• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்மையார் அமுத மொழி

Status
Not open for further replies.
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ். 8

வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானை சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

He is Vediyan ; He is the import of the Vedas ; He is the One
Who authored the Vedas ; betelgeuse is His asterism ;
To behold His feet, Vishnu as a puissant boar burrowed
Into the earth in vain and eventually owned his inability.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy thevaaram.org
 
கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே. 9

இழிந்த துன்பமாகிய பெரிய கடலிலே தள்ளப்பட்டு, அதன் உள்ளே அழுந்தாமல் வேறிருந்து நுகர்கின்ற இன்பம் வேண்டும் என்று விரும்புகின்றவர்களே, முப்புரம் எரித்த எண்தோளன் பாதம் பணிந்தால் அத்தகைய இன்பம் கிடைக்கும்.

O ye who seek to avoid the base and miserable flood
(Of birth and death) and gain entry and abiding life
In the world of eternal bliss, do what I bid you.
He, the Hero, annihilated the triple citadels of His-foes ;
He is eight-shouldered. Bow, with delay none, at His feet
Which are like pure and fresh gold ; be poised
In His worship for days without end.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செற்பொற் கழல். 10

சிறந்த ஐந்து அறநெறிகளைப் பேணி, பணிவுடன் சிறந்த மெய்ப் பொருளாகிய பெருமானை உள்ளத்தால் உணர்ந்தோர், மேலான உலக நாயகனும் ஆதிரையானும் நஞ்சுண்டிருண்ட கண்டம் உடையவனுமான பெருமானின் கழல் காண்பர்.
He is the Lord of the supernal world ; His asterism is betelgeuse ;
His throat is dark with the aalaalam that he ate ; they that chant
His mystic pentad– the chief of matras-, adore Him and come by
The true import, can (alone) behold His feet of ruddy gold.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram;org
 
கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே. 11

தனக்குவமையில்லாதவனும், நெருப்பினிடத்துள்ள ஒளிபோலச் சிவந்த மேனியை உடையவனும் ஆன பிரானை மலர் தூவி வணங்குவோர் அருகில் வினை நில்லாது. அவர் நிழலைக்கண்டாலே வினை ஓடிவிடும்.

Even when the mere shadows of those that had beheld Him
Of the roseate feet - the Wearer of the heroic anklet-,
Are eyed, Karma will cease to be. While so, will
Our hoary karma stick to us at all
If we, with our hands scatter choicest flowers
In the worship of our peerless Lord whose body
Is ruddy and radiant like fire ?
Translation: S. A. Sankaranarayanan. Courtesy thevaaram.org
 
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை. 12

பழமையான வினை வந்து நம்மைச் சூழ்வதற்கு முன் தாமதியாமல் விரைவாக யமனை உதைத்த உமையொரு பாகனை நினைப்பாயாக நெஞ்சே.

Before the hoary Karma ‘gins to engird you, in all celerity
And without delay, adore and think on Him-the One
Concorporate with Uma of the soft mien-, the One that smote
Yama and the One that is adorned with the Holy Ash.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே. 13

நெஞ்சமே, மனையாளையும் மக்கள் தம்மையும், இங்கு ஒர் தஞ்சம் என்று தேறி, அண்ட வாணன் அடித்தலம் நினையாது ஒழிந்தாயோ. கங்கையாற்றால் நனைக்கப்படாத மிகுந்த சடை உடையவனும், மிக எரிகின்ற தீ போன்றவனும் அண்டம் எங்கும் நிறைந்து வாழ்பவனுமான அமரர் பிரானின் அடித்தலத்தைப் புகலிடமாகக் கொள்க.

O heart, reflect on the futility of wife and siblings ! He is
Our Father whose crown of matted hair never gets wet though
A river courses through it ; He is the inextinguishable fire ;
He is the Lord of the celestials ; He is Andavaanan ; His feet are
And unfailing refuge : think of Him thus, even thus, and adore Him.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ. 14

தலையில் கங்கை தாங்கி, கையில் அனல் ஏந்தி, வெண்ணீறு பூசி, நெய் அபிடேகம் விரும்பும் பரமா, நீ முன்பு ராவணனின் தலைகளையும் தோள்களையும் முரித்தது எதனால்?

