• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
161. உத3ய : = உதித்தல், எழுதல், உண்டாக்குதல், உற்பத்தி செய்தல், ஸ்ருஷ்டி, அபிவிருத்தி, வளர்ச்சி, செழிப்பு, விளைவு, பயன், நிறைவு, லாபம்.

162. உதா3ன : = மேல் மூச்சு விடுதல், பஞ்சப் பிராணன்களில் கழுத்தில் இருந்து மேல் எழும்பும் காற்று, தொப்புள், ஒருவகைப் பாம்பு.

163. உதா3ர = தாராள மனம் உள்ள, சிறந்த, மேலான, புகழ் பெற்ற, அழகான, நாவன்மை பெற்ற.

164. உதா3ஹரணம் = எடுத்துக் காட்டு, உவமை, வர்ணனை, விளக்கிக் காட்டுதல்.

165. உத்3தி3ஷ்ய = உத்தேசித்து, மனதில் எண்ணி, ஒன்றைக்குறித்து.

166. உத்3தா4ர : = இழுத்து வெளியே தள்ளுவது, விடுபடல், தூக்குதல், கடன், மோக்ஷம்.

167.உத்3தா4ரணம் = காப்பாற்றுதல், மீட்டல், விடுபடல், எழுப்புதல்.

168. உத்3ப4வ : = உற்பத்தி, படைப்பு, பிறப்பு, உண்டாகும் இடம், விஷ்ணு.
 
169. உத்3யானம் = தோட்டம், உலாவுதல், கருத்து, உத்தேசம்.

170. உத்3யோக: = முயற்சி, தொழில், செயல், காரியம், பதவி.

171. உத்3வேக : = நடுக்கம், சஞ்சலம், திகில், கவலை, துக்கம், வியப்பு, ஆச்சர்யம்.

172. உன்னத = எழும்பிய, உயர்த்தப்பட்ட, உயரமான, முக்கியமான, உயர்ந்த.

173. உன்மத்த = மது அருந்திய, பைத்தியம் பிடித்த, அநாகரீகமான, சிதறுண்ட.

174. உன்மேஷம் = கண்களைத் திறப்பது, இமைகளைக் கொட்டுவது, மலருவது, திறப்பது, விழித்தல், எழுதல், தெளிவடைதல்.

175. உபகரணம் = சாமான், பொருள், சாதனம், தொழில் கருவிகள், தொண்டு புரிதல், உதவி புரிதல்.

176. உபகாரி = அரண்மனை, அரசனின் கூடாரம், சத்திரம், சாவடி.
 
177. உபக்3ரஹ : = சிறை வைத்தல், கைதி, பிடித்தல், தோல்வி, கிருபை, உற்சாகமூட்டுதல், சிறு கிரகம்.

178. உபசார: = சேவை, தொண்டு, பணிவிடை, கௌரவித்தல், பூஜித்தல், விருந்தோம்பல்,அழைத்தல், வணங்குதல், சடங்கு, வழிமுறை, நடைமுறை.

179. உபதே3ச: = போதித்தல், ஆலோசனை கூறுதல், தீக்ஷை, மந்த்ரோபதேசம்.

180. உபநயனம் = அருகில் கொண்டு செல்லல், வெ
குமதி, காணிக்கை, பூணல் போடும் சடங்கு.

181. உபநிஷத்3 = வேத
கிரந்தங்கள், ரஹசியமான அறிவு, பரமாத்மாவுடன் சம்பந்தப் பட்ட உண்மை அறிவு, தனிமை.

182. உபன்யாஸ : = அருகில் வைத்தல், ஒன்றின் பக்கத்தில் ஒன்றி இருத்தல், அடகு, பேச்சு, முகவுரை, பிரசங்கம்.

183. உபபுராணம் = சிறிய அல்லது முக்கியத்துவம் குறைந்த புராணம்.

