Thirumurai

Status
Not open for further replies.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே.
 
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமசிவாயவே

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே.
 
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
 
நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இனபமே என்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியில்லா தன்மையான
சங்கரன் நற்சங்க வெண்குழையோர்க் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்
கொய்மலர் சேவடியினையே குறுகினோமே.
 
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
பால் வெண்நீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே
 
நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்
குன்றுடையானை கூற என்னுள்ளங் குளிருமே
 
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கிரங்கி இருந்தருள்செய்
பாதிரிப் புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்
வைத்த தீவண்ணனே.
 
Status
Not open for further replies.
Back
Top