• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்மையார் அமுத மொழி

Status
Not open for further replies.
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் றாவான்- அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து. 21

அவனது உண்மை நிலை ஞானம். ஆயினும் அவன் மண், புனல் ஆகிய ஐம்பூதங்களாகவும், இரு சுடர்களாகவும், உயிர்களாகவும் வியாபித்து நின்றான்.

He indeed becomes the two lights, the fire and the ether too;
He, it is, who becomes earth, water and air ; He indeed is
The soul and the Ashta Moorti ; truly it is He
Who abides as the Lord of Gnosis.

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரான்நீர் உம் சென்னிப் பிறை. 22

இரவு போல் கறுத்த கண்டத்தை உடையீர், உன் உடலில் உள்ள பாம்பு தலையில் உள்ள நிலவை விழுங்கி விடும் போல் இருக்கிறது. அதன் மனக் கருத்தை ஆராய்ந்து பாரும்.

O Lord whose neck is dark like a cloud that floats
At night ! O Lord, be pleased to scrutinize the intent
Of this dazzling serpent ! It means to devour this,
The young crescent that rests in Your crest-

பிறையும் புனலும் அனல் அரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங்- கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. 23

அவர் எனக்கு இதுவரை இரங்காவிட்டாலும் என் உள்ளம் அவருக்கு ஆட்பட்டு விட்டோம், இனி அவர் செய்வது செய்க என்று அமைதியுற்றே இருக்கின்றது.

Though the Lord who sports the crescent, the flood, the fire
And the adder, pities us not, this heart inseparable
From our Father will rest content as it is for ever bound
In service to the blue-throated- our Father.

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 24

மீண்டும் மீண்டும் ஆய்கின்ற என் சிந்தனையில் மின்னும் சுடர் உருவாய்ப் புகுந்து இன்னும் சுழல்கின்றது ஈசனின் திருவுருவம். எனக்கு ஓர் க்ஷேமம் ஆவதும் இதுவன்றோ!

O Lord, You abide in my soul in a fulgurant form ;
It is this form which spins and irradiates thither ;
This indeed, O Lord, becomes Your divinely beauteous form ;
This indeed is the treasure – ardent and remediate.

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும்- பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. 25

எம்பெருமான் எங்கும் சென்று பிச்சையேற்பதையும் இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும் செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே இவை எதற்கு என்று கேட்டுத் தெரிவோம். முதலில் அவனைக் காண முயற்சிப்போம்.

Our Lord, oblivious of His glory, goes abegging in sundry ways ;
At night when darkness swells, He dances in the crematory.
Why does He do so ? This we will probe into that day when
We behold Him. Of what avail are our words now uttered here ?
Translations: T. N. Ramachandran
Courtesy- thevaaram.org
 
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின்- ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு. 26

இறைவனின் தொங்கும் சடைகள் பொன் மலை போல் மின்னுகின்றன. எலும்பு மாலையும், அரவும் அவன் மார்பில் அணி செய்கின்றன.

The Lord’s curly strands of dangling matted hair flash
Like the lightnings on the crest of auric mountain ;
On His golden chest – whose throat is blue, the dangling snakes,
Amidst garlands of bones, dazzle like lightnings on Meru’s sides.

அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள்- முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண். 27

முப்புரங்களையும் ஒரே அம்பால் எரித்த இறைவா, நீ பாம்பை அணியாமல் பொன்னாரம் ஒன்றைப் பூணக்கூடாதா என்று பல நாட்களாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நீ கேட்க மாட்டாயா ?

O One that destroyed the might and the three citadels
Of foes with a single dart ! Desist from wearing on Your chest.
A snake for jewel; deign to wear instead a jewel of gold.
Do we not urge and hail you with this, our prayer, for days on end ?

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர். 28

பூணாகவும், கச்சாகவும், முடிமேல் அலங்காரமாகவும் எல்லாவற்றிற்கும் இவர் பாம்புகளையே அணிகிறாரே, இது எதற்காக என்று அறிவற்ற எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே.

He wears a killer-serpent for a jewel ; He wears another
As a bright girdle over His tiger-skin vestment ;
He wears yet another on His beauteous and golden crown.
Are these to jeopardize me – the senseless one ?

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்- இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர். 29

நீறு பூசி எலும்பு அணிந்த இவரது பேய்க் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம் புறத் தோற்றத்தை மட்டுமே கண்டு உண்மையை உணராதவரே.

Others who behold His flower-red body bedaubed
With ash, decked with bones and looking like a ghoul’s,
Canst not comprehend the truth about Him.
Are these to dispraise Him ? Lo, discern the truth.

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே- பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து. 30

பிறருடைய எலும்பை அணிந்து இரவில் பேயும் தாமுமாய் மகிழ்ந்து தீயாடும் எம்மானார், மெய்யுணர்வு பெற்றவரால் உணரப்படுபவராகவும் மற்றவரால் அறியப்படாதவராகவும் உள்ளார்.

Wearing the bones of others, our Lord delightfully dances
During night in the fire of the crematory witnessed by joyous
And mighty ghouls ; His greatness canst not be known
By others ; He is realized by devotees as the Great Consciousness.
Translations: T. N. Ramachandran. Courtesy:- thevaaram.org
 
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய்- இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு 31

மடநெஞ்சே, பிறர் எலும்பை எல்லாம் இகழாமல் அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்டு நலம் சேர்த்துக் கொண்டாய். அங்ஙனம் ஆட்பட்ட பேரன்பை விட்டு விடாமல் இன்னும் பெருக்கு.

O bashful heart! He wears bones and is never selective
About it; may you augment your love for His servitorship;
Rejoice in this; you will thrive among the great; you have
Indeed secured for yourself the great Palladium.