184. உபமானம் = ஒரே உருவமுடைய, சமமான தன்மையுடைய, ஒப்பிட உகந்த, ஒப்புவமை.
(உபமேயம் = ஒப்பிடுவதற்கு உகந்த விஷயம்.)
 
185. உபயோகம் = பிரயோகம், தொண்டு செய்தல், பணிவிடை செய்தல், தகுதி, பொருத்தம், தொடர்பு.

186. உபரதி : = விரக்தி, வெறுப்பு, அலட்சியம், விடுபடுதல், நிறுத்துதல்.

187. உபலக்ஷணம் = பார்த்தல், பார்வையில் கொண்டுவருதல், கவனித்தால், குறித்தல், குறிப்பிடுதல்.

188. உபவாஸ : = விரதம், உணவு உட்கொள்ளாமல் இருப்பது, யாஹ அக்னியை எரியச்செய்தல்.

189. உபவேத3ம் = ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், ஸ்தாபத்ய வேதம் என்ற நான்கு.

190. உபஸந்தா4னம் = கூட்டுதல், சேர்த்தல்.

191. உபஸ்தா2னம் = அருகில் இருப்பது, நெருங்குவது, அருகாமை, வருகை, பூஜித்தால், சேவித்தல், தொண்டு, வணங்குதல்.

192. உபஹரணம் = எடுத்தல், பிடித்தல், அருகில் கொண்டு வருதல், காணிக்கை செலுத்துதல், உணவு பரிமாறுதல்.


 
193. உபஹார : = அக்னியில் இடப்படும் ஆஹூதி, வெகுமதி, பலி, காணிக்கை, பரிசு, பூஜா திரவியம்.

194. உபாதா3னம் = மூலப் பொருள், காரணம், பிரயோஜனம், வர்ணனை, எடுத்துக் கொள்ளுதல்.

195. உபாதி4 : = வஞ்சனை, கபடம், தந்திரம், அடைமொழி, குலப் பெயர், காரணப் பெயர், குடும்பப் பெயர், புனை பெயர், எல்லை, வரம்பு.

196. உபாய : = உபாயம், முயற்சி யுக்தி, ஆரம்பம்.

197. உபேஷா = அலட்சியமாக இருப்பது, அசட்டையாக இருப்பது, கவனக் குறைவு, விட்டு விடுதல்.

198. உபேந்தி3ர : = விஷ்ணு, கிருஷ்ணன்.

199. உப4ய = இரட்டையான (மனிதர் அல்லது வஸ்து).

200. உமா = ஹிமவான் மகள், சிவனின் மனைவி, ஒளி, பிரகாசம், புகழ், அமைதி, இரவு, மஞ்சள்.
 
193. உபஹார : = அக்னியில் இடப்படும் ஆஹுதி, வெகுமதி, பலி, காணிக்கை, பரிசு, பூஜா திரவியம்.

194. உபாதா3னம் = மூலப் பொருள், காரணம், பிரயோஜனம், வர்ணனை, எடுத்துக் கொள்ளுதல்.

195. உபாதி4 : = வஞ்சனை, கபடம், தந்திரம், அடைமொழி, குலப் பெயர், காரணப் பெயர், குடும்பப் பெயர், புனை பெயர், எல்லை, வரம்பு.

196. உபாய : = உபாயம், முயற்சி யுக்தி, ஆரம்பம்.

197. உபேஷா = அலட்சியமாக இருப்பது, அசட்டையாக இருப்பது, கவனக் குறைவு, விட்டு விடுதல்.

198. உபேந்தி3ர : = விஷ்ணு, கிருஷ்ணன்.

199. உப4ய = இரட்டையான (மனிதர் அல்லது வஸ்து).

200. உமா = ஹிமவான் மகள், சிவனின் மனைவி, ஒளி, பிரகாசம், புகழ், அமைதி, இரவு, மஞ்சள்.
 
201. உரக3 : = பாம்பு, நல்ல பாம்பு, நாகப்பாம்பு, புராணங்களில் வரும் மனித முகம் கொண்ட பாம்பு.

