'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
601. சி2: = நிந்தித்தல், திட்டுதல்.

602. சி2த்3 = வெட்ட, செதுக்க, அறுக்க, சீவ, கிழிக்க, உடைக்க, வகுக்க, பிரிக்க, அடக்க, உபத்திரவம் செய்ய, முறிக்க.

603. சி2த்3ரம் = வெடிப்பு, துளை, பிளவை, பள்ளம், குழி, இடைவெளி, தோஷம், பிசகு, தவறு, குறைவு.

604. சி2த்3ரத3ர்ஷின் = குற்றம் காணும், குறைகளையே தேடும்.

605. சி2ன்னாபி4ன்ன = உருத்தெரியாமல் ஆக்கப்பட்ட, கண்டபடி வெட்டப்பட்ட, கண்டம் துண்டம் ஆக்கப்பட்ட.

606. சி2ன்னமூல = வேருடன் வெட்டப்பட்ட.

607. சி2ன்னஸம்ச'ய = ஐயமின்றி, சந்தேஹமில்லாமல்.

608. சு2ரா = சுண்ணாம்பு.

609. சு2ரி = சூ2ரி = சூ2ரிகா = கத்தி.

610. சே2த3: = சே2த3னம் = வெட்டுதல், வீழ்த்துதல், முறித்தல், ஒதுக்குதல், அழித்தல், நிறுத்துதல், குறைப்படுதுதல்.
 
611. சோ2டிகா = கைச் சிட்டிகை, கை நொடிப்பு.

612. ஜ: = உற்பத்தி, பிறப்பு, தகப்பன், விஷ்ணு, சிவன், ஒளி, பூதம், பிசாசு, விஷம்.

613. ஜ3க3தி = பூமி, ஜனங்கள், பசு, ஒரு வகை விருத்தம்.

614. ஜக3த்3கு3ரு = உலகின் குரு, சிவன், விஷ்ணு, பிரம்மா, நாரதர், சங்கராச்சாரியார்.

615. ஜக3தா3தா4ர = காலம், காற்று.

616. ஜக3ன்நிவாஸ : = பரமாத்மா, விஷ்ணு.

617. ஜக3த்சாக்ஷிண் = சூரியன், பரம்பொருள்.

618. ஜங்க3ம = உயிருள்ள, அசைவுள்ள, அசையக்கூடிய.

619. ஜங்கா4ள: = தபால்காரன், செய்தி கொண்டு செல்பவன்.

620. ஜடாஜூட = சிவன், துறவி.
 
621. ஜடில = சிக்கலான, குழப்பமான, அடர்த்தியான, உட்புகமுடியாத, தலையில் சடையுடைய.

622. ஜட2ரம் = வயிறு, வயிற்றுப் பகுதி, கருப்பை, ஒரு வஸ்துவின் உட்பகுதி.

623. ஜட2ராக்3னி = ஜீரணசக்தி, ஜீரண நீர், உணவுப்பையில் உள்ள அமில நீர்.

624. ஜட3 = குளிர்ந்த, சீதலமான, மந்தமான, மழுங்கிய, உணர்வற்ற, விவேகம் இல்லாத, அக்கரை இல்லாத.

625. ஜன: = ஜனதா = மனிதன், சமூகம், மக்கள். உலகம், வம்சம், இனம்.

626. ஜனனம் = பிறப்பு, சிருஷ்டி, தோற்றம், எழுச்சி, உதித்தல்.

627. ஜனக: = தந்தை, ஒரு புகழ் பெற்ற பண்டைய அரசன்.

628. ஜனனீ = தாய், தயை, கருணை, வௌவால், அரக்கு.

629. ஜனாந்த: = மக்கள் வசிக்காத இடம்.

630. ஜந்து = மிருகம், உயிருள்ள பிராணி, கீழ்ப்பட்ட இனம், நபர்.
 
631, ஜன்மன் = பிறப்பு, ஆரம்பம், மூலம், எழுச்சி, உற்பத்தி, படைப்பு, வாழ்க்கை, பிறப்பிடம்.

632. ஜன்மாந்தரம் = முற்பிறப்பு அல்லது மற்றோர் பிறப்பு.

