதம், ஏமாற்றுதல்.

954. த3யா = இரக்கம், கருணை, அருள்.

955. த3யாளு = இரக்கம் உடைய, தயை உடைய.

956. த3யித: = கணவன்.

957. த3யிதா = மனைவி.

958. த3ர: = பயம், நடுக்கம், குளம், குகை, பொந்து, சங்கு.

959. த3ரணி: = சுழல், அலை, நீரின் ஓட்டம், உடைத்தல்.

960. த3ரத்3 = இதயம், மலை, நீட்டிக்கொண்டிருக்கும் பாறை, கரை, ஓரம், பயம்.
 
961. த3ரித்3ர = ஏழ்மையான, இல்லாமையால் துன்புறும்.

962. த3ரோத3ரம் = சூதாட்டம்.

963. து3ர்து3ர : = தவளை, மேகம், இசைக்கருவி, மலை.

964. த3ர்ப: = கர்வம், அஹம்பாவம், டம்பம், பொறுமை இல்லாத.

965. த3ர்பண: = முகம் பார்க்கும் கண்ணாடி.

966. த3ர்ப4: = தர்ப்பைப் புல்.

967. த3ர்வீ = சிறு கரண்டி, பாம்பின் படம்.

968. த3ர்ஷ: = பார்வை, பார்த்தல், அமாவாசையன்று செய்யும் அக்னிகாரியம்.

969. த3ர்ஷக: = வாயில் காப்போன், கெட்டிக்காரன்.

970. த3ர்ஷனம் = பார்த்தல், தரிசித்தல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், பார்வை, கண், கனவு, சித்தாந்தம், கண்ணாடி, சாஸ்திரம்.
 
971. த3ர்சநீய = அழகான, பார்க்கத்தகுந்த.

972. த3ளம் = அம்சம், பாகம், துண்டு, பூவின் இதழ், இலை, மூளை.

973. த3லித = திறந்த, மலர்ந்த, உடைந்த, கிழிந்த.

974. த3வ : = காடு, காட்டுத்தீ, துன்பம், காய்ச்சல், உஷ்ணம்.

975. த3வீயஸ் = தூரத்தில் உள்ள.

976. தசகம் = பத்துப் பத்தானது.

977. த3சாங்கு3லம் = பத்து அங்குலம்.

978. த3சமுக2: = த3சானன: = த3சவக்த்ர: = த3சவத3ன: = ராவணன்.

979. த3சதா4 = பத்துவிதமான, பத்துப் பகுதியான.

980. த3சன: = த3சனம் = பல்.
 
981. த3சா' = ஆடையின் ஓரம், விளக்கின் திரி, காலம், நிலை, கோள்களின் நிலை.

982. த3சா'ந்த: = திரியின் முடிவு பாகம், வாழ்க்கையின் இறுதி.

983. த3ஹனம் = எரிதல், எரித்து முடித்தல்.

984. த3ம்ச': = கடித்தல், பாம்பு கடித்தல், கிழித்தல், காட்டு ஈ, தோஷம், பல், கவசம், குறைபாடு.

985. த3ம்ச'க: = நாய், பெரிய ஈ.

986. த3ம்ஷ்ட்ரா = பெரியபல், கோரைப்பல், யானையின் பல்.

987. த3ம்ஷ்ட்ரின் = பாம்பு, காட்டுப்பன்றி.

988. த3க்ஷ: = ஒரு பிரஜாபதியின் பெயர், கோழி, நெருப்பு, கெட்டிக்காரன், சிவன்.

989. த3க்ஷிண = வலது, தெற்கான, நிபுணனான, நேர்மையுள்ள, சாமர்த்தியமுள்ள.

990. த3க்ஷிண: = வலக்கை, ஒழுக்கம் உள்ள நல்ல மனிதன், சிவன், விஷ்ணு.
 
991. த3க்ஷிணா = காணிக்கை, தானம், அந்தணருக்குக் கொடுக்கப்படும் தக்ஷிணை, பால் நிறையத் தரும் பசு, தென் திசை, நாட்டின் தென் பகுதி.

992. த3க்ஷிணாயனம் = சூரியன் பூமத்திய ரேகைக்குத் தெற்க்கே செல்லும் 6 மாத காலம்.

993. த3க்ஷிணா மூர்த்தி = சிவபிரான்.

994. தா3 = கொடுக்க, ஒப்புவிக்க, விட்டுவிட, வைக்க, அனுமதி அளிக்க, திருமணத்தில் தர.

995. தா3டி3கா = தாடி.

996. தா3டி3ம: = மாதுளை மரம்.

997. தா3டிமம் = மாதுளம் பழம்.

998. தா3த்ரு = கொடுப்பவன், கடன் தருபவன், உபாத்தியாயர்.

999. தா3னம் = கொடுத்தல், சமர்பித்தல், ஒப்படைத்தல், உதவி, தானம், ரக்ஷ
ணை, காத்தல் .

1000. தா3னவ: = அரக்கன்.
 
