• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

The initials can be rightfully called as 'muthal ezhuthu' and also as "thalai ezhuthu" since they can affect a person's life!

Wrong initials make you the wrong person - even when you are the right person

As a wrong person you might be stopped from boarding flight -
making you miss all the connecting flights and throwing your tour plan into a chaos.

But the same carelessness (oversight?) which had lead to the mistake and landed us in a hot soup MAY also come to our aid when the person checking the ID is equally careless!

Well two negatives DO make a positive. So also two slips made by two careless persons may cancel out each other and let you proceed as per your original plan!

Thank God for these small mercies!!!
 
Inferiority or Superiority?

The fact that man knows right from wrong,
proves his intellectual superiority
to the other creatures;
but the fact that he can do wrong
proves his moral inferiority
to any creature that cannot.

Mark Twain.
 
A contribution by Smt. Raji Ram to the list of poets!

இதோ இன்னும் சில கவிஞர்கள்!!

1. ஈசு கவி = ஈயடிச்சான் காப்பி அடிப்பவர்

2. கூ3சு கவி = வாத்து மடையர்

3. கேசு கவி = கவிதையில் வாதாடும் வக்கீல்

4. கே3சு கவி = Gay பற்றி எழுதுபவர்

5. க்ராசு கவி = எல்லோரையும் எதிர்ப்பவர்

6. க்3ராசு கவி = எழுதித் தள்ளுபவர் (Gross = 144 )

7. க்3ரீசு கவி = வழ வழாக் கவிஞர்

8. க்ரேசு கவி = Crazyயாக எழுதுபவர்

9. க்3ரேசு கவி = ஒயிலாக எழுதுபவர்

10. க்ரோசு கவி = கவிதையில் கூவுபவர் (crow)

11. க்3ரோசு கவி = கவிதையை வளர்ப்பவர் (Grow )

12. க்ரைசு கவி = கவிதையில் அழுபவர்

13. சாசு கவி = கவிதையால் சாகடிப்பவர்

14. ச்சீசு கவி = படித்ததும் ச்சீ என்று ஓட வைப்பவர்

15. சூசு கவி = தேர்ந்தெடுத்து எழுதுபவர்

16. சேசு கவி = கவிதையால் துரத்துபவர்

17. ஸைசு கவி = சரியான அளவில் எழுதுபவர்

18. சம்சு கவி = நட்புடன் எழுதுபவர் (Chums)

19. ஸ்ரேசு கவி = ஸ்ரேஷ்டமாக எழுதுபவர்

20. டாசு கவி = டாஸ்மாக் கடையில் அமர்ந்து எழுதுபவர்

21. டாசு கவி = எடுத்தெறிந்து எழுதுபவர் (toss)

22. டூசு கவி = கவிதையால் 'டூ' விடுபவர் :pout:

23. டே3சு கவி = நாட்கணக்கில் எழுதுபவர்

24. டை3சு கவி = சூதாடிக் கொண்டே எழுதுபவர்

25. ட்ரைசு கவி = முயன்றும் கவிதை எழுத முடியாதவர்

26. ட்3ரைசு கவி = வறண்ட கவிதைகள் எழுதுபவர்

27. டோ3சு கவி = கவிதையால் டோ3ஸ் விடுபவர்

28. ட்3ரௌசு கவி = கவிதையால் தூங்க வைப்பவர்

29. ட்3ரம்சு கவி = கவிதைகளை முழங்குபவர்

30. தா3சு கவி = Ghost கவிஞர் (வேறொருவரின் தாசன்)

31. த3ம்சு கவி = த3ம் அடித்தபடியே எழுதுபவர்

32. தீம்சு கவி = ஒரே பொருள் பற்றி எழுதுபவர்

33. பாசு கவி = கவிதையில் பாஸாகி விடுவார்

34. பா3ம்சு கவி = கவிதையால் வெடி வைப்பவர்

35. பீசு கவி = துண்டு துண்டாக எழுதுபவர்

36. பே3சு கவி = அடித்தளம் அமைத்து எழுதுபவர்

37. மௌசு கவி = கவிதை எழுதி மவுசு பெறுபவர்

38. யேசு கவி = ஏசுநாதர் பற்றியே எழுதுபவர்

39.ரம்சு கவி = ரம் அடித்தாலே எழுதுவார்
 
அடையா??? பீடையா???

அதன் பெயர் அடை!
பெருத்து விடும் இடை.

வாங்க வேண்டும் புது உடை.
கூடி விடும் நம் எடை.

டிபன்களில் இது கடை.
செய்ய வேண்டும் தடை

மாறி விடும் நம் நடை.
ஓடி விடும் பெரும் படை!

எப்போது திறக்குமோ மடை?
இதற்குத் துணைவன் வடை.