633. ஜன்ம குண்ட3லி = ஜன்ம பத்ரிகா = குழந்தையின் ஜாத
க் குறிப்பு.

634. ஜன்ம ஸாபல்யம் = பிறவிப்பயன்.

635. ஜன்யம் = பிறந்தது, படைக்கப்பட்டது, விளைவு, உண்டானது.

636. ஜப: = மெல்லிய குரலில் செய்யப்படும் பிரார்தனை, வேதம் ஓதுதல், மந்திரங்களைச் சொல்லுதல்.

637. ஜபாகுஸுமம் = சிவப்புச் செம்பருத்திப்பூ.

638. ஜம்பதி = தம்பதிகள்.

639. ஜம்பூ3 = நாவல் மரம், நாவல் பழம்.

640. ஜம்பீ4ர: = எலுமிச்சை மரம், எலுமிச்சம் பழம்.
 
641. ஜெய: = வெல்லுதல், ஜெயித்தல், வெற்றி அடைதல், புலன்களை அடக்குதல்.

642. ஜயகோ3ஷ: = வெற்றி பிரகடனம்.

643. ஜெயதேவ: = கீதகோவிந்தம் என்ற நூலின் ஆசிரியர்.

644. ஜெயபால: = அரசன், விஷ்ணு, பிரம்மா.

645. ஜெயஸ்தம்ப4: = வெற்றியைக் குறிக்கும் ஒரு தூண் அல்லது கட்டிடம்.

646. ஜரட2 = கடினமான, கெட்டியான, திடமான, பழைய, வயதான, தேய்ந்து போன, பலம் குறைந்த, பழுத்த.

647. ஜரா = கிழத்தன்மை, பலஹீனம், வலிமைக்குறைவு.

648. ஜர்ஜர = கிழ, வயதான, பலஹீனமான, பழுதான, துண்டுதுண்டான.

649. ஜலக்ரியா = இறந்த முன்னோர்களுக்குச் செய்யும் நீர்க்கடன்.

650. ஜலஜா: = நீரில் வாழும் பிராணி, மீன், பாசி, சந்திரன்.
 
651. ஜலஜம் = தாமரை, சங்கு.

652. ஜலதரங்கம் = அலை, கிண்ணங்களில் தண்ணீர் விட்டு வைத்து வாசிக்கும் இசைக்கருவி.

653. ஜலத3: = மேகம்.

654. ஜலதி4: =கடல், எண் கோடி கோடி.

655. ஜலாச'ய: = மடுவு, குளம், ஏறி, மீன், கடல்.

656. ஜல்ப: = பேச்சு, சொற்பொழிவு, உரையாடல், உளறுதல், வம்புப் பேச்சு, விவாதம், சொற்போர்.

657. ஜவ: = வேகம், சீக்கிரமாக நடப்பது.

658. ஜஸ் = விடுவிக்க, சுதந்திரமாக, அடிக்க, அடி கொடுக்க, அழிக்க, பொருட்படுத்தாதிருக்க, இழிவு படுத்த.

659. ஜஹாநக : = உலகப் பேரழிவு, மகா பிரளயம்.

660. ஜாகரணம் =விழித்து இருத்தல், தூக்கத்தில் இருந்து விழித்தல்,
எச்சரிக்கையாக இருத்தல்.
 
661. ஜாக்3ரத் = விழிப்புடன் உள்ள, எச்சரிக்கையாக உள்ள, தெளிவாக உள்ள, பிரகாசமாக உள்ள.

662. ஜாங்க3ள = கிராமீய, அழகான, நாகரீகம் அற்ற, வறண்ட,
முரட்டுத் தனமான.

663. ஜாட2ர : = ஜீரண சக்தி.

664. ஜாட்3யம் = குளிர்ந்ததன்மை, அக்கறையின்மை, சோம்பேறித்தனம், மந்த புத்தி, ருசியின்மை, மூடத்தனம்.

665. ஜாத = பிறந்த, உண்டாக்கப்பட்ட, வளர்ந்த, எழுந்த, ஏற்பட்ட.