202. உரஸ = மார்பு, மார்பகம்.

203. உரூ = விசாலமான, புகழுடைய, மேலான, பெரிய, அதிசயமான, அதிகமான.

204. உர்வாரூ : = ஒரு வகை கக்கரிக்காய், வெள்ளரிக்காய்.

205. உலூக : = ஆந்தை, இந்திரன், ஒரு முனிவரின் பெயர்.

206. உல்லாஸ : = ஆனந்தம், மகிழ்ச்சி, பிரசாகம், காந்தி. ஒரு சொல் அணி, புத்தகத்தின் ஒரு பாகம்.

207. உல்லேக2னம் = தேய்த்தல், துருவுதல், தோண்டுதல், குறிப்பிடல், வாந்தி எடுத்தல், மேற்கோள், எழுதப்பட்டது, சித்திரம்.

208. உஷஸ் = பொழுது விடியும் காலம், விடியற்காலை, காலை வெளிச்சம், ஸந்த்யா தேவி.

209. உஷ்ண = சூடான, உஷ்ணமான, கூர்மையான, காரமான, கெட்டிக்கார, சாமர்த்தியம் நிறைந்த, கோபமுள்ள.

210. ஊன = குறைவான, குறைந்த, பலக்குறைவான, கீழ் ரகமான.
 
211. ஊரூ = தொடை.

212. ஊர்ஜித = சக்திவாய்ந்த, திடமான, வலிமையான, மரியாதைக்குரிய, மேலான, அழகான, உயர்ந்த, பெருமை வாய்ந்த.

213. ஊர்த்4வ : = நேரான, மேல்நோக்கிய, எழுந்து நிற்கும், உயரமான, நேர்த்தியான, கிழிந்த, பிய்ந்துபோன.

214. ஊஹ : = ஊகித்தல், அனுமானம் செய்தல், சோதித்தல், வாதித்தல், பூர்த்தி செய்தல், நோக்குதல்.

215. ருஜு = நேர்மையான, நாணயமான, கபடமற்ற, அனுகூல, நல்ல.

216. ருணம் = கடன், கடமை (தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியவர்களுக்கு செய்ய வண்டிய கடமைகள்), கடமை உணர்ச்சி, கழித்தல் குறி, கோட்டை, தண்ணீர்.

217. ருது : = பருவ காலங்கள், யுக ஆரம்பம், உசிதமான சமயம், காந்தி, ஒளி, எண் ஆறைக் குறிப்பது.

218. ருஷப4 : = எருது, காளைமாடு, சங்கீதத்தில் ஒரு ஸ்வரத்தின் பெயர், பன்றியின் வால், முதலையின் வால்.

219. ஏகத3ந்த : = விநாயகர், பிள்ளையார்.

220. ஏகபத்னி = பதிவிரதை, கற்புடைய பெண்.
 
221. ஏகவேணி = ஒற்றைப் பின்னல் (கணவனைப் பிரிந்து இருக்கும் பெண்ணைக் குறிக்கும்).

222. ஏகாத3சி' = சந்திர மாதத்தின் இரு பக்ஷங்களிலும் பதினோராவது நாள், விஷ்ணுவுக்கு உகந்த விசேஷ நாள், விரத நாள்.

223. ஏலா = ஏலக்காய் செடி அல்லது விதை.

224. ஐகபத்யம் = ஒரே ஆளுகை, ஒரே எஜமானனாக இருத்தல், எல்லாவற்றுக்கும் மேலான சக்தி.

225. ஐகமத்யம் = அபிப்பிராய ஒற்றுமை, ஒரே விதமான எண்ணம்.

226. ஐக்யம் = ஒற்றுமை, இணக்கம், ஒன்றிய தன்மை, வேற்றுமை இல்லாமை.

227. ஐதிஹாஸிக = பரம்பரையாகப் பெற்ற, இதிஹாச சம்பந்தமான.

