• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3731. ஸூசக: = துளை போடுபவன், ஊசி, துளைபோடும் கருவி, செய்தி தெரிவிப்பவன், காக்கை, நாய்.

I think that the crow is added because it informs about the unexpected visit of (unwanted??) guests!

The dog barks and announces the presence of any new person in that area.

3732. ஸூசனம் = ஸூசனா = துளைதல், அறிவித்தல், ஜாடை.

This is the indirect way of conveying our ideas as suggested by the words
ஜாடை and அறிவித்தல்.
 
Last edited:
dear friends,

I am happy to find increased traffic in the
'Mayakki maruttum sorkkal" in page 3.

There are three more threads in page 3 exclusively for the lovers of WORDS - like yours faithfully:) !

There is a thread for "Foreign words in English", one more for
"The portmanteau words" and one for English "words which alike and sound alike". These are the words that confuse us most.

Please read only limited number of posts everyday and on a regular basis - if you want to assimilate them and remember them better!
:welcome:
 
3751. ஸேசனம் = பாய்ச்சுதல், தெளித்தல்.

3752. ஸேது: = வரப்பு, அணை, பாலம், எல்லை, பிரணவ மந்திரம்- ஓம்.

3753. ஸேனா = படை, போர்ப்படை.

3754. ஸேனானீ = ஸேனாபதி: = படைத்தலைவன், முருகன்.

3755. ஸேவக: = வேலைக்காரன், தையற்காரன், பை.

3756. ஸேவா = தொண்டு, பணிவிடை, பூஜை, வணக்கம், உபயோகம், பற்றுதல்.

3757. ஸோத3ர: = ஸோத3ர்ய: = உடன் பிறந்தவன்.

3758. ஸோபானம் = படிக்கட்டு.

3759. ஸோம: = சந்திரன், அமிர்தம், சிவன், தண்ணீர்,
சோமலதை என்னும் ஒரு கொடி.

3760. ஸோமன் = சந்திரன்.
 
3761. ஸௌகர்யம் = எளிதில் செய்யக் கூடியது, திறமை.

3762. ஸௌஜன்யம் = நல்ல தன்மை, தயை, பிரியம், நட்பு.

3763. ஸௌதா3மினி = சௌதா3மினீ = மின்னல்.

3764. ஸௌந்த3ர்யம் = அழகு.

3765. ஸௌப4க3ம் = அதிர்ஷ்டம், செல்வம் செழிப்பு.

3766. ஸௌபா4க்யம் = அழகு, மங்களம், சுபம்.

3767. ஸௌமனஸ = மனதிற்கு இனிமையான, புஷ்பங்களைச்
சார்ந்த.

3768. ஸௌம்ய = அழகான, இன்பமான, மிருதுவான, சுகம்
தரும், நிலவுடன் தொடர்புள்ள.

3769. ஸௌரப4ம் = குங்குமப்பூ, நல்ல மணம்.

3770. ஸௌரி: = சனீஸ்வரன், யமன்.
 
3771. ஸௌலப்4யம் = எளிமை.

3772. ஸௌஷ்டவம் = அழகு, சிறப்பு, திறமை.

3773. ஸௌஹார்த3ம் = ஸௌஹார்த்3யம் = ஸௌஹ்ருத3ம் =
நட்பு, அன்பு.

3774. ஸௌஹித்யம் = அதிக திருப்தி, தெவிட்டுதல், மகிழ்ச்சி, முழுமை, அன்பு, சினேஹம்.

3775. ஸம்யம : = புலன்களை அடக்குதல், மனத்தைக் கட்டுப்படுத்துதல், தயாள குணம், முயற்சி.

3776. ஸம்யமின் = துறவி, முனிவன், புலன்களை அடக்கியவன்.

3777. ஸம்யுக்த = ஸம்யுத = கலந்த, சேர்ந்த, கூடவுள்ள,
பிணைக்கப்பட்ட.

3778. ஸம்யுக3: = சேர்க்கை, கலத்தல், சண்டை, போர்.

3779. ஸம்யோக3: = சேர்க்கை, சந்தித்தல், ஒன்று கூடுதல்,
கூட்டுதல், கோவை, வரிசை.

