Thiruvaheendrapuram Kothandaramar

Status
Not open for further replies.
கோதண்டராமன்

பல்லவி

கோதண்டராமன் பாதம் பணிந்தேன்
ஆதரவளித்தெனையாண்டருளவேமண்டுமென

அனுபல்லவி

ஆதவகுலத்துதித்த மாதவன் கேசவன்
பாதகம் புரிந்த அரக்கரையழித்தவன்

சரணம்

நாதோபாசனை செய்த தியாக
ராஜனுக்கருளிய சீதா ராமன்
வேதனை வினைதீர்க்கும் வீரராகவன்
பூதலம் புகழ்ந்தேத்தும் பட்டாபிராமன்

துரிதம்

தந்தைசொல் கேட்ட தசரதராமன்
மாருதி பணிந்திடும் ஸ்ரீஜெயராமன்

Credits:Ananthakrishnan Panchanadam
 

Attachments

  • Thiruvaheendrapuram Kothandaramar.webp
    Thiruvaheendrapuram Kothandaramar.webp
    102.6 KB · Views: 153
Status
Not open for further replies.
Back
Top