You sport a river in Your head ; You dance in the undying fire ;
You adorn Yourself with the fire’s ash ; You bathe in ghee ;
Such are You : how then is it that You, of yore crushed
With Your foot the head and the twenty shoulders of the Asura ?
Translation: S. A. Sankaranarayanan. Courtesy –thevaaram.org
 
நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா
டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே. 15

பேய்கள் பாடப் பெருங்காட்டில் நடனமாடும் புண்ணியனே, முப்புரம் எரிக்க நீ வில் எடுத்தது ஏன் ?

O Righteous Lord that wears the heroic anklet !
The dry and strong-mouthed ghouls standing sing Your praise ;
Bhootas stand and adore You ; the great crematory is
You theatre where You dance and dance. How is it
That You sped an arrow from Your bow and caused
The triple citadels of the Asuras to get gutted with fire ?
Translation: S. A. Sankaranarayanan. Courtesy-thevaaram.org
 
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு. 16

பொய்ந்நெறிகளில் சேராமல் விலகியதுடன், நான் செய்த செயல்களும் புண்ணியங்களாகவே ஆயின. அஃது எவ்வாற்றால் எனின் எண்ணப்பட்ட ஐம்பொறிகளும் யானையின் தோலைப் போர்த்தியவனும் மும்மூர்த்தியும் ஆனவனும் ஆகிய அம்மானுக்கு ஆட்பட்ட அன்பிற்கு இசைந்தவாயின.

Thanks to our five senses which by true analysis kept away
From false faiths, performing righteous acts only, our love
Of servitorship for the Lord who peeled the hide
Of the pachydermatous tusker and mantled
His triple from therewith, is on the ascendant.
Translation: S. A. Sankaranarayanan.courtesy – thevaaram.org
 
அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட்
டா ததுவேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந் தேறுவதே. 17

ஓர் அரவு முடி மேல் உள்ளது. அது சீறுவதால் அருகில் நெருங்க முடிவதில்லை. அத்துடன் உன் மார்பில் எலும்பு மாலையும் உன் இடபமும் வந்தாரை அச்சுறுத்துகின்றன. இப்படி இருக்க நும்மைப் பிறர் அன்பால் அடைவது எவ்வாறு? அதனால், அடையு மாற்றை நீரே அருளுதல் வேண்டும்.

How are we to attain Him in love ?
The snake that dances on His person
Will suffer none to come near it ;
Moreover, all that we behold before us
Are only a row of skulls and white bones.
Besides He but rides, in delight, a bull.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. 18

எம்பெருமானும், அவிர் சடையாரும் ஆகிய நஞ்சுண்டார் தமக்கு ஏறுவதற்கு உரிய வாகனமாக, ஏறு அல்லால் வேறு ஒன்றும் இல்லையே!

He has a crest of bright matted hair where courses a river ;
His mount is but the bull ; when of yore, the celestials gathered
And churned the great ocean He ate the venom spat out
By a hooded snake different from the one worn by Him ; He is our Lord.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப
தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட
னேகொண்ட உத்தமரே. 19

இவர் ஒற்றைக் காளையையே பயன்படுத்துகிறார். உமாதேவி ஊர்வதற்கு மற்றொரு காளை இன்றியமையாது வேண்டும். அஃது இல்லாமையால் அவளையும் தமது ஒரு காளையின் மேலே உடன் ஏற்றிக் கொண்டு வருகின்றார். இத்தகைய வறுமை உடையவர், அவருக்கென்றே நாம் என்றும் பணிசெய்திருப்பினும் எமக்கு என்று ஒன்று இரந்தால் அதனை ஈய வல்லவராவரோ என ஐயுறுகின்றோம்.

He is peerless ; He ever rides a young white bull ;
He seeks not a similar mount for His
Consort Uma whose lips are ruddy like kovvai
But rides His bull with Her ; He is the noble One.
I render Him service sweet for ever.
If one day I importune Him to bless me,
Will He not bless me ?
Translation: S. A. Sankaranarayanan. courtesy - thevaaram.org
 
This is the last stanza of the book, 'Thiruvirattai manimalai/. From next week, 'Mootha Thiruppathigam' of Ammaiyar will be posted.