3780. ஸம்யோஜனம் = ஒன்றுகூடுதல், புணர்ச்சி, ஓரிடத்தில் சேருதல்.


 
3781. ஸம்ரக்ஷ: = ஸம்ரக்ஷணம் = மேற்பார்வை, பாதுகாப்பு.

3782. ஸம்ரம்ப4: = ஆரம்பம், தீவிரம், ஊக்கம், ஆசை, கோபம், வெறுப்பு, பகைமை, கர்வம், பரபரப்பு, குழப்பம்.

3783. ஸம்லக்3ன = இணைந்த, ஒன்று சேர்ந்த, ஒட்டிய.

3784. ஸம்லாப4: = பேச்சு வார்த்தை, உரையாடல், ரஹசிய சம்பாஷணை.

3785. ஸம்வத்ஸர: = வருடம், ஆண்டு.

3786. ஸம்வர்த்த: = திருப்புதல், பிரளயம், அழிவு, மேகம், வருடம், கூட்டம், சேர்க்கை.

3787. ஸம்வாத3: = சொற்போர், சர்ச்சை, செய்தி, ஒப்பு, சம்பாஷணை.,

3788. ஸம்வித்3 = அறிவு, உணர்வு, புத்தி, வாக்களிப்பு, ஒப்புதல், வழக்கம், போர், சண்டை, குறி, தியானம், நட்பு.

3789. ஸம்விதா4னம் = ஒழுங்கு, அமைப்பு, பழக்கம், முறை, செயல், காரியம்.

3790. ஸம்வ்ருத = மூடப்பட்ட, மறைக்கப்பட்ட, ரஹசியமான, அடைக்கப்பட்ட, சுருக்கப்பட்ட, முடிக்கப்பட்ட.
 
3791. ஸம்வேச': = ஆசனம், கனவு, தூக்கம், இளைப்பாறுதல், படுத்திருத்தல், புணர்ச்சி.

3792. ஸம்ச'ய: = சந்தேகம், நிச்சயமற்ற தன்மை, அவநம்பிக்கை, அபாயம்.

3793. ஸம்ச்'ரய: = இருப்பிடம், புகலிடம், இளைப்பாறும் இடம், உதவியளிக்கும் இடம்.

3794. ஸம்ஸர்க3: = சேருதல், கூடுதல், தொடர்பு, அருகாமை, தொடுதல், பரிச்சயம், புணர்ச்சி.

3795. ஸம்ஸார: = உலகம், போக்கு, வழி, பல பிறவிகள், உலகைப் பற்றிய பிரமை, உலகப் போக்கு.

3796. ஸம்சித்3தி4 : = காரிய சித்தி, மோக்ஷம், இயற்கை.

3797. ஸம்ஸ்ருதி: = வழி, போக்கு, நீரோட்டம், உலகவாழ்க்கை.

3798. ஸம்ஸ்ருஷ்டி: = தொடர்பு, சேர்க்கை, கூட்டு, சேர்த்தல்.

3799. ஸம்ஸ்கார: = செய்து முடித்தல், சுத்தப்படுத்துதல், கல்வி
அளித்தல், பயிற்சி அளித்தல், சமைத்தல், மத சம்பந்தமான சடங்குகள், புனித காரியம், ஈமச் சடங்கு.

3800. ஸம்ஸ்க்ருதம் = சமஸ்கிருதம் என்னும் மொழி.
 
3801. ஸம்ஸ்தா2 = சபை, குழு, வேலை, தொழில், இயற்கை, தோற்றம், நிலை, முடிவு, நிறுத்தம், இடைவேளை, பிரளயம்.

3802. ஸம்ஸ்தா2னம் = நிர்மாணித்தல், பொது இடம், அருகாமை, குவியல், கூட்டம், உருவம், தூரம், நாற்சந்தி, பாகம், அம்சம், ராஜ்ஜியம்.

3803. ஸம்ஸ்தாபனம் = ஸ்தாபித்தல், சேர்த்தல், திடமாக்குதல், தீர்மானித்தல், பொருத்துதல்.

3804. ஸம்ஸ்தி2த = குவிக்கப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட, முடிவு பெற்ற, சேர்க்கப்பட்ட.