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும்- தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல் 32

ஆராய்ந்து பார்க்குமிடத்து, முதலிடத்தில் வைத்துப் போற்றுதற்கு உரியவனும், நெற்றிக் கண்ணனும், புரமெரித்தவனும் ஆகிய பிரானது மார்பில் உள்ள நூல், தலையில் உள்ள நிலவின் ஒளிக் கீற்று வழிந்தது போல் உள்ளது.

Look well! The sacred thread on His chest– the Primal Ens,
The triple-eyed that, of yore, gutted with fire the three citadels-,
Is like a ray flowing from the young moon He wears
On His effulgent and hirsutorufous crown.

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே- மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம். 33

தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்கு அருளுதலே இவனது இயல்பு. நூல்களை மட்டுமே கற்று அதன் உட்பொருளை உணராதார் தத்தமது நூல்களில் கூறப்பட்டதே உண்மையெனக் கருதித் தாம் அறிந்தவாறு பேசுவர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரியட்டும்.

Let the ignorant lot rave bookishly; the greatness
Of the lord whose neck is sapphire-like is peerless.
Whoso performs whatsoever tapas to behold Him as he desires,
It is He who manifests before Him in the desired form.

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும்- வேமா
றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும். 34

இறைவனுக்கு ஆளாயினாரை வல்வினைகள் துன்புறுத்தா. அவ்வாறு ஆளாகாத முப்புரத்தோர் பட்ட பாட்டை அறிக.

Abiding in the heavens, they failed to own themselves as His servitors
And hail Him; with a single arrow He smote their three towns.
Cruel Karma, irrespective of their station, will smite them
Who fail to think of Him and gain His propinquity.

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும்- படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. 35

நிலவு தன்னை விரட்டி அடித்து விடும் என்று அஞ்சிய இருள், ஒளி நுழைய முடியாத பாதுகாப்பான இடம் தேடி ஒளிந்துகொண்டது போல் உள்ளது, இறைவன் கழுத்தில் உள்ள மறு.

The blue patch on the ruby-like neck of the Supreme One adorned
With a hooded snake of beautiful neck and open mouth,
Looks as though that murk afraid of its annihilation
By the argent moon has found a secure refuge thither.
Translations: T. N. Ramachandran. Courtesy-thevaaram.org
 
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ- உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி 36

வானத்தில் முழு நிலவை விழுங்குவதை வழக்கமாகக் கொண்ட அரவு, சிவனுடைய சடைமேல் அமர்ந்த நிலவை விழுங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்தால் எங்கே பாம்பு தன்னை விழுங்கிவிடுமோ என்று அஞ்சியே, உம் தலை மீது உள்ள நிலவு வளராமல் பிள்ளை மதியாகவே உள்ளது.

O Lord with a blued neck! The young moon is scared
Of the serpent on Your long matted hair, thinking
That the serpent may slither with speed to seize and kill it any day.
Alas! Day by day it is fated to wane and not thrive.

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை- மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. 37

இறைவனை அறிவுக் கண் கொண்டு நோக்குபவர் எலும்பு மாலை அணிந்ததற்காக அவனை இகழ்வர். அவ்வாறு இகழாது ஏத்தினார்கள் என்றால், அவர்கள் மீண்டும் பிறவா முத்தி நிலை அடைவது திண்ணம்.

He of the growing matted hair that sports a crescent, smote
The three great citadels of Asuras who hailed Him not; if men
Consciously adore Him, never dispraising His skeleton-outfit,
They will be freed from embodiment with bones.

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே- பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு. 38

இறைவன் மார்பில் உள்ள பன்றிக் கொம்பு, வானத்தில் அரவு தீண்டியதால் சிறுத்த நிலவு போல உள்ளது.

Does not the sharp and shiny tusk of the black boar
Adorning His bosom that has for garland a crawling snake,
Look like the remaining digit of the moon of the bright sky
That is being devoured by the dazzling serpent?

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ்- செம்பொன்
அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து 39

இறைவனது மேனி முதலில் பொன்மலை போல் சிவப்பாக இருந்தது. திருநீறு அணிந்த பின்னரோ அது வெள்ளி மலையாக மாறிவிட்டது.

The lovely coralline body of the handsome One who is
Concorporate with Her-a flowery twig-, is like
A beauteous hill of ruddy gold, when it is not adorned
With ah; if adorned, it then looks like an argent hill.

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதங்- குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு 40

நெஞ்சே, முன்னே நெஞ்சால் நினைத்து, மீள வாயாலும் வாழ்த்திப் பின் மெய்யாலும் வணங்குகின்ற தொண்டர் பாதத்தைச் சேர். அல்லாதார் கூட்டத்தை நீக்கு.

O fond heart! He wrote the crescent as His chaplet, ignored
By all others; contemplate the feet of them that are
His servitors; do articulate their praise; beware the crowd
That is unmindful of His servitorship; avoid it.
Translations: T. N. Ramachandran. Courtesy- thevaaram.org
 
Since the site thevaaram.org has been listed by google advisory board as suspicious containing malware, translations by Sri TNR are not given. Instead, gist
.
ஒருபால் உலகளந்த மாலவனாம், மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால்- இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து 41

உன் உடலில் ஒரு பாகம் மாலும், மறுபுறம் உமையும் உள்ளனர். அதனால் உன் உருவம் தெரியவில்லை. அது மின்னல் போல் கணநேரம் மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டு மறைந்து விடுகிறது.

One half of your body is occupied by Vishnu and the other by Uma. You flash like a lightning, in between and we don’t get to see your true colour.

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ- பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ,
இளங்குழவித் திங்கள் இது 42

இறைவா, நீ அணிந்துள்ள நிலவு என்றும் வளராமல் பிறை நிலவாகவே உள்ளதே, அதற்கு என்ன காரணம் ? அரவம் விழுங்க அதனால் சிறுத்து விட்டதோ ? அல்லது உனக்கு இந்த அளவு நிலவே போதும் என்று நினைத்து அளவாகப் பிளந்து எடுத்து வைத்துக் கொண்டனையோ ?