228. ஐச்'வர்யம் = பிரபுத்வம், வலிமை, மேன்மை, சக்தி, செல்வம், செழிப்பு, வல்லமை.

229. ஓஜஸ் = உடல் வலிமை, வலிமை, சக்தி, வீர்யம், ஆண்மை, காந்தி, ஒளி, தண்ணீர், இலக்கிய நடையின் விஸ்தாரம்.

230. ஓத3னம் = உணவு, சோறு, குருணையைப் பாலில் வேக வைத்த சாதம்.
 
231. ஓம் = புனித அக்ஷரம், பிரணவம், மங்கள வார்த்தை, பிரமம், வேத பாடங்களிலும் அர்ச்சனை ஆராதனைகளிலும் உபயோகப்படும் சொல்.

232. ஓஷதீ4 = மூலிகை, தாவரம், பச்சிலை, மருந்து.

233. ஓஷ்ட2 : = மேலுதடு அல்லது கீழுதடு.

234. ஔசித்யம் =தகுந்தது, பொருத்தமானது.

235. ஔத்ஸுக்யம் = கவலை, அமைதியின்மை, ஆசை, ஆர்வம், ஊக்கம், சிரத்தை.

236. ஔதா3ர்யம் = உதாரத் தன்மை, தாராள மனப்பான்மை, பெருந்தன்மை, உயர்ந்த தன்மை.

237. ஔபகார்யம் = இருப்பிடம், வசிக்கும் இடம், கூடாரம்.

238. ஔபநிஷத = உபநிஷதங்களில் போதிக்கப்பட்ட, வேதங்களில் விதிக்கப்பட்ட, ஆன்மீகமான.

239. ஔபாஸந: = க்ருஹஸ்தன் தன் வீட்டில் வணங்கும் புனித அக்னி.

240. ஔபம்யம் = சமநிலை, ஒப்பு, ஒன்று போன்ற தோற்றம்.
 
241. க: = பிரம்மா, விஷ்ணு, மன்மதன், அக்னி, வாயு, யமன், சூர்யன், ஆன்மா, அரசன், மயில், மனம், பக்ஷி, உடல், காலம், மேகம், சொல், ஓசை, செல்வம்.

242. கங்கணம் = வளை, காப்பு, கங்கணம், திருமணத்தின் போது கையில் கட்டப்படும் கயிறு.

243. கங்காளம் = எலும்புக்கூடு.

244. கச்சம் = கரை, ஓரம் விளிம்பு, ஆடையின் கீழ்ப்பகுதி, கரையோரம், எல்லைப்பிரதேசம், சேறு.

245. கஞ்சுக : = போர்க்கவசம், பாம்புச்சட்டை, ஆடை, துணி, அங்கி, ரவிக்கை, மேலங்கி.

246. கஞ்ஜம் = தாமரை மலர், அம்ருதம்.

247. கடி2ன : = கடினமான, குரூரமான, இரக்கம் இல்லாத, கொடுமையான, கூர்மையான, உக்ரமான, முரட்டுத்தனமான .

248. கடோ2ர = திடமான, கெட்டியான, கூர்மையான, கடினமான, தயையற்ற, கல்நெஞ்சு படைத்த.

249. கண்ட2ம் = தொண்டை, கழுத்து, குரல், அருகாமை, குடத்தின் கழுத்துப் பகுதி.

250. கத2னம் = கதை சொல்லுதல், வர்ணனை செய்தல்.
 
251. கதா2 = கதை, கற்பனைக்கதை, கட்டுக்கதை, பேச்சு, உரையாடல், சம்பாஷணை.

252. கத3ம்ப3கம் = கூட்டம், கதம்ப மரத்தின் புஷ்பம்.

253. கத3லீ = வாழை மரம், ஒரு வகை மான், யானை சுமந்து செல்லும் கொடி, கொடி.

254. கனகம் = பொன், தங்கம்.