கொடுக்க வேண்டும் விடை.
இன்னும் என்ன தடை???
 
Thought provoking transgender

Do they really love the attention they get???

They were taller than the average Indian female.
They were darker than the average Indian female.

They were more muscular than the average Indian female.
They were dressed in glittering bright colored sarees.

They had tied up their hair real high on their head and kept
jasmine flowers which were right on top of their heads.

(uchchi vagidu eduththu pichchip poo vachcha kiLigaL???)

They marched like sluts up and down the Railway platform.
Do they really enjoy the unwanted attention they get???
 
Response from another lover of Adai (adai-priyan?)

ஆஹா...'அடை' க்கு ஓர் தடையா...?

'அடை' மழையென எதிர்ப்புகளா...?
'அடை' காத்திடும் பறவையும்!

'அடை' செய்திடும் பெண்மையும்
'அடை' ந்திடும் மகழ்ச்சி

'அடை' யின் 'பக்குவ' பலன் கண்டே...
'அடை' உண்டால் இடை பெருக்குமென்றால்..

'அடை' உண்ணாதவர் ஈர் குச்சியாய் இருப்பாரோ..?
'அடை' யாளம் காணமுடியா மனிதராவாரோ..

'அடை' ந்திடுவர் யாவரும் மகிழ்ச்சிதானே...
'அடை' யென்ற சுவை மிகு உணவாலே.....

நட்புடன்,
டிவிகெ
 
One more response to Adai from an Adai-priyan?

பிரச்சனையை தருவது என்பது அடை
அதை தீர்க்க தேவை இல்லை மேடை

எல்லோருக்கும் தெரியும் அதன் விடை
நாம் ஏன் பிய்துக்கொளவேண்டும் நமது ஜடை

அதை சரி செய்யும் டாக்டர்களுக்கு உண்டோ முடை
உடையும் நடையும் மாறினாலும் காட்டிவிடும் நம் கண் ஜாடை

குருவாயுரப்பன்
 
Another adai-priyar in defence of the All-conquering-Adai!

எனக்கும் அடை மிகவும் பிடித்த சமாச்சாரம். அடைக்கு இணையான ருசி உடைய சிற்றுண்டி இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். ஆனால் இந்நாட்களில் வயது முதிர்வு காரணமாக ஜீரணிக்க சற்று சிரமாக உள்ளது. ஆனாலும் அடையை விடுவதாக இல்லை . வருடங்கள் அக அக அடையின் உருவமும் ருசியும் மாறிவிட்டது. அந்தக்காலத்தில் அடை வார்ப்பது என்பது கிடையாது, அடை தட்டுவதே வழக்கம். அரைத்த அடை மாவை உருண்டையாக எடுத்து காய்ந்த தோசைக்கல்லில் போட்டு கையினால் விரல்கள் தெரிய தடிமனாக தட்டுவார்கள் . நல்எண்ணைதான் உபயோகிப்பார்கள். எனது பாட்டியாருக்கு அடை மிகவும் பிடித்த ஓர் சிற்றுண்டி , ஆக வாரத்துக்கு ஓரிரு முறையாவது அவருக்கு அடை பலகாரம் உண்டு.( எனக்கும்கூடத்தான்.) என் பாட்டி நிறைய (சிறு நெல்லிக்காய் அளவு) நெய்யை மிளகாய்ப்பொடி அல்லது வெல்லத்துடன் அடைக்கு தொட்டு கொள்வார்கள் . எனக்கு தித்திப்பு சமாச்சாரங்கள் அவ்வளவாக பிடிக்காது ஆக அடைக்கு கொத்சு, சட்னி , அவியல் நல்ல ருசி சேர்க்கும் என்பது எனது கொள்கை. . எனக்கும் எனது பாட்டியாரைப்போலவே நெய் நிறைய பிடிக்கும். இந்நாட்களில் அடை மெலிந்து தோசைக்கு அண்ணனாகிவிட்டது.
கோயமுத்தூர் பிராம்மணர்கள் வாழ்கையை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பார்கள். நல்ல சாப்பாட்டுப்பிரியர்கள் என்பது நாடறிந்த உண்மை .மனம் திறந்து பெசும்கலையில் கைதேர்ந்தவர்கள் . (சற்று தற்பெருமையும் உண்டு) . நானும் ஓர் கோயமுத்தூரான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு

P.S (my comment)
Those were the days when people used to interact freely and humorously!
 
Subhalakshmi's sweet response!