The crescent on your head does not grow but remains in the same. Has the bigger slice of it been swallowed by the serpent or did you intentionally keep it small?

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து- பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு. 43

பெருமானே, நீ இவ்வாறு நிலவைத் தலையிலே சூடி ஊர் ஊராகப் பலி ஏற்றுத் திரிய வேண்டாம் என்று தேவர்களே தடுத்துப் பார்த்து விட்டனர். அவன் கேட்கவில்லை. நான் சொல்லியா கேட்கப் போகிறாய்? அதன் மெய்ப்பொருள் என்ன என்பதை நீயே அறிவாய்.

The Devas have pleaded with you not to go out for begging with the crescent on, in vain. How can I succeed in it? You yourself know the truth of it.

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்- மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான் 44

வானோர் பிரானே, உன்னையே புகல் அடைந்து உனக்கே ஆட்பட்டு வாழும் எனக்கு அருளாமை ஏன் ? உரைப்பாயாக.

I have become your slave but you are not bestowing your grace on me.

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப்- பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது. 45

பிரானைக் காண விரும்பி அதற்கான நெறிமுறைகளைப் பின்பற்றி அவன் அருளை வேண்டி நிற்கும் மக்களே, அவன் எங்கு உள்ளான் எனத் தடுமாற வேண்டாம். அவன் காட்சிக்கு எளியனாய் என் போல்வார் சிந்தையிலும் உள்ளான்.

Folks, you want to see the Lord and follow the rituals. When you ask, where the Lord is, I can only say that He is in the hearts of people like me and it is quite easy to see Him.
 
The site thevaaram.org is ok today and the translations of Sri TNR are given.

எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ- ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். 46

இரக்கத்துக்குரிய அறிவிலிகளே, எம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறம் மிக எளியது, கண்டீர்.

O penurious ones sans His grace!, never given
To giving a little even to others! Lord of Blue neck
Sapphire hued ornamented with snakes rove in search
Of servitors. Seeking them and finding them is easy. Is it not so?

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய்- நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு. 47

நெஞ்சே, இறைவன் திருவடியை அடையும் பேற்றை, அடையும் முறைப்படி அடைவதல்லால், பிறவகையில் பெறவும் உரியை ஆவையோ? ஆகாய். பிற வகையில் பெற நினைக்கும் பேதையே, அந்த நினைவை விடு.

O fond heart ! He is concorporate with Her whose twin eyes are
Like the two symmetrically-slit slices of a tender mango.
The beatitude of gaining His divine feet is through His grace only.
You, O fool, canst not reach them by your effort.

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்- ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா. 48

இறைவன் திருமார்பிலுள்ள பாம்பு அறிவற்றது. அதனால் அது மார்பிலுள்ள பன்றிக் கொம்பைத் தன் பகையாகிய நிலா என்று மயங்குகிறது. இறைவனின் திருமுடியில் மற்றொரு நிலா உள்ளதே, இதில் எது உண்மை என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

Deeming it the crescent, the senseless serpent beholds
One day the tusk on His divine chest; on another day,
It eyes His beauteous crescent; however till this day.
It knows not what indeed is truly the crescent.

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி- விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை. 49

இறைவனின் தலையிலுள்ள நிலவின் ஒளிக் கதிர்பட்டு அவனது செஞ்சடை பொன்னும் வெள்ளியும் சேர்த்து முறுக்கியது போல் உள்ளது.

As on the crest of the Lord who alone is His equal,
The rays of the beauteous and young crescent spread,
Do not the strands of His matted hair look like
The twisted threads of gold and silver?

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும்- முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல். 50

இறைவனின் இடப்பக்கம் உள்ள பாவையின் நீலக்குழலானது அவனது வலப்பக்கத்துச் சடைமேல் உள்ள கொன்றை மலர் காய்த்து இடப்பக்கம் பரவியது போல் உள்ளது.

The dangling blue locks of Paarvati who is
Concorporate with the Lord that wears on the right side
Of His crest the lovely crescent, look like the fruit
Of konrai with which the Lord adorns His matter hair.
Translations: T. N. Ramachandran. Courtesy- thevaaram.org
 
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா- கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. 51

இறைவா, நீ பேய்களோடு ஈமப் பெருங்காட்டில் நடனமாடச் செல்லும்போது உன் உடலின் இடப்பாகம் அமந்துள்ள உமை அம்மையை அழைத்துச் செல்ல வேண்டாம். அவள் அஞ்சப் போகிறாள்.

During the great night of Dissolution when You are
To dance in the fierce fire of the great Crematorium
Do not fare forth thither concorporate with the bangled
Beauty whose plaited hair flows down Her nape.

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே- செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். 52

பெருமானது சடை செவ்வானம்போல விளங்க, அதில் அணியப்பட்ட வெண்டலை மாலையில் உள்ள தலைகள், பல சந்திரர் செவ்வானம் எங்கும் தோன்றியது போல விளங்குகின்றன.

Should a myriad moons rise beautifully throughout
The ruddy sky, that will not at all match the glory
Of the chaplet of skulls worn on the hirsutorufous crest
Of Him who has the red-eyed Vishnu as part of his body.

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப்- போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53

இறைவனின் தலையில் கார் காலத்தில் பூக்கும் கொன்றை மலர் மிகுந்து இருப்பதனாலும், அங்கு கங்கை பெருக்கெடுத்து ஓடுவதாலும் அது மேகம் நிறைந்த கார் காலம் போல உள்ளது.

The beauteous crown of our Lord who is cinctured
With the cord of a belligerent serpent, teems with konrai ;
There, full of water, a river flows flooding ; His crest
Is a nimbus of the rainy season unto beholders.

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான்- நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. 54

திருமால் நின்னுடைய பாகத்தானாய் நின்னோடு ஓருருவாய் இருந்தபோதிலும், பண்டொருகால் அவன் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய் ?