255. கனிஷ்ட2 = எல்லாவற்றிலும் சிறிய, மிகக் குறைந்த, வயதில் இளைய.

256. கனிஷ்டி2கா = சுண்டு விரல், கண்ணின் கருவிழி.

257. கந்தா2 = கந்தை, கிழிந்த துணி, ஒட்டுப் போட்டது, துறவிகளின் துணிப்பை.

258. கந்த3ர = குகை, பள்ளத்தாக்கு, அங்குசம்.

259. கந்த3ர்ப : = மன்மதன், காமம்.

260.
கந்த4ர : = கழுத்து, நீருடன் கூடிய மேகம்,
 
261. கன்யா = திருமணம் ஆகாத பெண், மகள், பத்து வயது நிரம்பிய பெண், இன்னமும் வயதுக்கு வராத பெண், குமாரி, ஸ்த்ரீ, கன்யா ராசி, துர்க்கை.

262. கபாலம் = மண்டை ஓடு, உடைந்த பாத்திரத்தின் துண்டு, ஓட்டாஞ்சல்லி, கூட்டம், திருவோடு, கிண்ணம், பாத்திரம், மூடி.

263. கபாலின் = சிவனுக்கு ஒரு பெயர், கீழ் ஜாதி மனிதன்.

264. கபி: = குரங்கு, வால் இல்லாக் குரங்கு, யானை, வாசனை தூபத்தின் புகை, விளாமரம், சூரியன், சாம்பராணி,

265. கபித்தம் = விளாம்பழம்.

266. கபில: = ஒரு முனிவரின் பெயர், நாய், சாம்பிராணி, பழுப்பு நிறம், தூபம்.

267. கபீந்த்3ர: = ஹனுமான், சுக்ரீவன்.

268. கபோத: = புறா.

269. கபோல: = கன்னம்.

270. கமண்டு3லு : = துறவிகள் உபயோகிக்கும் மரத்தால் ஆன தண்ணீர் பாத்திரம்.
 
271. கமனீய = விரும்பத்தக்க, வசீகரமான, அழகான.

272. கமலம் = தாமரை, தண்ணீர், தாமிரம், மருந்து, ஸாரஸபக்ஷி.

273. கமலஜ : = பிரம்மா, ரோஹிணி நக்ஷத்திரம் .

274. கமலா = லக்ஷ்மி தேவி, சிறந்த பெண்மணி.

275. கமலினீ = தாமரைத் தண்டு, தாமரைக் கூட்டம், தாமரை ஓடை.

276. கர : = கை, கிரணம், துதிக்கை, சுங்கம், வரி, காணிக்கை, கப்பம், ஆலங்கட்டி, ஹஸ்த நக்ஷத்திரம், செய்பவன், ஒரு அளவு (24 கட்டைவிரல்களின் நீளம்).

277. கரணம் = செய்தல், அனுஷ்டித்தல், காரியம், மத சம்பந்தமான காரியம், வேலை, தொழில், இந்திரியம், உடல், காரணம், உத்தேசம், பத்திரம், தஸ்தாவேஜு.

278. கரால = பயங்கரமான, பெரிய, விஸ்தாரமான, உயரமான, அகலமான, வாய்பிளந்த, கரடுமுரடான, சமம் இல்லாத, கடுமையான.

279. கருண = மிருதுவான, தளிரான, இரக்கம் உள்ள, கருணை உண்டாக்கும், சோகம் ததும்பும்.

280. கர்ண : = காது, கங்காளத்தின் இரு புறங்களிலும் உள்ள வளையம், படகு அல்லது கப்பலின் சுக்கான், ஒரு வீரனின் பெயர், முக்கோணத்தில் நேர் கோணத்துக்கு எதிரே உள்ள பக்கம் (hypotenuse of a right angled triangle).
 
281. கர்தவ்ய = செய்யத் தக்க, செய்ய வேண்டிய.