Yes Sir I agree with you.. Adai which consists of lentils and rice should be consumed if possible during the day, the problem arises for most only when they have it at night, there is not much activity to digest the food.. ennakkum Adai thatti naa thaan pidikum.. enga amma and chithi make Verum arisi Adai, that is totally awesome and some times the same maavu becomes koozhu dosai with shredded coconut.. andha adaikku my daddy used to have moor thirimbiya molagai, meaning, raw green chillies minced in thick buttermilk, my mom made her own thayir and of course vennai etc..

and we did have vellam with butter for the paruppu adai, specially the karuppu ullundhu adai is my favorite.. but it did not come right this time when I made it..

so why give up what we all enjoy, it is still healthy than fast food or some other fancy things you get outside these days.. I think tradition should be kept alive and my hats off to those who still make this and teach their children.. though I live in the US, my kids love certain things the traditional way their grandma my MIL and I made.. one of the favorite delicacy was ilai vadam, my MIL used to make this for them to eat it after it has been steamed.. :)
 
அன்பிற்குரிய ப்ரஹ்மண்யன் அவர்களே !
மிக அருமையாக அடையை பற்றி விவரம் தந்தீர்கள் .மேலும் சில விவரம்
அரைத்த அன்று புளிக்காமல் இருக்கும்போது கருவேப்பில்லை ,பச்ச மிளகாய் தேங்க பல்லு போட்டு வாக்க வேண்டும்
தொட்டுக்க தேங்காய் சட்னி ,வெல்லம் நெய்
மறுநாள் புளிச்ச அடைக்கு வெங்காயம் வாழைப்பூ போட்டு தட்ட வேண்டும் அதற்க்கு
அவியல் ,மிளகாய் பொடி மோரு முதலியவை அற்ப்புதம்
எல்லா ஹோட்டல் அடை அவியல் வேஸ்ட் தஞ்சாவூர் பக்கம் சாப்பாட்டுக்கு ஈடு இணை கிடையாது .நீங்கள் palaghat பக்கம்

குருவாயுரப்பன்

P. S (my comment)
Brahmins are fondly called as 'bhOjana priyar'.
Any doubts about the truth in this statements in anyone?
 
An interesting new recipe from a connoisseur to the other bhOjana priyargaL!

நன்றாக சொன்னீர்கள் அம்மணி ,
நல்ல உணவை சுவைத்து சாப்பிடவும் ஓர் அதிருஷ்டம் வேண்டும் . ஆஹா வெறும் அரிசி அடையையும்
சாப்பிட்டு இருக்கிறேன் இது பாலக்காட்டின் அருகில் உள்ள திருநெல்லாய் (ஸ்ரீ T N செஷன் அவர்கள் கிராமம் ) கிராமத்தின் விசேஷமாக சொல்லப்படுவது .கருப்பு உளுந்து அடைக்கு திருநேல்லாய் அடை என்று ஒரு பெயர் உண்டு. இந்த அடை செய்முறையை கீழ்கண்ட வெப்சைட் டில் கொடுத்துள்ளார்கள் அதன்படி செய்துபாருங்களேன்
Dhanvi's cuisine: ADAI-BLACK URUD DHAL ADAI(THIRUNELLAI ADAI)/karthikai adai
இலை வடாமின் ருசியை பற்றி சொல்லவே வேண்டாம் .அதை சாப்பிட்டு அனுபவிப்பர்களுக்குத்தான் தெரியும். ஆனால் எங்கள் வீட்டில் இலை வடாம் ஏனோ எழுதுவதில்லை. சென்னயில் மைலப்பூரில் இலை வடாம் விலைக்குகிடைக்கிறது அங்கிருந்து வருபவர்களிடம் வாங்கி வரச்சொல்வேன் .

நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
 
When I came to know that Brahmanyan sir visited Tirunellayi village, I wrote a PM to him and found out that he is very close to my extended family!

Now he is close to my family too!!
 
காய வைத்த இலை வடகத்தைக்

காய்ந்த எண்ணையில் பொரித்து

கரமுர என்று உண்பீர்களா அன்றி

வெந்த இலை வடகத்தை விரும்பி

வறுக்காமலேயே உண்பீர்களா???
 
சத்தி சித்திப்பதும் பெரும் சித்தியே !!!

One must be 'blessed' to be able EAT good food, to Sleep to the

point of saturation and enjoy the other pleasures of life!

For few others Self-Denial is a greater achievement!
 
காணம் விற்று எங்கிலும்
ஓணம் காண்பவர்கள் அல்லவா
அண்டை மாநிலத்து
கேரளா அன்பர்கள்!!! :)
 
கெஞ்சினாலும் கிடைக்காத இஞ்சியை,
மிஞ்சுவது ஏதும் இல்லாத இஞ்சியை,
கொஞ்சம் போலச் சேர்த்தாலே போதுமே!
நெஞ்சம் மகிழ அடைகளை 'அடிக்கலாமே' !!!
 