O our triple-eyed Lord whose throat is dark like a nimbus !
He is part of Your body; his dark frame looks as though
It were wrought of watery cloud; he is subsumed in you.
Yet, how did You, of yore, remain unbeknown to him?

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே- உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55

தேவர்களுக்கு உபகாரம் செய்யப் போய் இவரது கழுத்து கறுத்தது மட்டுமல்ல. மதியினிடத்திலும் ஒரு வடு உண்டாகிவிட்டது.

You wear a scar on Your neck as you quaffed the venom
Of ocean, of yore, whilst Devas witnessed it trembling.
Lo, the milky moon on Your ruddy, matter hair where
The snake crawls, eke doth wear a scar in its frame.
Translations: T. N. Ramachandran. Courtesy- thevaaram.org
 
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய்- படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ . 56

புலால் நாறும் தலையினுள் ஊண் ஏற்பது பற்றிப் பிறர் புறம் பேசக் கேட்டோம். அதனைத் தவறு அன்று எனக் கருதினால், நீ அதற்குரிய காரணத்தைச் சொல்வாயாக.

O Lord whose hue is white like the burnt ash ! O One
That wears on the crown the white crescent! We have heard
The dispraise that You eat Your alms from out of the white
Stinking skull. Answer us : “Do You deem this blameless?”

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு. 57

உன் மேல் பாம்புகள் ஆடிக் கொண்டிருப்பதால் பெண்கள் பயந்து பலியிட வரமாட்டார்கள். எனவே அவற்றைக் கழற்றி வைத்து விட்டுப் பிச்சை எடுக்கச் செல்.

Even if You go a-begging through the entire world,
Do not fare forth with Your cruel snakes; if snakes
Full of poison, dance on Your person, innocent women
Will not give You alms scared by the snakes.

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே- செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 58

இறைவனின் செஞ்சடையும், இறைவியின் பூங்குழலும் தம்முள் முரண்பட்டிருப்பது நெருப்பும் இருளும் ஒக்க உடனிருந்ததைப் போல் உள்ளது.

Great crackling fire and abundantly swelling darkness,
Even if juxtaposed, cannot match the glory of the Lord whose
Matter hair is ruddy and whose beauteous body like
Unto the crimson sky, is shared by Her of flowery locks.

பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா- பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல். 59

உன் உடலில் ஒரு பகுதி மாலும், மறு பகுதியில் உமையும் இருப்பதால் நீறு அணிவது எவ்வுருவம் என்று எனக்குத் தெரியவில்லை. நீயே சொல்லி அருள்க.

O triple-eyed and blue-throated Lord ! O Rider of the Bull !
You adorn Your person with the ash. Is it on the side of Uma
Con-corporate with You or on the other side which is Vishnu’s ?
I know not on whose part it is ! Deign to enlighten me.

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே- மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று. 60

எம்மான் யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டபோது அது, பொன் மலையை மேகங்கள் சூழ்ந்து கொண்டது போல இருந்தது.

Even if lofty clouds gather and hide the effulgence of Meru
That will not parallel the act of the Lord, who, of yore, mantled
His divine person with the dark hide of the bewildered
And ichorous pachyderm of enormous trunk.
Translations: T. N. Ramachandran. Courtesy- thevaaram.org
 
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்- என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது 61

ஆட்படாது உலகியலில் இருந்த அன்றும், உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்னதாகிய இன்றும், இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காணவில்லையென்றால் எப்பொழுது தான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் என்கின்றாயே, அவன் உருவம் எத்தகையது என வினவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன் ?

Without beholding Your divine form, I-all unregenerate -,
Became Your servitor that day; this day too, when I stand
Redeemed I have not beheld it. If men ask me: “What may
Your Lord’s form be?” what can I say? What indeed is Your form?

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார்- பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு. 62

முன்பு விசயனோடு போர் புரிந்த அன்று வேடனாகத் தோன்றிய இறைவனின் வடிவம் எத்தகையது, அது எதை நிகர்த்ததாக இருந்தது என்பதனை யாரே அறிவார் ?

When on earth that day You stood a hunter with a bow
To fight against Arjuna, with what did Your form
Of a fierce hunter agree or disagree? What did agree
Or disagree with its nature? Who can tell?

வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ- கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா. 63

சொல்லுக்கு அடங்காத சோதியாய் நின்ற பெருமானே, நின் முடி மேல் உள்ள நிலா பகலில் ஒளி தந்து சூரியனுக்கு மாற்றாக விளங்குமோ ?

O Lord of ineffable effulgence! Does the crescent
On Your crest, rivaling the ruddy and beauteous sun
Roam about the live-long day a long distance
Burning bright? Please enlighten me.

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ- நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று. 64

இறைவன் திருமுடியில் அரவம் காற்றுப் போல விரைந்து ஊர்வது அங்குள்ள நிலாவைத் தேடிக் கண்டுபிடிக்கத் தானோ?

Will the serpent that enters Your crest which is
Like the incarnadine sky endowed with the crescent,
Go round and round the white-rayed moon,
As on the day of eclipse, to seize it?

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு- மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு. 65

காலை நேரத்துச் சிவந்த வானம் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

His body is resplendent like the moon; the white ash
On His person is like the fierce day; the strands
Of His matter hair are like the crepuscular sky;
His neck is like the night of swelling darkness.
Translations: T. N. Ramachandran. Courtesy –thevaaram.org
 
மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ- மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. 66

விடம் உடைய உமது மிடற்றை நக்கியதால் பாம்புக்கு விடம் ஏற்பட்டதோ? உமது மிடற்றின் கருத்த நிறத்தினால் அதனுடைய நிறம் கருத்ததோ?

O Lord, You hold the venom in Your neck; in Your chest
With outspread hood the snake dances. Did it come
By venom in its throat by licking Your neck? Or does it
By nature have a black neck? Please enlighten me.