666. ஜாதம் = பிராணி, உற்பத்தி, வகை, வகுப்பு, ஜாதி.

667. ஜாதவேத3ஸ் = ஜாதவேத3: = அக்னி.

668. ஜாதி = கோத்தரம், குலம், ஜாதி, இனம், வகுப்பு, வகை, வர்க்கம்.

669. ஜாத்ய = ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மனதைக்கவரும், அழகான.

670. ஜானபத3: = நாட்டுப்புறத்தான், கிராமத்தான், நாடு, விஷயம்.
 
671. ஜானு = முழங்கால்.

672. ஜாமா =மருமகள்.

673. ஜாமாத்ரு = மருமகன், மாப்பிள்ளை, எஜமானன், பிரபு, சூரிய காந்திப்பூ.

674. ஜாமி: = உடன் பிறந்தவள், மகள், மகனின் மனைவி, நல்ல குணவதியான பெண்மணி.

675. ஜாமேய: = தமக்கை அல்லது தங்கையின் மகன்.

676. ஜாம்ப3வம் = பொன், தங்கம், நாவல் பழம்.

677. ஜாம்பூ3நத3ம் = பொன், தங்கம், தங்க ஆபரணம், ஊமைத்தைச் செடி.

678. ஜாயா = மனைவி.

679. ஜாயாபதி = கணவன் மனைவி.

680. ஜாயு: =மருந்து, மருத்துவன்.
 
681. ஜார: = ஆசை நாயகன், கள்ளக் காதலன்.

682. ஜாலம் = வலை, கண்ணி, கூடு, கவாக்ஷி, ஜன்னல், கூட்டம், குவியல், மந்திர தந்திரம், மலராத பூ, தூண்டில்.

683. ஜாலகம் = வலை, கூட்டம். சேர்க்கை, ஜன்னல், கவாக்ஷி, மொக்கு, மலராத பூ, பிரமை, கபடம், ஏமாற்றம், தலைமுடியில் அணியும் அணிகலன்.

684. ஜாலிக: = மீன் பிடிப்பவன், பட்சிகளைப் பிடிப்பவன், சிலந்தி, வஞ்சகன், அயோக்கியன்.

685. ஜி = ஜெயிக்க, தோற்கடிக்க, ஜெயமடைய, அடக்க, மேம்பட, ஆதிக்கத்தில் கொண்டுவர.

686. ஜிகீ3ஷா = ஜெயிக்க, வசமாக, ஆசை, போட்டி, மேன்மை, செயல்.

687. ஜிகா4ம்ஸு: = எதிரி, கொல்ல விரும்புவன்,

688. ஜிக்ஞாஸா : = அறிந்துகொள்ள விரும்புபவன், தெரிந்து கொள்ள விரும்புபவன்.

689. ஜித = ஜெயிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, அடையப்பட்ட, வசீகரிக்கப்பட்ட.

690. ஜின: = ஜைனத் துறவி
 
691. ஜிதேந்த்ரிய = புலன்களை அடக்கிய.

692. ஜிஷ்ணு : = சூரியன், இந்திரன், விஷ்ணு, அர்ஜுனன்.

693. ஜிஹ்வா = நாக்கு, அக்னியின் ஜ்வாலை.

694. ஜீமூத: = மேகம், மலை, இந்திரனின் ஒரு பெயர்.

695. ஜீர்ண = பழைய, புராதனமான, அழிந்த, கிழிந்த.

696. ஜீர்ணம் = சாம்பிராணி, பலஹீனம், கிழத்தன்மை.

697. ஜீவ : = வாழ்க்கைத் தத்துவம், மூச்சுக் காற்று, பிராணன், ஆன்மா.

698. ஜீவக: = உயிருள்ள பிராணி, வேலைக்காரன், பௌத்த பிக்ஷூ,
பிச்சைக்காரன், வட்டி வாங்குபவன், பாம்பு பிடிப்பவன்.

699. ஜீவனம் = உயிர் வாழ்தல், இருத்தல், வாழ்க்கைக் கொள்கை, உயிர் வாழும் சக்தி.

700. ஜீவன்முக்த: = பரம் பொருளை அறிந்து கொண்டதால் இப்பிறவிலேயே விடுதலை அடைந்தவன்.
 