3805. ஸம்ஸ்தி2தி: = இருப்பிடம், குவியல், கூட்டம், அருகாமை, நிலைமை.

3806. ஸம்ஹ்ருதி = உடல், வலிமை, சேர்க்கை, கூட்டம்.

3807. ஸம்ஸ்ம்ருதி: = ஞாபகம், நினைவு.

3808. ஸம்ஹார: = அழிவு, பிரளயம், அடித்தல், முடிவு, தடை.

3809. ஸம்ஹிதா = வேதமந்திரத்தின் பகுதி, கலப்பு, சேர்க்கை.

3810. ஸ்கந்த3: = முருகன், சிவன், அரசன், திறமை உள்ளவன், பாதரசம், தாவுதல்.
 
Last edited:
3811. ஸ்கந்த4: = தோல், உடல், அடிமரம், கிளை, பகுதி, புத்தகத்தின் அத்யாயம்.

3812. ஸ்கலனம் = கீழே விழுதல், தடுமாறுதல், நழுவுதல், வழி
தப்புதல், பிழை, திக்கியபேச்சு, தவறான உச்சரிப்பு.

3813. ஸ்கலித = கீழே விழுந்த, தடுமாறிய, திடமற்ற, தப்புசெய்த, பரபரப்பு அடைந்த.

3814. ஸ்தன: = பெண்களின் ஸ்தனம்.

3815. ஸ்தப3க: = கொத்து, அத்யாயம்.

3816. ஸ்தப்3த4 = அசைவற்ற, உணர்ச்சியற்ற, திடமான.

3817. ஸ்தம்ப4: = தூண், கம்பம், உறுதி, முட்டு, தடை,
அடக்கம், அறியாமை, உணர்ச்சி இன்மை.

3818. ஸ்தம்ப4னம் = நிறுத்துதல், தடுத்தல், அமைதி / உறுதி ஆக்குதல்,

3819. ஸ்தவ: = ஸ்தாவ: = ஸ்தவனம் = ஸ்தோத்ரம் = ஸ்துதி: = துதி, துதித்தல், புகழுதல், புகழும் பாடல்.

3820. ஸ்தேன: = திருடன்.
 
மிகத் தெளிவான பொருள் பெயர்ப்பு.
இதைப் புத்தகமாக வெளியிட யாராவது ஒரு புண்ணியவான் கைங்கர்யம் செய்தால் அவருக்குப் புண்ணியம் கூடும்.
கிருஷ்ணமூர்த்தி
 
We will pray for a Publisher! :pray:

Till then use it as an online dictionary. :ranger:

Alternately you can get the printouts made in a browsing centre.

It would become a very costly book with two hundred more words to

appear, the book will run to several pages! :bump2:
 
Last edited:

3821. ஸ்தேயம் = ஸ்தைன்யம் = திருட்டு, கொள்ளை.

3822. ஸ்தோமம் = தலை, செல்வம், தான்யம்.

3823. ஸ்தோம: = துதி, எண்ணிக்கை, யாகம், சேர்க்கை, கூட்டம்.

3824. ஸ்திரீ = பெண், மனைவி.

3825. ஸ்தா2கி3த = ரகசியமாக வைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட.

3826. ஸ்த2பதி: = சில்பி, தேர்ப்பாகன், தச்சன், தலைவன், அரசன், குபேரன்.

3827. ஸ்த2லம் = இடம்,பூமி, நிலம், விஷயம், பகுதி, பாகம்.

3828. ஸ்தா2 = நிற்க, இருக்க, தங்க, வசிக்க, உயிர் வாழ.

3829. ஸ்தா2னம் = நிற்பது, இருப்பது, தங்குவது, வீடு, இடம், தொடர்பு, பதவி.

3830. ஸ்தா2னே = சரியான இடத்தில், ஒன்றிற்கு பதிலாக, ஒன்றிற்காக, இம்மாதிரியாக.
 