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து. 20

கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், இறந்துவிட்டால் எல்லாரோடும் ஒப்பக் காய்ந்த விறகை அடுக்கி, உறவினர்கள் எரித்து விடுவார்கள். இவ்வளவே இவ்வுலக வாழ்வு. ஆகையால் இந்த வாழ்விலே ஆழ்தலை யுடைய நெஞ்சே, உன்னையும் அவ்வாறு செய்தற்கு முன், சிவனது புகழை அறிந்தோர் சொல்லக் கேள். கேட்டால், நிலையான வாழ்வைப் பெறுவாய்.

If you die, your noble kin will pile up dead wood and burn you ;
O heart like unto the sea, while yet alive live loftily ;
Listen with zest to the glory of Him – the Bather in ghee
Who ate the venom of the vast sea -, and stand redeemed.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
Mootha thiru Pathigam-1

Pathigam is a decad of ten stanzas plus another to describe the effects of reading that particular pathigam. Karaikal Ammaiyar was the first to introduce the pathigam style of poetry. Later, Appar, Gnansambandar and Sundarar followed her technique. Hence, Ammaiyar’s two pathigams are called ‘Mootha thiru pathigam’ (Earliest). In these, she describes the dance of Siva. Significantly, this is the first poetry in Tamil or Sanskrit to mention the dancing posture of God. The ambience described is awe -inspiring and at times disgusting. But this is one of the ‘rasas’ accepted by Tamil and Sanskrit literature. (Beebhatsa Rasa)
மூத்த திருப்பதிகம்- 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே. 1-1

வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் உடைய பேய் பசியால் உடல் மெலிந்து அலறும் காட்டில், தன் தாழ் சடை எட்டுத் திசைகளிலும் வீசும்படி, திருமேனி குளிர்ந்ததோ என்னும்படி, சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

The breasts have dried up ; the nerves are bulging ;
Sunk are the eyes and hollow is the maw ;
Ruddy are the gums in the two rows of teeth ;
Two white teeth are jutting out ; long are
The raised ankles : thus, even thus is she – a ghost ! ;
In the withered wood she abides screaming. ;
In that wilderness of a forest, with His flowing
Matted hair wafting in all the eight directions;
He – our Father -, dances carrying in His
Cool body, the fire. Behold Tiruaalangkaadu ! ;
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
The forest is depicted as such a cruel place and a devil is also dwelling there. Amidst of such cruel surrounding, shiva is dancing with his hairlocks spreaded over the eight directions. The forest has nothing green with it, so only it is depicted as the devil is so much hungry. Even in the forest, shiva is dancing with fire in his hand. But his body is so cool (though not mentioned, it is because of his two wives- ganga in the head and parvathi in his left who keeps him cool). I think of

"Kodaiyile ilaipatri kollum vagai kidaitha kulir tharuve tharu nizhale nizhal kaninda kanie"

In this song, nowhere Ammaiyar relates the bliss of shiva. But, we can relate very well the abode of swami. He has the grace to shower his blessings even to the devils and for their sake, he is troubling himself in that worst atmosphere and also entertaining them with his dance.

What an exploration Vikrama ji??? we cant even think the word power of Karaikal ammaiyar... Am just thinking of the song and slowly digesting it. Its really beautiful. Because, it is very easy to narrate a milkocean, a beach, a river, a greenery, a scenary, etc... But is really hard to narrate a graveyard and also create a passion to look that.

Sorry for my interruption and Pranams... Post more and enlighten us Vikrama ji. they are marvellous. But, I had a great sorrow. You should start the thread with the story of akraikal ammaiyar, which will be more apt. The story of her itself is unimaginable. Her life filled with passion, total surrender, and leaving her youth (like avvaiyar) is a lesson for us.

