பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
பலநாள் தேடிய பதில் ஒருநாள் கிடைக்கும்!
மாமனார், நாத்தனார், கொழுந்தனார் என்று எல்லா
உறவுகளின் பெயர்களும் 'னார்' என்று முடிவது ஏன்?
மாமாங்கம் சிந்தித்ததன் பலன் இன்று கிடைத்தது.
மறுக்க முடியாத விளக்கம் ஒன்று - எவராலுமே!
மாட்டுப் (மாட்டிய?) பெண்ணை விடாமல்
மாறி மாறிக் கிழித்து நார் நாராகுவது தான்....
வேலை, தொழில், பொழுதுபோக்கு மட்டுமன்றி
கேலி, கேளிக்கை, ஜாலி எல்லாமே இவர்களுக்கு!
மாமியார் பெயர் எப்படி விட்டுப் போயிற்று?
மாமியார் கிழிப்பதோடு நில்லாமல் மேலும்
அலசிக் காயப்போட்டு அவை பறந்துவிடாமல்,
மேலும் 'கிளிப்'பும் போட்டு விடுவதாலா?
(பின்குறிப்பு)
நார் நாராக்கிவிட 'னார்கள்' இல்லையா?
வேறு யாராவது வந்து சேருவார் பாரீர்!
மற்றிதன் காரணம் - "Nature abhors vacuum "
வெற்றிடத்தை இயற்கை வெறுத்திடும்!
இது பழங்கதை ஆகி விட்டதோ?
அதனால் பாதகம் ஒன்றும் இல்லை !
ஆள் மாறலாம் ....ஆனால் ரோல் மட்டும் என்றும் மாறாது!
மாமியாரின் ரோலை மருமகள் எடுத்துக் கொள்ளலாமே!
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்!' என்றால்
செல்வாக்கு உள்ளவர் வகுப்பதே வாழ்க்கை