• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்மா... எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்க&#300

Status
Not open for further replies.
அம்மா... எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்க&#300

அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவன், பகிர்ந்து கொண்ட வலியுடன் எனதையும் செர்த்தேழுதுகிறேன் !!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே!!!


அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மளிகை கடைக்கு "
போய்வா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?.. போம்மா
என நான் சொன்னேன்..!!

அம்மா !!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டலாம் என நீ சொல்ல
பத்து நிமிடமா ..!, நான் வெளியில
சாப்பிட்டு கொள்கிறேன் என சொல்லி
நான் கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க!!!

இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வறண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முணுமுணுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!


என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , ஏக்கத்தையும் !!

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
என் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்பிடப்பா"
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!



 
இருக்கும்போது வெறுப்பாக இருக்கும்.:bored:

இல்லாதபோது கரும்பாய் இனிக்கும். :love:

மனிதமனம் புரிந்து கொள்ள முடியாதது!

மனித இனம் தெரிந்துகொள்ள முடியாது! :confused:

திருமணத்துக்கு முன்பு உருகும் மகன்கள்
திருமணத்துக்கு பின்பு உறைவது என்??? :smow:


அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவன், பகிர்ந்து கொண்ட வலியுடன் எனதையும் செர்த்தேழுதுகிறேன் !!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே!!!


அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மளிகை கடைக்கு "
போய்வா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?.. போம்மா
என நான் சொன்னேன்..!!

அம்மா !!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டலாம் என நீ சொல்ல
பத்து நிமிடமா ..!, நான் வெளியில
சாப்பிட்டு கொள்கிறேன் என சொல்லி
நான் கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க!!!

இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வறண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முணுமுணுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!


என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , ஏக்கத்தையும் !!

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
என் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்பிடப்பா"
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!



 
Reply to your Thread....

அன்புள்ள அம்மா ,

மன்னித்து விடுங்கள், அலுவலக வேலையாக வெளியூர் சென்றதால் உங்களுக்கு பதில் அளிக்க முடியாமற் போனது. :sorry:

ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கே போவேன் அம்மா. இன்னும் நான்கைந்து மாதங்களாவது ஆகும். :Cry:

நன்றிகளுடன்
அசோக்






My guess is that you have gone back

to your home and mom and quit this thread/ forum!!!
 
Dear Mr. Ashok,

I do not like :Cry: babies! :nono:

My two sons have spent more years away from home than at home with us.

It is an essential part of growing up and becoming independent.

If you can FIND a Mother in me, I am sure you will NEVER lack or miss your mother at anytime - since the world is still full on many kind hearted old ladies.

DO not waste your time and energy in :Cry: but do something which will make your parents - especially our mother feel proud of you.

Life is too precious to be wasted in :Cry:
 
திருமணத்துக்கு முன்பு உருகும் மகன்கள்
திருமணத்துக்கு பின்பு உறைவது என்??? :smow:


" அது எப்படி எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் !!! :)

தாய் பாசம் என்றுமே உறையாது அம்மா !!!!.... திருமணத்துக்குப் பின் அதன் வெளிப்பாடு மட்டும் குறைகிறதே தவிர, உள்ளிருக்கும் பாசம் என்றுமே குறையாது... நீங்களே சொல்லுங்கள் , எந்த கண்ணை அதிகம் நேசிக்கிறீர்கள் என்று !!! அது போலத்தான் குடும்பத்தில் மனையாளும் அம்மாவும்...!!!

மன்னியுங்கள் உங்களது இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .....

நன்றிகளுடன்
அசோக்
 
நான் இத்தகைய பதில் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் .....

இனிமேல் அழ மாட்டேன் :)



நன்றிகளுடன்
அசோக்
 
Last edited:
மனைவியின் தாசர்களாகச் சிலர் மாறிவிடுவர். அவர்களே அன்னையை மதிக்காது மறந்துவிடுவர்.

இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை! :director:
 
அம்மா அவர்களுக்கு,

நீங்களே இதற்கு வழி சொல்லுங்கள் என்ன செய்து அவர்களை திருத்தலாம் என்று ...." அந்த தாசர்களுக்கு "

ஆனால் அம்மா என்னை அதில் சேர்க்காதீர்கள்.... !!!

:)

நன்றிகளுடன்
அசோக்




மனைவியின் தாசர்களாகச் சிலர் மாறிவிடுவர். அவர்களே அன்னையை மதிக்காது மறந்துவிடுவர்.

இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை! :director:
 
எனக்குத் தெரிந்து வழி இல்லை, அசோக்! அவர்களே நல்வழியை உணர வேண்டும்.

நீங்கள் அந்த வகை தாசன் இல்லை என அறிந்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top