Pranams
 
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு, வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே 1-2

கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணினின்றும் வேறு தோன்ற எழுதி கோபச் சிரிப்பு சிரித்து, மிரண்டு குறுக்கே பார்த்து துள்ளிக் குதித்து, பிணஞ்சுடு தீச் சுட்டிட, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கும் பேய்க் காட்டில் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.
A she-ghoul stretches her leg into a cleft of cactus ;
It draws from the funeral pyre a burning brand,
Grinds it into khol and paints her eye-lids therewith ;
It then cahinnates and (anon) gets alrmed,
Beholding the approaching beasts, it jumps
And gets burnt by the fire of the funeral pyre ;
Totally resenting this, it puts out the fire by heaping
Dust thereon. It is in such a crematory
Our Father dances. Behold Tiruaalangkaadu !

Translation: S. A. Sankaranarayanan, courtesy – thevaaram.org
 
I had a great sorrow. You should start the thread with the story of akraikal ammaiyar, which will be more apt. The story of her itself is unimaginable. Her life filled with passion, total surrender, and leaving her youth (like avvaiyar) is a lesson for us.
Thanks Sri Durgadasan,
I thought that the story of Ammaiyar is well known and need not be repeated here. So I confined myself to publishing her less known songs.
But, as you wish it, You will have it. But only after all these 22 songs are finished, one every three days. I also intend to look at Ammaiyar's contribution to Saivam from a historical angle.
 
Oh... thanks a lot vikrama ji. I knew her story. Anyhow, I will feel much happy on hearing that in your verses... Will wait for that and in the meantime, read her songs through your posts.

Pranams
 
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப,
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே 1-3

காட்டு வாகை மரம் தழைத்திருக்க, காய்ந்து போனமையால் வெண்மையான அதனுடைய நெற்று ஒலி செய்ய, மாலைக் காலத்தில் பகலோடு வந்து பொருந்திய இருள் மிக, நள்ளிரவில் கூகையும், மனிதன் தலைபோலும் தலையையுடைய ஆண்டலைப் பறவையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின் மேல் இடம் பெயர்ந்து ஓட, எழுச்சியுற்ற ஈகை என்னும் இண்டங் கொடி வீசிப் படர்கின்ற, தொடர் கள்ளியின் நீழலையுடைய சுடுகாட்டில், பிணஞ்சுடும் விறகு ஒருபால் இடப்படுகின்றது. ஆகம் குளிர்ந்து ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

The white and ripe nuts of vaakai are rattling ;
It is dead of night-densely dark and bewildering ;
Now do barn-owl and aantalai begin to sing ;
The horned owl jumps on a branch, its wings aflutter.
It is a crematory where pyres are arranged
Under the shade of cactus entwined with indai creepers
It is here our Father who with his cooled body
Dances in fire ! Behold Tiruaalangkaadu !
Translation: S. A. Sankaranarayanan. Courtesy -thevaaram.org
 
Dear Vikrama,

Good Effort. May God Bless You.





இன்று தொடங்கி காரைக்கால் அம்மையாரின் பாடல் ஒன்றை தினம்தோறும் பொருளுடன் தரத் திட்டமிட்டுள்ளேன். திருவருள் துணை நிற்க.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்- நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 1

கருத்த கழுத்தை உடைய வானோர் பெருமானே, நான் மழலைப் பருவத்திலேயே நின்பால் அன்பு கொள்ளத் தொடங்கி, இன்று வரை நின் சிவந்த அடிகளையே துணையாகக் கொண்டு வந்துள்ளேன். என் துன்பத்தை எப்பொழுது தீர்ப்பாய் ?
 