282. கர்த்ரு = செய்பவன், காரணமானவன், விஷ்ணு, சிவன்.

283. கர்மன் = கார்யம், செயல், வேலை, தொழில், பதவி, கடமை, சடங்கு, பயன், பாக்கியம், விதி.

284. கர்ம காண்ட3ம் = வேதத்தின் ஒரு பகுதி.

285. கர்மேந்த்3ரியம் = வேலை செய்யும் உடல் உறுப்புக்கள் (கை, கால், வாய், மல ஜல த்வாரங்கள்)

286. கர்ஷணம் = கோடு கிழித்தல், இழுத்தல், உழுதல், வசீகரித்தல், பிடித்தல், துன்பம் தருதல்.

287. கலங்க : = களங்கம், கரும்புள்ளி, அழுக்கு, கறை, அவப்பெயர், கெடுதி, தோஷம், துரு.

288. கலச'ம் = குடம், நீர் வைக்கும் பாத்திரம்.

289. கலஹம் = சண்டை, போர், குயுக்தி, கலஹம், பொய்யான பேச்சு, ஹிம்சிதல், அடித்தல்.

290. கலா = ஒரு பொருளின் சிறு துண்டு, சிறு பாகம், வட்டி, காலத்தின் ஒரு அளவு, இசை நடனம் சிற்பம் போன்ற கலைகள், சாமர்த்தியம், மதிநுட்பம், வஞ்சனை, ஏமாற்றுதல்.
 
291. கலாப : = கட்டு, மூட்டை, குவியல், கூட்டம், மயில் தோகை, ஒட்டியாணம், ஆபரணம், யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு, அம்பறாத்துணி, அம்பு, சந்திரன், புத்திசாலி, ஒரு வகைக் கவிதை,

292. களேவரம் = களேப3ரம் = உடல்.

293. கல்ப : = நியமம், பிரேரணை, சங்கல்பம், பிரளயம், பிரம்மனின் ஒரு தினம், ஆறுவேதங்களில் ஒன்று.

294. கல்பதரு = கற்பக விருக்ஷம், விரும்பியதைக் கொடுக்கும் ஒரு மரம்.

295. கல்பனா = பொருந்துதல், செய்தல், அலங்கரித்தல், புதிதாகக் கண்டு பிடித்தல், கற்பனை, அனுமானம், பொய்யான கதை, யுக்தி.

296. கல்மஷம் = அழுக்கு, மாசு, பாவம்.

297. கல்யாணம் = அதிருஷ்டம், ஆனந்தம், செழுமை, நல்லகுணங்கள், திருவிழா, பொன், சுவர்க்கம்.

298. கல்யாணீ = பசு, புனிதமான பசு.

299. கவசம் = போர்க்கவசம், தாயத்து, ரக்ஷை, ரஹசிய அக்ஷரம்.

300. கவளம் = உள்ளங்கை கொள்ளும் அளவு, வாய் கொள்ளும் அளவு.
 
Last edited:
301. கவாடம் = கதவு.
302. கவி : = புத்திசாலி, முனிவன், சிந்தனையாளன், கவி வால்மீகி, சூரியன், பிரம்மா.

303. கஷாயம் = துவர்ப்பு ருசி அல்லது மணம், சிவப்பு நிறம், மருந்து, பூச்சு, கோந்து, அழுக்கு, மந்தம்.

304. கஷ்டம் = கெட்ட காரியம், கடினம், சங்கடம், வேதனை, துன்பம், பீடை, பாவம்.

305. காங்க்ஷா = விருப்பம், ஆசை, ருசி.

306. காஞ்சனம் = பொன், பளபளப்பு, காந்தி, சொத்து, தாமரைத் தண்டின் நார்.

307. காத3ம்பரீ = கடம்ப புஷ்பங்களில் இருந்து செய்யப்படும் மது பானம், யானையின் மத ஜலம், சரஸ்வதி தேவி, பெண் குயில், ஒரு காவியத்தின் நாயகியின் பெயர்.