Last edited:
701. ஜீவா = தண்ணீர், பூமி, வில்லின் நாண் கயிறு, வசம்புச் செடி.

702. ஜீவாத்மன் = ஆன்மா, ஜீவன்.

703. ஜீவிதம் = வாழ்க்கை,வாழ்க்கைக் காலம், வாழ்க்கைச் சாதனம்.

704. ஜுகு3சஸனம் = நிந்தை, வசை, வெறுப்பு, நவரசங்களில் 'பீபத்ஸ' ரசம்.

705. ஜுஷ்ட = இன்பம் அடைய, திருப்தி அடைய, விரும்பப்பட்ட.

706. ஜூ: = வேகம், விண்வெளி, அரக்கி, சரஸ்வதி.

707. ஜுட: = தலைமுடியின் ஜடை, சடைமுடி.

708. ஜ்ரும்ப4: = கொட்டாவி விடுதல், வாயைப்பிளத்தல், மலர்தல், பரவுதல், வியாபித்தல், நீளுதல்.

709. ஜேமனம் = உணவு, சாப்பாடு.

710. ஜைத்ரம் = ஜெயம், வெற்றி, மேன்மை.
 
711. ஜோடிங்க3: = சிவனைக் குறிக்கும் சொல்.

712. ஜோஷம் = தன்னிச்சை ஆக, மெளனமாக.

713. ஜோஷா = பெண்.

714. ஜ்யா = வில்லின் நாண் கயிறு, பூமி, தாயார்.

715. ஜ்யானி : = கிழத்தனம், அழிவு, தியாகம், ஓடை, ஆறு, நஷ்டம்.

716. ஜ்யேஷ்ட2: = மூத்த அண்ணன், ஜ்யேஷ்ட மாசம்.

717. ஜ்யேஷ்டா2 = மூத்த தமக்கை, கையின் மைய விரல் (பாம்பு விரல்), பல்லி, கங்கை, மூதேவி.

718. ஜ்யோதிர்மய = ஒளிமயமான, நட்சத்திரங்களுடன் கூடிய.

719. ஜ்யோதிஷம் = ஆறு வேந்தங்களில் ஒன்றான சோதிடம்.

720. ஜ்யோதிஸ் = பிரகாசம், ஒளி, பளபளப்பு, மின்னல், பார்வையின் சக்தி, புத்தியின் சக்தி, விண்ணில் உள்ள கோள்கள்.
 
721. ஜ்யோத்ஸ்னா = நிலா, பிரகாசம், துர்க்கை, நிலவொளி இரவு.

722. ஜ்வர: = ஜுரம், உஷ்ணம், சூடு, தாபம், துக்கம், வருத்தம்.

723. ஜ்வலனம் = எரிதல், பிரகாசித்தல், தீப்பரவுதல்.

724. ஜ்வால: = நெருப்பு, பிரகாசம், தீவட்டி.

725. ஜ்வாலாமுகி2 = எரிமலை, தேவியின் புனிதத்தலம்.

726. ஜ்வாலின் = சிவன்.

727. ஜ்ஜங்கார: = வண்டுகளின் ரீங்காரம் போன்ற சப்தம்.

728. ஜ்ஜடிதி = வேகமாக, உடனேயே.

729. ஜ்ஜர்ஜர: = மத்தளம், ஜால்ரா, பிரம்பு, கலியுகம், கரண்டி.

730. ஜ்ஜஷ: = மீன், பெரிய மீன், மீனராசி, உஷ்ணம்.
 
731. ஜ்ஜஷம் = வறண்ட காடு.

732. ஞபித = தெரிவிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட, சொல்லித் தரப் பட்ட.

733. ஞாத = அறிந்த, புரிந்த, தெரிந்த.

734. ஞாத்ரு = புத்திசாலி, அறிவாளி, அறிந்தவன்.

735. ஞானம் = அறிவு, தேர்ச்சி, கல்வி, உணர்வு, மோக்ஷ ஞானம்.

736. ஞான சக்ஷுஸ் = ஞானக் கண், அறிவுக்கண்.