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-4

சுடுகாட்டில் இறுதிக் கடனுக்காகச் செய்யப்படும் ஆழமான ஓம குண்டத்தில் யாவரும் விட்டுப் போன பின்பு சோற்றை எடுத்து நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று, கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, உள்ளாலம் எனப்படும் குரலால் இசை கூட்ட, அங்கு காளியோடும் வாதம் புரிந்து வீசி எடுத்த பாதத்தை அண்டம் உற நிமிர்த்து ஆடின எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

Retrieving the cooked rice thrown into the homa-pit
A fox eats it. “Alas, why did we not eye the food
Ere the fox beheld it?” So cry the ghouls in wrath
And run about in the crematory clapping hands.
This crematory is indeed my Lord’s theatre
Where He dances the ullaalam-dance forming
A mandala ; then our Father stands erect,
His uplifted foot grazing the heavens,
And dances ! Behold Tiruaalangkaadu !
Translation: S. A. Sankaranarayanan. Courtesy –thevaaram.org
 
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே 1-5

கழுது தன் பிள்ளைக்கு நிணத்தை விழுங்கக் கொடுத்து, வெண் தலை மாலை பூட்டி, புழுதி துடைத்து, முலைகொடுத்து, காளி என்று பேர் இட்டுச் சீருடைத்தாக வளர்த்து, சிறிது நேரம் விட்டுப் போனபோது, அத்தாயை வரவிற் காணாது, பிள்ளைப் பேய் அழுது பின் உறங்கும் புறங் காட்டில் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

A ghoul devoured oily fat and decked herself
Fittingly with a garland of white skulls.
That ghoul christened her child as Kaali
And reared it in splendor ; she wiped out the dust
From the person of her child and suckled it.
This done, away she went but did not return in time ;
At this her child cries and cries and falls asleep.
Such is the crematory where our Father
Dances ! Behold Tiruaalangkaadu !
Translation: S. A. Sankaranarayanan. Courtesy –thevaaram.org
 
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு கூகை பகண்டை ஆந்தை
குட்டி யிட முட்டை கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-6

அணங்கு ஆடு காட்டில், கூகைப் பேய்களும், குறு நரிகளும் குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பரந்துபட்ட பாதம், நீண்ட நகம், வற்றிய கால் உடைய பேய், சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்ட பிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாய்ந்து ஓட, ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

The ghouls of flat, cloven feet and long nails
Deliver their young; kestrels, barn-owls, partridges
And horned owls lay their eggs ; ghouls, barn owls,
Foxes and other birds and beasts turn fully
The corpses left there all abandoned
In the dreadful crematory where our Father
So leaps and dances in all the eight directions
That His heels hit His fundament !
Behold Tiuraalangaadu !

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-7

நெருப்பு போன்ற கண்களை உடைய கொள்ளிவாய்ப் பேய் பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற துணங்கை என்னும் கூத்தினை தெய்வம் வந்ததுபோல ஆடி. தழலுள் எரியும் பிணத்தை எடுத்துத் தான் தின்னுகின்ற காட்டில் கழலும் சிலம்பும் ஒலிக்க, அழலை உமிழ்ந்து, நரி குதிக்க, கால் வட்டணையிட்டு நட்டம் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

The fire-breathing ghouls whose rolling eyes spit fire
Foregather and enact the dance of tunangkai ;
They run hither and thither, pull out the burning corpses
From the pyre and eat the flesh thereof.
Such is the fearful crematory where to the sounding
Of the anklets and the heroic anklet, our Father
Dances his vattanai in the crematory whilst His
Fulgurant strands of matted hair sway and sputter.
Behold Tiruaalangkaadu !

நாடும் நகரும் திரிந்து சென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும் கடலும் மலையும் மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-8

நாடும் நகரும் திரிந்து சென்று நன்னெறி நாடி விரும்பிய நல்லவரையும் பிணமாய்விட்ட நிலையில் துணியால் மூடி மறைத்து இட்ட இடத்தில் பலவற்றைக் கருதிய பேய்க்கணம் சூழக் காடும், கடலும், மலையும், மண்ணும் விண்ணும் சுழல அனல் கையேந்தி ஆடும் பாம்பையணிந்த கூத்தன் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

Lo, he is dead who willingly wandered through
Country and city to gain the goodly way ;
All shrouded, he is now laid beside the corpse
Of an aged person ; such is the crematory
Where the Lord whose jewels are snakes,
Surrounded by the gathering hordes of ghouls.
Holding the fire in His palm, so dances
That woodland and ocean, mountain and earth
Spin and whirl ! Behold our Father’s Tiruaalangkaadu !

துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
உழை இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-9

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை (குரல்). இந்த ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமாற்றால் பண்கள் பொருந்தும் வகையில் பாடி, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை முதலான அத்தனை வாத்தியங்களின் ஒத்திசையோடு ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

Our Lord sings so tunefully that tuttham,
Kaikkilai, vilari, taaram, uzhai and yili
Mesh in harmony ; sacchari, kokkarai, takkai,
Takunitham, karatikai, vankai, menthol,
Tamarukam, kutamuzha and monthai accompany
His singing in admirable unison.
Our Father dances to the orchestral polyphony !
Behold His place – Tiruaalangkaadu !

புந்தி கலங்கி மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே 1-10

புத்தி கலங்கி, அறிவு மயங்கி இறந்தவரைப் புறங் காட்டில் இட்டு, உறவினர் நண்பர்களது கூட்டத்திடை வைத்து ஈமக் கடன் செய்தவர் பிணத்திற்கு இட்ட தீயே விளக்காய் இருக்க ஆடுகின்றான். அவ்வாட்டத்தை மக்கள் காணார் ஆகலான் அதற்கு அமரர்களே வாத்தியம் வாசிப்பாராவர். திசைகளை உள்ளடக்கி நிகழச் சிலம்பு ஒலிக்க, மாலைக் காலத்தில் நெடிது நிகழும் நடனம் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.

With befuddled intellect and bewildered manam,
They place the corpse at the junction of the roads,
Perform the obsequies and then take it to the crematory
The red fire set to the pyre by the one entitled,
Glows like lamp ; such is the place where during twilight hour
Our Father enacts the great dance whilst His anklets
Sound, and the drum-beats of the celestials pervade
All the directions. Behold Tiruaalangkaadu !

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து
பப்பினை யிட்டுப் பகண்டை பாட
பாடிருந் தந்நரி யாழ மைப்ப
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே 1-11

தனக்குச் சமானம் இல்லாதனவாகிய வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிட, அந்த ஆரவாரத்தின் இடையே, நரியின் குரலையே யாழிசையாகக் கொண்டு பகண்டைகள் பாட, அந்தப் பாட்டோடு ஆலங்காட்டுள் அடிகளைச் செப்பிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாகப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவர்.

The ghouls of Him who is beyond compare, foregather,
Pat each other in glee, make dinsome riot
And spread as in a dance ; the singing of partridges
Is accompanied as though on yaazh by the foxes
That stand close by ; such is the beauteous Tiruaalangkaadu
Of our Father ! They that are versed in this decad
Of chaste Tamil sung on Him by Kaaraikkaal Pey
Of bushy and spreading hair, will surely
Come by Siva’s way and bliss eternal.
Translations: S. A. Sankaranarayanan. Courtesy –thevaaram.org
 
மூத்த திருப்பதிகம்-2

எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே 2-1

சுடலை எங்கும் எட்டி, இலவம் ஆகிய மர வகைகள், ஈகை சூரை ஆகிய கொடி வகைகள், காரைச் செடி முதலியன பரவி, சூழ்ந்த கள்ளிகள் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள் மிகுந்த காட்டில் அகன்ற கண்கள் கொண்ட பேய் முழவங் கொட்ட பூதம் பாடக் குழகன் ஆடும்.

It is a crematory of burning pyres girt with cactus ;
Yeti, ilavam, eekai, soorai and kaarai abound here
Where ghouls draw out and eat the exposed intestines
Of corpses ; it is here the Bhootas sing
Accompanied on muzhavam by ghosts whose eyes
Are like those of the drum,
And the handsome One dances.

நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே 2-2

பிணம்சுடு தீயால் நிணம் உருகி நிலத்தை நனைக்க, நீண்ட பல்லும் குழிவிழுந்த கண்களும் உடைய பேய் துணங்கைக் கூத்து ஆடி, சுற்றிலும் பார்த்து சுடலையை விரும்பி பேய்க் கூட்டம் பிணங்களை உண்டு களித்த மனத்துடன் துன்பம் தருகின்ற காட்டில் கையில் தீ ஏந்தி குழகன் ஆடும்.

