Varamahalakshmi vratam

You can check these threads


 
ஶ்ரீ வரலக்ஷ்மி வ்ரதம் (நோன்பு)
வரும் 16-8-‘24 வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி வ்ரதம் என்கிற நோன்பு வருகிறது. இது கன்னிப்பெண்களுக்கும் ஸுமங்கலி
களுக்குமான ப்ரத்யேகமான நோன்பு. பல ப்ராம்ண குடும்பங்
களில் இந்நோன்பு அனுஷ்டானத்தில் இருக்கும். சிலவற்றில் இராது. குறிப்பாக இப்பதிவில் புதிதாக மணமான பெண்ணுக்கு நோன்பு ‘எடுத்து வைப்பது’ என்பது பற்றியே விளக்கப்
போகிறேன்.
கல்யாணத்துக்கு முன்னரே பெண்வீட்டார் தங்கள் பெண் செல்லும் புக்ககத்தினருக்கு வரலக்ஷ்மி நோன்பு அனுஷ்டானம்
உண்டா என்பதை கேட்டறிய வேண்டும். உண்டென்றால் கல்யாண சீர்களுடன் வெள்ளியில் அம்மன் முகமும் கலச சொம்பும் வாங்கிக் கொடுக்க வேண்டும். நோன்புக்கு முன்னர் நிறைய சீர் செய்ய வேண்டும். புதிதாக மணமான பெண் முதலாம் ஆண்டில் எந்த மாதத்தில் நோன்பு வந்தாலும் அப்போதே நோன்பு நூற்க துவங்க வேண்டும். தவிர்க்க முடியாத
ஆஶௌசம், கர்ப்பம் இவற்றால் நோன்பு துவங்க இயலாமல் போகலாம். அப்படிப்பட்ட நேர்வுகளில், அடுத்து வரும் ஆவணி மாதத்தில் நோன்பு வரும்போது தான் துவங்க வேண்டும்.
முதல் நோன்பை பெண்ணின் தாயாரே எடுத்து வைக்க வேண்டும். தாயாரின் குடும்பத்துக்கு நோன்பு இல்லை என்றாலோ, தாயாருக்கு ஏதாவது அஸௌகர்யம் என்றாலோ மாமியார் எடுத்து வைக்கலாம்.
நோன்பின் போது, பிறந்தகத்தார் நிறைய சீர் பொருட்கள் தர வேண்டும். அவற்றில முக்யமானவை இவையாகும். மஞ்சள், மஞ்சள்தூள், அர்ச்சனை குங்குமம், பழம், புஷ்பம்- தொடுத்தது, உதிரி, அம்மனுக்கு மாலை. தாழம்பூ. வாழைக்கன்று 2/4 . வாழை இலை. கலசத்தில் போட பிச்சோலை- கருகமணி. ஆறு தேங்காய், பச்சரிசி, வெல்லம் etc.
நோன்பிற்கான பூர்வாங்க வேலைகள் முதல் நாளே துவக்கப்பட வேண்டும். முதலாவது மண்டப நிர்மாணமும் அலங்காரமும். மாவு இழை படிக்கோலம் இட்டு செம்மண்/காவி தீத்தி அதன் மீது மண்டபம் நிர்மாணிக்கணும். மேஜை/பெரிய ஸ்டூல். நான்கு கால்களில் வாழைக்கன்று. சுற்றி மாவிலைத்தோரணம். ஸீரியல் லைட் அலங்காரம். மூன்று மணைப்பலகைகளில் இழைகோலம்
ஒரு பலகையை மண்டபத்துக்கு அடியில் வைத்து அதன் மீது நுனி வாழையிலையை வைத்து அரிசி பரப்ப வேண்டும்.
)
அம்மன் கலசம் தயாரிப்பு. (மடி வஸ்த்ரத்துடன்). வெள்ளிக்
கலசத்தில் நான்கு பக்கங்களில் சந்தனம் குங்குமம் இடவேண்டும்.கொஞ்சம் அரிசி, ஒரு லெமன், பிச்சோலை கருகமணி, ஏதேனும் ஒரு நாணயம் ஆகியவற்றை கலசத்துள் போடணும். ஒரு மாவிலைக்கொத்தை கலசத்தில் சொருகி, அதில் மஞ்சள் தடவி குங்கும மிட்ட தேங்காயை பொருத்தணும்
அதில் அம்மன் முகத்தை பொருத்தணும். ஒன்றுக்கு மேற்பட்ட முகங்கள் பொருத்த வேண்டியிருக்கலாம். நோன்பு எடுத்துக்