Please try this custom search engine (I customized) from Sow Visalakshi Ramani's blogs and will search for in http://www.tamilbrahmins.com/literature/

It is a temporary solution


http://www.google.com/cse/home?cx=004052035183991969720:0uilf_ytjf8

and type in the search box

கடவுள்

will get 1097. தை3வதம் = கடவுள், தெய்வம், விக்ரஹம் ,

1521. பரமேச்'வர: = பரம்பொருள், இறைவன், கடவுள், விஷ்ணு, சிவன்.
1513. பரதே3வதா = உயர்ந்த கடவுள், தேவி.

and you get the result within the first page - look for
'அ' முதல் 'க்ஷ' வரை page
 
Last edited:
dear Professor M. S. K. Moorthy,

You are helping me in numerous subtle ways .
Thank you sir! :pray2:

Previously you had given the link to access the photos posted in my profile page - without signing in!

Now this short cut to access any word in Tamil/ Sanskrit.

Thank you sir for your continued and silent support from the
background. God bless you and your dear ones!

with warm regards and season's greetings,
your sincerely,
Visalakshi Ramani.
 
Last edited:
3831. ஸ்தா2பனம் = ஸ்தாபித்தல், வைத்தல், கெட்டிப்படுதல்.

3832. ஸ்தா2லீ = பானை, சிறு பாத்திரம்.

3833. ஸ்தா2வர: = அசைவற்ற, உணர்வற்ற, மலை.

3834. ஸ்தி2த = நின்ற, இருந்த, தங்கிய, ஸ்திரமான.

3835. ஸ்தி2தி: = வாழ்வு, இடம், நிலை, நிலைமை, ஓய்வு, எல்லை, காப்பாற்றி வைத்தல், ஸ்திரத்தன்மை.

3836. ஸ்தி2ர: = உறுதியான, நிரந்தரமான, நிலையான, நிச்சயமான, கடினமான, அசைவற்ற, அமைதியான.

3837. ஸ்தூ2ல = பெரிய, பருத்த, கொழுத்த, எளிமையான.

3838. ஸ்தை2ர்யம் = பொறுமை, திடத்தன்மை, ஸ்திரத் தன்மை, அசைவற்ற தன்மை.

3839. ஸ்நானம் = நீராடுதல், கழுவுதல்.

3840. ஸ்நாயு: = ஸ்நாவ: = நரம்பு.
 
3841. ஸ்நிக்3த4 = பசையுள்ள, எண்ணை பசையுள்ள, நட்புள்ள, சிநேகமான, மிருதுவான, பிரியமான, பளபளப்பான, அடர்த்தியான, தயையுடன் கூடிய.

3842. ஸ்நிக்3த4: = நண்பன், தோழன்.

3843. ஸ்னுஷா = மகனின் மனைவி, மருமகள்.

3844. ஸ்னேஹ: = பாசம், நட்பு, அன்பு, எண்ணெய், பசை, கொழுப்பு.

3845. ஸ்னேஹித: = நண்பன்.

3846. ஸ்பந்த3: = ஸ்பந்த3னம் = துடிப்பு, நடுக்கம்,
நாடித்துடிப்பு.

3847. ஸ்பர்தா4 = போட்டி, பொறாமை, பந்தயம்.

3848. ஸ்பர்ச': = தொடுதல், தொடர்பு, காற்று, தானம்,
நன்கொடை, ஆகாயம்.

3849. ஸ்பஷ்ட = தெளிவான, விளக்கமாக, உள்ளபடி.

3850. ஸ்ப்ருஹா = விருப்பம், ஆசை.
 
3851. ஸ்படிக: = பளிங்கு, படிகம்.

3852. ஸ்பீத = பெருத்த, பருத்த, கொழுத்த, வீங்கின, அதிகமான.

3853. ஸ்புட = உடைந்த, திறந்த, மலர்ந்த, உண்மையான, வெண்மையான, புகழ் வாய்ந்த, தெளிவாக்கப்பட்ட.

3854. ஸ்பூர்தி: = துடிப்பு, மலர்ச்சி, தாவுதல், பாய்ச்சல்.

3855. ஸ்போட: = வெடிப்பு, கட்டி, கொப்புளம், ஒரு சொல்லைக் கேட்டதும் தோன்றும் அர்த்தம்.

3856. ஸ்மய: = ஆச்சரியம், வியப்பு, கர்வம்.