Fat melts and wets the ground ; beholding this
The long-toothed and sunken-eyed ghouls
Enact the dance of tunangkai; then they throw their looks
Around, put out the fire in the pyres,
Eat the corpses to their hearts’ content and feel
Delighted ; it is in such a fitting crematory,
Holding fire in His hand, the handsome One dances.

புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே 2-3

காக்கை, பருந்து முதலிய பறவைகள் குத்திய புலால் உடைய தலையை வேறு புறத்திலிருந்து நரி கவ்வ அட்கு என்ற ஒலிக்குறிப்பால் தன் இனத்தை அழைப்ப ஆந்தை சிறகை வீச, அருகே சிறு கூகை அஞ்சும் படி விழிக்க, பெரிய கூகை அச்சுறுத்த, நரி எங்கும் ஓடிப் பிளவு செய்ய பெருங்காட்டில் யாவராலும் வழிபடப்படும் இறைவன் நட்டம் அடி பெயர்த்து ஆடுகிறான்.

Jackals tug at and draw away the stinking
White heads punctured by birds ;
Owls raise a hue and cry ; owlets wave amain their wings ;
Barn-owls stare and cause fright in beholders ;
Foxes howl everywhere in great urgency ; such is
The great charnel-house ; it is here
The Lord desires to enact His dance.

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே 2-4

உயிர் நீங்கியதனால் பிணமாம் நிலையை அடைந்த உடம்பை, அதன் உண்மையை அறியாமல் படுத்துக் கிடக்கின்ற ஆள் என்று நினைத்து, ஒரு பேய் அதன் அருகிற் சென்று தனது சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக் கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதன் கருத்தையே மெய் என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓட, இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில் பெருமான் தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான்.

It was a corpse ; yet a ghoul was not sure of it ;
So it came near it, pointed a finger at it, cried aloud,
Roared and threw at it a fire-brand ; even then
It was not sure of aught ; affrighted it fled far away
And began to beat in bewilderment its stomach
Like unto a picottah ; this witnessing, many a ghoul
Took to their heels in sheer fear ; it is in such a crematory
Our Lord, in the guise of a mad man, dances.

முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே 2-5

பிணங்களின் மூளை சொரிந்து சிந்துதலால் முள்ளையுடைய செடிகள் காய்ந்து, விறகு கருகி, கள்ளி பால் வற்றி விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது. அத்தகைய காட்டில் உழை என்னும் ஒருவகை மானின் தோலை உடுத்தி, தோள் மேல் புலித் தோல் இட்டு, நிலையாக இருக்கும் இடம் அந்தக் காடாகவே இருக்கும்படி பரமன் ஆடுகிறான்.

Scorched are mulli plants, charred is the firewood ;
Brains seep out of broken crania ; cacti wilt ;
Such is the fierce crematory where wood-apple trees
Abound ; it is indeed His place of rest.
It is in this wilderness, the Supreme One dances
Girt with the skin of an antlered
And spotted antelope, the tiger-skin
Dangling on His shoulder.

வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே 2-6

வாளைப் போன்ற வடிவுடைய அலகினை உடைய சிறு கூகை பிணத்தின் மூளையையும், உடலையும் விழுங்கி மூக்கால் ஒலிக்கும் முதுகாட்டில் தாளி வகைப் பனையின் விரிந்த மடல்போல் மயிர் கொண்ட கொள்ளி வாய்ப் பேய், கொள்ளிக் கண் பேய் ஆகியவையும், பூதகணங்களும் குழலை ஊதித் தாமும் இசைக்க குழகன் ஆடுகிறான்.

The colourful owlets of bright teeth –bent and ensate-,
Gobble up heads, brains and bodies of corpses
And hoot in the crematory ; there ghouls whose
Spreading hair is like the leaf of the taali-palm
Aud whose fire-red eyes are ablaze, make
Fluten music with their mouths along with
The Bhoota hosts ; it is here the handsome One
Enacts His dance.

