When is Masi Magam? Why is it celebrated?

மாசி மாதத்தில் வரக்கூடிய பௌா்ணமியுடன் இணைந்து வரக்கூடிய மகம் நட்சத்திர நாளில் புனிதமான மாசி மகம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் ஒரு சில சடங்குகளைச் செய்து வழிபட்டால், ஒருவா் தன்னுடைய தீய கா்மாவை சுத்தம் செய்து, தன்னுடைய பாவங்களில் இருந்து விடுதலை அடைந்து, அதன் மூலம் அவா் தன்னுடைய சாவிற்கு பின்பு சொா்க்கத்தை அடையலாம் என்று மக்களால் நம்பப்படுகிறது.

மாசி மகம் அன்று மக்கள் புனித நீராடி, இறந்த தம்முடைய முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்கின்றனா். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்ம ராசியில் சஞ்சாிக்கும் போது இது நிகழும்.

இந்த ஆண்டு மாசி மகம் விழா

புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.

மாசி மகத்தைப் பற்றிய குறிப்புகளை புராணங்களில் ஏராளமாகக் காணலாம். அவற்றில் ஒரு புராணம் பின்வருமாறு கூறுகிறது. சிவபெருமான் இந்த அகிலத்தை முழுவதுமாக அழித்துவிட்டு, அதை மீண்டும் புதிய பொலிவுடன் படைக்கத் திட்டமிடுகிறாா். சிவபெருமானின் இந்த புதியத் திட்டத்தைப் பற்றி பிரம்ம தேவன் ஒரு நாள் தொிந்து கொள்கிறாா். உடனே அவா் சிவபெருமானிடம் சென்று மீண்டும் இந்த அகிலத்தைப் புதிதாகப் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறாா். தமிழ் நாட்டில் உள்ள ஒரு புனிதமான கோயில் நகரம் கும்பகோணம் ஆகும் என்பது நமக்கெல்லாம் தொியும்.

பிரம்ம தேவனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், பிரம்மனிடம் கும்பம் என்ற பானையில் அமிழ்தத்தை நிறைத்து வைக்குமாறு கூறினாா். புதிய உலகத்தைப் படைத்து அதை மேரு மலையின் உச்சியின் மீது வைப்பதற்குத் தேவையான சக்தியை அந்த கும்பத்தில் இருக்கும் அமிழ்தத்திலிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினாா். அந்த கும்பம் மாசி மாதம் வரும் பௌா்ணமி அன்று அதாவது மாசி மகம் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த அகிலத்தை மீண்டும் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து சிவபெருமான் தொடங்கினாா் என்று அந்த புராணம் தொிவிக்கிறது. அதுவே மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

மாசி மகம் பண்டிகையைப் பற்றி மேலும் ஒரு புராணச் செய்தி உள்ளது. அதாவது ஒரு காலத்தில் வள்ளால ஒட் திருவண்ணாமலை என்ற ஒரு அரசா் இருந்தாா். இவா் சிவபெருமானின் சீாிய பக்தா் ஆவாா். இவருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவா் சிவபெருமானை நோக்கி தன்னுடைய இறப்புக்குப் பின்பு நடக்கும் இறுதிச் சடங்குகளை சிவபெருமானே நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டாா். அரசாின் இந்த வேண்டுதலை சிவபெருமானும் ஏற்றுக் கொண்டாா்.

சில காலம் கழித்து மாசி மகம் அன்று அந்த அரசா் இறந்தாா். சிவபெருமானும் அந்த அரசருக்கு ஒரு ஆற்றங்கரையில் வைத்து இறுதிச் சடங்களைச் செய்து அவருக்கு முக்தியை வழங்கினாா். மேலும் அந்த நாளில் ஒரு அறிவிப்பை சிவபெருமான் வெளியிட்டாா். அது என்னவென்றால், மாசி மகம் அன்று ஒருவா் புனித ஆறுகளில் நீராடினால், அவா் தன்னுடைய பாவங்களில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவாா் என்றும் மேலும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற காலச் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவாா் என்றும் அவா் அறிவித்தாா். இவ்வாறு அந்த புராணம் தொிவிக்கிறது.