737. ஞானத3: = குரு, ஆசான்.

738. ஞானதா3 = கலைமகள், சரஸ்வதி.

739. ஞானமய = அறிவு நிறைந்த, அறிவு முதிர்ந்த.

740.ஞாபகம் = நினைவு, பொருள் பொதிந்த பேச்சு, நினைவுத் திறன்.
 
741. ஞாபனம் = அறிவித்தல், தெரிவித்தல், வெளியிடல்.

742. டங்கார: = வில்லின் நாண் ஏற்றும் ஓசை, கூச்சல், உறுமல்.

743. டிட்டிப4: = சிட்டுக் குருவி.

744. டிப்பனி = கருத்துரை, கருத்துக்கு உரை.

745. டு : = தங்கம், மன்மதன், விரும்பும் உருவம் எடுக்க வல்லவன்.

746. ட2: = சப்தம், கூச்சல், வட்ட வடிவம், வட்டம், உருண்டை, பூஜ்யம், சிவனின் பெயர் விசேஷம்.

747. ட3மர: = சண்டை, கலஹம், ஒழுங்கீனம், பயமுறுத்துதல்.

748. ட3மரூ = உடுக்கை.

749. ட3ம்ப3ர = கூட்டம், குவிப்பு, பகட்டு, ஆடம்பரம், கர்வம், மமதை.

750. டா3கினி = பெண் பிசாசு.
 
751. டா3மர: = கூச்சல், அமளி, கலஹம், ஆரவாரம், குழப்பம்.

752. டா3லிம: = மாதுளை மரம்.

753. டி3ண்டி3ம : = சிறு மத்தளம்.

754. டி3ம்ப4க: = சிறு குழந்தை, விலங்கின் குட்டி.

755. டீ3 = பறக்க, பறந்து செல்ல, காற்றில் பறக்க.

756. டீ3னம் = பறவையின் பறத்தல்.

757. டு4ண்டி4: = விநாயகர்.

758. டௌ4கனம் = காணிக்கை.

759. டௌ4ல: = மிருதங்கம், பெரிய மத்தளம்.

760. தக்ரம் = மோர்.
 
761. தக்ஷக : = தச்சன், விஸ்வகர்மா, தக்ஷகன் என்னும் பாம்பு.

762. தங்க : = துன்பமயமான வாழ்க்கை, பிரிவு, வருத்தம், உளி.

763. தட: = சரிவு, மலை இறக்கம், ஆகாயம், தொடுவானம்.

764. தடம் = கரை, சமீபம், சரிவு.

765. தடாகம் = குளம், குட்டை, நீர் நிலை.

766. தட்3 = அடிக்க, கொல்ல, மோத, தட்ட, வாத்தியம் வாசிக்க.

767. தண்டு3ல: = அரிசி.

768. தத: = இங்கிருந்து, அங்கிருந்து, அங்கே, பிறகு, ஆகையால், அதனால், அது தவிர.

769. தத:பரம் = அதற்கும் மேலே, அதன் பிறகு.

770. ததஸ்தத : = ஆங்காங்கு, இங்கும் அங்கும்.
 
771. தத்ர = அவ்விடத்தில், அச்சமயத்தில், அந்நிலையில்.

772. தத்வம் = உண்மை நிலை, உண்மை, இயற்கை நிலை, மனம், ஜீவாத்மாவின் உண்மை நிலை, பரமாத்மா.

773. தத்வஞ = பிரம்ம ஞானமுள்ள.

774. ததா2 = அப்படி இப்படியாக, மேலும், கூட, உண்மையாக,

775. தத3னந்தரம் = அதற்கு பிறகு, அதை அடுத்து, அதன் பின்னர்.

776. ததா3 = அப்போது, எப்போதோ அப்போது, ஆகையால்.

777. தத்புருஷ: = மூல புருஷன், பரமாத்மா.

778. தத்பூர்வம் = அதற்கு முன்னால், மு
ன்னர் நடந்த.

779. தன்மாத்ரம் = சூக்ஷ்ம மூல தத்வம் (சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்), அது மட்டும்.