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால்- ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு. 67

சிவபெருமான், பாம்பு- மதி, மான்- புலித்தோல் ஆகிய பகைப் பொருள்களைத் தனது மேனியில் பகை தீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் அவன் கழல் ஒரு காலும் சிலம்பு ஒரு காலும் அணிதல் தக்கதே.

The snake, the crescent, the fawn, the leaping tiger
And the down-descending flood are borne of Him in amity.
It is but fitting that the triple-eyed Lord of bright auric hue
Should sport a beauteous heroic anklet about His divine foot.

சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி- நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. 68

சிவபெருமான் உமாதேவியின் ஊடலைத் தவிர்க்க வேண்டி அவளது பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பட்டுச் சடைமுடி செக்கர் வானத்தை வென்று விட்டது.

To appease Her bouderie who is ankleted, the Lord
That wears a young crescent, falls at Her feet that are
Dyed red with silk-cotton, and thrives; so it is that His crest
Is more beautifully incarnadine than the russet sky.

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப்- படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு. 69

இறைவன் முன் நிலம் தோய்ந்து வணங்கி அவனுக்கு அடிமையாக நாம் இருப்பதால் கூற்றுவனுக்கு அஞ்சமாட்டோம். இனி நமக்கு எந்தத் துன்பமும் இல்லை.

As we wear on our head the divine feet of the Lord who is
Triple-eyed and whose crest sports a curvaceous crescent,
We ignore Death; on earth with His servitorship we are
Blessed ; henceforth is there aught of misery for us ?

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய்- அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 70

எந்தாய், சடையாய், இரவில் நீ ஆடும் இடம் எமக்கு ஒருநாள் காட்டுதியோ? இதுவோ எமக்குத் தவிர்க்க முடியாத ஒரு பேராசையாய் உள்ளது.

Our Father whose fulgurant strands of matter hair wave ablaze!
May You be pleased to reveal one day the place where You leap
Amidst fire, and dance during densely dark night!
This one great desire for ever haunts us.
Translations: T. N. Ramachandran. Courtesy – thevaaram.org
 
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால்- இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண். 71

கங்கை தலையில் இருப்பதால், மதியை அவள் பக்கத்தில் தான் வைக்க வேண்டியுள்ளது. அதனால் அந்தப் பிறை உன் இடப் பாகத்தில் உள்ள உமா தேவிக்கு உரிமை இல்லாமல் போய் விட்டது. இதை நீ உன் கண்ணால் கண்டு கொண்டு தானே இருக்கின்றாய். இதற்கு என்ன செய்தாய் ?

O triple-eyed Lord! You keep the crescent that rises
In the spacious sky, near the bashful damsel Ganga;
They are visible to us; we are unable to eye the Mountain’s Daughter
In Your left; You alone are exclusively beholding Her.

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்- துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து. 72

நின்னைக் கண்டு நினக்குப் பணி செய்யும் வாய்ப்பைப் பெறேனாயின் வானுலக ஆட்சி பெறினும் அதை விரும்பேன். வாய்ப்புப் பெறின் மண்ணுலக வாழ்வும் இனியதே.

O One that wears a chip of the skyey moon! O Eye of Grace
Unto the heptad of great worlds! If I canst not behold You,
Hail You as Father and render You manual service, I desire not
Heavenly life even if I come by it; this is my conviction.

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்- பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஒது. 73

இறைவன் திருவடியை விருப்பத்துடன் எப்போதும் ஓதினால் நீ கருதியது கைகூடும். நான் உறுதியாகச் சொல்கிறேன்.

O heart, for ever and in love hail the lotus-feet
Of Him who received on His crest the flood Ganga
Of swelling waves; you will surely and squarely
Come by all things sought after; this I affirm.

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால்- பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம். 74

இறைவன் கையில் இருக்கும் கபாலம் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதாயிற்று. பேதைப் பெண்கள் பாத்திரத்தின் பெருமையை அறியாமல் இட்ட பலியால் நிறைந்தது என்னே! அன்பெனும் பிடியில் அகப்படும் மலை அல்லவா அவன்!

Your spacious begging-bowl-the skull-, was not a whit
Filled, by all the food that was cooked using the vast seas
As boiling water; yet how came it to be filled when, unaware
Of its greatness, innocent women poured their alms into it ?

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும்- நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு. 75

இறைவனின் தலை மேல் கங்கை ஒலிப்பதாலும், அங்கு நிலவு உலவுவதாலும், பாம்பு சஞ்சரிப்பதாலும் அவனது சடை ஆகாயம் போல் காணப்படுகிறது.

Truly the flowing matted hair of the Lord – the abode
Of all good-, is like the heaven as thither the muddy
Ganga meanders, the bright moon floats and the snakes –
Raku and Ketu-, crawl over His immense crest.
Translations: T. N. Ramachandran. Courtesy –thevaaram.org
 
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து,
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப- முசிந்து
எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி. 76

தேவர்கள் தங்கள் மணி மகுடம் இறைவனின் காலடியில் பட வணங்குவதால் அத்திருவடி தழும்பு ஏறி அழகற்றதாயிற்று.

As the bright, auric and gem-inlaid crowns
Of the Devas who are blessed to dwell in the supernal world
Rub against Your lotus-like and beauteous feet, they are
Full of scars and tender. What a pity, O our Father!

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேருங்- கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா தரங்கு. 77

அடிகளே, உமது அடி பெயர்ந்தால் பாதாளம் உடையும். முடி நகர்ந்தால் அண்டத்தின் உச்சி உடையும். கைகள் அசைந்தால் வான் திசைகள் உடையும். இந்த அரங்கு உம்மைத் தாங்க இயலாது. எனவே மெதுவாக ஆடுக.

O Lord, when You lift Your foot the nether world gets unhinged ;
When You shake Your head, the vault of heaven bursts ;
When You flex Your braceleted hand the great directions
Are rent ; the forum trembles ; pray dance with care.