3857. ஸ்மர: = நினைவு, ஞாபகம், காதல், மன்மதன்.

3858. ஸ்மரணம் = ஞாபகம், நினைவு, சிந்தித்தல்.

3859. ஸ்மித = புன்சிரிப்புடன் கூடிய, மலர்ந்த.

3860. ஸ்ம்ருதி: = நினவு, சிந்தித்தல், தர்ம சாஸ்திரம்.
 
3861. ஸ்யந்த3ன: = தேர், ரதம், காற்று, போரில் உபயோகிக்கும் தேர்.

3862. ஸ்யாத் = ஒருவேளை, ஒருக்கால், இப்படியும் இருக்கலாம்

3863. ஸ்யால: = மைத்துனன்.

3864. ஸ்ரவ: = ஸ்ராவ: = பெருக்கு, ஓடுதல், கசிதல்.

3865. ஸ்ரோதஸ் = தாரை,
பிரவாஹம், ஓடை, ஆறு, பெருக்கு,
தண்ணீர், அலை, புலன்கள், துதிக்கை.


3866. ஸ்வ = தன்னுடைய, சொந்தமான.

3867. ஸ்வ: = ஸ்வம் = செல்வம், சொத்து.

3868. ஸ்வகீய = ஸ்வீய =
ஸ்வக = ஸ்வகீய = தன்னுடைய,
சொந்தமான.

3869. ஸ்வச்ச2 = மிக சுத்தமான, பிரகாசமான, அழகான, வெண்மையான.

3870. ஸ்வதந்த்ர = தன்னிச்சையான, பிறருக்குக் கட்டுப்படாத.
 
3871. ஸ்வயம் = தானாகவே.

3872. ஸ்வன: = ஸ்வனி: = சப்தம், இரைச்சல்.

3873. ஸ்வப்ன: = தூங்குதல், கனவு.

3874. ஸ்வபா4வ: = இயற்கை குணம், இயற்கை நிலை.

3875. ஸ்வர: = சப்தம், குரல், இசையின் ஸ்வரம்.

3876. ஸ்வரூபம் = இயற்கை உருவம், நிலைமை, முறை.

3877. ஸ்வர்க3: = தேவலோகம், சுவர்க்கம்.

3878. ஸ்வர்ணம் = தங்கம்.

3879. ஸ்வல்ப = சிறிய, குறைவான, கொஞ்சமான.

3880. ஸ்வசு'ர: = மாமனார்.
 
3881. ஸ்வஸா = ஸ்வஸ்ரூ = தங்கை, தமக்கை.

3882. ஸ்வஸ்தி = மங்களம், க்ஷேமம், ஜெயம்.

3883. ஸ்வஸ்திக: = மங்கலச் சின்னம், நாற்சந்தி.

3884. ஸ்வாக3தம் = நல்வரவு.

3885. ஸ்வாதந்த்ரயம் = தன்னிச்சை, சுதந்திரம்.

3886. ஸ்வாதி: = ஸ்வாதீ = கத்தி, பட்டாக்கத்தி, சுவாதி நட்சத்திரம்.

3887. ஸ்வாத3: = ஸ்வாத3னம் = சுவை, ருசி, குடித்தல்.

3888. ஸ்வாது3 = சுவையுள்ள, இனிப்பான.

3889. ஸ்வாப: = தூக்கம், கனவு.

3890. ஸ்வாமின: = உடையவன், சொந்தக்காரன், அரசன், பிரபு, கணவன், குரு, கற்றறிந்தவன், முருகன், சிவன்,விஷ்ணு
 
3891. ஸ்வாரஸ்யம் = சுவை, அழகு, தகுதி.

3892. ஸ்வராஜ்யம் = தன்னிச்சையான ஒளியுடன் விளங்கும்.

3893. ஸ்வாஹா = அக்னியின் மனைவி, அக்னியில் பொருட்களை அர்ப்பணிக்கும்போது கூறும் மந்திரம்.

3894. ஸ்வீகரணம் = ஸ்வீகார: = ஸ்வீக்ருதி = ஏற்றுக்கொள்ளுதல், எடுத்துக்கொள்ளுதல்.

3895. ஸ்வேத3: = வியர்வை.