780. தத்3வத் = அது போல, சமமாக, அதே மாதிரியாக.
 
781. தனய : = மகன், ஆண் சந்ததி.

782. தனு = ஒல்லியான, மெலிந்த, பலம் குன்றிய, நுண்மையான, அழகான, நேர்த்தியான, மிருதுவான.

783. தனு: = உடல், ஆள், வெளித்தோற்றம், இயற்கை, உருவம், குணம், உடலின் தோல்.

784. தனுஜ: = தனூஜ: = மகன்.

785. தனுஜா = தனூஜா = மகள்.

786. தன் = நீட்ட, விஸ்தரிக்க, பரப்ப, மூட, உருவாக்க, வழங்க.

787. தந்தி = கயிறு, நூல், வரிசை, வகை.

788. தந்த்ரம் = நெசவுத்தறி, வழித்தோன்றல், பரம்பரை, சட்டம், விஞ்ஞானம், தந்திர சாஸ்திரம், ரக்ஷை மந்த்ரம், சபதம்.

789. தந்த்ரி = கயிறு, நாண், தந்தி, வீணைத் தந்தி.

790. தப: = உஷ்ணம், நெருப்பு, சூர்யன், கோடைக்காலம், தவம்.
 
791. தபன : = சூரியன், கோடைக் காலம், சூரிய காந்தக்கல், சிவனின் ஒரு பெயர், எருக்கஞ்செடி.

792. தபனதனய: = தபனாத்மஜ : = யமன், சனீஸ்வரன், சுக்ரீவன்,கர்ணன்.

793. தபனதனயா = யமுனா நதி, கோதாவரி.

794. தபஸ் = சூடு, உஷ்ணம், நெருப்பு, வேதனை, துன்பம், கஷ்டம்.

795. தபஸ்வின் = துறவி, பிச்சை எடுப்பவன், நாரதமுனிவர்.

796. தபோநிதி4: = மகான், தவசி, சான்றோன்.

797. தப்த = சூடாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, காய்ச்சப்பட்ட, உருக்கப்பட்ட, துன்பம் அடைந்த, பீடிக்கப்பட்ட.

798. தமஸ் = இருட்டு, நரகத்தின் இருள், மன இருள், அறியாமை, பிரமை, தமோ குணம், துக்கம், பாபம், ராஹு, அஞ்ஞானம்.

799. தமால: = நெற்றியில் இடும் சந்தனக்குறி, போர்வாள், புகையிலை, பட்டாக்கத்தி.

800. தமீ = இருண்ட,
இருட்டு, மயக்கம், மஞ்சள்.
 
801. தமோக்4ன : = சூரியன், சந்திரன், நெருப்பு, அக்னி, விஷ்ணு, சிவன், அறிவு.

802. தரங்க3: = அலை, வரிசை, ஒரு நூலின் ஒரு பகுதி, குதித்தல், தாண்டல், வேகமான ஓட்டம், துள்ளி ஓடுவது, ஆடை, துணி.

803. தரங்கி3ணீ = ஆற்றுப் பிரவாஹம்.

804. தரணீ = ஓடம், படகு.

805. தரல = நடுங்கும், சஞ்சலமான, சபலமான, பளபளப்பான, காமம் உடைய, தன் இஷ்டம் போல நடக்கும்.

806. தரல : = வைரம், இரும்பு, ஆழம், அடிப்பாகம், சமமான பரப்பு, கழுத்துமாலை, மாலையின் மையத்தில் உள்ள ரத்தினம்.

807. தரஸ்வின் = வேகமாகச் செல்லும் தூதன், வீரன், காற்று, கருடன்.

808. தரு: = மரம்.

809. தருண = இளம் வயதுள்ள, யுவனான, புதிய, தெளிந்த, மிருதுவான, உற்சாகமான.

810. தருணீ = இளம் வயதினள்.
 
811. தர்ஜனம் = பயமுறுத்துதல், நிந்தித்தல்.

812. தர்ப்பணம் = திருப்தி, மகிழ்ச்சி, இறந்த மூதாதையருக்குச் செய்யும் நீர்க்கடன் முதலியன.