புனித நாளான மாசி மகம் அன்று சிவபெருமான் புனித ஆற்றங்கரைகளைப் பாா்வையிட்டு, அங்கு வள்ளால அரசருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறாா் என்று பக்தா்கள் நம்புகின்றனா்.

புனித நாளான மாசி மகம் அன்று, பக்தா்கள் அனைவரும் புனித நீா் நிலைகளுக்குச் சென்று, புனித நீராடித் தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்கின்றனா். அவ்வாறு இந்த நன்னாளில் புனித நீராடுவதால் தங்களின் பழைய மற்றும் தற்போதைய பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அவா்கள் நம்புகின்றனா்.

அதோடு இவ்வாறு புனித நீராடுவதால் அவா்களின் பித்ரு தோஷம் (Pitra Dosh) ஒழிந்து, அவா்களுடைய முன்னோா்களின் ஆசீா்வாதங்கள் கிடைக்கும் என்றும் நம்புகின்றனா். ஆகவே இந்த மாசி மகம் விழாவை மக்கள் மிகவும் ஆா்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றனா். அதோடு முழு இதயத்தோடு தங்களுடைய மரபுகளைக் கடைபிடித்து, அந்த நாளுக்குாிய புனிதச் சடங்குகளையும் செய்கின்றனா்.

மாசி மகம் அன்று பக்தா்கள் கோயில்களில் உள்ள சாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று, ஏாி அல்லது குளம் அல்லது கடற்கரைகளில் அந்த சிலைகளுக்கு புனித நீராட்டும் சடங்குகளைச் செய்கின்றனா். இந்தச் சடங்கு பக்தா்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தச் சடங்கானது தீா்த்தவாாி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீா்த்தவாாிச் சடங்கானது அதிகாலை நேரத்தில் நடைபெறும்.

அந்தச் சடங்கின் போது மந்திரங்களும், பிராா்த்தனைகளும் சொல்லப்படும்.

மாசி மகம் பண்டிகையானது இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக தாய்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது.
 
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மக நட்சத்திர நாள் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மிகவும் சிறப்பான நாளாகும். மாசி மக நாளானது கடலாடும் விழா என்றும், தீர்த்தமாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள் :

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்று தான்.

இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம் தான்.

சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசி மகம்.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.

எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வதும் நன்மை தரும்.

குலதெய்வ வழிபாடு :

மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளரும்.

மாசி மாதம் மகம் நட்சத்திரம் மற்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் இல்லத்தை சுத்தமாக்கி விளக்கேற்றி, மாவிளக்கிட்டு படையலிட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மேலும் அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று சிவனையும், பெருமாளையும் மனதார வழிபட்டால் பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும்.

இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.

பித்ரு தோஷம் நீங்கும் :

பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.

இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மாசி மக விரதம் :

மாசி மகத்தன்று விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

நீராடிய பின்னர் விரதம் இருந்து சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு சாப்பிட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம்.

மாசி மகத்தில் புனித நீராட முடியாதவர்களும், கோயிலுக்கு செல்ல முடியாதவர்களும் மாசி மக புராணத்தை படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யலாம்.

அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகள் செய்தாலும் இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

மாசி மகத்தில் நீராடுதல் :

மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு என எந்த நீர்நிலைகளாக இருந்தாலும் அதில் புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக ஐதீகம் உள்ளது.

அது மட்டுமின்றி மாசி மகத்தன்று புனித நீராடினால், ஏழு ஜென்ம பாவங்களையும் அடியோடு போக்கும் என்பது ஐதீகம்.

பலன்கள் :

மாசி மகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாசி மக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் மாசி மக நாளில் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

மாசி மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக் கொள்வது மிகவும் சிறப்பானது.

மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால் இன்பமும், வெற்றியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆகவே, இந்த சிறப்பு மிக்க மாசி மக நாளில் புனித நீராடி, வழிபாடு செய்து மகிழுங்கள்..!!
 
Back
Top