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்- இரங்குமேல்
என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. 78

அறிவிலா நெஞ்சே, இறைவன் எந்த உயிர்க்கும் வாளா இரங்க மாட்டான். பல நாள் பணிந்து வேண்டினால் இரங்குவான். அப்படி இரங்கிவிட்டால் அவன் எவ்வுலகத்தை வேண்டினாலும் தருவான், எந்த உயர் நிலையிலும் வைப்பான். இதை உணர்க.

O poor one, will the Lord who dances in the crematory of ghouls
Gratuitously grant grace to all lives ? If it be so, unto those
That hail Him for many days, what beatitude will He not
Grant ? What worlds will He not bestow ?

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத்- துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. 79

இறைவனடி பணிந்து மலர் தூவிப் பூசித்தும், அவ்வாறு செய்யும் அடியவரைப் போற்றியும் இறைவனுக்கு ஆளாகும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதனால் என் உள்ளம் பெருமிதம் கொள்கின்றது.

My chinta is elated with pride. Is it because I bow
At the feet of the Lord of spreading matted hair,
Adorn them with blooms, hail Him and steadfastly
Remain poised in His – our Father’s servitorship ?

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த- திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால். 80

மாலாலும் அயனாலும் காணப்படாத இறைவனின் கால், வலிமை மிக்க ராவணனின் செருக்கை அடக்கியது.

His are the triumphant feet that kicked Death away ; they crushed
Straightaway the many-shouldered Asura who by pride upborne
Durst uproot the Mountain ; they were invisible to godly Maal
And Ayan who to behold them hailed them in rapture.
Translations- T.N.Ramachandaran, Courtesy – thevaaram.org
 
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம்- கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. 81

இறைவனின் திருவடிகளைச் சரணடைந்ததால் மரண பயம் நீங்கிற்று. நரகில் உழலாமல் நற்கதி அடைய வாய்ப்பு ஏற்பட்டது. முன்னை வினைகள் வேரோடு களையப்பட்டன.

Getting attached to the lotus feet of Him who sped a dart
That spat cruel fire and burnt and destroyed the three
Beauteous citadels of the sky, we have conquered Death,
Done away with cruel inferno and uprooted the twofold karma,

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம்- தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின். 82

மாலை நேரத்துச் சூரியனைத் தோற்கடிக்கும் வகையில் சிவந்த வண்ணம் கொண்ட பெருமானது சடை, அவனைப் புகல் அடைந்தவர்களுக்குப் பொற்கொழுந்தாக இன்பமளிப்பதாகவும், அடையாதவர்களுக்குத் தீக் கொழுந்தாகத் துன்பம் தருவதாகவும் உள்ளது.

The lightning-like lass affirms: “Truly understood the flame-hued
One’s strands of matted hair which put to shame the ruddy rays
Of the setting sun, are like auric shoots to those that take refuge
In Him; to those who move away from Him, they are tongues of fire.

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல்- தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது. 83

சிவனும் மாலும் சேர்ந்து ஓருடலில் இருப்பது பொற்குன்றும் நீலமணிக்குன்றும் சேர்ந்தது போல் உள்ளது.

If asked: “What will it be like when He of the fulgurant and ruddy
Matted hair gets con-corporate with Vishnu?” (The answer is)
“It will be like the close and immense juxtaposition of the golden
Mountain which is like Him and the mountain of sapphire.”

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும்- கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண். 84

சூரியனும் சந்திரனும் தீயும் அவனுக்கு மூன்று கண்களாயின. முப்புரம் எரித்தது அவனுடைய மூன்றாவது கண்ணாகிய தீ.

The eyes of the Triple-eyed are Agni of swelling flame,
Chandra of cool rays and Surya of painful and fierce rays ;
It is the eye in His forehead that witnessed the destruction
By fire, of the three citadels of the cruel and hostile Asuras.

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும்- விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். 85

பெருமானைக் காணும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால், நான் கண்ணாரக் காண்பேன், கைகளால் தொழுவேன், மனத்தால் அவனைச் சிந்திப்பேன், அவனது புகழ் பாடி இன்புறுவேன்.

If I behold the great Lord, will I eye Him longingly,
Fold my hands in ardent obeisance and think on Him
Impassioned? Will I hail Him thus: “O Dancer in the fire!
Lord of the Empyrean!” and feel ecstatic?
Translations: T. N. Ramachandran. Courtesy – thevaaram.org
 
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ்- சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம். 86

இறைவனின் நல்ல பேய்க்கணங்களில் ஒன்றாகும் நிலை எனக்குக் கிடைத்துள்ளது. இது எனக்குப் பொருந்துமா பொருந்தாதா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. பிற பேறுகள் எதுவும் எனக்கு வேண்டாம்.

He sports a vertical eye in His forehead revealing a little of it ;
We have become one among His lofty Bhoota-Host ;
Whether this beatitude lasts or not we desire not
Aught else though we can come by it.

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய்- நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள். 87

சிவனுக்கு நாமாலை சூடியும் பாமாலை சூடியும் வணங்கி அவனே நமக்கு எல்லாம் என்னும் ஒரே அறிவினைப் பற்றி நின்றால் நம்மை வினை அணுகாது.

If we deck the golden feet of our Lord with garlands
Woven of hymns and blooms, and if we, by love, gain
Peerless Gnosis, what will become of the murk that is
Ever-assailing Karma ? Surely it will cease.

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ- அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. 88

இறைவா, உன் கண்டத்தில உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

O Lord who blesses us with goodly grace ! O One that sports
The bright crescent on Your hirsutorufous matted crest !
How shall I describe the blaze of Your neck ? Is it the very form
Of darkness, or a great nimbus, or a flawless sapphire ?