1001. தா3ந்தி = புலனடக்கம்.

1002. தா3மன் = கயிறு, நூல், பூமாலை, கீறு, ஒளிக்கதிர், கோடு, பெரிய கட்டு.

1003. தா3மோத3ர: = விஷ்ணுவின் ஒரு பெயர்.

1004. தா3ம்பத்யம் = கணவன் மனைவி உறவு.

1005. தா3ய: = நன்கொடை, வெகுமதி, அன்பளிப்பு, பாகம், அம்சம், விநியோகம்.

1006. தா3ர: = வெடிப்பு, இடைவெளி, உழப்பட்ட வயல்.

1007. தா3ரித்3ர்யம் = ஏழ்மை, வறுமை.

1008. தா3ரு = மரக்கட்டை, மரத்துண்டு, நெம்புகோல், தேவதாரு, பித்தளை.

1009. தா3ருணம் = தயவின்மை, பயங்கரமான தன்மை, உக்கிரமானதன்மை.

1010. தா3ர்வீ = வெண்டைக்காய்.
 
1011. தா3வாக்3னி = தா3வானல: = காட்டுத் தீ.

1012. தா3ஸ: = அடிமை, வேலையாள், செம்படவன்,

1013. தாஸீ = அடிமை, வேலைக்காரி, செம்படவ ஸ்திரீ.

1014. தா3ஸ்யம் = அடிமைத்தனம்.

1015. தி3க3ம்ப3ர: = ஆடை அணியாதவன், சிவன், ஜைனன்,

1016. தி3க்3க3ஜ: = திசைகளின் யானைகள்.

1017. தி3னகர: = தி3னமணி: = தி3னேச': = தி3னபதி: = தி3னாதீ4ச': = சூரியன்.

1018. திவம் = சுவர்க்கம், ஆகாயம், நாள்.

1019. தி3வாகர: = சூரியன், காகம்.

1020. தி3வாகீர்த்தி: = கீழ்ஜாதி மனிதன், அம்பட்டன், ஆந்தை.
 
1021. தி3வ்ய = தெய்வீகத்தன்மை வாய்ந்த, ஆகாயம், சபதம் செய்தல், கிராம்பு.

1022. தி3வ்யாங்க3னா = தேவலோகப் பெண், அப்சரஸ்.

1023. தி3சா' = திக்கு, திசை, பிரதேசம்.

1024. தி3ஷ்டி: = பகிர்ந்து அளித்தல், வழி காட்டுதல், உத்தரவிடுதல், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, சுபகாரியம்.

125. தீ3ன = ஏழையான, துக்கம் அடைந்த, துன்பம் அடைந்த, சோகம் அடைந்த, அதிர்ஷ்டம் இல்லாத.

1026. தீ3ப : = விளக்கு, பிரகாசம்.

1027. தீ3பகம் = குங்குமப்பூ, ஒரு சொல்லணி.

1028. தீ3பிகா = பிரகாசம், தீவட்டி, விருத்தி உரை நூல்.

1029. தீ3ப்தி = பளபளப்பு, ஒளி, அரக்கு, பித்தளை.

1030. தீ3ர்க்கம் = நீண்ட, அதிகமான, நீண்ட காலத்து.
 
1031. தீ3ர்க்க4: = ஒட்டகம், நெடிய உயிரெழுத்து.

1032. தீ3ர்க4பாத3ப: = தென்னை, பனை, பாக்கு மரங்கள்

1033. தீ3ர்க்க4ஸூத்ரின் = சோம்பேறியான, மந்தமான, மெத்தனமான.

1034. தீ3ர்கா4யுஸ் = நீண்ட ஆயுள்.

1035. தீ3க்ஷா = சுத்தி செய்துகொள்ளல், மதச் சடங்குக்காக அர்ப்பணித்தல்.

1036. தீக்ஷித: = தீக்ஷை பெற்றவர், சீடன்.

1037. து3:க்கம் = வருத்தம், பீடை, வேதனை. கஷ்டம்.

1038. து3கூலம் = வெண் பட்டு.

1039. து3க்3த4ம் = பால், மரங்களிலிருந்து வடிக்கப்பட்ட ரசம்.

1040 . துந்துபி = பேரிகை , கிருஷ்ணனின் ஒரு பெயர், விஷ்ணுவின் ஒரு பெயர், ஒரு அரக்கனின் பெயர்.
 
1041 . து3ரதிக்ரம = வெல்ல முடியாத, அடக்க முடியாத.

1042 . து3ராக்ரமணம் = தகுதி அற்ற ஆக்கிரமிப்பு.

1043. து3ராத்மன் = கெட்ட நடத்தையுள்ள.

1044. து3ராஸத3: = நெருங்க முடியாத, ஜெயிக்க முடியாத, நிகரற்ற, இணை அற்ற.

1045. து3ர்க3தி = கெட்ட காலம், கெடுதி ஏழ்மை, கஷ்டம், நரகம், கடினமான பாதை.

