vadivudai manikka malai

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே. 99
 
நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில் என் தன்உளத்தில்
ஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே. 100
 
வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
வாழிஎன் உள்ளத்தில் நீயநின் ஒற்றி மகிழ்நரும்நீ
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 101

திருச்சிற்றம்பலம்
 
Status
Not open for further replies.
Back
Top