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய்- ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு. 89

மன்மதனை எரித்தவனே, ஞானம் மிக்கவர் சிந்தையில் கோயில் கொண்டவனே, நஞ்சு உண்ட உன் வாய் கறைபடாமல் இருக்க, உன் கண்டம் கறைபட்டது எவ்வாறு என்று கூறுவாயாக.

You looked the puissant Manmatan of bright bow
Into cinders ! You abide in clarified chinta ! How is it
That Your neck alone turned dark whilst the mouth
That ate the bright venom is as it ever is ? Un-riddle this.

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி- சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. 90

உன் தலை மீது உள்ள கங்கை, கட்டுக்கடங்காமல் மிகப் பெருகின் அங்குள்ள அரவும் மதியும் அவ்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். அப்பொழுது நீ என்ன செய்வாய் ?

O our Father, tell us what you will do when the billowy Ganga
That rolls on drawing the white crescent and the bright,
Fierce-looking, raging and crawling serpent, begins
To swell and destroy Your cool crescent and overflow ?
Translations: T. N. Ramachandran, courtesy – thevaaram.org
 
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்- தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென் 91

சிவனைப் பற்றிக் கூறும் புகழுரை, பொருளுரை ஆகியவற்றை எல்லாம் உணர்ந்தோம். இனி வேறு உணரற்பாலது யாதுமில்லை. அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம். இஃது அறியாது, நீவிர் எம்மைப் புறங்கூறுதல் ஏன் ?

Lo, as a servitor unto the roseate feet of him in whose ruddy
Matted hair, the billowy Ganga flows, chanting the mystic pentad,
We comprehended him; all things needed here and hereafter
Are ours. Why do you talk ill of us behind our back ?

என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும்- பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன். 92

என்னை ஆளாக உடைய தலைவன் அவன். ஒப்பாரும், மிக்காரும் இல்லாது தனி முதல்வனாய் நிற்பவன். பெரியவனாகிய தனது தன்மையைத் தான் எண்ணாமல் எளியவனாய் வந்து அருள் புரிபவன்.

He of the pure matted hair whose curls look as though they are
Wrought of gold, is the One who is the treasure that dispenses
Grace to the celestials ; it is He who owns me ; He, the one
And only God, stands apart ; He is unaware of His greatness.

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன்- அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93

பவள வண்ண மேனியும், கருத்த கண்டமும் கொண்ட அவ்வானவர் தலைவன் பால் பயன் ஏதும் கருதாது மெய்யான அன்பைச் செலுத்துவாயாக, என் நன்னெஞ்சே.

O goodly heart ! It is He who is the Lord of the celestials ;
His complexion is like the beauteous coral ;
It is His neck that has a dark patch ; unto Him,
In true love, be ever linked

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ- பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள். 94

மேகம் போல் நிறமுடைய திருமாலைத் தன் இடப வாகனமாகக் கொண்ட பெருமானே, உமை அம்மை எப்பொழுதும் உன்னுடனேயே சேர்ந்திருப்பதற்குக் காரணம் என்ன? நீ அவளைப் பிரிய விரும்பவில்லையா, அல்லது அவளை விட்டுவைக்க வேறு இடம் இல்லையா, அல்லது தனியாக இருக்க அவள் அஞ்சுகிறாளா ?

O Lord who rides a cloud-like massive bull ! You part not
From the Mountain’s Daughter. Is it because of Her great longing
For You ? If it because You have no place to go ? Or does She
Fear to remain alone, parted from You ? Please enlighten us.

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே- தவளநீ
றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார். 95

உன் பாகம் பிரியாத உமை அம்மை, தலையில் அமர்ந்த கங்கை ஆகிய இருவரில் உமக்கு மிகப் பிரியமானவர் யார் ?

She, the Lady of a great family, parts not from Your frame ;
So too is she who is Ganga. O Lord who is with white ash
And bones adorned ! You part from neither of them ;
Be pleased to tell us, who of the two, is closer to You in love ?
Translations: T. N. Ramachandran.courtesy – thevaaram.org
 
This is the concluding portion of Karaikal Ammaiyar's Arputha Thiruvandadhi. Note that the last word of the 101st song is the first word of the first song.
There are two more books of Ammaiyar, Thiruvirattai manimalai containing 20 songs and Mootha thiruppadhikam consisting of 22 songs. I will post them depending upon the feedback I receive for these postings.


ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச்- சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. 96

அரனை நாம் உரிமையோடு அன்பு பாராட்டி நெஞ்சினுள் அடைத்து வைத்தோம். அன்பு இல்லாதவர் அவனை எவ்வாறு காணமுடியும் ?

We have with the mantle of love concealed Him
Who is Hara ; by our glorious kinship and by gramarye
We have, in our peerless heart, concealed Him from view.
Who indeed can henceforth behold Him at all ?

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ- நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல். 97

நீ முன்பு முப்புரத்தை எரிக்கப் பயன்படுத்திய தீயை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்? உன் கைக்குள்ளேயா அல்லது ஏழு உலகங்களிலுமா ?

At the end of Yuga You rage and burn up with swelling fire
The universe ; have You (now) kept the ruddy fire
That invaded the three worlds, hidden in the seven worlds ?
Or with great valiancy do You hold it in Your palm ?

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ- கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு. 98

சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனே, உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

Holding fire You dance to the tinkling of Your heroic anklet
In the fire of the crematory where ghouls dance.
Did Your hand turn red as it held the fire ? Or did the fire
Grow ruddy from its contact with Your beauteous palm ? Un-riddle this.

செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ- செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம். 99

யாருக்காக நீ நடனமாடுகிறாய்? உமை காணவா, அல்லது பேய்கள் காணவா ?

O One who sports a five-headed serpent that spits venom
With its mouth agape ! Is it for the beholding of Her
Of lovely young breasts or for that of the throngs of ghouls
In the fiery crematory, that You dance ? For whose sake this dance ?

நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும்- அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னேறு
உருமேறோ ஒன்றா உரை. 100

பொன் ஒப்பாய், நின் ஏறு நடக்கில் பூமி நடுங்கும். கண் விழித்துப் பார்த்தால் எழும் தீயால் திசைகள் வேகும். கதறினால் உலகம் முழுவதும் கதி காணாது கலங்கும். மலையின்கண் நின்று சண்டை இடும் சிங்கமும், மேகத்தினின்றும் தோன்றுகின்ற இடியும், உன் ஏறும் ஒன்றாக உள்ளனவே.

O Golden-hued ! When Your bull walks, earth trembles ; ablaze is
The direction when it looks thitherward ; when it bellows
The whole world gets scared. Is Your mount a lion of the mountain
Or a skiey thunderbolt or truly a bull ? Clarify this.

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல்- பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து. 101

காரைக்கால் பேய் சொன்ன இம்மாலை அந்தாதி வெண்பாக்களை அன்போடு பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்.

They that hail this garland of anaphoretic venpa verses
Woven with melting love by Kaaraikkaal Pey, will in love
Insatiate, reach the presence of the merciful Lord
And hail Him in unending devotion ever after.
Translations: T. N. Ramachandran. Courtesy- thevaaram.org
 
திருவிரட்டை மணிமாலை

This book of Ammaiyar contains 20 verses. Composed in two kinds of metres, they occur alternately.

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே. 1

கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது அச்சமுற்று, சோர்வுற்று வாளா இருக்கும் நிலையை விட்டுவிடு. பெருகி மோதுகின்ற கங்கையையும் வானத்தில் வளருகின்ற வளைவையுடைய சந்திரனையும் எருக்கையும் தலையில் கொண்ட ஈசனை மனம் சலியாது வணங்கு.

O heart ! Avoid abiding here all wilted and scared
And reduced to bones (when) assailed by the sweeping
Onslaught of cruel misery ; hail Him unwearied ;
He is the Lord-God whose crest is adorned
With the Ganga that flows dashing against its banks,
The white crepuscular crescent and the madar flower.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy –thevaaram.org
 
Thiru Irattai mani malai - song 2

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 2

கங்கையையும், திங்களையும், எருக்கையும் அணிந்த அந்த ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் ஏனையோரையும் தலைவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவரை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் பிரான்.

The Lord never causes them to get born on earth
Who firmly think that there is no God but He
And install Him in their manam in humble bashfulness
And also articulate His praise never forgetting Him.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy- thevaaram.org
 
பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றை பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே. 3

தன்னைப் பிரான் என்று பன்னாள் பரவித் தொழுவாரது இடரைக் கண்டு வாளா இராது நிற்கின்ற ஈசன். வண்டினம் கிளறிப் போர் செய்கின்ற கொன்றைக் காட்டில் பொம் என்ற ஒலியுடன் கூடிய மென்மையான கங்கைத் துறையில் பாம்பு நின்று ஒலி செய்யும் சடைமுடி கொண்ட அந்தணன் அவன்.
His matted hair of ruddy gold is adorned
With Konrai flowers which are buzzed and kindled
By chafers ; there the serpent of venomous sacs stands hissing :
Such is He, the long-haired Brahmin.
He is indeed the Lord who will not passively witness
The misery of worshippers who hail Him
For days on end as the Lord God.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி. 4

அவ்வந்தணனைத் தஞ்சம் அடைந்தார் துயரில் ஆழாமல் காப்பாற்றப்படுவர். தீயிலிட்டுத் தூய்மைப் படுத்திய பொன் அணிகளை அணியாமல் அரவை அணிந்த அவனை, நெஞ்சே, இனியாகிலும் நினை.

He, the Brahmin, is the mighty One that comes to them
Who take refuge in Him and saves them from rebirth ;
Lo, He but wears the killer-serpent and not the flowers
Of auric konrai which burgeon in burnches ; O heart, what may this be?
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே. 5

.முப்புரத்தையும் ஒரு அம்பினால் எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள கங்கையை பாகம் பிரியாத மலைமங்கை காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய் ?

O our Sankara who fixed well a long and peerless dart
To the bow in your hand to gut the triple, resentful citadels
Or the sky with ruddy fire ! Tell me what will betide you
Should She-the daughter of the Mountain, the one
Whose lips are ruddy like kovvai fruit and the one
Who is concorporate with you -, now behold
Lady Ganga in you long and flowing matted hair ?
Translation: S. A. Sankaranarayanan. Courtesy- thevaaram.org
 
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை. 6

இன்பத்தைச் செய்பவனும், தாழ்ந்த சடையுடையானும், சினம் மிகுகின்ற பாம்பை அணிந்த புண்ணியனும், கூற்றுவன் வரும் நாளில் ஆ! ஆ! என்று இரங்கி துயருறாமல் காப்பானும் ஆகிய அவனை ஒழியாமல் சொல்லுவாயாக, நெஞ்சே.

O heart, for ever hail Him who is Sankara, the One
Of matted hair that dangles low, the righteous One who
On that matter hair sports a soaring serpent and the One
Who on that day saves you from the onslaught of misery.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டத்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே. 7

கீழே வீழ்ந்து ஓடும்பொழுது அலை வீசுகின்ற கங்கையையும், வாசனை வீசுகின்ற கொன்றை வன்னி ஆகியவற்றையும் அணிந்த வேதியனான உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்று உளது. செவ்விய வானத்தைச் சேர்த்துக் கட்டியது போன்ற உன் சடை மேல் சீறிக் கொண்டிருக்கின்ற பாம்பை என்றும் அணியாதே.
O Brahmin who sports on your ruddy matted hair
Tha Ganga that flows down and spreads every where
With great waves, melliferous konrai and fragrant vanni
Wreaths ! If you be pleased to listen to what I say
I have something to convey you. Pray, do not sport
On your crest the hissing and wrathful snake
That crawls on your ruddy and beauteous garlands.
Translation: S. A. Sankaranarayanan. Courtesy – thevaaram.org
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top