3896. ஹட்ட: = சந்தை, கடை வீதி.

3897. ஹட2: = பலாத்காரம், பிடிவாதம், கடுமை,
ஒரு யோகாப்பியாசம்.

3898. ஹத = அபஹரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட, அடிக்கப்பட்ட, சேதம் செய்யப்பட்ட.

3899. ஹதி: = ஹத்யா = கொலை, அடித்தல், அழிவு, காயப்படுத்துதல்.

3900. ஹன் = கொல்ல, அடிக்க, காயப்படுத்த, தடுக்க, தோற்கடிக்க, இடையூறு செய்ய, சேதம் விளைவிக்க.
 
3901. ஹனு: = ஹனூ = முகவாய்கட்டை, தாடை.

3902. ஹந்த = உணர்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சொல்
(மகிழ்ச்சி, தயை, துக்கம், ஆச்சரியம் போன்றவைகளை.)

3903. ஹய: = குதிரை.

3904. ஹர: = சிவன், அக்னி, ஒரு பின்ன
த்தின் கீழ்ப்பகுதி,

3905. ஹரணம் = பிடித்தல், நீக்குதல், எடுத்துச் செலுத்தல், கை, புயம், தங்கம், வீர்யம்.

3906. ஹரி: = விஷ்ணு, இந்திரன், பிரமன், அக்னி, சிங்கம், குரங்கு, குதிரை, பாம்பு, தவளை, கிளி, மயில்.

3907. ஹரிண: = மான், வெண்மை நிறம், சிவன், விஷ்ணு, சூரியன், அன்னப்பக்ஷி.

3908. ஹரிணீ = பெண் மான், ஜவந்தி, தங்க விக்ரஹம்.

3909. ஹரித் = ஹரித = பச்சை நிறமான.

3910. ஹரித்3ரா = மஞ்சள் கிழங்கு.
 
3911. ஹர்ம்யம் = அரண்மனை, அடுப்பு, மாளிகை.

3912. ஹர்ஷ: = மகிழ்ச்சி, சந்தோஷம், மயிர்க்கூச்சல்.

3913. ஹல: = ஹலம் = கலப்பை.

3914. ஹலா = தோழி, பூமி, சாராயம், தண்ணீர்.

3915. ஹவ: = ஹவனம் = ஹோமம், பிரார்த்தனை, கூப்பிடுதல்,
அக்னியில் அர்ப்பணித்தல்.

3916. ஹவிஷ்யம் = ஹவிஸ் = ஆஹூதி செய்யத் தக்க பொருள், நெய், நெய்யுடன் சேர்ந்த அன்னம்.

3917. ஹஸ் = புன்சிரிக்க, சிரிக்க, மலர, புஷ்பிக்க, பிரகாசிக்க, பரிகசிக்க.

3918. ஹஸ்த: = கை, யானை துதிக்கை, ஹஸ்த நட்சத்திரம், கையொப்பம், கூட்டம், உதவி, முழம்.

3919. ஹஸ்தின் = யானை.

3920. ஹஸ்தினி = பெண்யானை.
 
3921. ஹா = சோகம், துக்கம், சினம், ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் சொல்.

3922. ஹானி: = கேடு, நஷ்டம், சேதம், தியாகம், குறைவு, பயன் அற்றது, இல்லாமை.

3923. ஹார: = முத்து மலை, மாலை, எடுத்துச் செல்ல, அபகரித்தல், சுமந்து செல்லுதல்.

3924. ஹாரக: = திருடன், தீயவன்.

3925. ஹார்த3ம் = பாசம், நேசம், பிரியம், நட்பு, அர்த்தம், போறும், அபிப்பிராயம்.

3926. ஹார்ய = அடையத் தக்க, வசீகரிக்கத் தக்க, அபஹரிக்கத் தக்க.

3927. ஹால: = கலப்பி, பலராமனின் ஒரு பெயர்.

3928. ஹாலாஹலம்= பாற்கடலில் தோன்றிய கொடிய விஷம்.

3929. ஹாஸ: = சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோஷம், பரிகாசம், ஒரு காவியச் சுவை.

3930. ஹாஸ்யம் = சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோஷம், பரிகாசம்.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top