Visalakshi Ramani said:
தங்கள் விருப்பம்
பொங்கல் ஆனால்
திங்கள் முதல்
பொங்கலை அலசுவோம் !!!

ஆஹா முதலில் எனக்குப்பிடித்த வெண்பொங்கல் பற்றி சில வார்த்தைகள் அம்மணி
சிறுவயதில் வெண்பொங்கல் ருசியை எனக்கு அளித்தவர் பஜனை மடம் தாடி அய்யங்கார் . நாங்கள் ஆர் எஸ் புரத்தில் முதலில் குடியிருந்த தெருவில் ஒரு பஜனை மடமும் இருந்தது . இங்கு பஜனை தவறாது நடத்தி வந்த பெரியவர் தாடி ஐயங்கார் என்ற தீவிர சுண்டப்பாளையம் வைஷ்ணவர் .மார்கழி மாதம் தினமும் தவறாது காலையில் நான்கு தெருக்களை சுற்றி பஜனை செய்து வருவது முறை .எனது தாயார் தூண்டுதல் காரணமாக நானும் அவர்களுடன் சென்று வருவேன். அச்சிறுவயதில் கடவுள் பக்தி யை விட பஜனை முடிந்தவுடன் கிடைக்கும் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் மீது தான் நாட்டம் இருக்கும். அந்தக் காலத்தில் நல்ல நெய்சொட்ட, முந்திரிப்பருப்பு, மிளகு, சீரகம் கலந்து சுடச்சுட வெண்பொங்கல் ருசியை எனக்கு அளித்த அப்பெரியவரை எப்படி மறப்பேன் . பிறகு எந்த சிவன் கோயிலுக்கு சென்றாலும் வெண்பொங்கல் கிடைக்குமா என விசாரிப்பேன். அங்கு கிடைக்கும் வெண்பொங்கல் ருசியே தனி.

பொங்கல் பற்றி எழுதும் போது திருக்கண்ணபுரத்தை எழுதியே ஆகவேண்டும் . இங்கு சௌரிராஜப் பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்யப்படும் பொங்கல் பிரசாதம் விசேஷமானது . இந்த பிரசாதம் "முனியோதரன் பொங்கல்" எனப்படும் சர்க்கரை பொங்கல். இப்பொங்கலுக்கு முதலிலேயே அர்ச்சகரிடம் சொல்லிவைத்தால்தான் கிடைக்கும்.
அன்புடன் தங்கள் நலம்கொரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
நம்மவர்கள் அது புத்திசாலிகள் தான்! :thumb:

குளிருக்கு இதமாக, பதமாகக் கொடுப்பது
சுள்ளென்று சுவைக்கும் சூடான
நெய் மணக்கும் வெண் பொங்கல்!!!

தெருவில் சுற்றிப் பாடிவிட்டு வந்தால்
உடனடித் தேவை கலோரீகள்!
அது கிடைக்கும் இனிப்புப் பொங்கலில்!!!

பக்தி இல்லாதவர்களையும் பற்றி இழுக்கும்
சக்தியும், வல்லமையும் படைத்தவை இவை!

குளிரில் இளம் சூடான படுக்கையை விட்டு எழுந்து
நடுக்கும் நீரில் குளித்துவிட்டு வருவதற்கு
நல்லதொரு பலன் வேண்டாமா சொல்லுங்கள்!!!
 
அப்பள மாவை ஒரு கை (வாய்?) பார்த்துவிட்டு
தப்பாத தாளத்துடன் பலர் திடீர் வித்வான்கள்

மிருதங்கம் இல்லாமலேயே ஜதிக்கோர்வைகளை
அருமையாக வாசிப்பதைக் கேட்டு இருக்கிறீர்களா???
 
Here is more to hear from a connoisseur!

ஆஹா, வாடாத்து மாவு, பாதி உலர்ந்த வடாம், அரைவேக்காட்டு தேன்குழல் இவையெல்லாம்
கொடுக்கும் சுவையே தனி .இந்நாட்களில் அப்பள கச்சேரி இல்லையே அப்பள மாவு ருசியே மறந்து விட்டது.
ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.
 
வடாம் மாவு...
கிளரும் முன் :decision: கிளறிய பின்!!!

வடாம்............
காயும் முன் :decision: காய்ந்த பின்!!!

தேன்குழல் மாவு.....
வேகும் முன் :decision: வெந்தபின்!!!

வயிறு ...............
ரிப்பேர் ஆகும் முன் :decision: ரிப்பேர் ஆன பின்!!!
 
I envy the connoisseurs in the forum who have married talented and patient wives!!!

I also remember the true to life quote...

A man will rather have his wife serve him delicious food than speak fluent Greek and Latin! :)
 

Latest ads

Back
Top