1046. து3ர்க3ந்த4: = துர் நாற்றம், நாற்றம், வெங்காயம்.

1047. து3ர்நிமித்தம் = கெட்ட சகுனம்.

1048. து3ர்ப4ல: = வலிமைஅற்ற, சக்தி இல்லாத, மெலிந்த.

1049. து3ர்பு3த்3தி4 = கெட்ட புத்தி.

1050. து3ர்பி4க்ஷம் = பஞ்சம், மழை பொய்த்தல் .

There will be a short pause in this thread since my normal routine is slightly disturbed.
I shall join you as soon as possible.
 
1051. து3ர்மதி: = முட்டாள், மடையன், அறிவிலி.

1052. து3ர்மரணம் = கெட்ட சாவு.

1053. து3ர்முக: = குதிரை, சிவனின் ஒரு பெயர்.

1054. து3ர்வஹ = பளுவான.

1055. து3ர்வ்ருத்தி = கெட்ட நடத்தை.

1056. து3ரோத3ரம் = சூதாட்டம், சொக்கட்டான்.

1057. து3ஷ் = பாவம் செய்ய, கெட்டுப் போக, தூய்மையற்ற,
தூஷிக்கப்பட்ட.

1058. து3ஷ்ட= வீணான, அடிபட்ட, மதிக்கப்படாத, போக்கிரியான,
மட்டமான, கீழான.

1059. து3ஷ்கரம் = செயற்கரிய செயல்.

1060. து3ஷ்சரித = கெட்ட நடத்தையுள்ள.
 
1061. து3ஸ்ஸஹ = பொறுக்கமுடியாத.

1062. து3ஹ் = கறக்க, பிழிய, உயர்த்த, அனுபவிக்க.

1063. து3ஹித்ரு = பெண், மகள்.

1064. து3ஹிது:பதி: = மருமகன், மாப்பிள்ளை.

1065. தூ3 = துன்பமடைய, துக்கமடைய.

1066. தூ3த: = தூ3தக: = தூதன்.

1067. தூ3திகா = தூ3தீ = தூது செல்லும் பெண்.

1068. தூ3ரத: = தூரத்திலிருந்து, வெகு தூரத்தில்.

1069. தூ3ரத3ர்ஷின் = கழுகு, மதியூகி, முன் யோசனை உள்ளவன்.

1070. தூ3ஷணம் = கெடுதல், இழிவு படுதல், அவமதித்தல், களங்கம் கற்பித்தல், நிந்தனை.
 
1071. த்3ருடம் = இரும்பு, கோட்டை, அழுத்தமானது.

1072. த்3ருதி: = தோல், தோல்பை, மீன், துருத்தி, ஊது குழல்.

1073. த்3ருப்த = மதம் கொண்ட, கர்வம் கொண்ட, அவைக்குத் தகாத.

1074. த்3ருஷா = கண்.

1075. த்3ருஷான: = குரு, அந்தணன், சூரியன், உலக ரக்ஷகன்.

1076. த்3ருஷ்ய = பார்க்கத் தகுந்த, பார்க்கவேண்டிய, மகிழ்ச்சி
தரும்.

1077. த்3ருஷ்டி = பார்த்தல், மனக் கண்ணால் பார்த்தல், பார்வை ,
அறிவு, பார்க்கும் சக்தி.

1078. தே3தீ3ப்யமான = பிரகாசமான, ஒளிபொருந்திய.

1079. தே3வ : = தேவன், தேவதை, அரசன், இந்திரன்.

1080. தே3வாம்ச': = பகவானின் அம்சாவதாரம்.
 

1081. தே3வாலய = கோவில்.

1082. தே3வருஷி = நாரதர்.

1083. தே3வகுரு = ப்ருஹஸ்பதி.

1084. தே3வர: = மைத்துனன்.

1085.தே3வவ்ரத: = பீஷ்மர்.

1086. தே3வி = பார்வதி, ராணி, தேவதை,

1087. தே3வேந்திர: = இந்திரன்.

1088. தே3ச: = இடம், நாடு, பிரதேசம்.

1089. தே3சிக: = குரு.

1090. தே3சீய = தன் நாட்டினுடைய.
 
1091. தே3ஹம் = உடல்.

1092 . தே3ஹான்தரம் = மற்றொரு உடல்.

1093. தை3த்ய: = அரக்கன்.

1094. தை3த்யகுரு = சுக்ராச்சரியார்.

1095. தை3ன = தினப்படி.

1096. தை3ன்யம் = ஏழ்மை, வறுமை, துன்பம், வலிவின்மை.

1097. தை3வதம் = கடவுள், தெய்வம், விக்ரஹம் ,

1098. தை3வீக = தெய்வீகமான.

1099. தோ3லா = தோ3லிகா = பல்லக்கு, ஊஞ்சல்.

1100. தோ3ஷ: = குறைபாடு, தவறு, நிந்தை, அசுத்தம், பாவம், கெடுதல், நோய் .
 
Status
Not open for further replies.
Back
Top