308. கானனம் = காடு, தோப்பு, வீடு, பிரம்மாவின் வாய்.

309. காந்த: = காதலன், கணவன், நேசிக்கப்படுபவன், சந்திரன், வசந்தகாலம், கார்த்திகேயனின் ஒரு பெயர்.

310. காந்தா = காதலி, மனைவி, எஜமானி, அழகி, பூமி.
 
311. காந்தி = வசீகரம், அழகு, ஒளி, விருப்பம், அலங்காரம், துர்கையின் ஒரு பெயர்.

312. காமஜித் = சிவன், முருகன்.

313. காயம் = உடல், அடிமரம், வீணையின் உடல் பகுதி, கூட்டம், மூலதனம், வீடு, குறி, சின்னம்.

314. காரணம் = ஹேது, ஆதாரம், உத்தேசம், உபகரணம், தகப்பன், தத்துவம், இந்திரியம், உடல்.

315. காராக்3ருஹம் = சிறைச்சாலை.

316. கார்பண்யம் = ஏழ்மை, கஞ்சத்தனம், தரித்திரம், அற்பத்தனம், கருணை.

317. கார்யம் = வேலை, தொழில், சடங்கு, நோக்கம், வழக்கு, உத்தேசம், அபிப்ராயம்.

318. காலகண்ட2 : = மயில், ஊர்க்குருவி, சிவன்.

319. காலகூடம் = கொடிய விஷம்.

320. காலாக3ரு : = அகில், காரகில்.
 
321. காலிகா = கருப்பு, மசி, மை, வட்டி, மழை மேகம், தேள், துர்க்கை, பெண் காக்கை.

322. காவ்யம் = கவிதை, காப்பியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு, அறிவுடைமை.

323. காச்'மீரம் = குங்குமப்பூ.

324. கிஞ்சித் = கொஞ்சம், சிறிது.

325. கின்னர : = தேவர் துதி பாடுபவன், குதிரையின் தலையும் மனித உடலும் உடையவன், அங்கஹீனன்.

326. கிரணம் = ஒளிக்கதிர், தூசி, புழுதி.

327. கிராத : = வேடன், காட்டுமிராண்டி, குள்ளன், மலை ஜாதியினன்.

328. கிசோ'ர : = வாலிபன், 15 வயதுக்கு உட்பட்டவன், சூர்யன், குதிரைக்குட்டி, விலங்குகளின் குட்டி.

329. கீர்த்தனம் = சொல்லுதல், வர்ணனை, பாட்டு, தோத்திரம்.

330. கீர்த்தி : = புகழ், பிரசித்தி, ஆதரவு, ஒளி, பிரபை, ஒலி, குரல், சேறு, மண்.
 
331. குசேல = கிழிந்த அல்லது பழைய ஆடையை உடுத்திய .

332. குடில = கோணலான, வளைந்த, சுருட்டையான, கபடமான, நேர்மையற்ற.

333. குண்ட3ம் = குழி, பள்ளம், தொட்டி, குட்டை, கிணறு, கமண்டலம்.

334. குதூஹலம் = விருப்பம், ஆவல், ஆர்வம், மகிழ்ச்சி, சந்தோஷம்.

335. குந்தல : = தலைமயிர், மயிர்க்கொத்து,கிண்ணம், கலப்பை.

336. குந்த3 : = வெள்ளை மல்லிகை, விஷ்ணு, எண் ஒன்பது, குபேரனின் ஒரு நிதி.

337. குமார : = மகன், பையன், 5 வயதுக்கும் குறைவானவன், முருகன், அக்னி, கிளி.

338. குமுதம் = வெண் ஆம்பல், செந்தாமரை.

339. குரங்க3 : = கலைமான், சந்திரனின் களங்கம்.

340. குலாங்க3னா = மேலான நடத்தை உள்ளவள், உயர்குலத்தில் பிறந்தவள்.
 
