• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vadivudai manikka malai

  • Thread starter ramachandran girija
  • Start date
Status
Not open for further replies.
மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனே நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
சுகவேநஇ முழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப் பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே. 73
 
வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
பூதங்க ளாய்ப் பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே. 74
 
மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே. 75
 
ஆறாத் துயரத் தழுந்துகின்றேனைஇங் கஞ்சல்என்றே
கூறாக் குறைஎன்குறையே இனிநின் குறிப்பறியேன்
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே. 76
 
எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 77
 
செவ்வேலை வென்றகண் மின்னே நின்சித்தம் திரும்பியெனக்
கெவ்வேலை செய்யேன் றிடினும் அவ்வேலை இயற்றுவல்காண்
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேளை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 78
 
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன்னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 80
 
கல்லாரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையே
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 81

nava 11.jpg
 
சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலுபைங்கிள்ளாய்
சுந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
மந்தர நேர்கொங்கை மங்கை வடிவுடை மாணிக்கமே. 82
 
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 83
 
பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
காவாய் எனஅயன்காவாய் பவனும் கருதுமலர்
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 84
 
தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே. 85
 
களந்திரும் பாஇக் கடையேனை ஆளக்கருணைகொண்டுன்
உளத்திரும் பாமைக் கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
குளத்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
வளந்திரும் பாவொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 86
 
ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
தோரணம் பூத்த எழில்ஒற்றி யுர்மகிழ் சுந்தரிசற்
காரணம் பூத்த சிவைப்பார்ப் பதிநங் கெளரிஎன்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே. 87
 
திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎங்
கருவல்லி நீக்குங் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
மருவல்லி யென்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே. 88
 
உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண்டுவக்குமிள
நடையென்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
படையென்ன நீள்விழி மின்னேர் இடைப் பொற் பசுங்கிளியே
மடைமன்னு நீரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 89
 
கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
பொற்பதங் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
சொற்பத மாய் அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச் சுடரே
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 90


nava 12.jpg
 
நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
முன்நால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
மன்னால் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே. 91
 
நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன்ஈது
என்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 92
 
அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே. 93
 
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே. 94
 
ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல்
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 95
 
பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையிற்
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
அரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 96
 
காதரவால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 97
 
பொன்னுடை யார் அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
என்னுடை யார்எனஏசுகின் றார்இஃ தென்னை அன்னே
மின்னுடையாய் மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே. 98
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top