இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே- இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். 16
இறைவன் அருள் சேர்ந்ததால் நாம் உய்ந்தோம். இனி எந்த இடரும் இல்லை. பிறவிக் கடலைக் கடந்து விட்டோம்.
From now on we stand redeemed; we are blessed with the grace
Of the Lord; o heart, no more will we suffer; we have now
Crossed the roaring ocean of interminable transmigration
Which mothers the sea of Karma.
Translation: T. N. Ramachandran
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற்- காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். 17
உலக முதல்வன் அரனை, கடவுள் என்று எவனும் இல்லை என கூறுவார் சாதாரணமாகக் காண்கிறார்கள். பணிவு உடையோர் கை தொழுது காண்கிறார்கள். ஆனால் காதலோடு காண்பவர்கள் தாம் அவனைத் தம் உள்ளத்தினுள் சோதியாக உணர்கிறார்கள்.
Hara who is the Primal Cause of the hoary world, can be
Beheld by them that fold their hands in adoration
And by them that eye Him in love; He manifests
As light in their chinta who see Him with their inner eye.
Translation: T. N. Ramachandran
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று. 18
அரன், அரி, அயன் என எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாமே அரக்கனைச் செருக்கடக்கிய அவன் ஒருவனையே குறிக்கும்.
With His unique toe He quelled the might of the Asura;
Shall I call Him Hara or the Four-faced
Or Hari the supreme one? Alas, I canst not, this day,
Comprehend His (multifoliate) Godliness.
Translation: T. N. Ramachandran
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை- என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. 19
மூவேழ் உலகமாய் விரிந்து நின்றான். உலகம் அவனை உணரவில்லை. மூவராய்ப் பிரிந்து நின்றான். ஆயினும் மற்ற இருவராலும் அவன் அறியப்படவில்லை. இத்தகைய விசித்திரனைக் காணும் அறிவு இன்று நமக்கு எளிதாகி விட்டது.
He wears a never-ageing crescent; He becomes the worlds
Three times seven; as of yore. He was beyond the ken
Of Vishnu and Brahma’s comprehension; yet for us,
He is easy of access even to this day.
Translation: T. N. Ramachandran
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே- அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளுந் தானே அவன். 20
அவன் சூரியன், சந்திரன், ஆகாயம் ஆகிய தூலப்பொருளாக மட்டுமன்றி அவற்றின் உள்ளுறையாகிய மெய்ப்பொருளாகவும், அம் மெய்ப்பொருளை அறிபவனாகவும், அதனை அறிவிப்பவனாகவும், அறியும் அறிவாகவும் ஆகி நின்றான்.
He is the Knower ; He is the Paraclete; He is the Buddhi
That understands ; He indeed is the reality that is apperceived ;
He is sun, (moon), earth, (water, fire, air) and ether ; it is
Indeed all these.
Translation: T. N. Ramachandran