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே 2-7

சில நாள் ஏமம் இன்றிக் கிடந்த சுடலையில், துழாவியும் சோறு கிடைக்காமல் கவலை யடைந்து சிறு பேய் துன்பப்படும் காட்டில் தேவர்கள் முழவம் வாசிக்க மாலை நேரத்தில் கையில் அனல் ஏந்தி அழகன் ஆடுவான்.

The ghostlings feel the burnt-out pyres and come by
Flesh none, alas ; dazed, they fall asleep there ;
Such is the crematory where the young ones of ghosts
Endure much hardship ; it is here the handsome One,
Holding fire in His hand, enacts the evening-dance
Keeping time to the sound
Of muzhavam played by the celestials
That had come thither, in time
The evening dance : The dance enacted
During the hour of Pradosha

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே 2-8

மூங்கில்கள் ஓங்கி முத்துகள் உதிரும்படி வெடிக்கின்ற சுடலையில் இளைத்த உருவுடன் கூந்தலைக் காயவைக்கும் பிளந்த வாய் உடைய பேய்கள் பிணங்களை உண்டு வருந்த, கள்ளத் தன்மை கொண்ட அப்பன் நடனத்தை அம்மை வியப்புடன் காணுகிறாள்.

It is a crematory where bodies burn crackling
And where lofty bamboos scatter white pearls !
There the huge and loud-mouthed ghouls
Of dry and dangling hair and tired bodies
Foregather and eat to their hearts’ content
The corpses ; it is in such a great crematory
The One of gramarye dances ; the Daughter
Of the Mountain witnesses this in wonder.

கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே 2-9

ஆண் குரங்கு கிளைகளில் பாய்கின்ற மூங்கில் சூழ்ந்த புதரில் கழுகும் பேயும் இருக்க, புதைத்ததனால் உண்டான வெண்டலையும் பிணஞ் சுடும் விறகினால் எழுந்த புகையும் எழுந்த வளைந்த கூர்மையான மழுவும் பிறையும் ஒளிவீச கொள்ளென்ற ஒலியுடன் பூதங்கள் பாட வெண்மையான தோலினால் ஆன உடுக்கையும் பறையும் ஒலிக்கப் பரமன் ஆடுகிறான்.

It is a crematory through which male monkeys
Leap about ; it is girt with bamboos ; it is full
Of ghouls and vultures ; here abound the white
Skulls and the smoke of the pyres ; it is here
The supreme One dances whilst His crooked,
White mazhu and crescent wobble,
The white tudi and the drum resound
And the basic note of music hums : “Koll”.

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே 2-10

ஆழமான வயிற்றை உடைய குறிய சிறிய நெடிய பேய்கள் வசிப்பதும் இண்டங் கொடி படர்ந்ததுமான இருள் சூழ்ந்த மயானத்தில் எரிகின்ற வாயும் பற்களும் உடைய பேய் தன் பிள்ளைப் பேய்களை இருட்காலத்தில் தடவிக் கொடுத்து ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க கொள்ளென்று இசை பாட, நெருங்கி வளர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுகிறான்.

The hollow-stomached ghouls-short and small - ,
Of huge mountains and the ghouls of fiery mouths
And fierce teeth abiding in the crematory imbrowned
By indai plants, sometimes coddle and sometimes resent
Their infants. To the singing of these whose basic note
Sounds ‘Koll’ the pure One dances whilst His
Dense and bright matted strands of hair dangle low.

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே 2-11

சடை மேல் மதி சூடிய அரன் திருநட்டமாகச் சுழல்வார். ஆடும் அரவை அரையில் கட்டிய அவனது அருளாலே காட்டில் வாழும் காரைக்கால் பேய் எனும் கொள்ளிவாய்ப் பாடிய பாடல்கள் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமாகும்.

He sports a crescent in His matted crest ; He, for ever,
Dances His twirling dance ; His waist is cinctured
With a serpent. Lo, whoever, by His grace,
Is able to sing and dance out this decad
Of Karaikkaal Pey of fiery mouth and sharp teeth
That abides in the crematory,
Will be freed clean of all sins.

Translations: S. A. Sankaranarayanan- Courtesy –thevaaram.org

There ends the compositions of Karaikal Ammaiyar.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top