341. குவலயம் = கரு நெய்தல், அல்லிப்பூ, பூமி.

342. குச'ல = சரியான, உகந்த, மங்களகரமான, சுபமான, தகுந்த, கெட்டிக்கார, புத்திசாலியான.

343. குஸுமம் = புஷ்பம், பழம்.

344. குஸுமாகர: = பூந்தோட்டம், பூங்கொத்து, வசந்த காலம்.

345. கூடம் = கபடம், வஞ்சனை, மாயம், குயுக்தி, நெற்றி எலும்பு, கொம்பு, நுனி, மூலை, கூண்டு, வலை.

346. கூசிகா = வர்ணம் பூசும் பிரஷ், பென்சில், சாவி, மொக்கு, ஊசி, புஷ்பம்.

347. க்ருதம் = செயல், தொண்டு, லாபம், பயன், முடிவு, நோக்கம், முதல் யுகம்.,

348. க்ருதக்ருத்ய = தான் செய்ய வேண்டியதை செய்து முடித்த, குறிக்கோளை அடைந்த, திருப்தி அடைந்த.

349. க்ருதாஞ்சலி = கை கூப்பி வணங்கி.

350. க்ருதாந்த : = விதி, தலை எழுத்து, முடிவு, கொள்கை, சித்தாந்தம்.
 
351. க்ருதி: = செய்தல், உண்டு பண்ணுதல், காரியம், செயல், படைப்பு, காவியம் இயற்றுதல்.

352. க்ருத்ரிம = செயற்கையான, கற்பனை செய்யப்பட, பொய்யான, ஸ்வீகாரம் செய்யப்பட.

352.
க்ருப = ஏழ்மையான, உதவியற்ற, விவேகமற்ற, கஞ்சத்தனமான, மட்டரகமான.

354. க்ருபா = கருணை, அருள், தாராள மனப்பான்மை.

355. க்ருமி: = புழு, கழுதை, சிலந்தி, அரக்குச் சாயம்.

356. க்ருஷி : = விவசாயம், உழுதல்.

357. க்ருஷ்ண: = கரு நிறம், கருப்பு மான், காக்கை, கிருஷ்ண பக்ஷம், வியாசர், கிருஷ்ணன், அர்ஜுனன்.

358. க்ருஷ்ண சர்ப்ப: = கருநாகம்.

359.கேதனம் = வீடு, இருப்பிடம், அழைப்பு, இடம், கொடி, அடையாளம்.

360. கேதா3ர: = நீர் பாய்ந்த வயல், மலை, சிவனின் ஒரு பெயர், ஒரு புண்ய க்ஷேத்ரம்.
 
361. கேந்த்3ரம் = மையப்புள்ளி, முக்கியமான இடம், ஜாதகத்தில் லக்னம்.

362. கேயூரம் = தோள் வளை.

363. கேலீவனம் = விளையாட்டுத் தோட்டம், உல்லாசத் தோட்டம்.

364. கேவலம் = பிரத்தியேகமான, மாத்திரம், முழுவதுமாக, எல்லா விதத்திலும்.

365. கேசா'கேசி' = தலை முடியைப் பிடித்து இழுத்துப் போடும் சண்டை.

366. கேசிநீ = துர்கையின் ஒரு பெயர், அழகிய கூந்தல் உடைய பெண்.

367. கேசரம் =பிடரி மயிர், பூவினுள் உள்ள மெல்லிய பகுதி, பழத்தில் உள்ள நார்,குங்குமப்பூ.

368. கைவல்யம் = முழுத்தன்மை, விடுபடல், மோக்ஷம், ஜீவன் பரமனுடன் ஒன்றுவது.

369. கைஷோரம் = இளமைப் பருவம், 15 வயதுக்குக் கீழே.

370.கோட்டார : = உயரமான மதில் சூழ்ந்த நகரம், கோட்டை, காம வெறி கொண்டவன்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top