கொள்ளும் பெண்ணுக்கு தனிக்கலசம் ஸ்லாக்யம். ஜோடிக்
கப்பட்ட கலசத்தை இழைகோலமிட்ட மணையில் வைத்துக்
கொள்ளவும்.
மாலை விளக்கு ஏற்றும் நேரம். வீட்டு உள்பக்கம் வாசற்படி
யருகில் கோலமிட்டு அதன்மேல் மணையுடன் ஜோடிக்கப்பட்ட
கலசத்தை வைக்கவும். இருபுறமும் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். வெண்பொங்கல் நைவேத்யம் செய்து கற்பூர ஹாரத்தி காட்டவும். நமஸ்காரம் செய்து ப்ரார்த்தனை செய்து கொள்ளவும். “ லக்ஷ்மி நீ ராவேமா இண்டிக்கு” பாடலுடன் அம்மாவும் பெண்ணும் சேர்ந்து மணைப்பலகையுடன் கலசத்தை ஜாக்ரதையாக எடுத்து வந்து அலங்கரித்து வைக்கப்
பட்டுள்ள மண்டபத்தின் மேல் தட்டில் வைக்கவும். நோன்பு நோற்கவிருக்கும் எல்லா சுமங்கலிகளுக்கும் வெண்பொங்கல்
தான் டின்னர்.
வெள்ளிக்கிழமை. பத்தரை பன்னண்டு ராகு காலம். அதற்குள் பூஜை முடியும்படி வாத்யாரை ஏற்பாடு செய்து கொள்ளவும். வாத்யார் வந்ததும் பூஜைக்கு வேண்டுமான ஸகல த்ரவ்யங்
களையும் கேட்டு வாங்கிண்டு ப்ரிலிமினரீஸை செய்வார். அம்மன் நைவேத்யத்துக்கு தேங்கா பூர்ண மோதகம், எள் மற்றும் உளுத்தம்பருப்பு பூர்ண கொழக்கட்டை, வெல்ல பாயசம், மஹா நைவேத்யம்(அன்னம்) ரெடி ஆயிடுத்தா. வாத்யார் மந்த்ரம் சொல்லச்சொல்ல நோன்பு எடுத்துக்கற பொண்ணு பூஜை பண்ணணும். அப்போதான் மேலே வச்சிருக்கற கலசத்தை கீழே எடுத்து வச்சுண்டு பூஜைய ஆரம்பிக்கணும். வாத்யார் சாங்கோபாங்கமா பண்ணிவைப்பார். மஞ்சள் சரடுகளையும் நைவேத்யமா வைக்கணும். நைவேத்யம் ஆச்சு. கற்பூர ஹாரத்தி
நமஸ்காரம். ப்ரார்த்தனை. முதலில் அம்மன் கலசத்துக்கு ஒரு சரடு சார்த்தணும். சரடு நடுவில புஷ்பம் கோத்திருக்கணும்.
சரடு கட்டிக்கப்போறவா இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்
துண்டு அதுல வெற்றிலை பாக்கு, பழம் தேங்காமூடி இவற்றை வைத்துக்கொண்டு பெரியவா கிட்ட நீட்டி சரடு கட்டிக்கணும். வலது கை மணிக்கட்டுல சரடை கட்டி முடிச்சுல குங்கும பொட்டு வைக்கணும். சரடு கட்டிண்டவா சரடு கட்டி விட்டவா
ளுக்கு நமஸ்காரம் பண்ணி ஆஸீர்வாதம் வாங்கிக்கணும். சுமங்கலியா இருக்கறவா அவா அவா ஹஸ்பண்ட் மடியா இருந்தா அவர்ட்ட சரடு கட்டிக்கறது விசேஷம்.
சாயந்தரம் அம்மனை மணைல வச்சு பாடறதுன்னு ஒண்ணு உண்டு. ஏதாவது சுண்டல் பண்ணி நைவேத்யம். அக்கம்பக்
கத்துக்காறாள மஞ்ச குங்குமத்துக்கு அழைச்சு தாம்பூலம், ப்ரசாதம் தரணும். மஞ்சளும் சுண்ணாம்பும் கரைச்ச ஆரத்தியை அம்மனுக்கு சுத்தணும். ராத்ரீல ஆரத்தியை வாசல்ல கொட்டக்
கூடாது.
மறுநாள் சனிக்கிழமை அம்மனுக்கு புனர்பூஜை பண்ணணும். குளிச்சு மடி உடுத்துண்டு பாலையோ பழத்தையோ நைவேத்யம் பண்ணி கற்பூரம் காட்டணும். அம்மன் கலசத்தை லேசா வடக்கே நகர்த்தணும்.
வரலக்ஷ்மி வ்ரதம் ஸம்பூர்ணம்.
..... பகிர்ந்தது.....
 
Back
Top