813. தலம் = தடம், இடம், உள்ளங்கை, குதிகால், அடிப்பாகம், ஆதாரம், அடித்தளம், தாழ்ந்த நிலை, மட்டமான நிலை.

814. தல்பம் = படுக்கை, மெத்தை, சோபா, மச்சு, மாடி, மண்டபம்.

815. தஸ்கர: = திருடன், கொள்ளைக்காரன்.

816. தாடங்க: = காதணி, காதோலை.

817. தாட3னம் = அடித்தல், உதைத்தல்.

818. தாண்ட3வ: = தாண்ட3வம் = சிவனின் நடனம், நாட்டியம்.

819. தாத: = தகப்பன், அன்புடன் அழைக்கும் சொல், நட்பு, தயை.

820. தாத்காலிக = தற்காலிகமான, உடனடியாக.
 
821. தாத்பர்யம் = கருத்து, பொருள், அபிப்ராயம், குறிக்கோள்.

822. தாதா3த்ம்யம் = ஒற்றுமை, இயற்கையான ஒற்றுமை,
பேதம் அற்ற இணைப்பு.

823. தாத்3ருச' = அது போன்ற, அவனைப் போன்ற, அவளைப் போன்ற.

824. தாப: = சூடு, பீடை, உஷ்ணம், துன்பம், கஷ்டம், துக்கம்.

825. தாமரஸம் = செந்தாமரை, தங்கம், தாமிரம்.

826. தாமஸ = கருப்பான, இருளான, தமோ குணம் உடைய .

827. தாம்ராக்ஷ: = குயில், காக்கை.

828. தாரக: = கரை ஏற்றுபவன், காப்பாற்றுபவன், கொண்டுசெல்பவன்.

829. தாரா = நக்ஷத்ரம், கோள், கண்ணின் கருவிழி, முத்து, வாலியின் மனைவி, ப்ருஹஸ்பதியின் மனைவி.

830. தாருண்யம் = இளமை, யௌவனம், புதுமை.
 
831. தார்கிக: = தர்க்கம் செய்பவன், தர்க்க சாஸ்திரம் அறிந்தவன், நியாய சாஸ்திரம் கற்றவன்.

832. தார்க்ஷ்ய: = கருடன், அருணன், வண்டி, குதிரை, பாம்பு, பறவை.

833. தால: = பனை மரம், கை கொட்டுதல், தாளம் போடுதல், ஜால்ரா, உள்ளங்கை, பூட்டு, தாழ்ப்பாள், வாளின் கைப்பிடி.

834. தாலபத்ரம் = பனை ஓலை.

835. தாவத் = இவ்வளவு, அவ்வளவு, இத்தனை.

836. திக்த : = கசப்பு ருசி, குடஜமரம், வாசனை, கைப்பு.

837. திக்3மம் = (உணவில்) காரம்.

838. திதிக்ஷா = பொறுமை.

839. திந்த்ரிணீ = புளி.

840. திமி: = கடல், கடல்மீன்.
 
841. தாத்பர்யம் = கருத்து, பொருள், அபிப்ராயம், குறிக்கோள்.

842. தாதா3த்ம்யம் = ஒற்றுமை, இயற்கையான ஒற்றுமை,
பேதம் அற்ற இணைப்பு.

843. தாத்3ருச' = அது போன்ற, அவனைப் போன்ற, அவளைப் போன்ற.

844. தாப: = சூடு, பீடை, உஷ்ணம், துன்பம், கஷ்டம், துக்கம்.

845. தாமரஸம் = செந்தாமரை, தங்கம், தாமிரம்.

846. தாமஸ = கருப்பான, இருளான, தமோ குணம் உடைய .

847. தாம்ராக்ஷ: = குயில், காக்கை.

848. தாரக: = கரை ஏற்றுபவன், காப்பாற்றுபவன், கொண்டுசெல்பவன்.

849. தாரா = நக்ஷத்ரம், கோள், கண்ணின் கருவிழி, முத்து, வாலியின் மனைவி, ப்ருஹஸ்பதியின் மனைவி.

850. தாருண்யம் = இளமை, யௌவனம், புதுமை.
 
Status
Not open for further replies.
Back
Top